திங்கள், 2 மே, 2011

அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)


சில விடயங்கள் அறியப்படாததன் விளைவுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனடிப்படையில் தான் இந்த Paracetamol Poisoning ம் உள்ளடங்குகிறது. சிலர் தற்கொலை முயற்சிக்காக இதை நாடினாலும் அதனால் வரும் வேதனையே அவர்களை மரணத்தின் வாயிலில் ரணப்படுத்திக் கொல்லும்.
முதலில் பனடோல் என அழைக்கப்படும் Paracetamol பற்றி அறிவோம். இது 1950 ம் ஆண்டளவில் தான் உலகளவில் சாதாரண பாவனைக்கு விடப்பட்டது. இது காய்ச்சல் ( antipyretic) , உடல் வலி (analgesic ) போன்றவற்றுக்காக பாவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் வருடமொன்றுக்கு 70,000 பேர் தற்கொலை முயற்சிக்காக இதை பயன்படுத்தகிறார்கள். அதனால் 1998 ம் ஆண்டிலிருந்து இதன் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு 16 மாத்திரைகளே பரிந்துரைக்கலாம். 32 வரை கடைகளில் விற்பனை செய்யலாம்.

எப்போது இது நஞ்சாகிறது ?
ஒருவர் 10 கிராமிற்கு மேலாதிகமாகவோ அல்லது 200 mg/kg என்ற உடல் நிறைக்கு அதிகமாக பெறுவதோ ஆபத்தானது.


ஒருவரது இறப்புக்கு 20 கிராமிற்கு மேல் தேவையென இ.மெடிசின் (emedicine) சொல்கிறது.

விளைவு
இதன் விளைவால் பெரிதும் பாதிக்கப்படவது ஈரல் தான் ( liver) இதன் விளைவால் hepatotoxicity ஏற்படுகிறது. உடனடியாக இதன் விளைவுகள் வெளிப்படுவது அரிதான சம்பவமாகும். முதற்கட்டமா வாந்தி மற்றும் குமட்டல் (nausea , vomiting) ஏற்படுகிறது. ஆனால் 24 மணித்தியாலம் வரை கூட எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருந்தாலும் 72 மணித்தியாலத்திற்குள் பாரிய விளைவுகள் எற்படலாம். காரணம் இங்கே பாதிக்கப்படவது ஈரல் தான். ஈரல் கலங்கள் பாதிக்கப்படுவதால் இயற்கையான குளுடாதியோன் (glutathione) அழிவடைகிறது. அத்துடன் ஈரல் கலங்களும் அழிவடைவதால் ஈரல் செயலிழக்கிறது (hepatic failure). உடலின் தொழிற்சாலை (FACTORY OF BODY) என அழைக்கப்படும் ஈரல் இல்லவிடில் அடுத்தது உயிரிழப்புத் தான்.
அத்துடன் பரசிட்டமோலானது குருதியுடன் கலப்பதால் அதன் பிளாஸ்மாவில் (plasma) செறிவு அதிகரிக்கும் இதனால் குருதியின் அமில காரத்தன்மை பாதிக்கப்பட்டு குருதி உறைதலும் தடைப்படும்.

அதிகம் பாதிக்கப்படுவோர்.
அதிகளவு மது பாவனையாளர், உணவின்றியிருப்போர், வேறுமாத்திரைகளையும் பயன்படுத்துவோர் போன்றவர்களாகும்.

அதன் விளைவை வரைபடம் சொல்கிறது பாருங்கள்
இதன் சிகிச்சையாக உட்கொண்டு 30 நிமிடத்திற்கு உட்பட்டவராயின் activated charcoal அதாவது கரியை அருந்தக் கொடுப்பார்கள் இதனால் அகத்துறிஞ்சல் தடைப்படும். அதுவும் கடந்த நிலையில் குளுடாதியோன் (glutathione) செலுத்தி இழந்ததை ஈடு செய்ய முனைவார்கள். ஆனால் இது எந்தளவுக்கு பதிலளிக்கும் என்பது அவரடைந்துள்ள நஞ்சாக்கத்திலும் அவரது உடல் உறுதியிலுமே இரக்கிறது.
தெரிந்தோ தெரியாமலாவது யாராச்சும் இனி போடுவிங்களா ? சாதாரணமாக 500 மில்லி கிராம் கொண்ட மாத்திரையாகையால் 20 மாத்திரைகளே நச்சூட்ட போதுமானதாகும். ஆனால் அதனால் வரும் இறப்பின் போது வரும் வேதனை உங்களை மட்டும் வாட்டாது உங்களை கண்கூடு பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தரையும் வாட்டும்.

source : http://mathisutha.blogspot.com/2011/05/paracetamol-poisoning.html