கோவில் சிலைகளில் பெண்கடவுள் சிலைகளுக்கு உயர்ரகப் பட்டுத் துணி போர்த்தியிருப்பார்கள். அம்மண கோலத்தில் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு பட்டுத்துணி போர்த்தி, அம்மன் என்று மரியாதை செய்கிறார்கள். கடவுளை வழிபடும்போது மனம் அலைபாய்வதைத் தடுக்கவே சிலைகளுக்கும் ஆடை அணிவிக்கிறார்கள். சிலையே ஆனாலும் அங்கிருக்கும் சிற்பத்தில் கடவுள் தெரிவதைவிட அதன் பாலினமும் அங்கத்திரட்சியுமே கண்ணில்படுகிறது. தீவிர தெய்வ பக்தனுக்கும் சபலமுண்டு!
களைத்துத் திரும்பும் கணவனுக்காக தலைசீவி காத்திருக்கும் மனைவியால் கணவன் புத்துணர்வு பெறுகிறான். ஆபாசப் படங்களில் அங்கம் தெரியக் காட்சிப்படுத்தப்படுபவர்கள் பெண்களே! துரிதமாக பாலியல் வசப்படுத்தும் ரசாயன மாற்றம் பெண்ணைவிட ஆணுக்கே அதிகம் என்று மருத்துவம் சொல்கிறது. கன்னிப் பெண்களின் அங்கக் கவர்ச்சியில் தன்னிலை மறந்து தாடிவைத்தலையும் காதலர்களே இதற்குச் சான்று!
ஆணுக்குப் பெண் கவர்ச்சி - பெண்ணுக்கு ஆண் கவர்ச்சி என்றாலும் இறுதி வீழ்ச்சி ஆண்களுக்கே! இடுப்புச்சேலை மடிப்புல நான் கிறங்கிப்போனேனே! என்பதிலிருந்து பெண்ணின் சிறு அங்கமும் ஆணுக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது என்பது மறைக்கமுடியாத உண்மை!
முஸ்லிம் பெண்கள் பர்தா எனும் மேலங்கி அணிவதை பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடாகக் குற்றம்சொல்கிறார்கள். பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாதென்ற தடை பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் பர்தா தடைசெய்யப்பட வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை பிரபல பிபிசி நிறுவனம் நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவுகளிலும்கூட பர்தா குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுகிறது.
முஸ்லிம் பெண்கள் தங்கள் புறஅழகை கணவன், மாமனார், தந்தை,மகன் சகோதரன் உறவுமுறை தவிர்த்த யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாதென்ற கட்டுப்பாடு உள்ளது. மேற்சொன்ன உறவுமுறையற்ற ஆண்களின் பார்வை முஸ்லிமல்லாத பெண்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இஸ்லாம் தவிர யூத, கிறிஸ்தவ,சீக்கியப் பெண்களும்கூட தமது உடலழகை மற்றவர்களிடம் மறைக்கவே விரும்பிகின்றனர்.
நம் இந்தியாவிலும் வடமாநிலப் பெண்கள் பர்தாவையொத்த மேலங்கியை அணிகிறார்கள். பெண்களின் அங்கங்களை மறைப்பது மத மற்றும் கலாச்சார ரீதியில் சரியென்று ஒப்புக்கொள்பவர்கள்,முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் குறைகாண்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?
ஜனாதிபதியாக பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்பு பர்தாவைப் பற்றி விமர்சித்த திருமதி.பிரதீபா பாட்டீல் இன்றுவரை முக்காடிட்டு, கைகளை மறைக்கும் பர்தாவுக்கிணையான உடையணிகிறார். முஸ்லிம் பெண்களை பர்தா அணியச்செய்து அவர்களின் உரிமையை இஸ்லாம் பறிக்கிறதெனில் இந்திராகாந்தி முதல் ப்ரதீபா பாட்டீல்வரை முக்காடுடிட்டுக்கொள்வதற்கும் இஸ்லாம்தான் காரணமா?
விஜய் டிவியில் நீயா- நானா? என்ற நிகழ்ச்சியில் பர்தா குறித்த கருத்தாடல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.பர்தா அவசியமே என்று ஒரு பிரிவினரும் தேவையில்லை என்று இன்னொரு பிரிவினரும் வாதிடுவார்களாம்! நிகழ்ச்சி நடத்துபவர் இறுதியில் தீர்ப்பளிப்பாராம்! தீர்ப்பு என்னவாக இருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்தால் யாருக்கு நஷ்டம்?
இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டமார்க்கமல்ல என்கிறீர்கள்?ஆனால் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாடம் நடத்தி இதுபோன்ற சுதந்திரமான கருத்தாடலை தடுக்கிறீர்களே என்று சிலர் கேட்கலாம். எது சார் சுதந்திரம்? ஒருபக்கம் ஆபாச போஸ்டரை கிழிக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் பர்தாவை விமர்சிப்பது நேர்மையான கருத்தாடலா? பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?
ஆணும் பெண்ணும் சமம் என்பவர்கள் போராட்டம் நடத்த வேண்டிய இடம் பொதுக் கழிப்பிடங்கள்தான். ஏனென்றால் அங்குதான் ஆண்கள்-பெண்கள் என தனித்தனி படம்போட்டு பாகுபாட்டை வலியுறுத்துகிறார்கள். என்ன கொடுமைசார் இது!
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
பர்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பர்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 14 ஜனவரி, 2010
பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?
வியாழன், 2 ஜூலை, 2009
பொக்கிஷம் என்ற பெயரில் ஒரு விஷம்! வருகிறது இன்னொரு கலவர திரைப்படம்!




இயக்குனர் சேரன் இயக்கி நடிக்கும் பொக்கிஷம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.சினிமா பைத்தியங்கள் நிறைந்த தமிழகத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளிவருவது ஒன்றும் புதிது அல்லவே என்று நீங்கள் கேட்கலாம்.திரைப்படம்,கலை என்ற பெயரில் வியாபார வெறி பிடித்து சினிமாகாரர்கள் செய்யும் சமூக சீரழிவுகளை வன்மையாக கண்டிப்பவர்கள் நாம்.சினிமா என்னும் சீரழிவு கலாச்சாரத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் சமுதாயம் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து வருகிறது.ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் சினிமா தளத்தில் இயங்கி வருகிறார்கள்.ஒரு சில மார்க்கம் தெரிந்த முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களால் மார்க்க விசயங்களை முஸ்லிம் சமூக அவலங்களை வெகு ஜன ஊடகமான சினிமாவில் பூடகமாக கூட தெரிவிக்க முடிவதில்லை.தெரிவிக்கவும் முயலுவதில்லை.
சினிமா என்ற ஊடகத்தின் மூலம் புரட்சிகளை ஏற்படுத்திய பல திரைப்படங்கள்(உமர் முக்தார்) மனித வாழ்வின் அவலங்களை,அழகியல்களை காட்டும் அற்புதமான திரைப்படங்கள்(ஈரானிய திரைப்படங்கள்),கடந்த கால நிகழ்வுகள்,மக்கள் தலைவர்களின் வரலாறுகள் என திரைப்படங்கள் பல பரிணாமங்களை கொண்டவை, மக்களின் எண்ணங்களை எழுச்சி பெற வைக்கவும்,நல்லவை பக்கம் நாட்டம் பெற வைக்கவும் சுய உணர்ச்சி கொள்ள வைக்கவும் திரைப்படங்கள் பெரும் பங்காற்றுகின்றன.ஆனால் பொழுது போக்கு என்ற பெயரில் சமூக பொறுப்புகளை மறந்து வியாபார வெற்றி,பணம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே களமிறங்கி உள்ள நமது இந்திய குறிப்பாக தமிழ் திரைப்பட வியாபாரிகள் பெண்களின் அந்தரங்க அவயங்களை காட்டுவதிலும் காதல் என்ற பெயரில் சுய ஆசைகளை கற்பனைகளை திரைப்படங்களாக எடுப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இன்று வரை காதல் என்ற ஒற்றை சொல்லை வைத்து வித்தை காட்டுவதில் சினிமாக்காரர்கள் வல்லவர்கள்.
அந்த வகையில் காதல் கதை என்ற பெயரில் சர்ச்சைக்குரிய அல்லது சர்ச்சை ஆகும் என்றே தெரிந்து எடுக்கப்பட்ட படம்தான் சேரனின் பொக்கிஷம்.படத்தின் கதை இதுதான்.நாகூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான இலக்கியம் படிக்கும் கதிஜாவிற்க்கும் (நடிகை பத்மப்ரியா) கப்பல் பொறியாளரான இந்து இளைஞர் சேரனுக்கும்(கதைப் பெயர் தெரியவில்லை) நடக்கும் காதல் அதை ஒட்டிய சம்பவங்கள்தான் கதை.இதில் இருவரும் கடிதம் மூலமாகவே தங்கள் காதலை பரிமாறிக் கொள்கிறார்களாம்.1970 ம் ஆண்டு கால கட்டத்தில் கதை நடப்பதாக செட்டிங் போடப்பட்டு படம் எடுக்கப் பட்டுள்ளதாம்.
மணிரத்தனம் என்ற இருட்டுப்பட இயக்குனர் பம்பாய் என்று இதேபோல்தான் முஸ்லிம் பெண் இந்து இளைனன் என்ற கான்செப்டில் ஒரு கதை எடுத்தார்.படத்தில் முஸ்லிம் பெண் கடல்புறத்தில் குலுங்க குலுங்க ஓடி வரும் காட்சியை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.பால் தாக்கரேவுக்கு மட்டும் படத்தை போட்டு காண்பித்து அனுமதி வாங்கி வெளியிட்டார்.முஸ்லிம் சமூக பெரியவர்களுக்கோ,இயக்கங்களுக்கோ படத்தை காட்டவில்லை.ஏன் காட்ட வேண்டும் என்ற பாசிச சிந்தனைதான் அவரை அவ்வாறு செய்ய வைத்தது. விளைவு உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெடி குண்டுகளை மணி ரத்தினத்தின் வீட்டில் வீசி வெளிச்சம் ஏற்படுத்தினர்.நல்ல வேலையாக தப்பி பிழைத்தார் இருட்டு இயக்குனர்.இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.சிலர் சிறையில் வாடி வருகின்றனர்.மணி ரத்தினத்தின் கதை தெரிந்தும் சினிமாவை புறம் தள்ளியே வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் குணம் தெரிந்தும் தொடர்ந்து சில தமிழ் பட வியாபாரிகள் நம்மை தொந்தரவு செய்தே வருகின்றனர்.முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது,முஸ்லிம் பெண்களின் பர்தாவை பயன்படுத்தி கேவலமான செயல்களை செய்வது என பல படங்களை எடுத்து வருகின்றனர். (உதாரணம். ஒற்றன்,ஹே ராம்,இன்னும் பல).
ஏற்க்கனவே தமிழ் திரைப்படங்களின் உபயத்தால் காதல் என்ற பெயரிலும் நட்பு என்ற பெயரிலும் இளம் பெண்களும் இளைஞர்களும் வீட்டை விட்டு ஓடுதல்,ரகசிய திருமணம் செய்தல்,கடற்கரைகளில்,பூங்காக்களில் சேட்டைகள், விடுதிகளில் லீலைகள் என தமிழ் கலாசாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்த படங்களின் பாதிப்புக்கள் கலாச்சார பெருமை கொண்ட தமிழக முஸ்லிம் சமூகத்தையும் மெல்ல பாதித்து வருகின்றது.ஓடிப்போகும் கலாச்சாரம் தற்ப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இது போன்ற படங்கள் சமூகத்தில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி தெரிய தேவை இல்லை.முஸ்லிம் சமூகத்து பெண்கள் மற்றும் இளைஞர்களை இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை.எனவே பொக்கிஷம் போன்ற படங்கள் வெளி வரும் முன்னே திரைபடத்தை பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோர வேண்டும். மறுத்தால் திரைப்படம் வெளிவருவதற்கு கடுமையான எதிர்ப்புகளை காண்பிக்க வேண்டும்.பம்பாய் பட பாதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள் இந்த படத்தினாலும் ஏற்பட்டு விடக்கூடாது.
தமிழக அரசும் இவ்விஷயத்தில் உடனே கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்ட பின்னர் வருந்துவதை விட முன் நடவடிக்கை எடுப்பதே சாலச் சிறந்தது.
புதன், 24 ஜூன், 2009
பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாம் பர்தா - கொக்கரிக்கிறார் சார்கோஷி

பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசி பிரான்சு நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா உடை, பெண்ணடிமைத் தனத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பர்தா உடை பெண்களை அடிமைப்படுத்தி அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.முகத்திரை அணிவது பிரான்சின் பெரும்பாலான பள்ளிகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் பர்தா அணியத் தடை செய்யும் சட்டம் இயற்றும் சாத்தியக் கூறுகளை ஆராய ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று அவர் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
திரைகளுக்குப் பின்னே இருக்கும் கைதிகளாக, அடையாளம் இல்லாதவர்களாக, தமக்கென ஒரு கண்ணியம் இல்லாதவர்களாகப் பெண்கள் இருப்பதை பிரெஞ்சு சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றும், பர்தா என்பதை மத அடையாளமாகத் தன்னால் சரிகாண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சர்கோசியின் இப்பேச்சு, பிரெஞ்சு சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைகளுக்குப் பின்னே இருக்கும் கைதிகளாக, அடையாளம் இல்லாதவர்களாக, தமக்கென ஒரு கண்ணியம் இல்லாதவர்களாகப் பெண்கள் இருப்பதை பிரெஞ்சு சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றும், பர்தா என்பதை மத அடையாளமாகத் தன்னால் சரிகாண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சர்கோசியின் இப்பேச்சு, பிரெஞ்சு சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)