புதன், 27 பிப்ரவரி, 2013

கூத்தாநல்லூர் லக்ஷ்மாங்குடி மதுக்கடை9637ஐ அகற்றக் கோரி மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்


லக்ஷ்மாங்குடி மதுக்கடை 9637ஐ அகற்றக் கோரி 24-2-2013 அன்று மாலை 5 மணி அளவில் உதிராபதீஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு கு.ரவிச்சந்திரன் (கைப்பிள்ளை ) அனைத்து வர்த்தர்கள் சங்கம் லக்ஷ்மாங்குடிமற்றும் S.A.முஹம்மது அஸ்ரப் பத்ரு சபை செயலாளர் ஆகியோர் முன்னிலையிலும் P.M .A.சீனி ஜெஹபர் சாதிக் மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, அனைத்து வர்த்தர்கள் சங்கம் , பத்ரு சபை, செல்வி ஸ்டோர் நடராஜன், A.R. காம்ப்ளெக்ஸ் நிறுவனர் ஆகிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. 2-4-2013 அன்று காலை 10.30 மணி அளவில் மதுக்கடையை அகற்றக் கோரி லக்ஷ்மாங்குடியில் சாலை மறியல் செய்வது

2. சமபந்த பட்ட அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்புவது

3. சாலை மறியல் செய்வது சமபந்தமாக அனைத்து கட்சிகளிடம் ஆலோசனை கேட்பது

4. சாலை மறியல் செய்வது சமபந்தமாக பொதுமக்களிடம் தெரிவித்து அவர்களை போராட்டத்திற்கு திரட்டுவது

மனிதநேய மக்கள் கட்சி
கூத்தாநல்லூர் நகரம்

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

அமீரகத்தி(UAE)ல் மருத்துவ துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள், பார்மசிஸ்ட், நர்ஸ் மற்றும் டெக்னிசியன்களுக்கு நல்ல செய்தி

 
அமீரகத்தி(UAE)ல் மருத்துவ துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள், பார்மசிஸ்ட், நர்ஸ் மற்றும் டெக்னிசியன்கள் இன்னும் இந்த துறையை சார்ந்தவர்கள் அங்குள்ள மருத்துவ துறையினால் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்ற பின்பு தான் அமீரகத்தில் உள்ள ஏதேனும் தனியார் மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கல் போன்ற நிறுவனங்களில் பணியாற்ற தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஆனால்







தற்போது மருத்துவ துறையை சார்ந்தவர்கள் குறிப்பாக சொந்த நாட்டில் (OUT SIDE THE UAE) வசிப்பவர்கள் அமீரகத்தில் நடக்கும் தேர்வுகளை ஆன் லைன் வழியாக எழுதும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

முன்பு இது போன்ற தேர்வுகளில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் அமீரகத்தில் தங்கியிருந்த நேரடியாக அங்குள்ள மருத்துவ தேர்வகத்தில் விண்ணப்பித்து தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளவேண்டும், மேலும் இதில் வெற்றி பெறாதவர்கள் அடுத்து இரண்டு மாதங்கள் கழித்து பின்பு தான் மீண்டும் தேர்வு எழுத முடியம். இதனால் அமிரகத்திர்க்கு சுற்றுலா(VIST VISA) விசாவில் வந்து கலந்து கொள்ளவேண்டிய நிலையும், மேலும் இதில் ஒரு முறை தோல்வியுற்றால் மீண்டும் கலந்து கொள்வது என்பது சிரம்மான நிலையாக இருந்தது.


தற்போது இந்த நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு விண்ணப்பதாரர்கள் தாங்கள் இருக்கும் நாட்டில் இருந்தவாறு தகுதியானவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து, வாரம் ஒருமுறை ஒரு தேர்வு என்ற அடிப்பாடையில் நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் இந்த தேர்வுக்கான பாஸ்போர்ட் நகல், போட்டோ மற்றும் தகுதி சான்றுகள் மற்றும் விண்ணப்ப கட்டணம் ஆகியவை ஆன் லைன் வழியாக தங்களுடைய சொந்த நாட்டில் இருந்தவாறு பூர்த்தி செய்து அனுப்பலாம், விண்ணப்ப கட்டணம் மின்னணு கார்ட்(E-Dirham card ) வழியாக ஆன்லைனில் செலுத்தலாம், இத்தகைய E-Dirham Cardகள் அமீரகத்தால் அங்கீகரிக்கபட்ட வங்கிகளில் அதாவது நிதி மற்றும் உள்த்துறை(MINISTRY OF FINANCE OR MINISTRY OF INTERIOR) அல்லது அபுதாபி வணிக வங்கி மற்றும் துபாய் வர்த்தக வங்கி(Abu Dhabi Commercial Bank and Commercial Bank of Dubai) ஆகியவற்றில் நேரடியாக அல்லது ஆன் லைன் மூலமாக பெற்று கொள்ளலாம்.



தேர்வு முடிவுகளை இணைய தளம் வழியாகவும் தெரிந்து கொள்ள முடியும். இத்தகைய நடைமுறைகள் மூலமாக ஏற்கனவே அமீரகத்தில் லைசன்ஸ் பெற்று பணியாற்ற கூடிய வெளிநாட்டவர்கள் அல்லது அமீரகத்தில் லைசன்ஸ் பெற்று தற்போது அமீரகத்தை விட்டுவெளியே(OUT SIDE THE UAE) இருப்பவர்களும் தங்களுடைய சான்றிதழ் மறுமதிப்பீடு(upgrade Qualification and Experience) ஆகியவற்றையும் செய்து கொள்ள முடியும்.



இத்தகைய நடைமுறைகள் தற்போது அமீரக மருத்துவ துறையால் ஏற்படுத்தபட்டுள்ளதால் பண செலவு மற்றும் நேர விரையம் தவிர்க்கபடுகிறது மேலும் தேர்வுக்காக விசாவில்(VISIT OR EMPLOYMENT VISA) வரவேண்டிய நிலையும் தவிர்க்கலாம் எனவே இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.


கீழே கொடுத்துள்ள இணைய தளம் மூலம் கூடுதல் தகவல்களை பெற்று கொள்ளாம்.

http://www.moh.gov.ae/en/Pages/default.aspx



தகவல்: கல்ப் நியூஸ்

அன்புடன்...
N.அஸ்ரப் அலி
நன்றி  : Muduvai Hidayath      http://www.facebook.com/muduvai.hidayath

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சட்டவிதிமுறைக்கு முரணாக அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து தூக்குத்தண்டனை எதிர்ப்பாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என்ற தீர்ப்பின்படி அப்சல் குரு தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குரு எந்த பயங்கரவாதக் குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.

அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரமச் செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அந்தக் கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

நாடாளுமன்றக் தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகள் பிடிபடவில்லை, தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிச்செயலில் ஈடுபட்டதாக நிரூப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட பாரபட்சமான தூக்குத்தண்டனை நியாயமற்றது, சட்டவிதிமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டு மக்களின் கூட்டுமனசாட்சியின் படி துôக்குதண்டனை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்பை சட்டவல்லுனர்களும், மனிதஉரிமை ஆர்வலர்களும், விமர்சனம் செய்திருந்த நிலையில் மத்திய அரசு துôக்குத்தண்டனை நிறைவேற்றியிருப்பது பாரபட்சமான நடவடிக்கை, எனவே மத்திய அரசைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையான துôக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று சென்னையில் ஆர்பாட்டம் நடைபெருகிறது.தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் நடைபெரும் ஆர்பாட்டத்தில் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, (மனிதநேய மக்கள் கட்சி) .பழ. நெடுமாறன் (தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு) தொல். திருமாவளன் எம்.பி, (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள்) மல்லை சத்யா (துணை பொதுச் செயலாளர் மதிமுக) விடுதலை இராஜேந்திரன்,(பொதுச் செயலாளர், திவிக) அப்துல் ஹமீது (எஸ் டி பி ஐ) தியாகு (தமிழர் தேசிய விடுதலை இயக்கம்) திருமுருகன் (மே-17 இயக்கம்) அற்புதம்மாள் (பேரரிவாளனின் தாயார்) செந்தில் (சேவ்தமிழ்) செல்வராஜ்(மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்) சீனிவாசன் (பூவுலகின் நண்பர்கள்) உள்ளிட்ட தலைவர்களும் தென் சென்னை மாவட்ட தமுமுக தலைவர் சீனிமுஹம்மது, செயலாளர் ஹனிபா, பொருளாளர் மகதும் நாசர் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

சனி, 9 பிப்ரவரி, 2013

அப்சல் குருவுக்கு கூட்டு மனசாட்சிப்படி தூக்குத்தண்டனை தமுமுக கண்டனம்

 
 
அப்சல் குரு விவகாரத்தில் நேரடியான சாட்சியம் இல்லாத நிலையில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத்தண்டனை கண்டிக்கத்தக்கது:
இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இந்திய உச்சநீதிமன்றத்தினால் கூட்டு மனசாட்சி என தீர்ப்பின்படி அப்சல் குரு இன்று அதிகாலை தூக்கில் இடப்பட்டுள்ளார். எந்த நேரடி சாட்சியமும் இல்லாத நிலையில் அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் அன்று உச்சநீதிமன்றம் அப்சல் குருவுக்கு எந்த பயங்கரவாத குழு அல்லது அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அப்சல் குருவுக்காக வாதாட நியமிக்கப்பட்ட வக்கீல் மிக முக்கியமான சாட்சியங்களைக்கூட குறுக்கு விசாரணை செய்யவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதிலும் அது எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியாத அக்கிரம செயல் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை ஆனால் அந்த கொடிய குற்றம் குறித்த விசாரணைகள் தீர்ப்புகள் வழங்கப்பட்ட வழிமுறையின் மீது பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை தண்டனையும் வழங்கப்படவில்லை இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய மூளையாக செயல்படாத தாக்குதலில் ஈடுபடாத சதிசெயலில் ஈடுபட்டதாக நிருப்பிக்கப்படாத அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனை நியாயமற்றது.
அப்சல் குரு தூக்கிலிடபட்டதன் மூலம் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கும் நோக்கமும் நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கும் உண்மையான கரணம் யார் எது என நடவடிக்கையும் புறம் தள்ளப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அப்சல் குரு மீது நேரடியான, மறைமுகமான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் இந்திய மக்களின் கூட்டு மனசாட்சியை திருப்தி படுத்தவே இவருக்கு தூக்கு என்பது, நீதிக்கு ஆதாரம் தேவை இல்லை, இவன் குற்றம் செய்தான் என்று நம்பினாலே போதும் என்பது ஆபத்தானது, இது இந்திய அரசியல் சாசனத்தினை குழிதோண்டி புதைக்கும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, இத்தூக்கு தண்டனையை கண்டித்து வரும் 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமுமுக, மமக, மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள் பங்குபெறும் மாபெரும் கண்ட ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
இவண்,
(ஜே.எஸ்.ரிபாயீ)

இந்திய அரச பயங்கரவாதம்:அப்பாவி அப்சல் குருவை தூக்கிலிட்ட காங்கிரஸ் அரசு!

  Afzal Guru hanged in Tihar jail
புதுடெல்லி:பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கூட்டு இந்துத்துவா மனசாட்சியின் படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி கஷ்மீர் இளைஞர் அப்சல் குருவை இன்று காலை 8:00 மணியளவில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தூக்கிலிட்டு படுகொலைச் செய்துள்ளது.
அப்சல் பிறந்த மாநிலமான கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி பாராளுமன்ற தாக்குதலில் சதியாலோசனை நடத்தியதாக குற்றம் சாட்டி 2002 டிசம்பர் 18-ஆம் தேதி அப்சல் குருவிற்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி உயர்நீதிமன்றமும், 2005 ஆகஸ்ட் நான்காம் தேதி உச்சநீதிமன்றமும் உறுதிச் செய்தது. 2006 அக்டோபர் 20-ஆம் தேதி திஹார் சிறையில் மரணத்தண்டனையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.
குடியரசு தலைவருக்கு அளிக்கப்பட்ட கருணை மனு 2 வாரத்திற்கு முன்பு தள்ளுபடிச் செய்யப்பட்டது. ஒரு அப்பாவியின் உயிரை காவு வாங்கிய இந்திய அரசு, மனித உரிமையை உச்சக்கட்டமாக மீறியுள்ளது.

நன்றி : http://www.thoothuonline.com/afzal-guru-hanged-in-tihar-jail-38709/

புதன், 6 பிப்ரவரி, 2013

திறக்கப்படுமா கூத்தாநல்லூர் புதிய பேருந்து நிலையம்?




பல ஆண்டுகளாக கூத்தாநல்லூர் புதிய பேருந்து நிலையம் மூடி கிடக்கின்றது அதை எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் கண்டு கொள்வதில்லை அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, இந்த பேருந்து நிலையம் இரவு நேரங்களில் குடிகாரர்களின் கூடாரமாகவும் செயல்படுகிறது காவல்துறை கண்காணிப்பு என்ற பெயரில் கண்துடைப்பு செய்கிறது, வயதான மூதாட்டி ஒருவர் உணவு இல்லாமல் தவித்து கொண்டு இருக்கிறார், ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும் அளவுக்கு அங்கு போதுமான வசதிகள் இல்லை
இதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் , காவல்துறை கண்காணிப்பாளர், ஆகியோர் கவனத்தில் கொண்டு கூத்தாநல்லூரில் இருந்து மன்னார்குடி,தஞ்சாவூர்,திருச்சி,திருவாரூர்,நாகப் பட்டினம்,காரைக்கால்,மயிலாடுதுறை ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுகொள்கிறோம்,
இல்லை என்று சொன்னால் இன்சாஹ் அல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மன்னார்குடி to திருவாரூர் தேசிய நெடுஞ்சாலைகள் ஸ்தம்பிக்கும் வகையில் லக்ஷ்மாங்குடியில் மாபெரும் சாலைமறியல் போராட்டம் நடை பெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
இவண்.
மனிதநேய மக்கள் கட்சி - கூத்தாநல்லூர் நகரம்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

ஹிட்லருக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை: நந்திதா தாஸ்

இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக கொண்டாடப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், ஜெர்மன் அதிபர் ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர் நந்திதா தாஸ், இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட சினிமாக்களில் நடித்துள்ளார். இவர் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்துள்ளார். வதோதராவில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது,

"ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.

மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.

கலவரத்தை மறக்க முடியுமா?

2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார்.

 நன்றி : http://www.facebook.com/photo.php?fbid=352539118103742&set=a.256096237748031.69710.254741694550152&type=1&ref=nf