சனி, 14 மே, 2011

சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவி

011-2012 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவியை தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.

  • 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் மாணவர்கள் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறத் தகுதி பெறுவார்கள்.

  • 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 30.06.2011க்குள் கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • டிப்ளமோ, தொழிற்பயிற்சி கல்வி,இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி படிப்பு உட்பட பயிலும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை 15.07.2011க்குள் கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • , பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

  • முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

  • பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மூலம் 2011 12 ஆம் ஆண்டில் கல்வி உதவித் தொகை பெறுதல் கூடாது.


பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் மாணவ, மாணவியர்களிடமிருது பெறப்படம் விண்ணப்படிவங்களை சரிபார்த்து, மாணவ மாணவியரின் 1-) பெயர், 2) பிறந்த தேதி 3) மதம் 4) தந்தை அல்லது பாதுகாவலர் பெயர் 5) ஆண்டு வருமானம் 6) பள்ளி கல்லூரியின் முகவரி 7) பின்கோடு 8) தொலைபேசி எண் 9) மாணவர்களின் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் மொத்தம் 50 விழுக்காடு 10) சேர்க்கை கட்டணம் 11) கற்பிப்புக் கட்டணம் 12) தேர்வுக் கட்டணம், ஆய்வக¢கட்டணம் 13) இதர பராமரிப்பு கட்டணம் 14) மாணவர் விடுதியில் தங்கி பயில்பவரா அல்லது தங்காமல் பயில்பவரா 15) மாணவர்களின் வங்கி சேமிப்பு விபரங்கள் 16) வங்கியின் பெயர் ஆகியவற்றை புதுபிப்பித்தலுக்கான கேட்புபட்டியலை 10&07&2011 அன்றுக்குள்ளும் புதியதற்கான கேட்பு பட்டியலை 25.07.2011 தங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு சமர்பித்து அதற்கான ஒப்புகைச் சான்று பெற வேண்டும்.


மேலதிக விபரங்களை http://tnminoritiesscholarship.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

source : tmmk.in

அமைதிப் புரட்சியின் மூலம் அதிமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி அளித்த தமிழக மக்களுக்கு நன்றி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் வெளியிடும் அறிக்கை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஒரு குடும்பத்தினர் அடிமைப்படுத்தி அவர்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வந்தனர். தங்களை எல்லா வகையிலும் வளப்படுத்திக் கொண்டவர்கள் தமிழக மக்களை மின்வெட்டு என்ற பெயரில் இருளில் தள்ளினர். மேலும் விலைவாசி உயர்ந்து மக்கள் துன்பம் அடைந்தபோது, மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது என எகத்தாளம் பேசினார் முதலமைச்சர் கருணாநிதி.


மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் அமர்ந்து கொண்டு ஆகாய ஸ்பெக்ட்ரம் முதல் மணல் கடத்தல் வரை அனைத்திலும் கொள்ளையடித்துக் கொண்டே "நாங்கள் நல்லாட்சி கொடுக்கிறோம்' என்று மக்களை முட்டாளாக்கி வந்தனர். பண பலத்தைக் கொண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற திட்டமிட்ட திமுகவிற்கு, அமைதிப் புரட்சியின் மூலம் மிகத்தெளிவாக வாக்களித்து திமுகவிற்கு பாடம் புகட்டிய தமிழக மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


குடும்ப அரசியலுக்கு முடிவு!! ஹைதர் அலி!!

May 14, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் வெளியிட்ட அறிக்கையாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு தமுமுக சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஒரு குடும்பத்தினர் அடிமைப்படுத்தி அவர்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வந்தனர்.

தங்களை எல்லா வகையிலும் வளப்படுத்திக் கொண்டவர்கள் தமிழக மக்களை மின்வெட்டு என்ற பெயரில் இருளில் தள்ளினர்.

மேலும் விலைவாசி உயர்ந்து மக்கள் துன்பம் அடைந்தபோது, மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது என எகத்தாளம் பேசினார் முதலமைச்சர் கருணாநிதி.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் அமர்ந்து கொண்டு ஸ்பெக்ட்ரம் முதல் மணல் கடத்தல் வரை அனைத்திலும் கொள்ளையடித்துக் கொண்டே "நாங்கள் நல்லாட்சி கொடுக்கிறோம்' என்று மக்களை முட்டாளாக்கி வந்தனர்.

பண பலத்தைக் கொண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற திட்டமிட்ட திமுகவிற்கு பாடம் புகட்டிய தமிழக மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இராமநாதபுரம் – ஆம்பூர் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் அதிகம் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியனைத் தோற்கடித்தார்.

இராமநாதபுரம் தொகுதியில் மமகவின் சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் 15, 655 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சேப்பாக்கத்தில் திமுகவின் சார்பில் ஜெ அன்பழகனும், அதிமுக கூட்டணி சார்பில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் தமீமுன் அன்சாரியும் போட்டியிட்டனர். இதில் அன்பழகன் வெற்றி பெற்று,

சகோ.தமிமுன் அன்சாரி வெற்றி பெறவேண்டிய வேட்பாளர் அல்லாஹ்வின் நாட்டம் என்னவோ அதுதான் நடத்துள்ளது… தேர்தல் பயணத்தில் வெற்றி தோல்வி என்பது ஏற்புடையதே… சகோ.அன்சாரி அவர்கள் ஒரு வேளை வெற்றி வாய்ப்பை பெற்றிருந்தாள் சமுதாயம் நல்ல திறமையான வீரியமாக காரியம் சாதிக்கக்கூடிய முன்று சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும்…இன்ஷாஅல்லாஹ் எதிர்காலம் எங்கும் போய்விடாது…இறையவன் நாடினால் சகோ.அன்சாரியின் குரலும் சட்டப்பேரவையில் ஒலிக்கும்…

திங்கள், 9 மே, 2011

மன்ப உல் உலா பள்ளி +2 தேர்வில் 100 % தேர்ச்சி


நமதூர் மன்ப உல் உலா மேனிலை பள்ளி மாணவர்கள் +2 தேர்வில் 100 % வெற்றிபெற்றுள்ளனர் .79 மாணவர்கள் தேர்வெழுதி 79 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திங்கள், 2 மே, 2011

அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)


சில விடயங்கள் அறியப்படாததன் விளைவுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனடிப்படையில் தான் இந்த Paracetamol Poisoning ம் உள்ளடங்குகிறது. சிலர் தற்கொலை முயற்சிக்காக இதை நாடினாலும் அதனால் வரும் வேதனையே அவர்களை மரணத்தின் வாயிலில் ரணப்படுத்திக் கொல்லும்.
முதலில் பனடோல் என அழைக்கப்படும் Paracetamol பற்றி அறிவோம். இது 1950 ம் ஆண்டளவில் தான் உலகளவில் சாதாரண பாவனைக்கு விடப்பட்டது. இது காய்ச்சல் ( antipyretic) , உடல் வலி (analgesic ) போன்றவற்றுக்காக பாவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் வருடமொன்றுக்கு 70,000 பேர் தற்கொலை முயற்சிக்காக இதை பயன்படுத்தகிறார்கள். அதனால் 1998 ம் ஆண்டிலிருந்து இதன் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு 16 மாத்திரைகளே பரிந்துரைக்கலாம். 32 வரை கடைகளில் விற்பனை செய்யலாம்.

எப்போது இது நஞ்சாகிறது ?
ஒருவர் 10 கிராமிற்கு மேலாதிகமாகவோ அல்லது 200 mg/kg என்ற உடல் நிறைக்கு அதிகமாக பெறுவதோ ஆபத்தானது.


ஒருவரது இறப்புக்கு 20 கிராமிற்கு மேல் தேவையென இ.மெடிசின் (emedicine) சொல்கிறது.

விளைவு
இதன் விளைவால் பெரிதும் பாதிக்கப்படவது ஈரல் தான் ( liver) இதன் விளைவால் hepatotoxicity ஏற்படுகிறது. உடனடியாக இதன் விளைவுகள் வெளிப்படுவது அரிதான சம்பவமாகும். முதற்கட்டமா வாந்தி மற்றும் குமட்டல் (nausea , vomiting) ஏற்படுகிறது. ஆனால் 24 மணித்தியாலம் வரை கூட எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருந்தாலும் 72 மணித்தியாலத்திற்குள் பாரிய விளைவுகள் எற்படலாம். காரணம் இங்கே பாதிக்கப்படவது ஈரல் தான். ஈரல் கலங்கள் பாதிக்கப்படுவதால் இயற்கையான குளுடாதியோன் (glutathione) அழிவடைகிறது. அத்துடன் ஈரல் கலங்களும் அழிவடைவதால் ஈரல் செயலிழக்கிறது (hepatic failure). உடலின் தொழிற்சாலை (FACTORY OF BODY) என அழைக்கப்படும் ஈரல் இல்லவிடில் அடுத்தது உயிரிழப்புத் தான்.
அத்துடன் பரசிட்டமோலானது குருதியுடன் கலப்பதால் அதன் பிளாஸ்மாவில் (plasma) செறிவு அதிகரிக்கும் இதனால் குருதியின் அமில காரத்தன்மை பாதிக்கப்பட்டு குருதி உறைதலும் தடைப்படும்.

அதிகம் பாதிக்கப்படுவோர்.
அதிகளவு மது பாவனையாளர், உணவின்றியிருப்போர், வேறுமாத்திரைகளையும் பயன்படுத்துவோர் போன்றவர்களாகும்.

அதன் விளைவை வரைபடம் சொல்கிறது பாருங்கள்
இதன் சிகிச்சையாக உட்கொண்டு 30 நிமிடத்திற்கு உட்பட்டவராயின் activated charcoal அதாவது கரியை அருந்தக் கொடுப்பார்கள் இதனால் அகத்துறிஞ்சல் தடைப்படும். அதுவும் கடந்த நிலையில் குளுடாதியோன் (glutathione) செலுத்தி இழந்ததை ஈடு செய்ய முனைவார்கள். ஆனால் இது எந்தளவுக்கு பதிலளிக்கும் என்பது அவரடைந்துள்ள நஞ்சாக்கத்திலும் அவரது உடல் உறுதியிலுமே இரக்கிறது.
தெரிந்தோ தெரியாமலாவது யாராச்சும் இனி போடுவிங்களா ? சாதாரணமாக 500 மில்லி கிராம் கொண்ட மாத்திரையாகையால் 20 மாத்திரைகளே நச்சூட்ட போதுமானதாகும். ஆனால் அதனால் வரும் இறப்பின் போது வரும் வேதனை உங்களை மட்டும் வாட்டாது உங்களை கண்கூடு பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தரையும் வாட்டும்.

source : http://mathisutha.blogspot.com/2011/05/paracetamol-poisoning.html