பிரெஞ்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரெஞ்சு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 டிசம்பர், 2009

ஹிஜாப் அணிவதில் உறுதியாகவுள்ள முஸ்லிம்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை இல்லை: பிரெஞ்சு நீதியமைச்சர்


தமது மனைவியர் பர்தா அணிய வேண்டும் என வற்புறுத்தும் முஸ்லிம் ஆண்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்படக் கூடாது என, பிரெஞ்சு நீதியமைச்சர் மைக்கேல் அல்லொய்ட் மாரி கூறியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் முழுமையாக மறைக்கும் ஆடையை அணிவதைத் தடுக்கும் சாத்தியமுள்ள சட்டத்துக்கான பாராளுமன்றத்தின் சிபாரிசுக்காக அரசாங்கம் காத்திருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

"ஹிஜாபை விடவும் நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன" என்றும் அவர் தெரிவித்தார்.

"பிரெஞ்ச் குடியுரிமையை யார் எதிர்பார்க்கிறார்கள், யாருடைய மனைவி முழு ஹிஜாப் அணிகின்றார், யார் எமது நாட்டின் பெறுமானங்களைப் பகிர்ந்து கொள்ள வெளிப்படுகின்றார் என்பதை விரைவில் அறிந்து கொள்ள முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சர் தொடர்ந்து கூறுகையில், "நிகாப், புர்கா அணிவது ஒரு பிரச்சினையாகும். அது இணைந்து வாழ்வதற்கான எமது முயற்ச்சியையும், நாட்டின் ஜனநாயகப் பெறுமானத்தையும் குறிப்பாக மனிதத் தூய்மையையும் பாதிக்கின்றது" என்றார்.

புதன், 24 ஜூன், 2009

பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாம் பர்தா - கொக்கரிக்கிறார் சார்கோஷி



பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசி பிரான்சு நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் அணியும் பர்தா உடை, பெண்ணடிமைத் தனத்தின் அடையாளம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பர்தா உடை பெண்களை அடிமைப்படுத்தி அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.முகத்திரை அணிவது பிரான்சின் பெரும்பாலான பள்ளிகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் பர்தா அணியத் தடை செய்யும் சட்டம் இயற்றும் சாத்தியக் கூறுகளை ஆராய ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று அவர் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
திரைகளுக்குப் பின்னே இருக்கும் கைதிகளாக, அடையாளம் இல்லாதவர்களாக, தமக்கென ஒரு கண்ணியம் இல்லாதவர்களாகப் பெண்கள் இருப்பதை பிரெஞ்சு சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்றும், பர்தா என்பதை மத அடையாளமாகத் தன்னால் சரிகாண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சர்கோசியின் இப்பேச்சு, பிரெஞ்சு சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.