வியாழன், 29 செப்டம்பர், 2011

பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது

rahiya

கொல்கத்தா:ரஹீயா காத்துன்,பத்தாம் வகுப்பு படிக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மாணவி,தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருதை பெற்றுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் இருந்து “National Level Exhibition and Project Competition”–ல் பங்கெடுத்த மாநில சாம்பியனாக இடம் பெற்ற ரஹீயா காத்துன் “INSPIRE Award 2011″-க்கான விருதை பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரதீ௦பா பாட்டிலிடம் இந்த விருதை பெற்ற இவர், விருதுடன் ரூபாய் பத்தாயிரத்தையும், சான்றிதழையும் பெற்றார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் என்னும் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் இந்த பெண் பார்வையற்றவர்களுக்காக எடை அளவை (Weighing Machine) கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இந்த எடை அளவையானது, அளக்கும்போது அளவு குறைவாக இருந்தால் ஒரு ஒலியையும், அதிகமாக இருந்தால் மற்றொரு ஒலியையும் மேற்கொள்ளும். இதனால் மளிகைக் கடைகளை, தங்கள் வாழ்வியல் ஆதராமாக கொண்டு வாழும் பார்வையற்றவர்கள் மற்றவர்களிடம் இருந்து ஏமாறுவதை தடுக்கும் அளவிலும், அவர்கள் சரியான எடையை நிறுத்து தர எளிதாகவும் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு வேதியலில் முதுகலை பட்டதாரியான அவரது தலைமை ஆசிரியர் கம்ருத் ஜமான் மற்றும் அவரது பள்ளி ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ரஹீயா காத்துன், பிர்பும் மாவட்டத்தில், போல்பூர் காவல்துறையின் கீழ் உள்ள மஹிதாபுரா மிர்ஜபரா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இவரது தந்தை ஷேக் மக்புல் மற்றும் தாய் நபிஷா பிபீ படிப்பறிவற்றவர்களாக இருக்கும் இவர்கள், விவசாய தொழில் செய்து வருகின்றனர். எட்டு பிள்ளைகளை கொண்ட இவர்களுக்கு ரஹீயா காத்துன் மூன்றாவது பெண்ணாவார்.

மண் குடிசையில் வாழும் இவர்களின் வீட்டிற்கு மின் விளக்கு கூட இல்லாத நிலையில் அக்கம் பக்கத்தினர் இவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இவள் படிப்பிற்கு உதவி உள்ளனர்.

ரஹீயாவுக்கு முன் உள்ள இரண்டு சகோதரிகள் தங்களது எட்டாம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு, தனது குடும்ப சூழ்நிலைக்காக வயல் வெளியில் வேலை பார்த்து வருவதாக ரஹீயா தெரிவித்தார்.

அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமும், ரஹீயாவை உயர் படிப்பிற்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுடன் இருக்கின்றனர். அவர்களின் தலைமுறையில் ரஹீயாவே படிப்பறிவு பெற்ற முதல் பெண்மணியும், பத்தாம் வகுப்பு வரை படித்த முதல் பெண்ணுமாவர். இப்பொழுது பதினொன்றாம் வகுப்பை தொடரும் ரஹீயா பத்தாம் வகுப்பில் வாழ்க்கை அறிவியலில் அதிக மதிப்பெண் பெற்ற அவரை, அவரது தலைமை ஆசிரியர் அறிவியல் பாடத்தில் அவரது உயர் படிப்பை தொடங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ரஹீயாவின் குடும்ப வறுமை காரணமாக அவர் ஆர்ட்ஸ் பாடத்தை தொடர்ந்து உள்ளார்.

மேலும் ஊடத்திற்கு பேட்டியளித்த ரஹீயா தெரிவித்தது. “மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எப்பொழுதும் பள்ளியின் உயர் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிப்பார். அதனால் நானும் முதலமைச்சர் எனக்கு தகுந்த விருதை வழங்கி, என்னுடைய உயர் படிப்பிற்கு உதவி தொகை வழங்குவார் என்று நம்புகிறேன். அப்படி என்னை முதலமைச்சர் அழைத்தால் நான் என் குடும்ப நிலையையும், வறுமையிலும் எவ்வாறு படிக்கிறேன் என்ற சூழ்நிலையையும் எடுத்து உரைப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் மேற்கு வங்காளத்தின் சிறுபான்மையினர் வாரியத்திடம் இருந்து அவருக்கு எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை என்று தெரிவித்து இருந்தார். ரஹீயா மனம் நொந்து கூறிய விஷயம் என்னவென்றால் மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக அறிவியலில் திறமையை காட்டிய முதல் பெண்மணி, ஆனால் இதுவரை மேற்கு வங்காளத்தின் கல்வி வாரியம் இவருக்கு இது வரை ஒரு பாராட்டோ அல்லது பரிசோ வழங்கவில்லை என்பது தான்.

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இருந்து அழைப்பு வந்த ரஹீயாவுக்கு இதுவரை தனது சொந்த மாநிலத்தில் இருந்து அழைப்பு வராதது மிக்க வேதனை தரக் கூடிய விஷயம் தான்.

நன்றி : http://www.thoothuonline.com

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

ம.ம.க. முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு மற்றும் பரிந்துரை மனுக்கள் செய்திருந்தனர்.

கடந்த வாரம் சென்னை, ஈரோடு, ஓசூர், திருவாரூர், மதுரை, நெல்லை என ஆறு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு விண்ணப்ப வேட்பாளர்களுக்கான நேர்காணல்கள் நடைபெற்றது.

அதன்படி இறுதிகட்ட பரிசீலனை செப்.26 அன்றும், செப்.27 அன்று நடைபெற்று வருகிறது. பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், செ. ஹைதர் அலி, ப. அப்துல் சமது, ஹாரூண் ரஷீது, எம். தமிமுன் அன்சாரி, ஜே.எஸ். ரிஃபாயி, குணங்குடி ஆர்.எம். ஹனிபா ஆகியோர் கொண்ட குழு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது.

தியாகம், நேர்மை, மக்கள் செல்வாக்கு, நிர்வாகத் திறன், ஆரம்பகால சிறை தியாகங்கள் ஆகியவை முன்னனி அளவுகோல்களாக கணக்கில் கொண்டு இப்பட்டியல் தயாராகியுள்ளது.

புதியவர்களாக இருந்தால் வேறு யாரும் போட்டியிடாமல் ஒருமனதாக விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தால் அவர்களின் மனுக்களும் தகுதி பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.





ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்











கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்தும் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெற்றி பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்தும் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்





இஸ்லாமிய சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25 -09 -2011 ஞாயிறுகிழமை காலை 9 :30 மணியளவில் கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்தும் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் துவக்க விழா, நடைபெற உள்ளது.

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் கடந்த 3 ஆண்டுகளாக கூத்தாநல்லூர்-ல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. படிக்க பணம் வசதி இல்லாத ஏழை மாணவ,மாணவியருக்கு தேவையான கல்வி கட்டணத்தை கூத்தாநல்லூர்-ல் உள்ள கொடை வள்ளல்களின் மூலமாக பெற்று தந்துள்ளது, மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத நம் சமுதாய சொந்தங்களுக்கு பண உதவிகள் செய்துள்ளது. அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் எந்த ஒரு தொய்வின்றி உதவிகள் உரியவரிடம் சேர்க்கபடுகின்றது. அதனுடைய அடுத்த கட்ட முயற்சியாக சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டத்தையும் நடத்த உள்ளது.

அனைத்து இயக்கங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியின் முதற்கட்டமாக இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் TMMK , PFI , TNTJ , MMK , SDPI , முஸ்லிம் லீக், சுன்னத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் பொறுப்பாளர்களும், சமூக ஆர்வலர்களும், கூத்தாநல்லூர் ஜமாத்தினர் மற்றும் கூத்தாநல்லூர் இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள இருகின்றனர்.

இந்த பொதுகூட்டத்தின் சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு பேச்சாளர்களாக மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களும், SDPI மாநில செயலாளர் A. அபூபக்கர் சித்திக் அவர்களும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr. M. சர்வத் கான் MBBS அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருகின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தை ஒற்றுமை படுத்தும் நோக்கில், கொள்கை ரீதியாக பிரிந்து கிடக்கும் சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையின் அவசியத்தை மக்களிடம் எடுத்து சொல்ல கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் எடுத்திருக்கும் முயற்சி கூத்தாநல்லூர் பொது மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்துள்ளது. நூற்றுகணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பு கூத்தாநல்லூர் மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், பாகுபாடற்ற கூத்தாநல்லூர் உருவாகவும் அதன் செயல் வீரர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது, வருங்காலத்தில் கூத்தாநல்லூர்-ன் மாபெரும் சக்தியாக கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் மாறும் என்பதே பலரின் எதிர்பார்ப்புகளாக உள்ளது.

வியாழன், 22 செப்டம்பர், 2011

குற்றாலம் அருவியில் குளித்த பெண்களை புகைப்படம் பிடித்த வாலிபர் கைது


குற்றாலம் அருவி



குற்றாலம்: குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த பெண்களை போட்டோ மற்றும் வீடியோ எடுத்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குற்றாலத்தில் உள்ள அருவியில் குளிப்பதற்கு தினமும் எண்ணற்ற மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு என தனித்தனி இடங்கள் உள்ளன. பாலியல் சில்மிஷங்களை தவிர்க்க ஆங்காங்கே ஆண் மற்றும் பெண் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த ஆண்கள் பகுதியில் ஒருவர் கேமராவுடன் சுற்றி திரிந்தார். சிறிது நேரத்தில் அவர் பெண்கள் பகுதியின் அருகில் சென்று அங்கு குளித்து கொண்டிருந்த பெண்களை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

இதை கவனித்த மற்றவர்கள் அவரை அழைத்து கண்டித்துள்ளனர். அதனால் கண்டித்தவர்களுக்கும் அந்த வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கண்டித்தவர்களில் சிலர் இது குறித்து அங்கு பாதுகாப்பில் நின்ற போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேமராவை பரிசோதித்த போது, அவர் சில பெண்களை படம் பிடித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் விசாரித்தனர். இதில் அவர் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பாலாஜி என்பது தெரிந்தது

கூத்தாநல்லூர்-ல் விநாயகர் சிலையை காவல்துறையே கரைத்த அவலம்

வட இந்தியாவில் இருந்து மத கலவரம் செய்யும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்பட்டது தான் இந்த விநாயகர் சதுர்த்தி என்னும் பிள்ளையார் பிறந்த நாள் (பிள்ளையார் உருவாக்கபட்ட நாள்). இந்த விநாயகர் சதுர்த்தி பல ஹிந்து மக்களால் அமைதியாக வீட்டிலே கொண்டாடபடுகிறது. சில ஹிந்து மத வெறியர்கள் விநாயகர் சதுர்த்தியை ஹிந்து முஸ்லிம் இடையே கலவரம் ஏற்படுத்துவதற்காகவே கொண்டாடுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த விநாயகர் ஊர்வலத்தால் நடந்த கலவரங்கள் ஏராளம் ஏராளம். அதில் அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளுமே….

