இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? யாதவர் மகா சபையின் தலைவர் தேவநாதன் கருத்து (Video)
திங்கள், 4 அக்டோபர், 2010
சனி, 2 அக்டோபர், 2010
நீங்கள் என்ன முதுகில் குத்தினாலும், மாறி மாறி ஆதரிக்க நாங்கள் தயார்!
பாபர் மஸ்ஜித் இட விவகாரத்தில், தங்களது அநியாய ஆக்கிரமிப்புக்கு வெற்றியாக இரு பங்கு இடம் கிடைத்துள்ளதால் நீதிமன்றத்தின் தீர்ப்பை விழுந்து விழுந்து வரவேற்கின்றன இந்துத்துவாக்கள். இவர்களின் இச்செயலில் நமக்கு ஆச்சர்யமில்லை. ஆனால் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு, கட்சி நடத்துபவர்களும், இந்துத்துவாக்களுக்கு இணையாக தீர்ப்பை வரவேற்றுள்ளது அதிர்ச்சியை தருகிறது.
நாட்டில் அமைதி காண்பது என்ற அடிப்படையில், இரு தரப்பினரும் திருப்தி அடையக் கூடிய தீர்ப்பு
.
என்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
இதே கருணாநிதி அவர்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு குறித்து கடந்த காலங்களில் இந்துத்துவாக்களை நோக்கி அவர் வீசிய 'சொல் அம்புகளை' கொஞ்சம் நினைவு படுத்திப் பார்க்கட்டும். நாட்டில் அமைதி வேண்டும் என்பதற்காக, ஒருவனுக்கு சொந்தமான சொத்தை இன்னொருவனுக்கு பங்கிட்டு கொடுப்பதுதான் நீதி என்று 'நெஞ்சுக்கு நீதி' கண்ட கலைஞர் சொல்வது வியப்பாக உள்ளது. அறிவாலயத்தை ஒருவன் ஆக்கிரமித்து உரிமை கொண்டாடினால் அப்போதும் நாட்டின் அமைதிக்காக அவனுக்கு பங்கிட்டு கொடுப்பதை விரும்புவாரா கருணாநிதி..? முஸ்லிம் சமுதாயம் சம்மந்தப்பட்டது என்றால் மட்டுமே இப்படி கருத்து சொல்லமுடியும்..? இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே!
இந்த வழக்கில் நீதிபதிகள் மிகவும் சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளதாக நான் கருதுகிறேன். மிகவும் உணர்ச்சிபூர்வமானதும், எளிதில் மோதலை ஏற்படுத்தக் கூடியதுமான இந்தப் பிரச்னையின் தன்மையைப் பரிசீலித்து நீதிபதிகள் தீர்ப்பை அளித்துள்ளனர்.
என்று கூறியுள்ளார் அண்ணாதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
டெல்லியில் நடைபெற்ற முதல் மந்திரிகள் மாநாட்டில் கரசேவையை ஆதரித்து பேசியவரும், கரசேவைக்கு ஆளனுப்பியவர் என்று பரவலாக மக்களால் குற்றம் சாட்டப்படுபவருமான ஜெயலலிதாவிடமிருந்து தீர்ப்புக்கு மாறுபட்ட கருத்து வந்தால்தான் ஆச்சரியம்.
பாபர் மஸ்ஜித் இடத்தை நீதிபதிகள் மூன்று பங்காக பிரித்ததை சிறந்த தீர்ப்பு என்று கூறும் ஜெயலலிதா, சிறுதாவூர் பங்களா அல்லது பையனூர் பங்களா பிரச்சினையில் தலித் சமுதாயத்தின் நிலங்களை இவர் ஆக்கிரமித்ததாக எழுந்துள்ள வழக்கில், இவர் பாராட்டும் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், பங்களாவை தலித் சகோதரர்களுக்கு பங்கிட்டு கொடுக்கத் தயாரா..?
முஸ்லிம்களின் உயிர்- உடமை- உரிமை என்றால் அங்கு மட்டுமே நாட்டு நலனை முன்னிறுத்தும் இந்துத்துவா சிந்தனை ஜெயலலிதாவிடமும் இருப்பதில் வியப்பில்லைதானே..!
குறிப்பு; கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அவர்களே! பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விஷயத்தில் சங்பரிவார் போல் தீர்ப்பை ஆதரித்துள்ளதால் முஸ்லிம்களின் ஆதரவு தேர்தலில் இல்லாமல் போய்விடுமோ என்று கவலைப் படாதீர்கள்.
நீங்கள் என்னதான் எங்கள் முதுகில் குத்தினாலும், உங்களை எங்கள் முதுகில் சுமப்போம் என்று சொல்ல எங்கள் சமுதாயத்தில் அமைப்புகளுக்கோ பஞ்சமில்லை. ஸோ பி ஹேப்பி...
ஆக்கம் : முகவை அப்பாஸ்.
செவ்வாய், 2 ஜூன், 2009
பாபர் மஸ்ஜித் வழக்கு ஆவணங்கள் மாயம்
புது தில்லி :பாபர் மஸ்ஜித் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். அதனால் தான் 2002 முதல் எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் உ.பி அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டுள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தின் பல உத்தரவிற்குப் பின்னும், உ.பி அரசின் முதன்மை செயலாளருக்கும், பைஸாபாத் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையில் சம்பவத்தன்று நடைபெற்ற உரையாடலை இன்று வரை சமர்ப்பிக்காமல் உ.பி அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டுள்ளது.
1949 இல் பள்ளியின் உள்ளே வைக்கப்பட்ட சிலைகளை உடனே அகற்றும்படி அன்றய பிரதமர் நேரு அன்றய உ.பி மாநில முதல்வருக்கு அனுப்பிய தந்தியையும் கூட காணவில்லை.
2002 முதல் பலமுறை ஆணை பிற்ப்பித்தும், 1949 இல் நடைபெற்ற கடித பரிவர்த்தனையை உ.பி அரசு சமர்ப்பிக்காமல் இழுத்தடித்த காரணத்தால், சிறப்பு நீதிமன்றம் கடுமை காட்டியதன் பின், கடந்த வாரம், சிறப்பு நீதிமன்றத்தில் சமூகமளித்த உ.பி அரசின் முதன்மை செயலாளர் "அது போன்ற எந்த ஆவணமும் இல்லை" என வாக்குமூலம் அளித்தார். இத்தகவலை, இந்த வழக்கில் ஆஜராகி வரும் வக்கீல்கள் முஸ்தாக் அஹமத் ஸித்தீக் மற்றும் ஸ்பரியாப் ஜிலானி தெரிவித்தனர்.
கோர்டுக்கு வந்த முதன்மை செயலாளர் கொண்டு வந்த கோப்புகளில், பைஸாபாத் மாவட்ட நீதிபதி அரசின் முதன்மை செயலாளருக்கு எழுதிய அனைத்து கடிதங்களும் இருந்தாலும், முதன்மை செயலாள்ர் மாவட்ட நீதிபதிக்கு எழுதிய எந்த ஒரு கடிதத்தையும் காணவில்லை. அத்தோடு நேரு அனுப்பிய தந்தியையும் கூட காணவில்லை -- என்றும், முஸ்தாக் குறிப்பிட்டார்.
ஆவணங்கள் காணாததால் கோபமடைந்த நீதிபதி, விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்ததுடன், அன்றய தினம் அவசியம் காணாமல் போன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கண்டிப்புடன் ஆணையிட்டுள்ளார்.
நன்றி : டி சி என்.
தமிழில் : அபூ ஹாஜர்