சுதந்திர இந்தியாவில் 1992 டிசம்பர் 6 ல் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் சங்பரிவார கும்பல்களால் இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது. 800 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு, அல்லாஹ்வின் இல்லமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக ஆக்கப்பட்டு விட்டது.
சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு மதத்தினருக்கு எதிராக ஒரு கயவாளிக் கூட்டம் எப்படி இப்படிப்பட்ட அராஜகங்களை செய்ய முடிகிறது. அதற்கு எப்படி ஆளும் கட்சி முதற்கொண்டு அரசாங்கமும் ராணுவமும் அரசாங்க ஊழியர்களில் பலரும் எப்படி துணை போகிறார்கள் (அ) துணை போனார்கள்.
எந்த மனிதனுக்கும் அஞ்சாத, இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிற சிலரைக் கொண்ட நிர்வாகம் இந்தியாவிற்கு தேவை என்பதை இவை காட்டுகின்றது. அதாவது காந்தியடிகள் சொன்னது போன்று ஓர் உமரின் ஆட்சி இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. உண்மையான நேர்மையான ஊழலற்ற ஓர் ஆட்சியை இஸ்லாமியர்களால் மட்டுமே தர முடியும். அது வரை பாபர் மஸ்ஜித் தகர்ப்பு போன்று இன்னும் இது போன்ற அராஜகங்களை தடுத்து நிறுத்த இப்போது இருக்கும் நிர்வாக அமைப்பு போதவே போதாது.
இடிக்கப்பட வேண்டிய வழிபாட்டுத் தலங்கள் இந்தியாவில் எத்தனையோ இருக்கிறது. எத்தனையோ அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. எத்தனையோ இடங்களில் போக்கு வரத்துக்கு இடையூராக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கே ஆலமரம் இருக்கிறதோ அங்கெல்லாம், அது அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தாலும் அங்கே நிரந்தர கோவில் கட்டப்படும், அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருப்பார்கள். அரசாங்க அலுவலகங்களின் சுவர்களில் இந்துக் கடவுள்களின் படங்கள் மாட்டப்பட்டிருப்பதை பார்ப்பவர்கள் இந்த நாட்டின் மத சார்பற்ற தன்மையை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இந்திய நாடு மத சார்பற்ற நாடா? மத சார்புள்ள நாடா? என்று கேள்வி கேட்கக் கூடிய அளவிற்கு சட்ட புத்தகத்தில் ஒரு விதமாகவும், நடைமுறையில் வேறு விதமாகவும் இருப்பது தான் நமது நாட்டின் மதசார்பற்ற தன்மை. இதற்கு சட்ட ஒழுங்கை பேணும் நீதிமன்றங்களின் வளாகமும் விதி விலக்கில்லை.
பாபரி மஸ்ஜிதின் வழக்கு கும்பகர்ணனின் உறக்கதில் இருக்கும் நிலையில், முஸ்லிம்களின் உள்ளங்களை டில்லி காவல் துறையும் டில்லி விரிவாக்கத் துறையும் இடித்து நொறுக்கி இருக்கிறது. டில்லியில் ஒரு பள்ளிவாசலை இடிக்க கனரக வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்று அந்த பள்ளியின் ஒரு பகுதியை இடித்து விட்டது தான் கொடுமையிலும் கொடுமை.
டில்லியில் மொஹ்ருலி என்ற இடத்தில் இருக்கும் திபியாவாலி பள்ளி வாசலை இடிப்பதற்காக 22 ஜுன் 2009 மாலை 4 மணிக்கு எந்த வித முன்அறிவிப்பும் இன்றி சட்டவிரோதமாக காவல் துறையின் துணையோடு டில்லி விரிவாக்கத் துறை அங்கே சென்றது.
வந்தவர்கள், பள்ளியின் மேற்கூறையையும் சுவரையும் மளமளவென்று இடிக்க ஆரம்பித்தார்கள், இடித்து தள்ளி விட்டார்கள்.
400 ஆண்டு கால பள்ளிவாசல் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறதாம். இவர்கள் சொல்வது உண்மையானால் நீதிமன்றம் தானே முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே வழக்கு நீதிமன்றம் சென்றும், பள்ளி இருந்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் ஏன் இவர்கள் அதை இடிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
ஒரு வாதத்திற்கு, அந்த பள்ளி ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தாலும் கூட வழிபாட்டுத்தலங்கள் என்பது மிகவும் உணர்வுபூர்வமான இடங்களாகும், குடியிருக்கும் வீடுகளை விட வழிபாட்டுத்தலங்களை இடிப்பது என்பது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இவர்கள் எப்படி துணிந்து வந்தார்கள்.
அங்கிருந்த பெரியவர்கள் ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு விரிவாக்கத் துறை அதிகாரிகள் எந்த பதிலும் சொல்ல வில்லை. என்ன திமிறு இருந்திருக்க வேண்டும்.
அதனால் தான் அங்கு கூடி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து எறிந்திருக்கிறார்கள். அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பு அதிகரித்து விட்டதால் அதிகாரிகள் இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார்கள்.
இதுதான் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையாக இருந்தால், முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் எஞ்சியிருக்கிறது. வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலை மீட்பதற்காக தமுமுக நடத்திய போராட்டத்தை அரசாங்கம் தனது பலத்தால் தடுத்து நிறுத்தியது, இரவோடு இரவாக எப்படி இந்துக்கள் அந்த கோட்டைக்குள் சென்று அங்குள்ள கோவிலை மீட்டார்களோ அதே போன்று அறிவிக்கப்படாத பள்ளிவாசல் மீட்பு போராட்டத்தை முஸ்லிம்கள் நடத்தப் போகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.
அப்போது இந்துக்களிடம் அரசு எப்படி நடந்து கொண்டதோ, அதே போன்று முஸ்லிம்களிடம் நடந்து கொள்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக