ஞாயிறு, 31 ஜூலை, 2011

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மம்தா முடிவு!

JULY 30, கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், இடதுசாரி கூட்டணி ஆட்சியில் இருந்த போது, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி, வேலை வாய்ப்பில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கான இடஒதுக்கீட்டை,10 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்தது.

இதன் மூலம், மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பயன்பெறுவர் என கூறப்பட்டது. ஆனால், அந்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அது அமலாகவில்லை. இந்நிலையில், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா, இன்னும் மூன்று மாதங்களில் கொண்டு வரப்படும் என, முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்

சனி, 30 ஜூலை, 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர்.

இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம்.

இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.

இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வாலீத்" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வாலீத் என்றால் "புதிதாக பிறந்தவன்" என்று பொருள்.

பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.

தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது (இது குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்). தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...

சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்.

புதன், 27 ஜூலை, 2011

நார்வே குண்டுவெடிப்பு மறைக்கப்பட்ட தகவல்கள்!


ஜூலை 22ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஐரோப்பாவை மட்டும் அல்ல உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது மீண்டும் ஒருமுறை தீவிரவாதம், பயங்கரவாதிகள் என்ற வாசகம் உச்சரிக்கப்பட்டது. ஆனால் இப்போது இடமும் ஆட்களும் தான் வேறு வேறு.

சரியாக வெள்ளிக்கிழமை மதியம் அரசு அலுவலகங்களை குறிவைத்தே இந்த குண்டுவெடிப் புகள் நிகழ்த்தப்பட்டன. குண்டு வெடிப்பில் ஏழு பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து சிலமணி நேரங்களில் ஆளும் கட்சி கூட்டத்தில் தீடீரென தோன்றிய ஒரு மர்ம மனிதன் சரமாரியாக சுட்டுத் தள்ளி 80க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தான். குண்டுவெடிப்பு நடந்தவுடன் இந்த செயல் நிச்சயம் அல் கைதாவின் வேலையாகத் தான் இருக்கும் என ஊடகங்கள் புறப்பட்டன.

நார்வேயில் ரொம்ப கால மாக இருக்கும் உள்ளூர் பாகிஸ்தானியர்கள் தான் இந்த செயலுக்கு காரணமாக இருக்கும் என பல்வேறு முனைகளில் இருந்தும் கருத்துக்கள் பரவின. அவை பரவின என்பதைவிட பரப்பப்பட்டன என்பதே நிஜம்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் 10க்கும் குறைவானவர்கள் என்ற தகவலும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 90பேர் கொல்லப்பட்ட தகவலும் வெளியாக வழக்கமாக உப்பு, புளி, மிளகாய் தூள் சேர்த்து காரசாரமாக கதை வசனம் எழுதி பட்டையை கிளப்பும் புளுகு பரப்பும் பல ஊடகங்கள் சோர்வடைந்தன.

இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் அவங்களே தான். சந்தேகமில்லை அவர்கள் தான் என கீறல் விழுந்த ரிகார்ட்டுகளாக புலம்பியவர்கள் நொந்து போனார்கள்.

நார்வே குண்டுவெடிப்பு ஐரோப்பாவில் பரவிவரும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் தீவிரத்தினை காட்டுகிறது என முதல் நாள்நீட்டி முழக்கியவர்கள் மறுநாள் சாப்பிடுவதற்கும் கொட்டாவி விடுவதற்கும் மட்டுமே வாய்திறந்தார்கள்.

நார்வே குண்டுவெடிப்பின் தகவல் முடிச்சுகள் ஒவ்வொன் றாக அவிழ அவிழ புளுகு பட்டாளத்தின் நிலைமை பரிதாபகரமாய் அமைந்தது. துப்பாக்கியால் சுட்டவன். ஒரு நார்வே நாட்டுக்காரன். வலதுசாரி கொள்கையுடையன். ஒரு தீவிர கிறித்தவன். 32 வயதான ஆண்டர்ஸ் பெஹரிங் பெலிவிக் என்பதே அவன் பெயர்.

அவ்வளவுதான் சதிகாரன் வெள்ளைக்காரன் என்றவுடன் அவனுடைய மூதாதையார் எந்த இனம் என்பதை பற்றியெல்லாம் கூட சிலர் ஆய்வில் ஈடுபட்டார்கள். அதை வைத்தாவது அவன் எந்த நாட்டுக்காரன் என்பதை வைத்து நாம் நினைத்ததுபோல் பொய்களை பரப்பலாம் என நினைத்தவர்களுக்கு சரியான ஏமாற்றம் காத்திருந்தது.

அதில் சிலபேர் கொஞ்சம் அதிகமானவே புதிய பரப்புரை யை தொடங்கினார்கள். அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை காரர்களை வேலைக்கு எடுக்கத் தொடங்கியுள்ளார்கள் என்றும் கதை பரப்பல் நடந்தது.


இப்படி புளுகுகளை பரப்பமுடியாதவர்கள் தங்கள் முயற்சிகளில் தோற்றுப்போன தோடு, பிரச்சினையின் தீவிரத்தை முனை மழுங்கச் செய்யும் வேலையிலும் கூர்மையாக இறங்கினார்கள்.

சதி செய்தவன் முஸ்லிம் என கதை பரப்பமுடியாததால் எக்கேடோ கெட்டு போகட்டும் என்ற எண்ணத்துடன் துப்பாக்கி சூடு நடத்தியன் ஒரு பைத்தியக்காரன் என கற்பனைகளை கருத்துக்களாக பரப்பிவிட்டு அமைதிகாக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் நிகழ்த்தப்பட்ட சதிமி கவும் பயங்கரமானது, அமைதி யையும் சமாதானத்தையும் என்றை க்கும் நார்வேயில் தீவிர வலதுசாரி குழுக்கள் புதிய நாசிச கொள்கை கொண்டவர்கள் தீவிர குணம் கொண்டவர்கள் நார்வேயில் பெருகிவருவதன் அறிகுறியே இந்த குண்டு வெடிப்பு என தெரிய வந்துள்ளது.

நார்வே நாடு இந்த பூமிப்பந்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் நாடாகும் சுவிட்சர்லாந் தைப் போல அல்லாமல் உண்மை யிலேயே அமைதியை நேசிக்கும் நாடு நார்வே ஆகும்.

நமது அண்டை நாடான இலங்கையில் விடுதலைப்புலிகளுக் கும் அரசாங்கத்திற்கும் இடையி லான பேச்சுவார்த்தையில் நார்வே முக்கியப்பங்கு வகித்தது. உண்மையில் இன அழிப்பு போர் நடைபெறக்கூடாது என பாடுபட்ட நார்வே தூதுக்குழுவின் தலைவர் எரிக்சோல்ஹிமை மறக்கமுடியுமா? என்ன?

எனினும் இலங்கை சமாதான பேச்சுவார்த்தையில் தமிழர்களின் நிலையை கருணையுடன் பார்த்தது நார்வே தூதுக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பிடிக்காத சக்திகள் ஏதும் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கக்கூடுமா? என்ற ஐயப் பாட்டில் விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்பதே சர்வதேச பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரியாக கருதப் படும் ஆண்டர்ஸ் கடும் தீவிர கொள்கை கொண்டவன். இவனின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையதளங்களில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் அவனது எண்ண ஒட்டத்தை காட்டியுள்ளன. ஒரு மதநம்பிக்கையாளன் ஒரு லட்சம் வீரர்களுக்கு சமமானவன் என்றும் ஒரு வாசகம் அதில் இருக்கிறது.

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு தவறான பொருள் கொடுத்து கொச்சைப்படுத்திய நெதர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் குர்ஆனை இழிவுபடுத்தி 'ஃபித்னா' என்ற டாகுமெண்டரி படம் எடுத்து பலத்த சர்ச்சைக்குரியவனாகக் கருதப்பட்ட கீட்வைல்டர்ஸ் முக்கிய முஸ்லிம் எதிர்பாளர்களை தனது உற்றநண்பர்களாக கொண்டி ருக்கும் இந்த வெள்ளைக்கார பயங்கரவாதி தன்னை நார்வேயின் தேசிய வாதியாக காட்டிக்கொண்டு தனது முழக்கத்தினை சர்வதேசி யவாதத்திற்கு எதிரான தேசிய வாதிகளின் உரிமைப்போர் என வெறித்தனமாக கூறியுள்ளான்.

சர்வதேச அளவில் தற்போது கம்யூனிசமும் உலகில் ஆதிக்கம் செலுத்தவில்லை முதலாளித் துவம் என்று அழைக்கப்படும் காபிடலிஸமும் ஆதிக்கம் செலுத்த வில்லை. தற்போது உலகளாவிய கொள்கையாக நுகர்வோர் கொள்கை என்ற கன்ஸ்யூமரிசம் முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. கம்யூனிஸத்தையும் கேபிடலிஸத் தையும் பின்னுக்கு தள்ளி கன்ஸ்யூமரிசம் முன் வரிசைக்கு வரத்தொடங்கியதில் இருந்து தொழிலாளர்கள், வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி போன்றவை அனைத்தும் நுகர்வோர் நலனுக்காகவும், நுகர்வோர் லாபத்துக்காகவும் மட்டுமே என்ற லட்சியம் முழங்கப்பட்டது. குறைந்த செலவில் நிறைந்த உழைப்பு வரவேற்கப்பட்டன. குறைந்த பதவியில் நிறைந்த கடமைகள் வழங்கப்பட்டன.

குறைந்த அளவு ஊதியத்தில் அதிக பொறுப்பு சுமையுடன் கூடிய பணிகளுக்கு ஆசிய ஆப்பிரிக்க மக்கள் பெருமளவு வந்தனர். மேற்குலகில் பெரும்பான் மையினராக வாழும் வெள்ளைக் காரர்களுக்கு அவர்கள் நாட்டிலே யே வாய்ப்புகள் குறையும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஏற்கனவே நிற வெறியால் பெரும் ஆத்திரம் கொண்டு வாழ்ந்த வெள்ளையர்களுக்கு ஆசிய ஆப்பிரிக்க மக்கள் தங்கள் நாட்டில் வந்து தங்களது வேலை வாய்ப்புகளை பறிக்கி றார்கள் என்ற அச்சம் அதிகம் உண்டு. அதுமட்டுமின்றி வெள்ளையர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்குவது போல் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்கள் தங்கள் சமயசெழுமையையும், பண்பாட்டையும் பேணத்துவங்கி யதையே ஏதோ நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்பதைப் போல் மேற்குலக ஆதிக்கவாதிகள் எண்ணத் தொடங்கியதன் விளைவு ஆண்டர்ஸ் போன்றவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியுள்ளது.

அதனால் சமரச கருத்தாளர் களுக்கும் கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக நியோ நாஜிக்களும், போலி தேசியவாதிகளும் ஐரோப் பிய உள்ளிட்ட பகுதிகளில் இந்த அபாய நிலை அதிகரித்து வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் நியூநாஜிக்கள், மற்றும் தேசிய வாதிகளின் அரசியல் அழுத்தங்கள் மற்றும் மறைமுக மிரட்டல்களுக்கு பணிந்து வரும் நிலையில் நார்வேயின் செயல்பாடு நெஞ்சுரம் மிக்கதாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று.
பாலஸ்தீன விடுதலைக்கு அங்கீ காரம் வழங்க வேண்டும். ஆக்கிர மிப்பு இஸ்ரேலின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அளவில் நார்வேயின் இளைஞர்கள் குறிப்பாக தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதையும் இஸ்ரேலை கண்டிப்பதையும் ஒரு கொள்கைப் பிரகடனமாக செயல்படுத்தத் தொடங்கியதால் யூத சக்திகளுக்கு மட்டுமின்றி, மேற்குலக ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் வெள்ளைநிற வெறியர்களுக்கும் அது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

நார்வே தற்போது நேட்டோ கூட்டமைப்பு என்ற வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது. நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பப்பட்ட நேட் டோ படைகளில் நார்வேயின் துருப்புகளும் அங்கம் வகித்தன.
லிபியாவை சிதைக்க அனுப்பப் பட்ட நேட்டோ படையணியிலும் நார்வேயின் படைகள் இருந்தன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் நேட்டோ படைகள் அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் அமைதி ஆர்வலர் களான நார்வே நாட்டை வேதனையுற செய்தது.

நேட்டோ படைகளின் மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படு கொலைகளுக்கும் எத்தனைகாலம் தான் ரத்தசாட்சியாக இருப்பது என்ற சுய ஆவேசத்தின் விளைவாக இதுவரை லிபியாவின் அப்பாவி மக்களின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய நார்வே போர் விமானங்கள் குண்டுகளை வீசவே வீசாது என அறிவித்துள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நார்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசாது என அறிவித்திருக்கிறது.
நார்வேயின் பாலஸ்தீன ஆதரவு சமாதான முன் முயற்சி கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றைக் கண்டு எச்சரிக்கை அடைந்த நேட்டோ கூட்டமைப்பு நார்வே மீது நடத்திய தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

நேட்டோ கூட்டமைப்பு தங்கள் அணியில் இருந்து விலகி சமாதானம் மனித நேயம் எனப் பேசி கூட்டு நாடுகள் எதுவும் உருப்பட்டுவிடக்கூடாது என்ற கொடிய எண்ணத்துடன் நேட்டோ அமைப்பே நிலிகிஞிமிளி என்ற ரகசிய பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. அது பிரிந்து விட நினைக்கும் உறுப்பு நாடுகளை மிரட்டி பணிய வைக்கும் வேலையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாம் வளைகுடாப் போரில் ஈராக்குக்கு எதிராக வான்தாக்குதல் தொடுப்பதில் இருந்து விலகி நியாய உணர்வுடன் நடந்து கொண்ட இத்தாலிக்கு எதிராக அவ்வப்போது இத்தாலியில் குண்டுவெடிப்புகளை நடத்துவது நிலிகிஞிமிளி பயங்கரவாதக் குழுவின் வேலையாகும்.
ஆம் சமாதான ஆர்வலர்களின் நாடான நார்வேக்கு இன்று நிகழ்ந்துள்ள இழப்புக்கு கூட நிலிகிஞிமிளி பின்னணியில் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் அது விரைவில் மறைக்கப்பட்டுவிடும். பாவம் நெதர்லாந்து மக்கள்.

-அபூஸாலிஹ்

சௌர்சே : தம்மக்.in

விழுப்புரம் மாவட்டம் ராவுத்தநல்லூர் பள்ளிவாசல் இடிப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராவுத்த நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான் மையாகவும், முஸ்லிம்கள் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.
ராவுத்த நல்லூர் கிராமத்திற்கு அடுத்து புதுப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு கிராமத்தில் உள்ள முஸ் லிம்கள் தங்கள் வணக்க வழிபா டுகளை நிறைவேற்றிக் கொள்வ தற்காக நவாப் ஆட்சிக் காலத்தில் ராவுத்த நல்லூர் கிராம எல்லை யில் ஒரு ஏக்கர் 19 செண்ட் நிலம் ஆற்காடு நவாபினால் நன்கொ டையாக வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி இரண்டு கிராம முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இரண்டு கிராமத் தின் மையத்தில் புதிய பள்ளி வாசல்கள் உருவாகிவிட்டபடி யால் நவாப் பள்ளிவாசலின் பயன்பாடு குறைந்து போனது.
இதனால் அருகிலுள்ள ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடத் தின் மீது சொந்தம் கொண்டாடி னர். திடீரென்று அந்த இடத்தில் விநாயகர் சிலையையும் வைத்து விட்டனர். இதனால் புதுப் பேட்டை கிராம முஸ்லிம்கள் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்த னர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கிடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. வழக்கும் வாபஸ் பெறப்பட் டது.
இந்நிலையில் ராவுத்தநல்லூர் முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் நவாப் பள்ளிவாசலை மீண்டும் புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக பள்ளிவா சலை போட்டோ எடுத்தனர்.
இந்த தகவல் ஆதி திராவிடர் தரப்பிற்கு தெரிய வந்ததும் இர வோடு இரவாக நவாப் பள்ளிவா சல் இடிக்கப்பட்டு தரைமட்ட மாக்கப்பட்டது. அந்த இடத்தில் புதிதாக விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் இரண்டு கிராமத்து முஸ்லிம்களும் காவல் நிலையத்தில் முறையிட்டனர்.
காவல்துறையிடம் இரு தரப் பாரும், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று முறையிட் டதால் வருவாய் கோட்டாட்சி யர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடம் மயானப் புறம்போக்கு இடம் என்றும், மேலும் அந்த இடத்தை புதுப்பேட்டை ஜமா அத்தினர் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டதாகவும் விசாரணை யில் தெரிவித்தனர்.
புதுப்பேட்டை ஜமாஅத்தினர் அந்த இடம் வருவாய்த்துறையி னரின் பதிவேடுகளில் 1983வரை பள்ளிவாசல் என்றுதான் குறிப் பிட்டிருந்தது. இடையில் மயானப் புறம்போக்கு என்று மாற்றப்பட் டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் பள்ளிவாசலை எதுவும் செய்யக் கூடாது என்றும், அதற்கு பாதை யையும் ஒதுக்கித் தரவும், ஒத்துக் கொண்டு ஆதி திராவிடர் தரப்பி னர் உறுதி அளித்திருந்ததாகவும், அந்த வாக்குறுதியை மீறி பள்ளி வாசலை இடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் அந்த இடத்தை ஆதி திராவிடர் எழுதி வாங்கியபோது, “இந்த நிலத்தை ஆதி திராவிடர் பயன்படுத்துவது குறித்து ஏதே னும் பிரச்சினை ஏற்பட்டால் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று வாக்குறுதி அளித்திருப்பதையும் சுட்டிக் காட்டினர்.
இறுதியில் வருவாய் கோட் டாட்சியர் முன்னிலையில் ஆதி திராவிடர் கொடுத்த பணத்தை புதுப்பேட்டை ஜமாஅத்தினர் திரும்ப கொடுத்து விட வேண்டும்; அந்த நிலத்தின் ஓரமான ஒரு பகுதியை ஆதி திராவிடர் பயன் படுத்திக் கொள்வது என்றும் கடந்த 17ம் தேதி வெள்ளிக் கிழமை முதல் முஸ்லிம்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு ஆதி திராவிடர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த அடிப்படையில் கடந்த 17ம் தேதி முஸ்லிம்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த முயற் சித்தனர். ஆனால் ஆதி திராவி டர்கள் திரண்டு வந்து அவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்படும் சூழ் நிலை உருவானது. முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் முயற்சி தடுக்கப்பட்டது. காவல்துறையி னர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பா விதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனையடுத்து கடந்த 20ம் தேதி மீண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அமை திப் பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது. அந்தப் பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் மூலமாக வக்ஃபு போர்டுக்கு கடிதம் எழுதி முடிவைப் பெறுவது என்றும், அரசின் மறு உத்தரவு வரும்வரை இரு தரப்பினரும் அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையி னால் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்த போதிலும், மீண்டும் எப்போது வெடிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஜமாஅத் முக்கியஸ்தர்கள் இத னால் அமைதியடைந்த போதி லும் முஸ்லிம் இளைஞர்கள் முஸ் லிம்களுக்கு அநீதி இழைக்கப்ப ட்டு விட்டதாகவே குமுறுகின்றனர்.
1. பள்ளிவாசல் இடத்தை விற்பதற்கு ஜமாஅத்திற்கு யார் உரிமை அளித்தது?
2. யாரிடமும் ஆலோசனை நடத்தாமல் ஒரு சிலர் மட்டும் முடிவெடுத்தது இடத்தை விற் பனை செய்தது எப்படி நியாயமா கும்?
3. பள்ளிவாசலை இடித்தவர் களை இன்றைய தேதி வரையில் போலீஸôர் கைது செய்யாதது ஏன்?
4. பள்ளிவா சல் இடத்தில் சட்ட விரோத மாக வைத் துள்ள விநாய கர் சிலையை அகற்றாதது ஏன்?
இளைஞர்கள் கேட்கும் இந்தக் கேள்வி களில் நியா யம் இருப் பதை மறுப்ப தற்கில்லை.
அயோத்தி பாபர் பள்ளி வாசல் ஆக்கிரமிப்பிற்கும் - விழுப்புரம் ராவுத்தநல்லூர் நவாப் பள்ளிவாசல் ஆக்கிரமிப்புக்கும் இடை யில் சின்ன வித்தியாசம்தான். பாபர் பள்ளிவாசலில் முதலில் சிலை வைத்தார்கள். பிறகு இடித்து தரைமட்டமாக்கினார்கள். நவாப் பள்ளிவாசலை முதலில் தரைமட் டமாக்கி விட்டு பிறகு சிலை வைத்துள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசல் இடத்தில் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் காவல்துறை, பள்ளிவாசலை இடித்தவர்கள் துணிவுடன் சுற்றித் திரிந்து வருவதைப் பார்த்துக்க கொண்டு அவர்களை கைது செய் யாமல் அலட்சியம் காட்டி வருகி றது.
முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இதனை மீட்க வேண்டும். இல்லை யென்றால் சங்கராபுரம் பகுதியில் 40 ஏக்கருக்கும் மேல் வக்ஃபு சொத்துகள் உள்ளன. அவற்றின் நிலையும் கேள்விக் குறியாகி விடும்!
- இப்னு மக்பூல்

திங்கள், 25 ஜூலை, 2011

கூத்தாநல்லூரில் நடைபெற்ற இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு

கூத்தாநல்லூர்-ல் சீமான் ( SIMAN - Sharjah Islamic Madarasa Association ) அமைப்பு நடத்திய இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு அல்லாஹ்வின் நற்கிருபையால் இனிதே நடைபெற்றது.
கூத்தாநல்லூர் ஈத்காஹ் மைதானத்தில் மிக பிரமாண்ட மேடையில் அல்ஹாஜ் T.M.பகுருதீன் அவர்களின் தலைமையில் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. M.R.E. அப்துல் ரஹ்மான்
( இணைசெயலாளர், சீமான் ) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். Av.M.ஜாபர்தீன், N.M.A. சிகாபுதீன், J.M.A.ஷேக் அப்துல் காதர், T.M.தமிஜு தீன், A.P.N.அப்துல் ரவூப், L.M.அஸ்ரப் போன்ற கூத்தாநல்லூர் தலைவர்கள் முன்னிலையில் சீமானின் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.

கம்பம் பீர் முஹம்மது அவர்கள் "குழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சீமானின் சிறப்பு மலரை சென்னை உயர்நீதி மன்றம், நீதிபதி G.M.அக்பர் அலி அவர்கள் வெளியிட்டார், அதை M. ஷாகுல் ஹமீது ( MD , Nobel Group of Companies, Abudhabi ) அவர்கள் பெற்றுகொண்டார். பெண்கள் விழிப்புணர்வு பாடல்களை சீமானின் தீன்இசைவேந்தர் A.S. தாஜுதீன் பாடினார். ஷரியத் பாதுகாப்பில் பெண்கள் என்ற தலைப்பில் A.S. பாத்திமா முஸபர் சிறப்புரை ஆற்றினார். முஹம்மத் மாலிக் நன்றியுரை ஆற்றினார். கல்வி உதவி தொகையை ஏழை மாணவ மாணவியருக்கு சீமான் அமைப்பினர் வழங்கினார்கள். மாநட்டில் கலந்துகொண்ட 2000 பேருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. வெளி ஊரில் இருந்து வந்த மக்களுக்காக வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவினை சிறப்பாக நடத்தி கொடுத்த கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் ( KEO ) மற்றும் கூத்தாநல்லூர் இஸ்லாமிய இளைஞர்களையும் சீமான் அமைப்பினர் பாராட்டினார்கள். மாநாடு 10 :30 மணியளவில் நிறைவடைந்தது.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

தலைபோகிற விஷயம்! முதலில் இதைப் படியுங்கள்

தலைபோகிற விஷயம்!
முதலில் இதைப் படியுங்கள்
- மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி
பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) - 2011 கெஜட்டை (Part VI - Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றி, மதமாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் காணப்படுகிறது.

ஜூலை (13) - 2011 இதழில் பெயர் மாற்றம் செய்துகொண்டோர் சுமார் 1330 பேர். இவர்களில் மதம் மாறியோர் 106 பேர். அதன் சுருக்க விவரம் வருமாறு:
  • இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியோர் 38 பேர். இது மதம் மாறியோர் எண்ணிக்கையில் 35.84 விழுக்காடு ஆகும்.
  • இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 31 பேர். இது மொத்தத்தில் 29.24 விழுக்காடு ஆகும்.
  • இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியோர் 5 பேர். இது 4.71 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியோர் 18 பேர். இது 16.98 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 3 பேர். இது 2.83 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து புத்த மதம் சென்றோர் 2 பேர். இது 1.88 விழுக்காடு.
  • இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்கள் 8 பேர். இது மொத்தத்தில் 7.54 விழுக்காடு.
  • இஸ்லாத்திலிருந்து கிறித்தவம் சென்றவர் ஒருவர். இது 0.94 விழுக்காடு.

மதம் மாறிய முஸ்லிம்கள்:
வ. எண்
பழைய பெயர்
பழைய பெயர்
தந்தை / கணவன் பெயர்
வயது
ஊர்
மாறிச் சென்ற மதம்
1
அஃப்ரோஸ்
நிவேதிதா
த /பெ. நேரு
4
கோவை
இந்து
2
ஷரஃபுந் நிசா
பிரியா
க/பெ. நேரு
33
கோவை
இந்து
3
தானிஸ்தா பேகம்
கீர்த்தினா
த/பெ. ஹைதர் ஷரீப்
28
சென்னை
இந்து
4
ஜமால் மைதீன்
பிரதீஷ்
த/பெ. சலாஹுத்தீன்
23
சென்னை
இந்து
5
முஸஃப்பர்
ரகு
த/பெ. யாசீன்
37
சென்னை
இந்து
6
மக்பூல் ஜான் (பெண்)
ஐஸ்வர்யா
க/பெ. சுந்தர்
34
சென்னை
இந்து
7
அப்துல் மஜீத்
மகேஷ்
த/பெ. நயினார்
40
சென்னை
இந்து
8
ஷேக் உஸ்மான்
பாலகிருஷ்ணன்
த/பெ. சிவன்
32
சென்னை
இந்து
9
மும்தாஜ் பேகம்
மும்தாஜ் பேகம்
த/பெ. ஷானு
24
சென்னை
கிறித்தவம்

இவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்; இருவர் வேறு மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறி, பின்னர் மதம் மாறியவர்கள் என்று தெரிகிறது.

இன்னொரு விவரம்: மதம் மாறிய இந்த 106 பேரில் இந்து மதத்திலிருந்து விலகியோர் 74 பேர்; அதே நேரத்தில், இந்து மதத்திற்கு திரும்பியோர் அல்லது புதிதாகச் சேர்ந்தோர் 26 பேர். மீதி 48 பேர் இந்து மதத்தைத் துறந்துள்ளனர்.

கிறித்தவத்திலிருந்து வேறு மதம் சென்றவர்கள் மொத்தம் 23 பேர். வேறு மதங்களிலிருந்து கிறித்தவத்திற்கு வந்தோர் 39 பேர். ஆக, 16 பேர் அதிகமாகியுள்ளனர்.

இஸ்லாத்திலிருந்து வேறு மதம் மாறியோர் 9 பேர். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர் 34 பேர். ஆக, 25 பேர் அதிகமாகியுள்ளனர்.

ஏன் மாறினர்?
இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் சென்ற அந்த 9 பேர் ஏன் சென்றனர்? அவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்களாயிற்றே! காரணம் என்ன? பெற்றோர்களும் சமுதாயமும் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமல்லவா இது? அதிகாரபூர்வமாக அரசிதழின் ஒரு வெளியீட்டில் தெரிந்த எண்ணிக்கைதான் இது. வெளியுலகுக்குத் தெரியாமல் நடக்கின்ற மாற்றங்கள் எத்தனையோ!

பெரும்பாலும் இந்த மாற்றங்களுக்குக் காரணம் காதல் வலையில் சமுதாய இளவல்கள் சிக்கித் தவிப்பதுதான். கல்லூரிகள், விடுதிகள், அலுவலகங்கள் ஆகிய ஆண் - பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாகப் பழகிவருகின்றனர். இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, காதல் என்ற பெயரில் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்துவிடுகின்றனர். இது ஒரு வரட்டுத் துணிச்சல் என்பது திருமணத்திற்குப் பின்போ, கற்பை இழந்ததற்குப் பின்போதான் அந்த இளசுகளுக்குத் தெரிகிறது. அதற்குள் காரியம் கைமீறிப்போயிருக்கும்.

பெற்றவர்கள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், சமுதாயம், ஏன் விலைமதிக்க முடியாத ஈமானையே தூக்கியெறியத் துணியும் இன்றைய இளவல்கள் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்கத் தயாராயில்லை. காதல் மயக்கம், அதில் கிடைக்கும் தாற்காலிக சுகம், சிறகடித்துப் பறக்கும் பக்குவமில்லாத பருவம், நண்பர்கள் தரும் ஊக்கம், சினிமாத்தனமான ஹீரோயிஸம்... எல்லாம் சேர்ந்து எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகின்றன.

பெற்ற தாயும் தந்தையும் புத்திர சோகத்தால் அழுது புலம்பி, வெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக் குறுகி, அணுஅணுவாகச் செத்துக்கொண்டிருப்பதோ, உற்றார் உறவினர் பரிதவிப்பதோ, சமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவோ எதுவும் காதல் போதையில் இருக்கும் அவர்களின் கண்களில் படுவதில்லை. குறைந்தபட்சம், தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதே பாணியைக் கையாண்டால், தங்கள் நிலைமை என்னவாகும் என்பதைக்கூட இந்த விடலைகள் எண்ணிப்பார்ப்பதில்லை.

இதையெல்லாம் காதலுக்குச் செய்யும் தியாகம்‘ என இவர்கள் சினிமா வசனம் பேசுகிறார்கள். சினிமா, நடைமுறைக்கு ஒத்துவராது என்பதும் இவர்களுக்கு உறைப்பதில்லை. மூன்று மணிநேர பொழுதுபோக்குக்காக, எதார்த்தங்களுக்கு எதிரான கற்பனைகளைக் கலந்து இளசுகளை நாசமாக்கிக்கொண்டிருக்கும் திரையுலகத்தினருக்குச் சிறிதளவேனும் மனசாட்சியும் சமூக அக்கறையும் இருக்க வேண்டும். பணம் மட்டுமே கோலோச்சும் அந்த உலகில் குணத்தை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.

அடிப்படை கோளாறு
பெற்றோர்கள், தம் பிள்ளைகளைக் கஷ்டமே தெரியாமல் செல்லமாக வளர்க்கிறார்கள்; கடன் பட்டாவது படிக்கவைக்கிறார்கள்; மக்களின் மனம் நோகாது, கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்; கொஞ்சம் வளர்ந்தவுடன் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கிறார்கள்.

ஆனால், பாலுக்கும் பாய்ஷனுக்கும் வித்தியாசம் சொல்லி வளர்த்தவர்கள், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் வித்தியாசம் சொல்லி வளர்க்கவில்லையே! மார்க்கத்தின் அறநெறிகளைச் சொல்லி வளர்க்க வேண்டிய அவர்கள், மேலை நாட்டு நாகரிக்கத்தையல்லவா புகட்டுகிறார்கள்!

இதனால், நம் இளைய தலைமுறையினரிடம் வெட்கம், மானம், ஒழுக்கம் ஆகிய மாண்புகள் எல்லாம் கேலிப்பொருட்களாகத் தெரிகின்ற பரிதாப நிலைதான் காணப்படுகிறது. தொழுகை, திக்ர், நோன்பு, நல்லுரைகள் கேட்பது, நல்ல பழக்கவழக்கங்கள், நபிவழி, நல்ல நண்பர்களுடனான பழக்கம் - இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காத வரை உங்கள் மக்கள் செல்வம் உங்களுக்குச் சொந்தமில்லை.

மதமாற்றத்திற்கு வறுமையும் ஒரு காரணம்தான். வறுமையால் ஈமானையே இழக்கத் துணிகின்ற ஒருவரிடம், அந்த ஈமான் ஆழமாகப் பதியவில்லை என்பதுதான் பொருள். இதற்கும் பெற்றோரே காரணம்! சிறுவயதிலேயே இஸ்லாத்தைக் கற்பிக்க வேண்டும்! ஈமானின் அவசியத்தை உணர்த்த வேண்டும்! மறுமையைப் பற்றிய சிந்தனையை ஊட்ட வேண்டும்!

அத்துடன், வறுமைக் கோட்டிற்குக் கீழே மூச்சுவிட முடியாமல் திணறும் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற மஹல்லா ஜமாஅத்கள், இஸ்லாமிய அமைப்புகள், இளைஞர் மன்றங்கள் பாடுபட வேண்டும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்! இறைவன் வளர்ப்பான்!

ஆக, மதமாற்றம் என்பது சமுதாயத்தின் அழிவுக்கு அடிகோலும்; கலாசாரச் சிதைவுக்கு வழிகோலும்; நம் இருப்பையே கேள்விக் குறியாக்கிவிடும்! சம்பந்தப்பட்ட அனைவரும் இதன் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாகச் செயல்பட முன்வர வேண்டும்!
நன்றி : http://khanbaqavi.blogspot.com/2011/07/blog-post_22.html