கலவரம் செய்யும் நோக்கத்துடன் வைக்க பட்ட விநாயகர்

திருவாரூர் மாவட்டத்திலே இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் கூத்தாநல்லூர்-ம் ஒன்று. முத்துபேட்டையை கலவர பூமியாக்கிய ஹிந்துத்துவ காவி கும்பலுக்கு அடுத்த இலக்காக இருப்பது கூத்தாநல்லூர் என்று அவ்வூர் மக்களால் கண்டிப்பாக யூகிக்க முடியும். அந்த அளவுக்கு ஹிந்து முன்னணி அமைப்பினரால் உருவாக்கபட்ட “ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை” அமைப்பினர் செயல்படுகின்றனர்.

கடந்த வருடம் கூத்தாநல்லூர் உள்ளே முஸ்லிம்கள் வாழும் பகுதியில் அத்து மீறி கலவரம் செய்யும் நோக்கத்துடன் ஊர்வலம் கொண்டு வரப்பட்டது, அதனை அறிந்த கூத்தாநல்லூர் இளைஞர்கள் ஒன்றுகூடி ஊர்வலம் கொண்டுவந்த ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை மற்றும் காவல் துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் முஸ்லிம் இளைஞர்கள் “ஹிந்து ஒழிக! ஹிந்து சமுதாயம் ஒழிக! ஹிந்துஸ்தான் ஒழிக! பாகிஸ்தான் வாழ்க! ” என்று கோசம் எழுப்பியதாக பொய் பிரசாரம் செய்து ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யை சேர்ந்தவர்கள் ஒரு ஆர்பாட்டத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த வருட சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் இந்த வருடமும் அதே வழியாக ஊர்வலம் எடுத்து செல்வோம் என்று முடிவு செய்து, புதிய வழி கேட்டு கூத்தாநல்லூர் ஜமாத்தினரை Peace Meeting அழைத்துள்ளனர். RDO மற்றும் தாசில்தார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை சேந்தவர்கள் மிக கடுமையாக வாதிட்டு, புதிய வழி தந்தால் மட்டும் தான் இந்த வருடம் விநாயகர் ஊர்வலம் எடுப்போம் என்றும், புதிய பாதைக்கு அனுமதி மறுத்தால் விநாயகர் ஊர்வலத்தை எந்த தடை வந்தாலும் கூத்தாநல்லூர் வழியாக தான் எடுத்து செல்வோம் என்று கூறியுள்ளனர். நாங்கள் எதற்கும் தயார் என்றும் கூறியுள்ளனர்.

கூத்தாநல்லூர் ஜமாத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விநாயகர் ஊர்வலம் ஊர் உள்ளே வருவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் திருவாரூர் கலக்டர் ஆணைப்படி 15-ஆம் தேதிக்குள் விநாயகர் சிலையை பழைய வழியில் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்குமாறு ஆணை பிறப்பிக்கபட்டது பின்பு கூத்தாநல்லூர் காவல் துறையினரால் எச்சரிக்கையும் செய்யப்பட்டது. அதையும் பெரிது படுத்தாத ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் 17-ஆம் தேதி வரை கலவரம் செய்யும் நோக்கத்துடனே இருந்தனர்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் திருவாரூர் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் உத்திரவின் பேரில் 18-ஆம் தேதி காலையில் ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை-யினர் கைது செய்யப்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க கூடுதல் போலீஸ் பாதுக்காப்புடன் விநாயகர் சிலையை போலீசார் லெட்சுமாங்குடி ஆற்றில் கரைத்தனர். போலிசாரின் இந்த முயற்சியால் ஹிந்துத்துவ வாதிகளின் கலவர திட்டம் முறியடிக்க பட்டது.

வழக்கம் போலே 19-ஆம் தேதி கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி பாலம் அருகே பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர்.

அமைதி பூங்காவாக திகழும் கூத்தாநல்லூர்-ல் மத கலவரங்கள் செய்ய துடிக்கும் ஹிந்து சமுதாய பாதுகாப்பு பேரவை மற்றும் கலவரம் செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்படும் விநாயகர் ஊர்வலத்தையும் காவல் துறையும் தமிழக அரசும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமா என்பதே கூத்தாநல்லூர் வாழ் மக்களின் கேள்வியாக உள்ளது.

புதன், 21 செப்டம்பர், 2011

'பயங்கரவாத குண்டுவெடிப்புகளில் ' BJP-க்கு தொடர்பு:-அமெரிக்க CRS அறிக்கை.!

Congressional Research Service(CRS) : இது அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளில் உளவு பார்த்து அறிக்கை தரும் ஓர் அமைப்பு எனலாம். சுமார் 900 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் விழுங்கித்தான் இந்த வேலையை பார்க்கிறது. இதன் அறிக்கை ரகசியமாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மட்டுமே தரப்படும். இது அமெரிக்க அரசு தன் அயலுறவு கொள்கையை முடிவு செய்யும்போது இதனையும் ஒரு பொருட்டாக பார்க்குமாம். அதில் முக்கியத்துவம் இருக்குமாயின் அறிக்கை இரகசியமாக வைக்கப்படும். இல்லையேல், உறுப்பினர்களால் மக்களுக்கு அவ்வப்போது இவ்வறிக்கைகள் 'லீக்' செய்யப்படுவதும் உண்டு. காரணம், 'இது போன்ற அதிரடி வேலைகளை எல்லாம் அமெரிக்கா செய்கிறது' என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்ளவும், செலவு கணக்கு காட்டவும்தான்.

முதலில், "நம்மைப்பற்றி இது போன்ற அறிக்கைகளை இங்கே வந்து ஆய்வு செய்து சமர்ப்பிக்க இவர்கள் யார்" என்று தம்மை 'தேசபக்தர்கள்' என கூறிக்கொள்ளும் போலிகள் எவருமே இப்போது வாயை திறந்து கேட்க காணோம். வேண்டுமானால், இதேபோல இந்தியா அமெரிக்காவில் வேவு பார்த்து ஒரு அறிக்கையை இந்திய பாராளுமன்றத்துக்கு பகிரங்கமாக சமர்ப்பிக்கட்டுமே, பார்க்கலாம்..! விடுவார்களா..? இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த அறிக்கை பற்றி 'ஆஹா ஓஹோ' என்று நியூஸ் போடுபவர்கள் எல்லாருமே இரண்டு விஷயத்தில் ஒத்துப்போகின்றனர். ஒன்று அமெரிக்க ஆதரவு. மற்றொன்று ஹிந்துத்துவா ஆதரவு.

இந்த CRS அறிக்கையில், 'ஏதோ மோடியை பற்றியும் குஜராத் பற்றியும் புகழ்மாலை சூட்டினார்கள்' என்றுதானே ஊடகங்கள் கூத்தாடுகின்றன..? அப்படியொரு 'செய்தி' என்ற பெயரில் 'காதுக்கு பூ' விற்றவர்கள் எவருமே ரொம்ம்ம்ப ஜாக்கிரதையாக இந்த அறிக்கையை காண சுட்டியை மட்டும் கொடுக்கவே இல்லை..! ஏன்..? காரணம், 'ஆங்கிலம் படிக்கத்தெரிந்த மக்கள் இதனை படித்து உண்மையை அறிந்து கொண்டால்...?' என்ற பயமா..?

ஆனால், சமீபத்தில் 'லீக்' ஆக்கப்பட்ட இந்த 'அறிக்கை' தற்போது இந்த தளத்தின்-இந்த பக்கத்தில் தரவேற்றம் செய்யப்பட்டு எவர் வேண்டுமானாலும் இப்போது தரவிறக்கம் செய்துகொள்ளும் படியும் ஆன்லைனில் படிக்கவும் வெட்டவெளிச்சமாக உள்ளது. (இதனை எனக்கு அறியத்தந்த சகோ.முஹம்மத் ரஃபீக் பாபுக்கு மிக்க நன்றி..!)


இந்த அறிக்கை மோடி பற்றியதா..? இல்லை..!
குஜராத் பற்றியதா..? இல்லை..!
அப்புறம் அது எதைப்பற்றியது..?

அந்த அறிக்கை... இந்திய உள்நாட்டு பிரச்சினைகள், மைய அரசின் தந்திர இயங்குவியல், அமெரிக்காவுடனான நல்லுறவு ஆகிய இவற்றை பற்றியது..!

இந்தியாவை பற்றி 'ஆராய்ச்சி செய்து' அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இம்மாதம் அனுப்பப்பட்ட இந்த CRS அறிக்கை மொத்தம் 98 பக்கம் கொண்டது.


அதில் "மோடி" என்ற பெயர் 5 பக்கங்களில் வந்துள்ளது. அவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக 13 தடவை மோடி பெயர் வந்துள்ளது.

தனை தயாரித்தவர்கள் விபரம் :-

CRS Report for Congress
Prepared for Members and Committees of Congress

India: Domestic Issues, Strategic Dynamics and U.S. Relations

K. Alan Kronstadt, Coordinator Specialist in South Asian Affairs

Paul K. Kerr Analyst in Nonproliferation

Michael F. Martin Specialist in Asian Affairs

Bruce Vaughn Specialist in Asian Affairs

இவர்கள் மோடி பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள்..?

முதலில் மோடி பெயர் அடிபடும் பக்கம் 41. அதில், பாஜக கட்சி பற்றி ஒரு அறிக்கை. இதில் காமடி என்னவென்றால், இந்த அறிக்கையை திரட்டியது எங்கிருந்து என்றால்... www.bjp.org அவர்கள் மோடி பற்றி சொன்ன கருத்தை போட்டிருக்கிறார்கள்.
.
// Gujarat Chief Minister Narendra 1-Modi, who has overseen impressive development successes in his state //

---என்று இப்படி போட்டுவிட்டு, தங்கள் கருத்தை அடைப்பில் அதனை தொடர்ந்து...

// but who is also dogged by controversy over his alleged complicity in lethal anti-Muslim rioting there in 2002 (2-Modi has in the past been denied a U.S. visa under an American law barring entry for foreign government officials found to be complicit in severe violations of religious freedom) //

----என்றும் சொன்னதை ஏனோ காவி ஊடகங்கள் நம்மிடமிருந்து ஒளித்து விட்டன. மேலும்.... அவ்வறிக்கையில்...

//Despite his clear political and economic successes in Gujarat—in his ten years as Chief Minister the state has led thecountry on many development indicators—3-Modi continues to be haunted by the 2002 Ahmadabad riots, a topic he has never fully addressed in public. Although he is a safe bet to win a third term in 2012 state elections, his aspirations to be the BJP’s prime ministerial candidate face significant obstacles, not least the likelihood that Muslims and liberal-minded Hindus would represent an anti-4-Modi bloc at the national level, and the BJP’s key ally in Bihar, Nitish Kumar’s Janata Dal (United), could be expected to abandon the alliance in protest (Geeta Anand, “Give Us Your Account, Mr.5-Modi” (op-ed), Wall Street Journal, February 23, 2011; Karan Shah,” Narendra 6-Modi, Prime Minister?” (op-ed),Outlook (Delhi), April 5, 2011) //

---என்று 'அவுட்லுக்' பத்திரிக்கையின் காரசாரமான கட்டுரையைத்தான் பக்கம் 42-இல் இணைத்துள்ளனர்..! நம் காவி ஊடகங்கள் இதில் முதல் வரிக்கு மேல் படிக்க விரும்பவில்லை.

அடுத்து... பக்கம் 47 இல் "Notable State-Level Developments" என்ற தலைப்பின் கீழே பல மாநிலங்களை பற்றி அறிக்கை கொடுத்துள்ளனர். ஆனால், குஜராத் பற்றி அமெரிக்காவின் wall street journal கட்டுரையை எடுத்து போட்டு இருக்கிறார்கள்.
.
// Perhaps India’s best example of effective governance and impressive development is found in Gujarat (pop. 60 million), where controversial Chief Minister Narendra 7-Modi has streamlined economic processes, removing red tape and curtailing corruption in ways that have made the state a key driver of national economic growth. Seeking to overcome the taint of his alleged complicity in deadly 2002 anti-Muslim riots, 8-Modi has overseen heavy investment in modern roads and power infrastructure, and annual growth of more than 11% in recent years. The state has attracted major international investors such as General Motors and Mitsubishi and, with only 5% of the country’s population, Gujarat now accounts for more than one-fifth of India’s exports. //

---இது மோடி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு எப்படி நம் நாட்டு வளங்களை வாரி வழங்குகிறார் என்று பறை சாற்றும். 'எதனால்... அந்த அமெரிக்க பங்கு மார்க்கெட் பத்திரிகையில் மோடியை இப்படி புகழ்கிறார்கள்' என்று கடைசி வரி கட்டியம் கூறுகிறது..! இந்த வரியை ரொம்ப லாவகமாக நம் காவி ஊடகங்கள் மறைத்து விட்டன. 'இப்படியெல்லாம் அமெரிக்க பன்னாட்டு நிருவனங்களுக்கு அடிமையாக சேவகம் செய்தால் அமெரிக்கா தன் மீதான விசா தடையை நீக்கி விடும்' என்று அலைகிறார் போலும் இந்த கேடி... ஸாரி... மோடி..!

இந்த செய்தி உண்மையா..? "India’s best example" என்று சொல்வது உண்மையா..? குஜராத்தான் மெய்யாலுமே முதலில் இருக்கிறதா..?

இது பொய்..! இங்கே சென்று அட்டவணையில் உண்மை விபரம் அறிந்து கொள்ளுங்கள்..!

மோடி ஒரு ஊழலற்ற சிறந்த ஆட்சியாளரா..? இல்லை..! மோடியின் ஊழல் பற்றியும் அவரின் ஆட்சியின் சீர்கேடு பற்றியும் அவருடைய 'கூட்டாளி' அண்ணா ஹாசரேவே புட்டு புட்டு வைத்திருப்பதை இங்கே சென்று படியுங்கள்..!

அடுத்து பக்கம் 48. இது “Highway in India Offers New Solution to Land Fights,” New York Times , February 22, 2011. -இல் வந்த ஒரு பத்திரிக்கை செய்தியாளரின் கிளிப்பிங்..!

// The examples set in by Chief Ministers 9-Modi and Kumar may have inspired the popular leader of India’s most populous state, Uttar Pradesh (pop. 200 million). Chief Minister Mayawati, ... ... focus much more toward infrastructure projects such as road-building and improving the state’s poor energy grid.//

(இதெல்லாம்... ரோடு போடும் காண்ராக்டையும்... மின்சார கிரிட்கட்டும் காண்ட்ராக்டையும் உ.பி.யில் நழுவ விடாதீர்கள் என்ற அறிவுரையே அன்றி வேறென்ன..?)

ஆனால், மோடி பெயரை பார்த்தவுடன் பூத்துக்குளுங்கிய ஊடகமனம்... நிதிஷ் குமார் பற்றியும் மாயாவதியை பற்றியும் கூறப்பட்டிருக்கிறதே..? ஏன் மவுனம் காக்கின்றன இந்த காவி ஊடகங்கள்..?

கடைசியாக... பக்கம் 70-இல் தான் மோடிக்கு இறங்குகிறது அதிரடி ஆப்பு..! அடுத்து வரக்கூடிய வரிகள் ஒவ்வொன்றும் பயங்கரவாதி மோடியின் மண்டையில் விழும் சம்மட்டி அடி என்றால் மிகை அல்ல..!

The U.S. State Department and human rights groups have been critical of New Delhi’s largely ineffectual efforts to bring those responsible for the post-Godhra rioting and murders to justice; some of these criticisms were echoed by the Indian Supreme Court in 2003.

In 2005, the State Department made a controversial decision to deny a U.S. visa to Gujarat Chief Minster Narendra 10-Modi under a U.S. law barring entry for foreign government officials found to be complicit in-severe violations of religious freedom. The decision was strongly criticized in India.

In 2008, a Gujarat state government commission exonerated 11-Modi, claiming to have found “absolutely no evidence” that he or his ministers had acted improperly. More than nine years after the Gujarat riots, international human rights groups express concerns about obstacles faced by victims seeking justice, the continuing internal displacement of thousands of families who lack basic necessities, and large numbers of un investigated related criminal cases (despite the IndianSupreme Court’s 2004 order to reopen nearly 1,600 such cases).

Human Rights Watch called on the Indian government to launch an investigation of 12-Modi after he made statements apparently endorsing the extrajudicial execution of a terrorism suspect by police.

In 2008, 27 Members of the U.S. Congress joined the U.S. Commission on International Religious Freedom in urging the State Department to reaffirm its past decision to block 13-Modi’s entry to the United States ( “India: Gujarat Chief Minister Endorses Unlawful Killings,” Human Rights Watch release, December 7, 2007).

இதெல்லாம் உங்கள் கண்ணில் அகப்படாமல் எங்கே போச்சு ஊடகமே..? எதற்கு இந்த மாய்மாலம்..? எதற்கு இந்த செய்தியியல் ஊழல்..?

இதெல்லாம் விட பெரிய ஆப்பு ஒன்று இருக்கிறது..!
.
அது... அடுத்த 71-ம் பக்கத்தில்...!! "உள்நாட்டு இந்து பயங்கரவாதம்"...!!!

Maoist Rebellion, Other Insurgencies, and Communalism என்ற பகுதியில்... "Indigenous Hindu Terrorism" --- என்று ஒரு உள் தலைப்பு இட்டு இதை தனியே கூறுகிறது CRS அறிக்கை..!
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பலருடன் பயங்கரவாதி பிரக்யா சிங் சாத்வீ
கார்கிலுக்கு அனுப்ப சொல்லி கொடுத்தால்... மாலேகானுக்கு RDX வெடிகுண்டு சப்ளை செய்தாராம் இந்த இந்திய ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீக்காந்த் ப்ரசாத் ப்ரோஹித்


Indigenous Hindu Terrorism.

Even more recent are overt signs that India is home to militant Hindu nationalist groups intent on launching domestic terrorist attacks.
.
In September 2008, seven people were killed by two bomb blasts in the Maharashtran city of Malegaon, a hotbed of Hindu-Muslim communal strife. By year’s end, police had arrested nine members of a “Hindu terrorist cell” in connection with the bombing, including an active army lieutenant colonel and a Hindu nun with links to the main opposition BJP.

Thus did “Hindu terrorism” become a new and highly controversial phrase in India’s national dialogue. Never before in the country’s history had the phrase been so widely used, and the development had major and continuing effects on India’s national psyche. Many Indian observers warned of the danger of a “militant majoritarianism”among Hindu nationalists that threatens to rend the secular fabric of the nation.

In late 2010, Hindutva extremist Swami Aseemanand confessed to involvement in a number of terrorist attacks previously blamed on Islamist militants, including the 2006 bombing of a Muslim cemetery in Malegaon that killed 37 people and the 2007 bombing of the trans-border Samjhauta Express, a train linking Delhi and Lahore, Pakistan, that killed 68 people, most of them Pakistani civilians.

Aseemanand confessions were an embarrassment for law enforcement agencies that had arrested Muslim suspects, and gave credibility to analysts who identify Hindu militancy as a threat to India’s security.

மேற்படி செய்திகளும் CRS-ன் சொந்த சரக்கு அல்ல. அப்புறம் எங்கிருந்து காபி & பேஸ்ட் பண்ணப்பட்டனவாம்..?

“Indian Muslims Blamed for ‘Saffron Terror’ Want Justice,” BBC News , January 27, 2011;
“Swami’s Confession,” Frontline (Chennai), February 11, 2011.
“‘Hindu Terrorism’ Debate Grips India,” BBC News, November 21, 2008;
Praful Bidwai, “Saffron Terror” (op-ed), Frontline (Chennai), November 21, 2008;
“The True Face of the BJP” (op-ed), Outlook (Delhi), October 29, 2008.
“The Rise of Hindutva Terrorism,” Outlook India (Delhi) May 11, 2010.
“India Police Say They Hold 9 From Hindu Terrorist Cell,” New York Times, November 12, 2008.

மோடி பற்றி COPY & PASTE பண்ணப்பட்ட சில வரிகளை... அவை 'பொய் என்றாலும் பரவாயில்லை' என பெருமையாய் பீற்றிக்கொண்டோர் யாருமே பாஜகவின் பயங்கரவாத குண்டுவெடிப்புகள் தொடர்பு பற்றியான இவ்விஷயத்தை உண்மை என்றாலும் ஏன் வெளியே சொல்லவில்லை..?
.
அதனாலென்ன..! நாம் சொல்லுவோம் என்றுதான் இந்த பதிவு..!

ஆக... இந்த நான்கு அமெரிக்கர்களும் நன்றாக சம்பளம் வாங்கிக்கொண்டு இந்தியாவில் ஏதோ ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டுக்கொண்டு ஜாலியாக சாப்பிட்டு என்ஜாய் பண்ணிக்கொண்டே அவ்வப்போது... கூகுள் உதவியுடன் 'பொட்டிதட்டி' பல பத்திரிக்கை கட்டுரைகளை தேடித்தேடி கட் & பேஸ்ட் பண்ணி உள்ளனர் என்றுதான் எனக்கு எண்ணத்தோன்றுகிறது. புதிய தகவல்கள் ஒன்றும் இல்லை..! ஹூம்...! இதெல்லாம் ஒரு அறிக்கை..! இதெல்லாம் ஒரு உழைப்பு..! இதுக்கெல்லாம் முக்கியத்துவம்... ஒரு மதிப்பு... மரியாதை..! ச்சே..!

இதைவிட சிறப்பான ஆதாரங்களுடன் INVESTIGATIVE JOURNALISM REPORTS மற்றும் தரமான சிந்திக்க வைக்கும் ஆய்வுக்கட்டுரைகளை நம் பதிவுலக சகோஸ் ஏராளமாகவே தருகின்றனர்..!

இந்த CRS அறிக்கையில் பல விஷயங்கள் விஷமத்தனமானவை..! எதிர்க்கப்பட வேண்டியவை. ஆனால்... ஓர் எதிர்ப்பையும் காணோம்..!

சில கார்ப்பரேட் ஊடகங்கள்தாம் மோடியை பிரதமராக்குவதற்கான 'பொறுப்பை' ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை தேசிய பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளை பார்த்தாலே நமக்கு புரியும். அவைகள்தாம் அமெரிக்காவின் CRS அறிக்கையில் மோடிக்குறித்த கட் & பேஸ்ட் பொய்யான வரிகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

இந்தியாவில் காணப்படும் பல குறைகளை சுட்டிக்காட்டி நேர்மையாக விமர்சித்து இருந்தாலும்... பல உள்குத்துகள் இருக்கின்றன.

மொத்தமாக படித்துவிட்டு நிமிர்ந்தால்... இந்தியா அமெரிக்காவின் காலணியாதிக்கத்திற்கு மறைமுகமாக அடிபணிந்து விட்டது என்பதைத்தான் உண்மையில் CRS-ஸின் அறிக்கை நமக்கு சொல்கிறது. பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான உறுதியான அமெரிக்க அடியாளாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதன் விபரங்கள் CRS-ஸின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

உலகிலேயே அதிகமாக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியதிலும், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தின் நிரந்தரமான இருப்பிற்கு இந்தியாவின் மவுன ஒத்துழைப்பதற்கும் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது இவ்வறிக்கை.

"அணிசேரா கொள்கை"யிலிருந்து அமெரிக்க சேவை நாடாக இந்தியா மாறிவிட்டது என்பதற்கும், இந்தியாவை ஆட்சி புரிவது காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க-வாக இருந்தாலும் அமெரிக்காவின் விருப்பங்கள் பாதுகாக்கப்படும் என்பதற்கும் உறுதியான ஆவணம்தான் CRS அறிக்கை.

ஆனால், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இரண்டு வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மோடியைக் குறித்த கட் & பேஸ்ட் வருடல்களை மட்டும் உயர்த்திப்பிடிக்கும் தேசிய ஊடகங்கள் "யாருக்காகவோ" தங்களை பிரதிநிதிகளாக மாற்றி வருகின்றார்கள் என்பதை மட்டுமல்ல இந்திய தேசத்தை அமெரிக்க ஆக்டோபஸ்களின் கரங்களில் ஒப்படைக்க தயாராகி வருகிறார்கள் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.

இந்த 'கட்&பேஸ்ட் அறிக்கையை(?)' தூக்கி ஓரமாய் வைத்து விட்டு, இங்கே... என்னுடைய முக்கியமான கேள்வி ஒன்று என்னவென்றால்...

இந்த அறிக்கையில் மோடி பற்றிய சார்பு செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை தலைப்புச்செய்தியாக்கி ஆட்டம் போட்டு குதூகளித்தீர்களே... ஓ... காவி ஊடகங்களே..! மரணஅடி கொடுத்து ஆப்பு வைத்த மற்ற செய்திகளை எல்லாம் ஏனய்யா... ஒதுக்கி மறைத்தீர்கள்..? இதுதான் நீங்கள் ஊடகவியலில் கற்ற நேர்மையா..? இதுதான் ஊடக தர்மமா..? இதுதான் நீங்கள் எங்களுக்கு செய்தி சொல்லும் லட்சணமா..?

ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்..! எப்போது ஊடகங்களில் செய்தி சொல்வதில் ஊழலும், சார்பும், பொய்யும், ஆதாயமும், சமூக அக்கறையின்மையும் வந்துவிட்டதோ... அப்போதே ஒட்டுமொத்த சமூகமும் அதே பாதையில்தான் பயணிக்கும்..! நம் நாடு செத்து அழிவதும்... உயிர் பிழைப்பதும்.. அரசியல்வாதிகளிடமோ, நீதிபதிகளிடமோ, சினிமாவிடமோ, கிரிக்கேட்டிடமோ அல்ல..! ஊடகத்துறையின் சிறப்பான செயல்பாட்டில்தான் உள்ளது..!

நன்றி :சகோ.

http://pinnoottavaathi.blogspot.com/2011/09/bjp-csr.html

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

குருபூஜைகள் அவசியமா..?

சகோ..! ஒரு நிமிஷம்..! நான் சாதிவெறிக்கு எதிரானவன் மட்டுமல்ல. சாதி மீது நம்பிக்கை இல்லாதவன் மட்டுமல்ல. சாதியை ஒழித்து அதை முற்றுமாய் மறந்து வாழ்ந்துவரும் சமூகத்தில் பிறந்து வளர்ந்து அப்படியே வாழ்பவன் மட்டுமல்ல. என் சமூகம் போலவே என் மொழி பேசும் இதர மக்களும் சாதியிலிருந்து விடுபட வேண்டும் என்று பேராவல் கொண்டவன். ஆதலால், நான் யாருக்கும் சார்பாகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ இந்த கோரிக்கையை இங்கே வைக்கவில்லை. சாதி வெறி மூலம் மக்கள் உயிருக்கும் உடமைக்கும் அமைதிக்கும் குந்தகம் நேரும் இந்நேரத்தில் நாம் சற்று நிதானமாகவும் ஆழமாகவும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.


நம் நாடு மதச்சார்பற்ற சட்டங்களை கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சமயத்தவரும் அவரவர் சமய கருத்துக்களை பிரச்சாரம் செய்யலாம்; கடைப்பிடிக்கலாம்; பிடித்த சமயத்துக்கு மாறிக்கொள்ளலாம். அடுத்தவர் அதனை தடுக்க முடிலாது. காரணம்: இது அடிப்படை உரிமை. தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதித்தலைவர்களுக்கான குருபூஜைகள் ஏதோ ஒரு சமய வழிபாடு போல... பிரச்சாரத்துடன் வெளிப்படையாக நடந்து வருகிறது. இது ஏதோ அடிப்படை உரிமை போல... அரசின் பாதுகாப்பும் மக்கள் ஆதரவும் கோரப்படுகிறது. இது சரியா..?

யாருக்காக குருபூஜைகள் நடக்கின்றனவோ அந்த தலைவர்கள் யாரும் அவரவர் வாழ்வில் வேறு யாருக்கும் குருபூஜை செய்தது இல்லை. "இந்த சாதி அமைப்பு முறையே ஒழியவேண்டும்" என்று நினைப்பவர்கள்... "அதை சார்ந்த இந்த குருபூஜைகளும் ஒழிக்கப்பட வேண்டியன" என்பதில் மாற்றுக்கருத்து கொள்ள இயலாது அன்றோ..?

ஆக, நமது நூற்றாண்டில் நம் கண் முன்னே ஆரம்பிக்கப்பட்ட இந்த குருபூஜைகள்... 'நம் சமூகத்துக்கு நல்லதா', 'இதனால் மக்களுக்கு பயன் உண்டா', 'இவை நடக்கவில்லையென்றால் அதனால் சமுதாயத்துக்கு கேடு ஏதும் நேருமா'... என்று நாம் அலசி ஆராய்கிறோம். முடிவெடுக்கிறோம். இதில் தவறேதும் இல்லை என்றே நான் நம்புகிறேன்.

இந்த குருபூஜைகள் எதோ ஒரு சாராரின் 'உரிமைப்பிரச்சினை' எனவும்... அதை தடுப்பது போன்ற கருத்துக்கள்... 'உரிமைகளை நசுக்குகின்றன' என்றும் சாதியை எதிர்க்கும் சில முற்போக்காளர்களே எண்ணுவதுதான் கவலை தருகிறது..! எனவே, 'எது உரிமை' என்று நாம் தெளிவாக சிந்திக்க வேண்டும்.

சமூகத்துக்கு கேடுதரும் லாட்டரி சீட்டுகள், பான் பராக், ஜர்தா, பீடா, குட்கா அனைத்தும் முன்பொரு நாள் நம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டன. இவ்வளவுக்கும்... அப்போது "தமிழ்நாடு அரசு பரிசுச்சீட்டு" என்று தமிழக அரசே லாட்டரி விற்பனை சூதாட்டம் நடத்திக்கொண்டு இருந்த சமயத்தில்தான் அந்த தடை வந்தது. அப்போது மக்கள் நலன் கணக்கில் கொள்ளப்பட்டு அரசின் வருவாய் துச்சமாய் புறந்தள்ளப்பட்டது.

மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுத்த அதே முதல்வர் ஜெ. தான் இப்போதும் ஆட்சியில்..! இறைநாடினால்...மீண்டும் அதே போன்றதொரு நிலைப்பாடு நாளை அவருக்கு 'டாஸ்மாக்' விஷயத்திலும் தோன்றி, தமிழகம் முழுதும் டாஸ்மாக் மூடப்பட்டு பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் அப்பொன்னான நாளும் வரலாம்..! அப்போது, 'குடிகாரர்கள் உரிமை போச்சு' என்று நீதிமன்றம் செல்வீர்களா... அல்லது... தூரநோக்கில், சமூக நலன்... வருங்கால சந்ததி உடல்நலன் என்று பார்ப்போமா..? ஆக, ஒரு 'சமூக தீமை' எப்போதும் 'உரிமை' என்ற வட்டத்திற்குள் வரவே வராது என்பது தெளிவு..!


அப்படி என்றால்... இறைவன் படைத்த ஒரே மனிதப்படைப்பை பல வர்ணங்களாக பிரித்து அடிமைப்படுத்தும் முறையான இந்த சாதி - உரிமையா..? சமூகத்தீமையா..? சாதிவெறி... சாதித்தலைவர்களுக்கான குருபூஜை இதெல்லாம் அந்தந்த சாதியினர் உரிமையா அல்லது சமூகக்கேடா..? இவை ஒழிக்கப்பட வேண்டியவையா..? அல்லது 'உரிமை' என்று கூறி பாதுகாக்கப்பட வேண்டியவையா..? சற்று சிந்தியுங்கள் சகோ..! மேலும் உங்கள் சிந்தனைக்கு.....

சில வருடங்களுக்கு முன்னர்... நம் பெரும்பாலான மாவட்டத்தின் பெயர்கள் எல்லாம் தலைவர்கள் பெயரில் அல்லவா இருந்தன..? இப்போது ஓடும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் எல்லாமே தலைவர்கள் அல்லது மன்னர்கள் பெயரில் அல்லவா ஓடின..? எதனால்..?

சில ஓட்டுக்கட்சிகள்... ஒருசில குறிப்பிட்ட சாதியினரின்/கட்சியினரின் ஓட்டுக்களை பெற அவர்கள் அதிகம் வாழும் இடமாக பார்த்து ஏற்கனவே இருக்கும் மாவட்டத்தை பிரித்து சாதித்தலைவர்/அரசியல் தலைவர் பெயரை சூட்டினர். இதைப்பார்த்த பிற சாதியினர்/கட்சியினர்... 'எனக்கும்...' 'எனக்கில்லையா...' என்றதால்... பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டனவே... அல்லது பெயர்மாற்றம் பெற்றனவே..! எத்தனை மாவட்டத்தின் பெயரைத்தான் மாற்றுவது..? அதனால்... சேர/சோழ/பாண்டிய/பல்லவ மன்னர்கள் பெயரில் ஓடிக்கொண்டிருந்த அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் சில சாதியினர்/பிரிவினர் ஓட்டுக்காக சாதித்தலைவர்கள் பெயரிலும் அரசியல் தலைவர்கள் பெயரிலும் அல்லவா ஓட ஆரம்பித்தன..!

ஒரு கட்டத்தில் ஒவ்வொரு சாதியும், தனக்கு ஒரு கட்சி & ஒரு கொடி என்று புற்றீசல் போல கிளம்பி... மாவட்ட பெயர், பேருந்து பெயர் ஆகிய இதற்காக அடிதடி... கலவரம்... வன்முறை... துப்பாக்கிச்சூடு என்று சாதிவெறி வளர ஆரம்பிக்க... அந்த சமயத்தில்தான் அந்த தடைக்கு அவசியம் வந்தது. அப்போது மக்கள் நலன் & சமூக அமைதி கணக்கில் கொள்ளப்பட்டு... சமூக தீமையான சாதி புறந்தள்ளப்பட்டது. "அனைத்து மாவட்டங்களின் பெயரும் அந்தந்த மாவட்ட தலைநகர் பெயரிலேயே அழைக்கப்படும்" என்றும்... "அனைத்து அரசு பேருந்துகளும் இனி... 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து' என்றே அழைக்கப்படும்" என்ற நற்செய்தி ஒரு நன்னாளில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் வந்தது.

அப்போது யாரும் இதற்காக கொந்தளிக்கவில்லை. "எங்கள் உரிமை போச்சே" என்று கதறவில்லை. அனைவரும் அமைதியாக ஏற்றுக்கொண்டனர். காரணம்..? 'சாதி ஒரு சமூகக்கொடுமை' என்று அனைவருமே உணர்ந்து இருந்தனர் என்பது மட்டுமல்ல... பெயர் தூக்கப்பட்டதில் அனைவருக்கும் சமநீதி(!) என்ற ஒன்று இருந்ததாலேயே அன்று இது அனைவராலும் ஏற்கப்பட்டது.

குறிப்பிட்ட சாதியினர் குருபூஜைக்கு அந்தந்த சாதி அரசியல்வாதிகள், சாதி அதிகாரிகள், சாதி நடிகர்கள், சாதி பிரபலங்கள் செல்வதும்... தங்கள் இருப்பை சாதி பலத்தை நிலைநாட்டும் ஒரு மாநாடாகத்தானே குருபூஜை நடக்கிறது..? இதைக்கண்ட மற்ற அனைத்து சாதியினரும் தத்தம் இருப்பை நிலைநாட்ட தங்கள் சாதியில் பிரபலம் ஒருவரை தெரிந்தெடுத்து அவருக்கு குருபூஜை ஒன்றை ஆரம்பிக்கிறார்களா இல்லையா..? அதற்கு முதல்வர், எதிர்கட்சித்தலைவர், அரசு அதிகாரிகள், நட்சத்திரங்கள்... மற்றும் பல முக்கியஸ்தர்கள் வரவில்லை எனில்... சாதி பாகுபாடு உண்டாகிறதல்லவா..?


இவை வளரும்போது என்னவாகிறது..? வீதி முதல் இணையம் எல்லாம்... சாதிப்பிரிவினையும் சாதிதுவேஷமும் தானே வளருகிறது..? இதுபோன்ற சாதி அரசியலை விதைக்கும் வேலையைத் தானே இந்த குருபூஜைகள் செய்கின்றன..? அப்படி நடக்கும் குருபூஜைகளில் அமைதி நிலவுகிறதா..? வெறி கிளப்பும் வார்த்தைகள், வன்மம், கொலை, வன்முறை, அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு, பொது அமைதிக்கு நாசம், சட்டம் ஒழுங்கு பாழ்... என்றுதானே முடிகிறது..!

ம்ம்ம்... இப்படியும் ஆரம்பித்து விட்டார்கள்..! "எங்கள் குருபூஜைக்கு அரசு விடுமுறை விடு...", "இதை அரசு விழாவென அறிவி..." என்றெல்லாம்..! அன்று, 'மாவட்ட பெயர்கள்... அரசுப்பேருந்து பெயர்கள்...' இருந்த இடத்தைத்தானே இன்று குருபூஜைகள் பிடித்திருக்கின்றன..?

சாதி ஒரு சமூகக்கேடு எனில், அது சார்ந்த அனைத்தும் சமூகக் கேடுதானே..? ஆம் எனில், இந்த குருபூஜைகள் சமூகக்கேடுகள் தானே..?

இவை எப்படி உரிமைகள் ஆகும்..? மதத்திற்கு அப்பாற்பட்ட இந்த குருபூஜைகள் தற்போது மக்களிடம் சாதிவெறியூட்டி பொது அமைதியை குலைக்கின்றனவா இல்லையா..??

"சமூகக்கேடு"களுக்கு அரசின் ஆதரவையோ, அனுமதியையோ, பாதுகாப்பையோ கேட்பது குற்றம் ஆகாதா..???


ஆகவே... எல்ல்லா சாதியினரின் குருபூஜைகளும் நிறுத்தப்பட வேண்டும்..!!!

அவை நிகழ்கால சமூகத்துக்கு அவசியமற்றவை என்று உணரவேண்டும் & உணர்த்தப்பட வேண்டும்.

இந்திய அரசியல் சாஸனத்தில் குருபூஜைகளுக்கு அனுமதி உண்டா..?


This is aptly clear from the statement of Pandit Jawahar Lal Nehru made by him on the floor of the Lok Sabha on 13.6.1951. He said :

"……After all the whole purpose of the Constitution as proclaimed in the Directive principles is to move towards what I may say a casteless and classless society……" (Lok Sabha Debates Vol XII-XIII (Part II) Page 9830-31)

குருபூஜைகள் தேச நலனுக்கு உகந்ததா..? அல்லது... எதிரானதா..?

This is aptly clear from: On 25th November, 1949, in Constituent Assembly, Dr. B. R. Ambedkar spoke:
"………….In India there are castes. The castes are anti-national. In the first place because they bring about separation in social life. They are anti-national also because they generate jealousy and antipathy between caste and caste."


"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; ... ...." ---(குர்ஆன் 49:13 -ல் இறைவன் )

"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" ---திருமூலர்.

"சாதிகள் இல்லையடி பாப்பா...
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..." ---பாரதியார்.

"தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்" ---தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம்.
நன்றி : /pinnoottavaathi.blogspot.com

சிறுபான்மையினர் நல நிதி பெற சிறப்புக் குழு அமைப்பு- மமக தலைவருக்கு அமைச்சர் பதில்

சிறுபான்மையினர் நல நிதி பெற சிறப்புக் குழு அமைப்பு- மமக தலைவருக்கு அமைச்சர் பதில்


"சிறுபான்மையினர் நலனுக்கான மத்திய அரசின் நிதியை பெற சிறப்புக் குழு அமைக்கப்படும்" என்று அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபையில் தெரிவித்தார்.


நிதி ஒதுக்க மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் நிகழ்த்திய உரையின் போது இந்த தகவல் வெளியானது.


இது தொடர்பான விவரம் வருமாறு:

ஜவாஹிருல்லாஹ் : சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்காக மத்திய அரசு ஐந்தாண்டு திட்டத்தின் பெயரால் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மதரசாக்களில் தரமான கல்வியைத் தரும் திட்டம், சிறுபான்மையினரின் கல்விக் கூடங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டம் ஆகியவற்றுக்கான நிதியைத்தான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இவற்றைப் பெறுவதற்காக தமிழகத்திலிருந்து சிறுபான்மையினர் நடத்தும் 12 நிறுவனங்கள் முறைப்படி விண்ணப்பித்திருந்தன. இவற்றை முறையாக மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டியது கடமை.


ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய பரிந்துரை ஏதும் செய்யாத காரணத்தால் மத்திய அரசின் இந்த நிதி தமிழகத்திற்குக் கிடைக்காமலேயே போய்விட்டது. எனவே முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு பரிந்துரை செய்வதற்கான குழுவை அமைத்து மத்திய அரசிடமிருந்து அந்த நிதியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.


அமைச்சர் சி.வி.சண்முகம் :
திமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய குழு ஒன்று அமைத்தார்கள். ஆனால் அந்த குழு செயல்படவேயில்லை. தற்போது புதிய குழுவை அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


ஜவாஹிருல்லா :
நன்றி! தனித் தேர்வாளர்கள் 14 வயதுக்கு மேல் 8ம் வகுப்பு தேர்வை எழுத திமுக ஆட்சிக் காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலமான தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வேண்டும். தேர்வு முடிந்ததும் தேர்வு வினாத் தாட்களுக்கான சரியான விடையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். விடைத்தாள்களை மாணவர்கள் கட்டணம் கட்டிக் கேட்டால் வழங்குவதற்கு வகை செய்ய வேண்டும்.


உறுப்பினர்களுக்கு சட்டமன்ற அறிவிப்புகள் மின்னஞ்சல் மூலம் வருவது மகிழ்ச்சிக்குரியது. அதே போன்று உறுப்பினர்களின் உரைத் தொகுப்பையும் மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பி வைத்தால் அதிலேயே நாங்கள் திருத்தி அனுப்பிவிட முடியும். இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் பேசினார்.

புதன், 14 செப்டம்பர், 2011

மாலேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்கள் அப்பாவிகள்! என்.ஐ.ஏ

thumbnail[

மும்பை: கடந்த 2006 ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டு சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 9 முஸ்லிம்கள் குண்டு வெடிப்பில் தொடர்பில்லாத அப்பாவிகள் என என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்புடைய இவர்கள் இந்த இரட்டை குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இக்குண்டு வெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டனர் 312 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் இவர்களின் பிணை மனுக்கு இந்த தடவை எதிர்ப்பு தெரிவிக்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009 ல் சிபிஐ 9 முஸ்லிம்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது 2010ல் சுவாமி அசிமானந்தா மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்வு இந்துத்துவா சக்திகளின் மூலம் நிகழ்த்தப்பட்டது என இந்துத்துவாக்களுக்கு எதிராக கொடுத்த வாக்கு மூலத்தால் சிபிஐயின் விசாரணையின் போக்கை மாற்றியது. தற்போது தலைகீழ் மாற்றமாக சி.பி.ஐ என்.ஐ.ஏவுக்கு அளித்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்துத்துவா நபர்களை மட்டும் விசாரித்தால் போதுமானது என்று குறிப்பிட்டுள்ளது.

சிபிஐ செய்த இந்த தவறுகளின் விளைவாக இந்த 9 அப்பாவி முஸ்லிம்கள் கடந்த 5 வருடமாக சிறையில் வாடி வருகின்றனர் அதேசமயம் அதில் சம்மந்தப்பட்ட இந்துத்துவா கூட்டத்தின் ஒருவர் பெயர் கூட இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை . இப்போது தான் முதன்முறையாக புலனாய்வுத்துறை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முஸ்லீம்களுக்கு எப்பங்குமில்லை என்ற அறிவித்துள்ளதோடு அவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

கைத் தொலைப்பேசி - கொலை பேசியாகலாமா?



நெஞ்சை உலுக்கும் நேற்றைய செய்தி ஒன்று, இன்று கைத் தொலைப்பேசி இல்லாத மனிதர்களை - இருபால் நண்பர்களை - காண்பது அரிது! அரிது!! இது மிகப் பெரிய வளர்ச்சி - வசதியும் கூடத்தான். ஆனால் எல்லாவற்றிற்கும் மறுபக்கம் ஒன்று உண்டே. அதையும் நாம் கவனிக்க வேண்டாமா?

எழும்பூர் ரயில்வே மார்க்கத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 155 பேர் இந்த கைத்தொலைப்பேசி செல்போன் பேச்சுகளால் - தண்டவாளத்தைக் கடக்கும்போது தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர் என்பது மிகவும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும், துயரத்திற்கும் உரிய செய்தி அல்லவா?

செல்போன் அழைப்பு மரண அழைப்பாக எப்படி மாறியது? இதற்காக இந்தப் பாழும் செல்போன் என்று இறந்தவர்களின் குடும்பத்தார் ஓலமிட்டு அழும் கூக்குரல் நம்மை நெக்குருகச் செய்கிறதே!

இந்த 155 பேர்களில் 20 வயது முதல் 30 வயதுள்ளவர்கள் 98 பேர்.

வாலிபம் என்ற வசந்தத்தையே காண முடியாமல் மின்னலாய் அவர்களின் உயிர் திடீரென்று பறிக்கப்பட்டு விட்டதே! தன்னைமறந்து இரயில் வருவதுகூடத் தெரியாத அளவுக்கு செல்போன் மெய்ம் மறந்து பேசிக் கொண்டு தண்ட வாளத்தைக் கடக்கும் போது இவர்களது உயிர் பறிக்கப்படுகிறது!

என்னே கொடுமை!

இதில் மகளிர் 24 பேர்.

இந்தக் கொடுமையிலும் மற்றொரு கொடுமை - இவர்களில் அடையாளம் கண்டுபிடிக்கப்படாதவர்கள் 66 ஆண்கள், பெண்கள் 14 பேர்கள்.

அத்தனைப் பேர்களின் உடல்களும் மருத்துவமனைகளில் மார்ச்சரி (Mortuary) என்ற சவக்கிடங்கில் வைக்கப்பட்டு அனாதைகளாக உள்ளனவாம்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் 32 பேர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

எழும்பூர் - தாம்பரம் - செங்கற்பட்டு மார்க்கத்தில் ஒரு ஆண்டில் ரயிலில் அடிபட்டு இறந்தவர்கள் 344 பேர்கள்!

இதுபற்றி செய்தித்தாள்களில் வந்துள்ள விளக்கம் மனநல மருத்துவர் ஒருவர் கூறுவது என்னவென்பதை நாம் அனைவரும் - கைத் தொலைப்பேசி பயனாளிகள் அனைவரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

செல்போன் பேச்சுகள் நம்முடைய நரம்புகளைத் தூண்டி விட்டு, அதில் ஆழ்ந்து போகச் செய்து விடுகிறது. இதனால் நம்முடைய சிந்தனைகள் மறக்கடிக்கப்பட்டு, பேச்சிலேயே மூழ்கி விடுகிறோம். அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே பேசுபவருக்குத் தெரியாது; குறிப்பாக, ரயிலிலிருந்து இறங்கும் பயணிகள் செல்போன்களை காதுகளில் வைத்தபடி பேசிடுகையில் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ப தையே மறந்து விடுகின்றனர். ரயில்வே தண்டவாளங்களில் போகும்போது ரயிலில் சிக்கி உயிரிழப்பவர்களும் இதே வகையினர்தான்!

எனவே இனியாவது பேருந்துப் பயணத்திலும் கார் ஓட்டும் போதும், சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போதும், செல்போன் பேச்சுகளைத் தவிர்த்து உயிரைக் கப்பாற்றிக் கொள்ள முயலுவோம் நாம்.

பெற்றோர்கள் சிறு பையன்களுக் கும், பெண்களுக்கும்கூட செல்போன் களை வாங்கிக் கொடுப்பதை எவ்வளவு தள்ளிப்போட முடியுமோ அவ்வளவு தள்ளிப் போட முயலுங்கள்.

அதிலேயே நேரத்தைச் செல வழித்து கெட்டுப் போகிறவர்கள் - SMS என்ற குறுந்செய்தி, இன்னும், சில அருவருக்கத்தக்க உரையாடல், மூட நம்பிக்கைகளைப் பரப்பி காசு சேர்க்கும் கயவர்களால் ஏற்படும் பாதிப்பு - இப்படி பலப்பல.


‘Missed Call’ Technic என்ற கொடுமைபற்றி எவ்வளவோ எழுதலாம்!

இன்று ஒரு செய்தி. பள்ளி மாணவி ஒருவரை அவரது தாயார் ஏனம்மா எப்பொ பார்த்தாலும் செல்போனில் பேசிக் கொண்டே இருக்கிறாய், நிறுத்து! என்று கூறி கண்டித்தாராம். அதற்காக தற்கொலை செய்து கொண்டாராம் அந்த மாணவி.

என்னே கொடுமை! என்னே பரிதாபம்!

வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் களால் இது போன்ற இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

கைத் தொலைப்பேசி கொலைபேசி யாக மாற்றப்படலாமா? இருபால் இளைஞர்களே, சிந்தியுங்கள்!

திங்கள், 12 செப்டம்பர், 2011

துப்பாக்கி சூடு - மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை


தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி இன்று காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டை மனிதநேய மக்கள் கட்சி மிகவும் துரதிருஷ்டவசமான, துயர நிகழ்வாக கருதுகின்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 4 விலை மதிக்க முடியாத உயிர்கள் பலியாகியுள்ளன. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பழனிகுமார் என்ற மாணவர் விஷமிகளால் படுகொலைச் செய்யப்பட்டார். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் உடனடியாக காவல்துறையினர் கைதுச் செய்திருந்தால் கொந்தளிப்பான உணர்வுகள் தணிக்கப்பட்டிருக்கும். இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ரூ 1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். இதனை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறது.

இதே போல் இந்த கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு உயர்தர மருத்துவ சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சிக் கேட்டுக் கொள்கிறது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை முன்னெச்சரிக்கையாக கைதுச் செய்தது முதல் பரமக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்ற துப்பாக்கி சூடு வரை நீதி விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன் அடிப்படையில் அத்துமீறி செயல்பட்ட காவல்துறையினர் மீதும் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி மாச்சரியங்களை கடந்து அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வியாழன், 8 செப்டம்பர், 2011

10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்- பேரவையில் மமக வலியுறுத்தல்

2011-12 ஆம் ஆண்டிற்கான சிறைத்துறை மானியக் கோரிக்கையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சட்டபேரவையில் பேசியது:

முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "The degree of civilization in a society can be judged by entering its prisons" என்று மேலைநாட்டு அறிஞர் சிறைச்சாலைகளைப் பற்றி குறிப்பிட்டார். இந்த அடிப்படையில் 'சிறைச்சாலைகள் மேலாண்மை' என்பது ஒரு ஜனநாயக நாட்டில் மிக முக்கிய பங்காக வகிக்கின்றன. இந்த மேலாண்மையை சிறப்பான முறையில் நம்முடைய முதலமைச்சர், தலைமையிலான இந்த ஆட்சியில் சிறப்பாகச் செய்து வருவதை சிறைத் துறை மானியக கோரிக்கையின் கொள்கை விளக்க குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

தனது கைதிகளைச் கருணையுடனும், அன்புடனும் நடத்தாத ஒரு சமூகத்தை நாகரீக சமூகம் அங்கிகரிக்க இயலாது சிறைவாசிகளுக்குரிய அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் வழங்காத வரையில் ஒரு சமூகம் தன்னை நாகரீக சமூகமாகக் கருத இயலாது. ஒரு சிறைவாசி, அவர் விசாரணைக் கைதியாக இருந்தாலும் சரி, தண்டனைக் கைதியாக இருந்தாலும் சரி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மனிதர் என்ற தகுதியை இழந்துவிடுகிறார் என்று கருதிவிடக் கூடாது. சிறையில் இருக்கும் ஒருவர் அரசியல் சாசன சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிப்பதற்குத் தகுதியுடையவராகிறார்.

சிறைச்சாலை என்பது ஒரு சீர்திருத்த கூடம், அந்தக் சீர்திருத்தப் பள்ளியில் பல ஆண்டுகள் கழித்தவர்கள் வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழிக்க வேண்டுமென்று கருதுவது நியாயம் இல்லை எனவேதான், தமிழகத்தில் மட்டுமல்ல, மராட்டியம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாநில அரசுகள் ஆயள் தண்டனைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலைச் செய்கின்றன. தமிழகத்திலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் உட்பட பெருந்தலைவர்களின் பிறந்தாளின்போது ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு அரசியல் சாசனச் சட்டத்தின் 161ஆம் பிரிவின் அடிப்படையில் தமிழக அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் முந்தைய திராவிட முன்னேற்ற கழக அரசு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு 1405 ஆயுள் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளித்து விடுதலைச் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஒர் அறிவுரையை அதாவது மாநில அரசு கைதிகளை விடுதலைச் செய்யும் போது எந்தவிதமான பாரபட்சமும் காட்டக்கூடாது ஒரு கைதிக்கு ஒரு விதிமுறை வகுக்கப்பட்டால் அதுதான் எல்லா கைதிகளுக்கு பொருந்தும் என்று ஹரியானா அரசு தொடுத்த ஒரு வழக்கிலே உச்ச நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு ஒரு தீர்பை வழங்கியுள்ளது.

ஆனால் அந்தத் தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு மாறாக, மதுரையிலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சிறந்த கவுன்சிலராக விளங்கிய தோழி லீலாவதியை படுகொலை செய்தார்கள். அந்தப் படுகொலை வெறும் ஆயுதத்தால் செய்யப்பட்டாலும் கூட அதுவும் ஒரு பயங்கரவாத செயல்தான், அந்தப் படுகொலையை செய்த கைதிகளை விடுதலைச் செய்ய வேண்டுமென்பதற்காக, அதுவரை 10 ஆண்டுகள் சிறைத்துறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டார்கள் ஆனால், லீலாவதி அம்மையாரைக் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்பதற்காக 10 ஆண்டுகள் 7 ஆண்டுகளாகக் குறைத்து அவர்களையெல்லாம் விடுதலை செய்வதற்கு வழி வகுத்த தி.மு.க. அரசு, சிறுபான்மையின மக்களினுடைய பாதுகாவலன் நாங்கள்தான் என்று சொல்லக்கூடிய கருணாநிதி அரசு, இதேபோன்ற குற்றச்சாட்டுகளிலே கைதாகி 10 ஆண்டுகளல்ல 13 ஆண்டுகள் சிறையிலிருந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என்று பாரபட்சத்தை காட்டியது. இதற்கு எடுத்துக்காட்டாக நான் சொல்ல வேண்டுமென்றால், 2007 ஆண்டில் கூட 10 ஆண்டுகள் சிறையிலே இருந்தவர்களை தி.மு.க. அரசு விடுதலை செய்தது.

ஆனால் திருச்சி சிறையிலிருந்த ஜாகீர் உசேன், அபுதாஹீர் என்ற 2 பேர், 13 ஆண்டுகள் அப்போதே சிறைவாசம் அனுபவித்திருந்தாலுங்கூட, அவர்களை விடுதலை செய்ய மாட்டேன் என்ற பாரபட்சப் போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்தது என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது ஒரு மனிதனை பல்வேறு வகையில் பக்குவப்படுத்திவிடும். இவர்களில் பலர் பல்வேறு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவைச் சிறையில் இருக்கும் அபுதாகீர் என்று கைதியின் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் செய்து மோசமான நிலையில் இருக்கின்றார். 55 வயதைக் கடந்த பலர் இன்னும் பல நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் விஷயத்திலே வரலாற்று சிறப்புமிகுந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நான் இந்த நேரத்திலே மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றினை வைக்க விரும்புகிறேன்.

பேறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் தமிழக மக்களுக்கு பயனளிக்ககூடிய பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கான விழாக்களை இந்த அரசாங்கம் நடத்தப் போகின்றது. இந்த தருணத்திலோ அல்லது காந்தியடிகள் பிறந்த நாளிலோ அல்லது பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளிலோ 10 ஆண்டு சிறை தண்டனை முடித்திருக்கக்கூடிய அனைத்து கைதிகளையும் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்காமல் அவர்கள் எந்தச் சார்தவர்களாக இருந்தாலும் சரி, எந்தக் குற்றச்சாட்டுக்காக உள்ளேயிருந்தாலும் சரி, அவர்களை விடுதலைச் செய்தவற்கு இந்த அரசு ஆவன செய்ய வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பரோவில் செல்லும் சிறைவாசி தவிர்க்க இயலாத காரணங்களினால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல் ஒரிரு நாட்கள் தாமதம் ஏற்படுவிட்டடால் கூட பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவது கிடையாது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களையும் பொது மன்னிப்பில் விடுவிக்க இந்த அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்றத்திலே மேல் முறையீடு வழக்குகள் ஆண்டுக் கணக்கிலே நீடித்துக்கொண்டுப் போகக்கூடிய நிலையிலே, நீதிமன்றத்தில் விடுதலையாகக்கூடிய ஒருவருக்கு பரோவில் செல்ல அனுமதி கிடையாது. மேல் முறையீடு செய்திருக்கக்கூடிய ஒருவருக்கு கிடையாது என்பது நியாயமற்றதாகும். எனவே, அத்தகையாவர்களுக்கு பரோல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.(மணயடிக்கப் பெற்றது) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்னும் இரண்டே நிமிடத்தில் உரையை முடித்துவிடுகிறேன்.

விசாரணை சிறைவாசிகளின், உறவினர்கள் இறந்துவிடும்போது அவர்களது இறுதிச் சடங்கில் பங்கொள்வதற்காக, சிறைவாசிகள் நீதிமன்றத்தை நாடி பரோல் பெறும் நிலையுள்ளது. இதற்குச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, பரோல் வழங்கக்கூடிய அதிகாரத்தை சிறை கண்காணிப்பாளருக்கு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

புழல் சிறைச்சாலையில் மூன்று அலகுகள்தான் இருக்கின்றன. அங்குள்ள கைதிகள், அதாவது அவர்களுக்கு உடல்நலம் குன்றிவிட்டால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு புதுப்பேட்டையிலிருந்து ஆயுத காவல் படை வர வேண்டிய நிலை இருக்கின்றது.

இதற்குமாறாக, ஆயுத காவல் படையினுடைய ஒரு பிரிவை புழல் சிறையில் அமைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளிக்கூட மாணவர்களுக்கெல்லாம் கால்சட்டைப் பதிலாக, முழுகால் சட்டை வழங்கிய மனிதாபிமானம் மிகுந்த இந்த அரசு தண்டனை கைதிகளுக்கும் முழு கால்சட்டை வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

1996ஆம் ஆண்டு நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிறையில் இருந்தபோது, அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்பதற்காக வேண்டி மத்திய சிறைச்சாலை அலுவலர் ராஜேந்திரன் உட்பட பல அதிகாரிகளை தி.மு.க. அரசு பழி வாங்கியது. அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்திலே மின்தூக்கி (Lift) வசதியை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, விடைபெறுகிறேன்.

ஈரானில் போதை மருந்து கடத்திய 184 பேருக்கு மரண தண்டனை!

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் போதை மருந்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களுடன் சேர்த்து போதை மருந்து கடத்தியமைக்காக இந்த ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மரணதண்டனைக்கு உள்ளானோரின் பெயர் விவரம் ஹமீத் கே, காசிம் பி, உசைன் ஜே, சியாமக் எம் என்று அரசு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில்தான் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு இது 179 ஆக இருந்தது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உண்மையல்ல இவற்றைவிட அதிகம் பேர் மரண தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்று மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட மரண தண்டனை அவசியம், எங்கள் நீதிமன்றங்களில் விரைவாகவும் விரிவாகவும் விசாரணை நடத்திய பிறகே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்று ஈரானிய அரசு விளக்கம் அளிக்கிறது.

கொலை, பாலியல் பலாத்காரம், ஆயுதம் தாங்கியவர்கள் நடத்தும் கொள்ளை, போதை மருந்து கடத்தல், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்கள் புரிந்தால் நீதிமன்றத்தால் நன்கு விசாரிக்கப்பட்டு பிறகே மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்கிறது ஈரான்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

2.5 லட்சம் பொறியியல் மாணவர்களை வேலைக்கு எடுக்கும் ஐடி நிறுவனங்கள்- ஆளெடுப்பு தொடங்கியது

சென்னை: முன்னணித் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களின் கேம்பஸ் இன்டர்வியூக்கள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு 2.5 லட்சம் பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு எடுக்கப்பட்டனர். இந்த நிலையில் கூடுதலாக 50 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு வேலை கிடைக்கவுள்ளது.

வழக்கமாக கடைசி செமஸ்டரின்போதுதான் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தமுறை 7வது செமஸ்டரிலேயே கேம்பஸ் இன்டர்வியூவை ஏற்பாடு செய்துள்ளன ஐடி நிறுவனங்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூக்களை தொடங்கி, பலருக்கு ஆபர் லெட்டர்களையும் கூட கொடுக்க ஆரம்பித்து விட்டனவாம்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 702 மாணவர்களுக்கு டிசிஎஸ்ஸில் வேலை கிடைத்து நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல வேலம்மாள் குழும பொறியியல் மாணவர்கள் 515 பேருக்கும் வேலை கிடைத்துள்ளது. சாய்ராம் குழும கல்லூரி மாணவர்கள் 500 பேர், ஆர்எம்கே கல்லூரி மாணவர்கள் 645 பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.

அதேபோல காக்னிஸன்ட் நிறுவனம், சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 807 பேரைத் தேர்வு செய்துள்ளது. அதேபோல கோவை பி.எஸ்ஜி கல்லூரி மாணவர்கள் 703 பேரையும் இது தேர்வு செய்துள்ளது.

சேலம் சோனா கல்லூரியைச் சேர்ந்த 417 பேருக்கு அசன்ஜரில் வேலை கிடைத்துள்ளது.

அமிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 700 பேரை விப்ரோ வேலைக்கு எடுத்துள்ளது.

வழக்கமாக அதிக அளவிலான இளம் பொறியயாளர்கள் ஐடி வேலைகளில் சேருவது ஆந்திராவில்தான். அங்கு ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சேருகின்றனர். அடுத்த இடம் தமிழகத்துக்கு. தமிழகத்திலிருந்து ஐடி வேலையில் சேருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.8 லட்சாகும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை சேருகின்றனர்.

அதிக அளவில் ஆட்கள் எடுக்கப்படும்போதிலும் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட சம்பள விகிதமே இந்த ஆண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். ஆண்டுக்கு ரூ. 3 முதல் 3.25 லட்சம் குறைந்த சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புது மணப்பெண் மர்மமான முறையில் உடல் கருகி சாவு!

மன்னார்குடி: மன்னார்குடியில் திருமணமான ஓராண்டிற்குள் மணப்பெண் மர்மமான முறையில் தீயில் கருகி இறந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் நூர் முகம்மது (68). இவர் நூர் என்ற பெயரில் மளிகை கடை மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் ஜாபர் அலிக்கு கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆன 15 நாட்களில் அந்த பெண் ஜாபரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன் ஒரத்தநாட்டை சேர்ந்த ஷேக் அலாவுதின் என்பவரின் மகளான நஜிதாபேகம் (16) என்ற பெண்னை ஜாபர் அலிக்கு திருமணம் செய்து வைத்தனர். நேற்று காலை எட்டு மணியளவில் நஜீதாபேகம் பாத்ரூமில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதாக மாமனார் நூர் முகம்மது மன்னார்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மன்னார்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி ஓரு வருடமே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி .ஓ., சவுந்திரராஜன் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.அப்போது நஜிதாபேகத்தின் தந்தை ஷேக்அலாவுதின், எனது மகளை அடித்து உதைத்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் எனது மகளின் மாமனார் நூர்முகம்மது ஈடுபட்டுள்ளார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறினார். இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 5 செப்டம்பர், 2011

காவல் துறையினரின் அராஜகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தஃவா சென்டரில் சட்டத்திற்குட்பட்டு இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்று இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை கற்றுக் கொண்டிருந்த சகோதரி ஆயிஷா சித்திக்கா என்ற மாணவியை கடந்த 27-ந் தேதி (சனிக்கிழமை) ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையில் வந்த காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக இரவு நேரத்தில் தஃவா சென்டருக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்தது மட்டுமல்லாமல் தஃவா சென்டர் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியும் அவர்கள் மீது அநியாயமாக F.I.R போட்டு விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்,

மேலும் கண்ணியமாக ஃபர்தா அணிந்த அந்த மாணவியை பெண் போலீசார் நீ இதற்கு முன்னர் பர்தா போட்டிருந்தாயா? என்று ஆரம்பித்து தரக்குறைவாக நடத்தியுள்ளார். தற்போது அழைத்துச் சென்ற மாணவி ஆயிஷா சித்தீக்கா எங்கு உள்ளார்? அவர் என்ன ஆனார்? காவல்துறை அவரை எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்று விபரங்கள் இன்றுவரை வெளியிடவில்லை.

எனவே காவல்துறையின் இதுபோன்ற அத்துமீறல்களை தடுத்து நிறுத்தி காயல்பட்டின பொதுமக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த கோர சம்பவத்தால் கொந்தளித்துப் போயுள்ள நமதூர் மக்களின் நியாயமான உணர்வுகளை பிரதிபலிப்பதற்காகவும் இன்ஷா அல்லாஹ் (05/09/2011) திங்கள் கிழமை 4.30 மணியளவில் நமதூர் தபால் நிலையம் முன் காவல்துறையினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஆயிஷா சித்திக்கா மகளிர் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினரின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டள்ளது.

எனவே இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகள் நிலைநாட்டப்பட தாங்கள் உறுப்பினர்கள், ஜமாத்தார்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு தங்களின் நியாயமான உணர்வுகளை பிரதிபலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

தஃவா சென்டர் நிர்வாகிகள்
(சமூக நல்லிணக்க மையம்)
காயல்பட்டினம்.

இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி

அங்காரா : காஸா முற்றுகையைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அதை பற்றி ஐ.நா குழு விசாரணை நடத்தியது. இன்று வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் இஸ்ரேல் அதீத பலத்தைத் தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ,நாவின் அறிக்கையைத் தொடர்ந்து துருக்கி இஸ்ரேலின் தூதர், முக்கிய இஸ்ரேல் அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதோடு ராணுவ ஒப்பந்தங்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. இஸ்ரேல் முறைப்படி மன்னிப்பு கேட்காததாலும் இறந்தவர்களுக்கு இழப்பீடு தராததாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு துறை அமைச்சர் அஹ்மத் தவுடோக்லு கூறினார்.

"இரண்டாம் செயலாளர் அந்தஸ்துக்கு மேலுள்ள அனைத்து இஸ்ரேல் அதிகாரிகளும் புதன்கிழமைக்குள் துருக்கியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்" என்றும் கூறினார். காஸா பகுதிக்குள் யாரும் செல்ல முடியாமல் மூடியுள்ள இஸ்ரேலின் செயலைச் சரியானது என கூறியுள்ள ஐ,நாவின் கூற்றைத் தாம் ஏற்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். "அதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் இப்பிரச்னை எழுப்பப்படும்" என்றும் கூறினார்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

உண்ணாவிரதம் நடத்தும் போலிகளும், நிஜங்களும்!

SEP 04, இம்பால்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா விமர்சித்துள்ளார்.

அவரை அணுகி அன்னா ஹசாரே போராட்டம் பற்றி கேட்டபோது, அவர் போராட்டம் செயற்கை தனமானது. அவர் மணிப்பூரில் உள்ள மக்களின் அவலநிலை குறித்து வெளி மாநிலங்களில் பலருக்கும் தெரியவில்லை. அவர் இங்கு வந்து எங்களுடன் போராடினால் வரவேற்பேன். பாதுகாப்புப் படையினர் நடத்தும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிந்திக்கவும்: ஹிந்துத்துவாவால் தூண்டிவிடப்பட்ட அன்னா ஹசாரே உடைய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது போல் பார்ப்பன நாளேடுகளால் சித்தரிக்கப்பட்டது. இவரின் போலி 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை பெரிய அளவில் வெளிச்சம் போட்டு காட்டிய பார்ப்பன ஊடகங்கள் மணிப்பூரில் ஒரு பெண் அந்த மாநில மக்களுக்காக கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் வெறும் திரவ உணவுடன் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவது பற்றி இதுவரை கண்டுகொண்டதே இல்லை. இப்படி ஒரு போராட்டம் நடப்பதாக கூட மக்களுக்கு தெரியாது.

2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில் இந்திய  ராணுவத்தை சேர்ந்த பயங்கரவாத படையணி ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார்.

ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவர் நடத்தும் பட்டினிப் போராட்டம் 11 ஆண்டுகளை கடந்து விட்டன. இந்த சட்டத்தை பயன்படுத்தி, இந்திய ராணுவம், சாதாரண மக்களை கைது செய்யலாம், பிரிவினைவாதி என்று சொல்லி தண்டனை வாங்கி தரலாம். இதுபோலவே, பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்வது செய்வது, பின்னர் அவர்களை கொலை செய்வது போன்ற மனித உரிமைக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த பெருமைக்கூரிய இந்த ராணுவம்தான் அமைதிப்படையாக சென்று ஈழத்து தமிழ் பெண்களை கற்பழித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொடூர ஆள்தூக்கி சட்டத்தை நீக்க கோரி இரோம் சர்மிளா, தொடர்ந்து போராடி வருகிறார். இதற்காக இவர் தொடங்கிய உண்ணா விரதம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகியும் முடிவுக்கு வரவில்லை. இவரை வீட்டுக்காவலில் வைத்து இவருக்கு வலுக்கட்டாயமாக மூக்கின் மூலம் திரவ உணவுகளை காவல்துறையினர் செலுத்தி வருகின்றனர். இவரின் நியாயமான ஒரு கோரிக்கையை நிறைவேற்ற எந்த மத்திய அரசும் தயாராக இல்லை. அதே நேரம் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு அடிபணிந்தது.

அதுபோல் ஹரித்வாரில் நிகமானந்தா என்ற ஒரு 38 வயதான ஹிந்துமத சாமியார், ஹிந்துக்களின் புனித நதியான கங்கை நதியின் தூய்மைக்காக 68 நாள் உண்ணாவிரதம் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். ஆனால் இதை பற்றி எந்த பார்பன பத்திரிக்கைகளும் வாய்திறக்கவில்லை. இப்படி ஒரு ஹிந்துச்சாமியார் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார் என்று எத்தனை ஹிந்து மக்களுக்கு தெரியும்.

அதுபோல் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா, ஹிந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிசத், பஜ்ராங்க்தல், அகிலபாரதிய வித்யாதி பரிசத், பாரத மஸ்தூர் சங், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர சுவாமி, பாபா ராம் தேவ், ஹிந்து முன்னணி ராமகோபாலன், அத்வானி, வாஜ் பேய், முரளிமனோகர் ஜோசி, இப்படி ஹிந்துத்துவா சங்கபரிவார பயங்கரவாதிகளும், அவர்களின் பார்ப்பன அபிமாநிகளுமான துக்களக் சோ, தினமலர், தினமணி, இந்தியா டுடே,  இந்தியன் எக்ஸ்பிராஸ் போன்ற பத்திரிக்கைகள் கங்கை புனித நதிக்காக போராடிய ஹிந்து சாமியாரை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை, ஏன் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வில்லை.