-இப்பி பக்கீர்
மனிதநேய மக்கள் கட்சி நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது தி.மு.க.வினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ம.ம.க.வினரின் பிரச்சார வேகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த தி.மு.க.வினர் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பிரச்சார களத்தில் முன் நின்ற ம.ம.க. மற்றும் த.மு.மு.க. வினரை பழிவாங்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூர் பெண்கள் பிரசவ மருத்துவமனை வெளியே கடந்த 42 ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் உணவுக் கடைகள் நடத்தி வருகிறார் ஷாஹுல் ஹமீது இவரது தந்தையார் காலத்திலிருந்து நடத்தப்பட்டு வரும் இக்கடையை மாநகராட்சி அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. சுமார் 40 பேர் இவரது கடைகளில் பணி புரிகின்றனர்.
இவர் மனிதநேய மக்கள் கட்சியின் சேப்பாக்கம் பகுதி பொருளாளராகவும் இருக்கிறார். மத்திய சென்னை நாடாளு மன்ற தொகுதியில் ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலிக்காக இவர் ஆற்றிய கடுமையான களப்பணிகள் அந்தப் பகுதி தி.மு.க.வினர் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே கடந்த 25.05.2009 அன்று மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் புடை சூழ வந்து ஷாஹுல் ஹமீதின் உணவுக் கடையை உடனே அகற்ற வேண்டும் என மிரட்டினர். தகவலறிந்த த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வினர் உடனடியாக அங்கு குவிந்தனர். ம.ம.க. வினருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
42 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கடையை எந்த உத்தரவும் இல்லாமல் தங்கள் மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவை ஏற்று அகற்றுவதில் அதிகாரிகள் குறியாய் இருந்தனர். கடைசியாக பல்வேறு சால்ஜாப்புகளை சொல்லி கடையை காலி செய்து விட்டனர். அந்தப் பகுதியில் இருந்த மற்றும் சில பிளாட்பார கடைக்களும் அகற்றப் பட்டன.
இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் உட்பட பலரிடம் த.மு.மு.க. நிர்வாகிகள் பேசிய போதும் மேலிடத்து உத்தரவு என ஒதுங்கி கொண்டனர். ஒரு சில நாட்களுக்கு முன்பே அருகிலிருக் கும் மற்ற கடைகாரர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் வந்து திங்களன்று உங்கள் கடைகளை அகற்ற சொல்வோம், அந்த நேரத்தில் எடுத்து விட்டு பிறகு நீங்கள் வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். ஒரு சில நாட்களில் மற்ற நபர்கள் மீண்டும் அதே இடத்தில் கடைகள் அமைத்து விட்டனர். இதை தடுக்காத
அதிகாரிகள் ஷாஹுல் ஹமீது கடை போட முயன்றால் மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மிரட்டுகின்றனர். கடையில் பணிபுரியும் வேலையாட்களை காவல் துறையினர் அழைத்துச் சென்று மிரட்டி யுள்ளனர். இதனால் வேலையாட்கள் ஊருக்கு சென்று விட்டனர்.
இது குறித்து ம.ம.க. நிர்வாகிகள் உரிய அரசு அதிகாரிகளிடம் கோரிக்கைகள் அளிக்க உள்ளனர். தகுந்த நடவடிக்கை இல்லையெனில் கடை அகற்றிய பின்னணியில் உள்ள ஆளும் கட்சி பிரமுகர்களை அடையாளப்படுத்தி போராட்டங்களில் இறங்கவும் திட்டமிட்டுள்ளனர். அரசியல் பழிவாங்கல்களை கை விட்டு விட்டு ஆளும் கட்சி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க முன்வருமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக