ஞாயிறு, 7 ஜூன், 2009

கேரள முஸ்லிம்களின் செல்வாக்கு சரிகிறதா?

கேரளாவில் முஸ்லிம்களின் அரசியல் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருவதாக சமுதாய ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்து வதாகக் கூறிக்கொள்ளும் முஸ்லிம் லீக் என்ற கட்சியும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கேரளாவில் முடியாமல் தவிக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வடகரா தொகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம்கள் இருந்தும் அங்கு எங்குமே முஸ்லிம் வேட்பாளர்கள் காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்படவில்லை. கோழிக்கோட்டில் எம்.கே.ராகவன் வெறும் 838 வாக்குகள் வித்தியாசத்தில் இடதுசாரிகளின் முஸ்லிம் வேட்பாளரை தோற்கடித்தார். நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கால் தான் வெற்றி பெற்றேன் என ராகவன் நன்றி தெரிவித்தார்.
கோழிக்கோடு, வடகரா, கண்ணூர் போன்ற தொகுதிகளில் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்கள் பெற்ற வெற்றிகளைக் குறித்து பெரிதாக கவலைப்படாத சமுதாய ஆர்வலர்கள் கூட எர்ணாக்குளம் நாடாளு மன்றத் தொகுதிகளின் முடிவு குறித்து ஆதங்கத்துடன் பேசிக் கொள்கிறார்கள். எர்ணாகுளத்தில் காங்கிரஸ் வேட்பாளரா கப் போட்டியிட்ட கே.வி.தாமஸ், இஸ்ரேலிய தொடர்புடையவராக கடுமையாக குற்றம்சாட்டப்பட்டவர். அதோடு சமூக நல்லிணக்கத்துக்கு விரோதமான சர்ச்சைக் குரிய தஸ்லிமா நஸ்ரீனின் நண்பர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்பவர். அவரை ஆதரிக்க வேண் டாம் என முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு களும் எதிர்த்தன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது முதல், இரண் டாம், மூன்றாம் சுற்றுக்களில் பின்தங்கிய கே.வி.தாமஸ், தலை தப்பித்தால் போதும் என 11,790 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரைக் காப்பாற்றிய வாக்குகள் எவை தெரியுமா?


மட்டஞ்சேரி என்ற பகுதியின் வாக்கு கள் தாமஸின் வெற்றிக்கு உறுதி கூட்டியது. மட்டஞ்சேரி பகுதி, முஸ்லிம் லீக்கின் கோட்டை போன்ற பகுதியாகும். தனது வெற்றிக்கு முஸ்லிம் லீக் தான் காரணம் என கே.வி.தாமஸ் கூறியிருப்பது நல்ல கூத்து.
பொதுவாக கேரள முஸ்லிம்களில் கணிசமானவர்கள் முஸ்லிம் லீக்கி மீது கடந்த 60 வருடங்களாக பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். முஸ்லிம் லீகும் காங்கிரசும் ஏராளமான தேர்தல்களில் உறவு வைத்திருந்தாலும், ஏ.கே.அந்தோணி, உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதாலா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்ட போதும் முஸ்லிம் லீகர்களால் கூட்டணியை விட்டு வெளி யில் வரமுடியவில்லை. ஆனால் கேரள முஸ்லிம்கள் எப்போதும் கேபினட் அமைச்சர்களாக முடிவதில்லை. 2004லும், தற்போதும் ஈ. அஹ்மது, குட்டி அமைச் சராக தொடர்கிறார். ஆனால் கிறித்தவர் களும் நாயர்களும் முக்கியப் பதவிகளை அலங்கரித்தனர்.


கேரள மாநிலத்தில் முஸ்லிம் நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டால் வெறும் மூன்று பேர் மட்டுமே எம்.பி.யாகி உள்ளனர். ஆனால் கிறித்தவ நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக் கையோ ஆறு. நாயர் சமூகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களின் ஏழு பேர். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் கேரளாவில் 27 சதவீதம் முஸ்லிம்களும், நாயர்கள் 12 சதவீதமும், கிறித்தவர்கள் 19 சதவீதமும் உள்ளனர் என்பது விநோதமான விந்தையாகும்.


முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மலபாரில் 50 ஆயிரம் மாணவர் களுக்கு +2 படிப்புக்கு பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை. தெற்கு கேரளாவில் ஏராளமான பள்ளிக்கூடங்களில் இடங் கள் காலியாக உள்ளன. இந்த அழகில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கல்வித்துறை முஸ்லிம் லீக் வசமே ஒப்படைக்கப்படுகிறது.


ஆனால் மலபாரில் மட்டும் மாணவர் களுக்கு போதுமான சீட் கிடைக்கவில்லை என்ற அவல நிலை.


மலபார் பகுதியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மட்டுமே உள்ளது. தென் கேரளாவில் 4 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் வடகேரளா வில் ஆறு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு மருத்துவக் கல்லூரிதான். தெற்கில் இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளன.


கணிசமாக வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் முதல்வராக வரமுடியாத நிலையே உள்ளது. இரண்டு மாதங்கள் மட்டும் முஸ்லிம் லீக் தலைவர் மறைந்த முகம்மது கோயா முதல்வராகப் பதவி வகித்தார். ஆனால் சிறுபான்மை சமூகங்களான ஈழவர்கள், நாயர்கள் மற்றும் கிறித்தவர்கள் பல அமைச்சரவைகளில் முதல்வராகப் பதவி வகித்திருக்கிறார்கள்.


ஓணம் என்றால் 10 நாள் விடுமுறை, கிறிஸ்துமஸ் என்றால் ஒரு வாரம் விடு முறை. ஆனால் பெருநாள் என்றால் ஒரு நாள் விடுமுறைதான்.


முஸ்லிம்களின் குறைவான பிரதி நிதித்துவம் குறித்தும், முஸ்லிம் லீக்கின் தூங்கி மூஞ்சித்தன்மை குறித்தும் கவலை கொண்ட கேரள முஸ்லிம்கள் விழிப் படையத் தொடங்கி விட்டனர் என்பதே மலையாளக் கரையோரத்திலிருந்து வரும் செய்தியாகும்.

கருத்துகள் இல்லை: