ஞாயிறு, 28 ஜூன், 2009

தமுமுக சாதித்ததா?

Vizhippunarvu Logo



1999ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டுவரை த.மு.மு.க. செயல்பட்டிருக்கிறது. அதன் தலைவராகவும் நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். நீங்கள் துவங்கும்போது திட்டமிட்ட பணிகளைச் செய்து முடித்திருக்கிறீர்களா?


Dr,MH. ஜவாஹிருல்லாஹ்:
பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு மட்டும் இந்த இயக்கத்தை துவங்கினாலும் காலப் போக்கில் பாதிக்கப்படும் அனைத்துத் தரப்பினருக்கும் குரல் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. உதாரணமாக அதே வருடத்தில் கொடியங்குளம் பகுதியில் தலித் மக்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையைக் கண்டித்து செப். 15ல் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தோம்.


தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். குறிப்பாக இந்த 14 ஆண்டுகளில் முஸ்லீம் மக்கள் இடையே அரசியல் விழிப்புணர்வை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியிருக்கிறோம்.



காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சி, சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட அஞ்சி நடுங்கிய சமுதாயம், காவல்துறையைப் பார்த்தாலே பயந்த சமுதாயம், சமூகச் செயல்பாட்டை அச்சம் கலந்த செயலாக நினைத்துக் கொண்டிருந்த சமுதாயம் இன்று எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்றால் எங்கேனும் ஒரு மனித உரிமை மீறல் நடக்கிறது என்று தெரியவந்தால் அந்தப் பகுதி தமுமுக பொறுப்பாளர் காவல் துறை ஆய்வாளரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் அளவிற்கு முஸ்லீம்களை அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக மாற்றியிருக்கிறது.


Jawahirulla

கல்வி விழிப்புணர்வையும் த.மு.மு.க. அதிக அளவிற்கு முஸ்லீம் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரணமாக முஸ்லீம்கள் உரிய வயதை அடைந்தவுடன் பாஸ்போர்ட் கிடைத்தவுடன் மலேசியா, சிங்கப்பூருக்கு தொழில் நிமித்தமாக சென்றுவிடுவார்கள். படிப்புக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்காத சமுதாயம் இது.


இன்றைக்கும் வெளிநாட்டிற்கு வேலை தேடிப் போகிறார்கள். ஆனால் பட்டதாரிகளாக, முதுநிலைப் பட்தாரிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த அளவிற்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். மேலும் இது போக சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவருகிறோம். சுனாமி போன்ற பேரிடர் வந்தபோது பெருமளவு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.



தமிழ்நாடு முழுவதும் ரத்த தானத்தை இயக்கமாக ஆக்கி அனைவருக்கும் இந்தச் சேவையைச் செய்து வருகிறோம். சுவாரஸ்யமான செய்தி ஒன்று சொல்ல வேண்டுமானால், காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. அப்பொழுது மருத்துவர் எங்களை அனுகினார். நாங்களும் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் அவருக்கு ரத்தம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினோம்.



அவர் உயிர் பிழைத்தவுடன் மருத்துவர் அவரிடம், நீங்கள் யாரை இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லுகிறீர்களோ அவர்கள்தான் உங்களுக்கு ரத்தம் அளித்து காப்பாற்றினார்கள் என்று கூறினார். இது எங்களால் மறக்க முடியாத ஒன்று.
சமூகவிழிப்புணர்வு:

கருத்துகள் இல்லை: