ஞாயிறு, 7 ஜூன், 2009

புதிய அமைச்சரவை பட்டியல்: சமூக நீதிக்கு பின்னடைவா?

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, சமூகநீதி தத்துவத்திற்கு பின்னடைவைத் தரும் வகையில் அமைச்சரவைப் பட்டியல் அறிவிக் கப்பட்டுள்ளதை சமூகவியலாளர்கள் கவலையோடு சுட்டிக் காட்டுகின்றனர்.


கடந்த ஆட்சியில் சமூகநீதிக் கொள்கைக்கு பெரிய அளவில்
முன்னேற்றம் கிடைக்காத நிலையிலும் பெயரளவில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை மக்கள் நலன் நாடும் அம்சமாக விளங்கியது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக சச்சார் கமிட்டியின் அறிக்கைகள் சிறுபான்மை மக்களின் அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.


ராஜிந்தர் சச்சாரின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அப்துர் ரஹ்மான் அந்துலேயும், உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டிற்காக அதிகாரத்தில் இருந்துகொண்டே சமூக நீதிக்காகப் போர் தொடுத்த அர்ஜுன்சிங் கும், ரயில்வே துறையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் போவதாக அறிவித்த லாலுவும், பாஸ்வான் போன்ற அரசியல் தலைவர்கள் தற்போது அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெற முடியவில்ல


தற்போதைய நிலையில் சமூக நீதி தத்துவத்தை உரத்து ஒ­க்கும் தலைவர் கள் இடம்பெறவில்லை. இதனை கவனத்தில் கொண்டு சமூகநீதி தத்து வத்தை செயல்படுத்தும் முகமாக ஆக்கப் பூர்வ அறிவிப்புகளை வெளியிட வேண் டும். ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை யின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். செய்வார்களா?

கருத்துகள் இல்லை: