பள்ளிவாசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பள்ளிவாசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 ஜனவரி, 2012

கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு பதட்டம்

கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு பதட்டம்

கோவை குனியமுத்தூர் மூவேந்தர் நகர் பகுதியில் தாஜீல் இஸ்லாம் ஹனிபி சுன்னத் ஜமாத் கிளை பள்ளிவாசல் உள்ளது.

நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளிவாசல் முன்புறம் உள்ள ஜன்னல் கண்ணாடியை கல்வீசி தாக்கினர். பள்ளிவாசலில் தங்கியிருந்த மோதினார் நூர்முகமது சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது சிலர் அங்கிருந்து ஒடியுள்ளனர். பள்ளிவாசல் அருகே தமுமுக மாவட்ட துணைத்தலைவர் ரபீக் வீடு உள்ளது. அவரது காரைவீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைத்துள்ளனர்.தகவல் அறிந்ததும் .தமுமுக மாநில செயலாளர் கோவை உம்மர் தலைமையில் தமுமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் முன்பு திரண்டனர் தகவல்அறிந்ததும் போலிஸ் கமிஷனர் சுந்தரமுர்த்தி, துணைக்கமிஷனர் ஹேமா கருணாகரன், உதவிகமிஷனர் முத்தரசு, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு
வந்து விசாரித்தனர். வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
இதே பள்ளிவாசலில் 2009 ம் ஆண்டு இதுபோல் ஜன்னல் கண்ணாடியை உடைத்துனர். கோவை மீண்டும் கலவர நடக்க அதிகமாக வாய்ப்பு உள்ளது இறைவன் பாதுகாப்பான். அமீன்

கோவை தங்கப்பா

புதன், 27 ஜூலை, 2011

விழுப்புரம் மாவட்டம் ராவுத்தநல்லூர் பள்ளிவாசல் இடிப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ராவுத்த நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான் மையாகவும், முஸ்லிம்கள் 40 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.
ராவுத்த நல்லூர் கிராமத்திற்கு அடுத்து புதுப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு கிராமத்தில் உள்ள முஸ் லிம்கள் தங்கள் வணக்க வழிபா டுகளை நிறைவேற்றிக் கொள்வ தற்காக நவாப் ஆட்சிக் காலத்தில் ராவுத்த நல்லூர் கிராம எல்லை யில் ஒரு ஏக்கர் 19 செண்ட் நிலம் ஆற்காடு நவாபினால் நன்கொ டையாக வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி இரண்டு கிராம முஸ்லிம்களும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இரண்டு கிராமத் தின் மையத்தில் புதிய பள்ளி வாசல்கள் உருவாகிவிட்டபடி யால் நவாப் பள்ளிவாசலின் பயன்பாடு குறைந்து போனது.
இதனால் அருகிலுள்ள ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடத் தின் மீது சொந்தம் கொண்டாடி னர். திடீரென்று அந்த இடத்தில் விநாயகர் சிலையையும் வைத்து விட்டனர். இதனால் புதுப் பேட்டை கிராம முஸ்லிம்கள் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்த னர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கிடையே நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. வழக்கும் வாபஸ் பெறப்பட் டது.
இந்நிலையில் ராவுத்தநல்லூர் முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் நவாப் பள்ளிவாசலை மீண்டும் புனரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக பள்ளிவா சலை போட்டோ எடுத்தனர்.
இந்த தகவல் ஆதி திராவிடர் தரப்பிற்கு தெரிய வந்ததும் இர வோடு இரவாக நவாப் பள்ளிவா சல் இடிக்கப்பட்டு தரைமட்ட மாக்கப்பட்டது. அந்த இடத்தில் புதிதாக விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் இரண்டு கிராமத்து முஸ்லிம்களும் காவல் நிலையத்தில் முறையிட்டனர்.
காவல்துறையிடம் இரு தரப் பாரும், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று முறையிட் டதால் வருவாய் கோட்டாட்சி யர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆதி திராவிடர் தரப்பினர் அந்த இடம் மயானப் புறம்போக்கு இடம் என்றும், மேலும் அந்த இடத்தை புதுப்பேட்டை ஜமா அத்தினர் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று விட்டதாகவும் விசாரணை யில் தெரிவித்தனர்.
புதுப்பேட்டை ஜமாஅத்தினர் அந்த இடம் வருவாய்த்துறையி னரின் பதிவேடுகளில் 1983வரை பள்ளிவாசல் என்றுதான் குறிப் பிட்டிருந்தது. இடையில் மயானப் புறம்போக்கு என்று மாற்றப்பட் டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் பள்ளிவாசலை எதுவும் செய்யக் கூடாது என்றும், அதற்கு பாதை யையும் ஒதுக்கித் தரவும், ஒத்துக் கொண்டு ஆதி திராவிடர் தரப்பி னர் உறுதி அளித்திருந்ததாகவும், அந்த வாக்குறுதியை மீறி பள்ளி வாசலை இடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும் அந்த இடத்தை ஆதி திராவிடர் எழுதி வாங்கியபோது, “இந்த நிலத்தை ஆதி திராவிடர் பயன்படுத்துவது குறித்து ஏதே னும் பிரச்சினை ஏற்பட்டால் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று வாக்குறுதி அளித்திருப்பதையும் சுட்டிக் காட்டினர்.
இறுதியில் வருவாய் கோட் டாட்சியர் முன்னிலையில் ஆதி திராவிடர் கொடுத்த பணத்தை புதுப்பேட்டை ஜமாஅத்தினர் திரும்ப கொடுத்து விட வேண்டும்; அந்த நிலத்தின் ஓரமான ஒரு பகுதியை ஆதி திராவிடர் பயன் படுத்திக் கொள்வது என்றும் கடந்த 17ம் தேதி வெள்ளிக் கிழமை முதல் முஸ்லிம்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கு ஆதி திராவிடர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த அடிப்படையில் கடந்த 17ம் தேதி முஸ்லிம்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்த முயற் சித்தனர். ஆனால் ஆதி திராவி டர்கள் திரண்டு வந்து அவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் கலவரம் ஏற்படும் சூழ் நிலை உருவானது. முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் முயற்சி தடுக்கப்பட்டது. காவல்துறையி னர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்ததால் அசம்பா விதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனையடுத்து கடந்த 20ம் தேதி மீண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் அமை திப் பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது. அந்தப் பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் மூலமாக வக்ஃபு போர்டுக்கு கடிதம் எழுதி முடிவைப் பெறுவது என்றும், அரசின் மறு உத்தரவு வரும்வரை இரு தரப்பினரும் அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் முடிவெடுக் கப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையி னால் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்த போதிலும், மீண்டும் எப்போது வெடிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஜமாஅத் முக்கியஸ்தர்கள் இத னால் அமைதியடைந்த போதி லும் முஸ்லிம் இளைஞர்கள் முஸ் லிம்களுக்கு அநீதி இழைக்கப்ப ட்டு விட்டதாகவே குமுறுகின்றனர்.
1. பள்ளிவாசல் இடத்தை விற்பதற்கு ஜமாஅத்திற்கு யார் உரிமை அளித்தது?
2. யாரிடமும் ஆலோசனை நடத்தாமல் ஒரு சிலர் மட்டும் முடிவெடுத்தது இடத்தை விற் பனை செய்தது எப்படி நியாயமா கும்?
3. பள்ளிவாசலை இடித்தவர் களை இன்றைய தேதி வரையில் போலீஸôர் கைது செய்யாதது ஏன்?
4. பள்ளிவா சல் இடத்தில் சட்ட விரோத மாக வைத் துள்ள விநாய கர் சிலையை அகற்றாதது ஏன்?
இளைஞர்கள் கேட்கும் இந்தக் கேள்வி களில் நியா யம் இருப் பதை மறுப்ப தற்கில்லை.
அயோத்தி பாபர் பள்ளி வாசல் ஆக்கிரமிப்பிற்கும் - விழுப்புரம் ராவுத்தநல்லூர் நவாப் பள்ளிவாசல் ஆக்கிரமிப்புக்கும் இடை யில் சின்ன வித்தியாசம்தான். பாபர் பள்ளிவாசலில் முதலில் சிலை வைத்தார்கள். பிறகு இடித்து தரைமட்டமாக்கினார்கள். நவாப் பள்ளிவாசலை முதலில் தரைமட் டமாக்கி விட்டு பிறகு சிலை வைத்துள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசல் இடத்தில் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் காவல்துறை, பள்ளிவாசலை இடித்தவர்கள் துணிவுடன் சுற்றித் திரிந்து வருவதைப் பார்த்துக்க கொண்டு அவர்களை கைது செய் யாமல் அலட்சியம் காட்டி வருகி றது.
முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இதனை மீட்க வேண்டும். இல்லை யென்றால் சங்கராபுரம் பகுதியில் 40 ஏக்கருக்கும் மேல் வக்ஃபு சொத்துகள் உள்ளன. அவற்றின் நிலையும் கேள்விக் குறியாகி விடும்!
- இப்னு மக்பூல்

புதன், 14 ஜூலை, 2010

வேலூர் கோட்டைப் பள்ளிவாசலை தகர்க்க சதி? தக்க நேரத்தில் முறியடித்தது த.மு.மு.க

வேலூர் கோட்டைக்குள் கோயில், பள்ளிவாசல், தேவா லயம் என மூன்று வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. இது சமய நல்லிணக்கத்திற்கும், பண்பாட்டிற்கும் அடையாளமாகத் திகழ்கிறது. அங்குள்ள கோயிலில் இந்து சகோதரர்களும், தேவாலயத்தில் கிறித்துவ சகோதரர்களும் வழி பாடு நடத்துகின்றனர். இதே போல் பள்ளிவாசலில் தாங்களும் வழிபட வேண்டும் என முஸ்லிம்கள் நீண்ட காலமாக கோரி வருகிறார்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து திப்பு சுல்தானின் வாரிசுகளின் தலைமையில் 1806&ல் வேலூர் புரட்சி நடைபெற்ற போது, இப்பள் ளிவாசல் இந்திய விடுதலையின் களமாக திகழ்ந்தது.

இந்த பள்ளிவாசலை மீட்டு, தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட மக்கள் த.மு.மு.க விடம் கோரிக்கை வைத்தனர்.

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் 9.05.2008 அன்று வேலூர் கோட்டையை த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் முற்றுகை நடத்தி, கோட்டை வாசலில் ஜும்ஆ தொ ழுகையை நடத்தினர்.

அதன் பிறகு இவ்விவகாரத்தில் தீர்வு காண பல்வேறு களங்களிலும், தளங்களிலும் த.மு.மு.க சட்டரீ தியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே ஜூலை 3, 2010 அன்று மதியம் த.மு.மு.க மாவட்ட செயலாளர் ஏஜாஸ் அஹ்மதுவுக்கு தொலை பேசியில் ஒரு தகவல் வந்தது. அந்த பள்ளிவாசலைச் சுற்றி, குழி தோண்டப்படுவதாகவும், உடனே விரைந்து வருமாறு கூற, த.மு.மு.கவினர் பெரும் திரளாக திரண்டனர்.

பள்ளிவாசலைத் தகர்க்கும் நோக்கோடு, அஸ்திவாரத்தைச் சுற்றி புதைக்கப்பட்ட கருங்கற்களை, அரசு உத்தரவின் பேரில் சிலர் தோண்டியெடுத்துக் கொண்டிருந்தனர்.

உடனே மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி) ஆகியோரிடம் ஏஜாஸ் புகார் செய்தார். உடனடியாக காவல் துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரி பலராமன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

த.மு.மு.கவினரின் வேண்டுகோளை ஏற்று, அஸ்திவாரத்தை தோ ண்டும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்து ஜூலை 8 அன்று, கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.- அதில் தோண்டப்பட்ட குழி மூடப் படாவிட்டால், சட்டம் & ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 7 அன்று த.மு.மு.க தலைமையகத்துக்கு வந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள், தலைமை நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்தினார்கள். ஜூலை 9-க்குள் பள்ளிவாசலைச் சுற்றி தோண்டிய குழி மூடப்படா விட் டால், நாங்களே மூடுவோம் என த.மு.மு.க தரப்பில் கூறப் பட்டது.

உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் பள்ளிவாசலைச் சுற்றி தோண்டப்பட்ட குழிகளை விரை ந்து மூடிவிட்டனர். இதன் மூலம் பள்ளிவாசல் இறையருளால் காப் பாற்றப்பட்டுவிட்டது.

ஞாயிறு, 27 ஜூன், 2010

350 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் வேலூர் மாவட்டத்தில் மீட்பு


வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுகவால் இன்று (27-06-2010) மீட்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)


பள்ளிவாசலை மீட்கப்படுவதற்கு முன்னர் இவ்விடத்தில் சமூக விரோதிகளின் புகழிடமாக இருந்துள்ளது. தற்போது 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்தப் பழமையானப் பள்ளிவாசலில் (27-06-2010)இன்று மாலை அஸர் தொழுகை (இன்ஸா அல்லாஹ்) நடத்தப்பட உள்ளது.


மேலும் செய்திகள் இன்ஷா அல்லாஹ்...


வியாழன், 11 ஜூன், 2009

பள்ளிவாசல்களில் தாக்குதல்; தேவை உடனடி பரிகாரம்!

முஸ்லிம்கள் தங்களின் ஒப்பற்ற இறைவனை வணங்குவதற்காக எழுப்பிக்கொண்டவைகள் தான் பள்ளிவாசல்கள். இங்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமின்றி முஸ்லிம்கள் என்ற ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்று கூடுமிடம். இத்தகைய பள்ளிவாசல்கள் மீது அதுவும் தொழுகை நேரத்தில் தாக்குதல் நடத்துவது பல்லாண்டுகளாக நடைபெற்று வருவதும் , இந்த தாக்குதல்களின் பல நூறு பேர் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்திய சுதந்திர போராட்ட்டத்தின்போது ஜூம்மா மேடைகள் சுதந்திர தாகத்தை ஊட்டும் காரணியாக திகழ்வதை கண்ட வெள்ளையர்கள், ஒரு தொழுகையின் போது வெறியாட்டம் ஆடி முஸ்லிம்களை கொன்ற அந்த மஸ்ஜித் 'கூன் மஸ்ஜித்'[ரத்தப்பள்ளி] என்று அழைக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழீழம் பெறப்போகிறோம் என்று புறப்பட்டு, தமிழ்பேசும் சக முஸ்லிம்களை பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த போது ரத்த சகதியாக்கிய புலிகளின்[?] சாகசத்தை, இன்றும் காத்தான்குடி பள்ளிவாசல் 'கறைபடிந்த' சான்றாக திகழ்கிறது.

பாகிஸ்தானில் அவ்வப்போது ஷியா-சன்னி பள்ளிவாசல்களில் தொழுகையின் போது குண்டுகள் வெடிப்பது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. இதற்கு காரணம் இஸ்லாம் காட்டித்தராத பிரிவுகள் என்ற பெயரால் முஸ்லிம்கள் பிரிந்ததுதான்.

ஈரானில் சமீபத்தில் பள்ளிவாசலில் தொழுகையின்போது குண்டு வெடித்து பலர் பலியாகி, உடனடியாக சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரை பொது இடத்தில் தூக்கிலிட்டது ஈரான் அரசு.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் பள்ளிவாசல்களிலும், அஜ்மீர் தர்காவிலும் குண்டுகள் வெடித்து பலர் உயிரிழந்தனர். இந்த வழக்குகளில், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தலையிலேயே குற்றமும் சுமத்தப்பட்டு இன்று இந்த வழக்கு நிலையும் 'வெடிக்காதகுண்டு' போல் அமைதியாக உள்ளது.

நேற்று தாய்லாந்தில் ஒரு பள்ளிவாசலில் தொழுகையின்போது புகுந்த ஒரு கும்பல் சரமாரியாக சுட்டதில்பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிமிடம் வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறாக உலகெங்கிலும் இஸ்லாமிய எதிரிகளின் இலக்காக திகழக்கூடிய பள்ளிவாசல்கள் விஷயத்தில் அந்தந்த நாட்டு அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை.குறிப்பாக இந்தியாவில் முக்கியமான கோயில்களுக்கு பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்களை நியமிப்பதோடு அது மட்டுமன்றி, கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தும் அரசு, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் கேமராக்கள் அமைப்பது இல்லை. ஆனால் முஸ்லிம்கள் நினைத்தால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் . பல லட்ச ரூபாய் செலவு செய்து பள்ளிவாசல் எழுப்புபவர்கள், சில ஆயிரம் செலவு செய்து கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பள்ளிவாசலில் அசம்பாவிதம் நடப்பதை பெருமளவு குறைக்கமுடியும். அப்படியே ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால்கூட கேமராக்களின் துணை கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து உலகுக்கு உணர்த்தமுடியும், அதோடு அடித்தவனும் முஸ்லிம்-அழுபவனும் முஸ்லிம் என்ற பாணியில் நம்மீதே காவல்துறை பழிபோடாமல் பாதுகாக்க முடியும். மேலும், சமுதாய வாலிபர்கள் அதிக அளவில் பள்ளிவாசலோடு தொடர்பில் இருக்கவேண்டும். சந்தேகப்படும் வகையில் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பள்ளிவாசல் கட்டுவதோடு நம்பணி நிறைவடைந்து விடாது. அங்கு இறைவனை வணங்க வருபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் நம்பணிதான் என்பதை சமுதாயம் உணரவேண்டும்.