செவ்வாய், 2 ஜூன், 2009

பாபர் மஸ்ஜித் வழக்கு ஆவணங்கள் மாயம்

புது தில்லி :பாபர் மஸ்ஜித் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். அதனால் தான் 2002 முதல் எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் உ.பி அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தின் பல உத்தரவிற்குப் பின்னும், உ.பி அரசின் முதன்மை செயலாளருக்கும், பைஸாபாத் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையில் சம்பவத்தன்று நடைபெற்ற உரையாடலை இன்று வரை சமர்ப்பிக்காமல் உ.பி அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டுள்ளது.

1949 இல் பள்ளியின் உள்ளே வைக்கப்பட்ட சிலைகளை உடனே அகற்றும்படி அன்றய பிரதமர் நேரு அன்றய உ.பி மாநில முதல்வருக்கு அனுப்பிய தந்தியையும் கூட காணவில்லை.

2002 முதல் பலமுறை ஆணை பிற்ப்பித்தும், 1949 இல் நடைபெற்ற கடித பரிவர்த்தனையை உ.பி அரசு சமர்ப்பிக்காமல் இழுத்தடித்த காரணத்தால், சிறப்பு நீதிமன்றம் கடுமை காட்டியதன் பின், கடந்த வாரம், சிறப்பு நீதிமன்றத்தில் சமூகமளித்த உ.பி அரசின் முதன்மை செயலாளர் "அது போன்ற எந்த ஆவணமும் இல்லை" என வாக்குமூலம் அளித்தார். இத்தகவலை, இந்த வழக்கில் ஆஜராகி வரும் வக்கீல்கள் முஸ்தாக் அஹமத் ஸித்தீக் மற்றும் ஸ்பரியாப் ஜிலானி தெரிவித்தனர்.

கோர்டுக்கு வந்த முதன்மை செயலாளர் கொண்டு வந்த கோப்புகளில், பைஸாபாத் மாவட்ட நீதிபதி அரசின் முதன்மை செயலாளருக்கு எழுதிய அனைத்து கடிதங்களும் இருந்தாலும், முதன்மை செயலாள்ர் மாவட்ட நீதிபதிக்கு எழுதிய எந்த ஒரு கடிதத்தையும் காணவில்லை. அத்தோடு நேரு அனுப்பிய தந்தியையும் கூட காணவில்லை -- என்றும், முஸ்தாக் குறிப்பிட்டார்.

ஆவணங்கள் காணாததால் கோபமடைந்த நீதிபதி, விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்ததுடன், அன்றய தினம் அவசியம் காணாமல் போன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கண்டிப்புடன் ஆணையிட்டுள்ளார்.

நன்றி : டி சி என்.
தமிழில் : அபூ ஹாஜர்

கருத்துகள் இல்லை: