சங்பரிவார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

பெயரை மாற்றினால் சரித்திரம் மாறிவிடுமா?

ஒரு சமூகத்தை முழுமையாக அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த சமூகத்தின் வரலாற்றுத் தொடர்புகளையும் பாரம்பர்ய சின்னங்களையும் அழித்துவிட்டால் அந்த சமூகம் தொடர்பு அறுந்த சமூகமாக, முகவரி இல்லாத நாடோடி சமூகமாக மாறிப்போகும். பிறகு அந்த சமூகத்தை அழிப்பது மிகவும் எளிது. இப்படி குறிவைத்து அழிக்கப்பட்ட பல சமூகங்களின் வேதனை நிறைந்த வரலாற்று சம்பவங்களை உலக வரலாற்று ஏடுகளில் காணலாம்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிட்லர் மற்றும் முஸோலினியின் பாசிச நாஜி கொலைகார கூட்டம் இப்படித்தான் உலகின் பல பாகங்களிலும் தங்களது இன வெறி கொள்கைகளை நிலைநிறுத்தியது.

அத்தகைய பாசிச வெறியர்களிடம் பாடம் பயின்ற சங்பரிவார கும்பல் இந்தியாவிலும் அதுபோன்ற இனவெறி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

சகிப்புத் தன்மைக்கு பெயர் பெற்ற இந்து மதத்தின் பெயரால் இந்த கொடுமைகளை இவர்கள் நடத்துவது தான் மிகப்பெரிய அக்கிரமம். அதனால் தான் இந்து மதத்தில் உள்ளவர்களின் 1 சதவீத ஆதரவைக் கூட இவர்களால் பெற இயலவில்லை. இந்து மக்களாலேயே புறக்கணிக்கப்பட்ட இந்த சங்பரிவார், அந்த மதத்தின் பெயரை பயன்படுத்தி இனவெறி, மதவெறியை தூண்டுகின்றனர்.

இதுபோன்ற மனிதவிரோத வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்வதற்கு ஏற்ற இடமாக மோடி ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் கிடைத்திருக்கிறது. மோடியின் அட்டூழியங்களை நாம் நினைவுபடுத்த தேவையில்லை. காரணம் அந்த கொடூர கொலைகள்

எல்லாம் நல்லோர்கள், நடுநிலையாளர்கள் நெஞ்சை விட்டு என்றைக்கும் மறையப் போவதில்லை.

இன அழிப்பு தொடர்கிறது மோடியின் காட்டுமிராண்டி ஆட்சியில்.

தற்போது குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் என்ற 600 ஆண்டு வரலாற்றுப் பெயரை ஒரே இரவில் அம்தாபாத் என்று அரசின் அத்துனை அறிவிப்பு ஏடுகள் மற்றும் பெயர் பலகைகளிலும் மாற்றி தனது நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் விரோத எண்ணத்திற்கு மேலும் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.

கி.பி. 1411 இல் முஸ்லிம் மன்னர் அகமது ஷா அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் தான் அகமதாபாத். இன்றைக்கு இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் ஜவுளி தயாரிப்பிற்கு உலகளவில் பெயர் பெற்ற நகரமாக விளங்குகிறது.

அகமதாபாத் மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு மக்கள் முஸ்லிம்கள். மேலும் தேசத் தந்தை காந்தியடிகளின் சபர்மதி ஆஸ்ரமம் அகமதாபாத்தில் தான் உள்ளது. அகமதாபாத் என்ற முஸ்லிம் பெயரை மாற்றிட வேண்டி தேசவிரோத சக்திகள் பல முறை முயன்றும் முடியவில்லை. தற்போது ஒரே இரவில் மோடியின் கைங்கர்யத்தால் மாநகராட்சியின் பதிவேடுகளும் மாற்றப்பட்டுள்ளன. இதை குஜராத்திலிருந்து வெளிவரும் எந்த பத்திரிகைகளும் எதிர்ப்பு தெரிவிக்காமல் காவியில் கலந்து சங்கமமாகிவிட்டன.

இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி, நிர்வாகமுறை, அவர்களின் தியாகம் போன்ற வரலாற்று உண்மை நிகழ்வுகளை பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த வரலாற்று ஏடுகள் அனைத்தையும் வெள்ளையர்கள் ஆட்சியில் அடியோடு தீவைத்துக் கொளுத்தினர். உண்மைச் செய்திகள் அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். பிறகு வெள்ளையர்களே அன்றைய சங்பரிவார் துணை கொண்டு முஸ்லிம் மன்னர்களைப் பற்றி கட்டுக்கதைகளை வரலாறு என்ற பெயரில் எழுதி வைத்தனர். அவற்றைதான் இன்றைய வரலாற்றுப் பாடங்களில் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகின்றனர்.

இவற்றை மாற்றி உண்மையான செய்திகளை தெரிந்து கொள்வதில், அவற்றை தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில் முஸ்லிம்கள் போன்ற இன மத ரீதியான சிறுபான்மை சமூகம் என்றைக்கு ஆர்வம் காட்டுகிறதோ, அவற்றை நிலைநிறுத்துவதற்கு என்றைக்கு போராட துணிகிறதோ அதுவரையிலும் இது போன்ற அநியாயக்காரர்களின் ஆட்டூழியங்கள் இந்நாட்டில் தொடரத் தான் செய்யும். சட்டத்தால் எல்லாம் இவர்களை ஒன்றும் செய்துவிட இயலாது.

source : http://www.samooganeethi.org/?p=910

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

சங்பரிவாரின் புதிய முகம் நடிகன் கமல்?உன்னைப்போல் ஒருவன்!விமர்சனம்

திரை வகை :முஸ்லிம்கள் மட்டுமே திவிரவாதிகள்!

(காதல்,பொழுதுபோக்கு,கலை அல்ல)

சென்னை நகர போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு மர்ம போன் வருகிறது. அதில் பேசிய கமல் ஐந்து இடங்களில் அதி பயங்கர குண்டுகள் வைத்திருப்பதாக மிரட்டுகிறார். போலீஸ் நிலையத்தில் வைத்துள்ள குண்டு பற்றி மட்டும் விவரம் சொல்கிறார். போலீஸ் படை அங்கு முற்றுகையிடுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் குண்டை செயலிழக்க செய்கின்றனர்.

போலீஸ் வட்டாரமும் அரசும் அதிர்ந்து நிற்கிறது. கமல் திரும்பவும் கமிஷனரிடம் பேசி மீதி நான்கு குண்டுகளும் வெடிக்காமல் இருக்க ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவிக்கும்படி “கெடு” வைக்கிறார்.
போனில் பேசுவது யார்? எங்கிருந்து பேசப்படுகிறது? என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போலீசும், உளவுத்துறையும் அல்லோலப்படுகிறது. கெடு நேரமும் நெருங்குகிறது. வேறு வழியின்றி கமல் கோரிக்கையை கமிஷனர் ஏற்கிறார். நான்கு தீவிரவாதிகளும் கமல் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்படுகின்றனர்.
அவர்களிடம் மேலிட உத்தரவுப்படி உங்களை விடுவிப்பதாகவும் வேனில் தப்பிச் செல்லுங்கள் என்றும் கமல் போனில் கூறுகிறார். கடைசியாக 3 திவிரவாதிகளும், திவிரவாதிகளுக்கு பொருட்கள் சப்ளை செய்தவரும் கொல்லப்படுகிறார்கள்!
திவிரவாத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் உலகில் வாழத்தகுதியற்வர்கள் என்ற கதை நன்றாக உள்ளது; நல்ல கதை தந்தமைக்கு எமது வாழ்த்துக்கள்!
ஆனால்,மிஸ்டர் கமல்! திவிரவாதியென்றால் அது முஸ்லிம் மட்டும் தான் என நீங்கள் நினைப்பதும் அதை அடுத்தவர் மனதில் பதியச்செய்வதும் ஏன்?
இதுவரை நடைப்பெற்ற வகுப்பு கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள் உயிர், உடமை, கற்பு என எல்லாவற்றையும் இழந்தவர்கள் யார்?
அதை நடாத்தியது யார் என்பதை நம் நாட்டு வரலாற்றை ஒரு முறை வாசித்தாலே தெரியும்!
இப்படி உண்மைகளை உறங்கச்செய்துவிட்டு முஸ்லிகளை மட்டும் சித்தரிப்பது சங்பரிவார்களுக்கு நானும் "நம்மவர்"தான் என்று காட்டும் காவிக்கொடியோ?
அல்லது பார்பன விசுவாசமா...?

சனி, 20 ஜூன், 2009

குஜராத் கலவரம்: மோடிக்கு வந்த, பேசிய போன் கால்கள் விவரம் ஒப்படைப்பு!

அகமதாபாத்: குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வரலாறு காணாத கலவரத்தின்போது, முதல்வர் நரேந்திர மோடிக்கு வந்த, அவர் பிறருக்கு பேசிய தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்கள் சிறப்பு புலனாய்வுப் படையிடம் (எஸ்.ஐ.டி.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதை ஜன் சங்கர்ஷ் மன்ச் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், எஸ்ஐடியிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் கலவரம் உச்சகட்டத்தில் இருந்தபோது நரேந்திர மோடிக்கு, முன்னாள் அமைச்சர்கள் மாயா பென் கோத்னானி, கோர்தன் ஜடாபியா, வி.எச்.பி. தலைவர் டாக்டர் ஜெய்தீப் படேல் மற்றும் பலர் போன் செய்து விரிவாக பேசியுள்ளனர் என்று அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலமுறை அவர்கள் மோடியுடன் போனில் பேசியுள்ளதாகவும் அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர்களில் மாயா பென் கோத்னானி மற்றும் ஜெய்தீப் படேல் ஆகிய இருவரும் நரோடி படியா மற்றும் நரோடா கிராமத்தில் நடந்த ஒட்டுமொத்த படுகொலைகளைத் தூண்டி விட்டும், நேரில் சென்று கலவரக்காரர்களை ஊக்கப்படுத்தியதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்கள் ஆவர்.

பெண் அமைச்சரான மாயா பென் கோத்னானி, இந்த வழக்கில் ஜாமீனில் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை டிஸ்மிஸ் செய்ய மோடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர் டிஸ்மிஸ் செய்யவில்லை.

பின்னர் மாயாவே தனது பதவியை ராஜினாமா செய்து சரணடைந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது அவரும் படேலும் மீண்டும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

ஜன் சங்கர்ஷ் மன்ச் அமைப்பின் வழக்கறிஞர் முகுல் சின்ஹா கூறுகையில், எங்களது ஆய்வுப்படி 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை மோடிக்கு வந்த, அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள் குறித்த விவரத்தை கொடுபத்துள்ளோம்.

இதில் ஜெய்தீப் படேல் முதல்வர் அலுவலகத்துடன் 9 முறை பேசியுள்ளார். மாயா பென் கோத்னானி 4 முறையும், ஜடாபியா 13 முறையும், அகமதாபாத் கூடுதல் கமிஷனர் நான்கு முறையும், துணை ஆணையர் சவானி 2 முறையும் பேசியுள்ளனர்.

இந்த தொலைபேசித் தொடர்புகள் குறித்த விவரங்களை ஐபிஎஸ் அதிகாரி ராகுல் சர்மா கொடுத்த விவரங்களின் அடிப்படையில் நாங்கள் தொகுத்துள்ளோம் என்றார்.

குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியின் தொடர்புகள் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என சமீபத்தில்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த பின்னணியில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரத்தை ஜன் சங்கர்ஷ் மன்ச் எஸ்ஐடியிடம் வழங்கியுள்ளது.

சனி, 28 மார்ச், 2009

மதவாதத்திற்கு விழுந்த மரண அடி!

சஞ்சய் காந்தி, மேனகா காந்தி தம்பதியினரின் ஒரே மகன் வருண்காந்தி. நேரு குடும்பத்தில் இருந்து மதவாதத்திற்கு தனி பாதை போட்டு வந்திருக்கிறார். உ.பி. பிலிபிட் தொகுதியில் பாஜகவின் வேட்பாளர். மேனகா காந்தி தன் மகனுக்காக விட்டுக் கொடுத்த அந்த தொகுதியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கையை வெட்டுவேன், காலை வெட்டுவேன் என்று முஸ்லிம்களுக்கு எதிராக பேசியிருக்கிறார். சீக்கியர்களுக்கு எதிராகவும் பேசியிருக்கிறார். அவரது பேச்சு பதியப்பட்ட ஒலிப்பதிவை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளது. அதே கையோடு, வருணுக்கு கட்சியில் டிக்கெட் தரவேண்டாம் என்று பாஜகவுக்கு அறிவிக்கையும் அனுப்பியிருக்கிறது.

இதன்மூலம், அரசியல் ஆடுகளத்தில் பாஜகவுக்கு களமிறங்கிய நேரு குடும்பத்து விக்கெட்டை தேர்தல் ஆணையம் வீழ்த்தியுள்ளது. சீக்கிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் மேனகா. இந்து மதவெறியராக வருணை வளர்த் திருப்பதில் ஒரு தாயாக மேனகா தோல்வி கண்டுள்ளார். மிருகங்கள் வதைபடுவதைக் கண்டு பதை பதைக்கும் மேனகா காந்தி தன் மகனின் வெட்டு பேச்சு பற்றி மௌனம் காப்பது இரக்க உணர்ச்சி பற்றிய அவரது மதிப்பீட்டை ஆய்வு செய்கிறது.

வருணின் தந்தையான சஞ்சய் காந்தி (இந்திரா காந்தியின் இளைய மகன்) அவசர நிலை காலத்தில் மேற்கொண்ட மனிதவிரோத செயல்களை இன்றைய தினத்தில் வரலாற்றுப் பக்கங்களே அறியும். சஞ்சய் காந்தியின் கோர மரணத்திற்குப் பின் மாமியாருடன் (இந்திரா காந்தி) நேர்ந்த மோதலால் குடும்பத்தை விட்டும், காங்கிரஸை விட்டும் வெளியேறினார் மேனகா. 90களுக்குப் பிறகு பாஜகவில் சீட் வாங்கி எம்.பி.யானார். அந்த தொடுதலில் இருந்து மதவெறி அரசியல் வருணுக்கும் தொற்றியிருக்கிறது. மோத்திலால், ஜவஹர்லால், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என்று மிதவாதப் பாரம்பரியத்தில் இருந்து திசைமாறி இன்று பாஜகவின் மதப்பசிக்கு வருண் ப­யாகி இருக்கிறார். வம்பில் மாட்டிக் கொண்டார் வருண் என்று தெரிந்ததும் அவரது பேச்சுக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று முத­ல் நழுவிக்கொண்டது பாஜக. பாஜக சொல் கேட்டு சொந்த கட்சிக்குள் தடுக்கி விழுந்தவர்கள் பலர் உண்டு. உதாரணம் அன்று கல்யாண் சிங், இன்று வருண் காந்தி.

வருண் காந்தி அரசியல் அரிச்சுவடியின் அறிமுகப் பக்கத்தையே இன்னும் படிக்கத் தொடங்கவில்லை. அதிரடியாகப் பேசி தடாலடி யாக பிரபலப்பட அவர் விரும்பியிருக்கலாம். ஏற்கனவே விரித்துவைத்த வலையில் வருண் லாவகமாக வந்து சிக்கிக் கொண்டார் என்றும் சொல்லலாம்.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு பலருக்கும் எச்சரிக்கையாகவும் உள்ளது. முன்னர், மதவெறியைத் தூண்டி பேசினார் என்று 6 ஆண்டுகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய பால்தாக்கரேவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

மதவெறி பேச்சாளர்கள் ஒரு கட்சிக்கோ, இயக்கத்துக்கோ தலைவராக, பொறுப்பாளராக நீடிக்கக் கூடாது என்றும் அவ்வாறு நீடிக்கும் கட்சி தடை செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்றம் துணிச்சலுடன் அறிவிக்க வேண்டும்.
ஒரு கட்சி அறிவிக்கும் வேட்பாளர் குறித்து கருத்துச் சொல்ல தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று பாஜக கூறியிருக்கிறது. இதில், வருணை காப்பாற்றுவதைவிட, இத்தகைய மதவெறிப் பேச்சுக்களைக் காப்பாற்றுவது பாஜகவுக்கு அவசியப்படுகிறது.

எடுத்துரைப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கும் கூட உரிமை இல்லை என்றால் பின்னர் இவர்களை யார்தான் இடித்துரைப்பது? 2000 உயிர்களை பலி கொண்ட நரேந்திர மோடி மீண்டும் முதல்வராவதைத் தடுக்க இந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கோ, நீதித்துறைக்கோ அதிகாரம் இருந்ததாகத் தெரியவில்லை.
பாபர் பள்ளியை இடித்துவிட்டு ஆரத்தழுவி ஆழிங்கணம் செய்யும் அத்வானி, உமாபாரதியின் ஆனந்த தாண்டவத்தை, பளிங்கு திரைகளில் பார்த்த பிறகும் அவர்கள் தேர்தலில் நிற்பதைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தின் தூண்களுக்கு வலுவில்லை. இப்போது தேர்தல் ஆணையத்துக்கும் அனுமதி இல்லை என்றால் மதவெறியிடம் இருந்து மக்களாட்சியை யார், எப்படிக் காப்பாற்றுவது?

ஞாயிறு, 22 மார்ச், 2009

மோடித்துவாவின் புதிய பங்காளிகள்

இந்தியத் தரகு முதலாளிகளின் தளபதிகளாகக் கருதப்படும் ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மித்தல் (ஏர்டெல் நிறுவனத் தலைவர்) ஆகி யோரின் மனம் கவர்ந்த நாயகனாகிவிட்டார், திருவாளர் நரேந்திர மோடி. குஜராத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலாளிகளின் கூட்டம் மோடியைப் புகழ்ந்து தள்ளியதைக் கேட்டால், தமிழ்நாட்டில் அம்மாவையும், தளபதிகளையும் புகழ்ந்து "கட்அவுட்'' வைக்கும் தொண்டன்கூடக் கூசிப் போயிருப்பான்.

ரத்தன் டாடா தனது நானோ கார் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்தில் அமைப்பதற்கு இரண்டே நாட்களில் ஒப்புதல் அளித்த மோடியின் தொழில் முனைவைக் கண்டு கிறுகிறுத்துப் போனதாகப் புகழ்ந்தார்.

"மோடி, ஒரு நிறுவனத்திற்குப் பதிலாக ஒரு மாநிலத்தையே ஆளும் மிகச் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி'' என்றார் ஏர்டெல் நிறுவனத் தலைவர், சுனில் மித்தல்.
"கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே கனவு காணும் மோடியின் ஆற்றல்; குறிக்கோள்களை அடைவதற்கு அவர் காட்டும் வேகம் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், மோடிதான் நமது நாட்டின் எதிர்காலத் தலைவர்'' என்றார், அனில் அம்பானி.

"குஜராத்தை தொழில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாக மாற்றிக் காட்டியிருக்கும் நரேந்திர மோடி, இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பொழுது, இந்திய நாட்டின் முகமே மாறிப் போய்விடும்'' என்றும் அனில் அம்பானி மோடியைத் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பா.ஜ.க.வின் பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அத்வானிக்கு எதிராக, அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவருமான பைரோன்சிங் ஷெகாவத் போர்க் கொடி தூக்கிய நேரத்தில் தரகு முதலாளிகளின் தளபதிகள் நரேந்திர மோடியைப் புகழ்ந்து தள்ளியது பா.ஜ.க.விற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

பரலோகம் போவதற்குள் இந்தியாவின் பிரதம மந்திரி நாற்காலியில் உட்கார்ந்து விடவேண்டும் எனப் பித்துப் பிடித்து அலையும் அத்வானி, "பா.ஜ.க., மைய ஆட்சியைப் பிடித்தால், மோடி பாணி பொருளாதார நடவடிக்கைகளையே பின்பற்றும்'' எனத் தரகு முதலாளிகளுக்கு உறுதிமொழி அளித்தார். நரேந்திர மோடியோ, "தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை'' என அறிவித்து, தனது பணிவையும், விசுவாசத்தையும் காட்டிக் கொண்டார். இப்படியாக பா.ஜ.க.விற்குள் பிரதமர் பதவி நாற்காலியைக் குறிவைத்து எழவிருந்த கோஷ்டிச் சண்டை தற்காலிகச் சமாதானத்துக்கு வந்தது.

•••

குஜராத்துக்கு வெளியே மோடியின் செல்வாக்கு ஆர்.எஸ்.எஸ். அம்பிகள் என்ற வட்டத்துக்கு அப்பால் இருப்பதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. பா...வின் செல்வாக்குமிக்க மாநிலங்களாகக் கருதப்படும் ராசஸ்தான், தில்லியில் கூட, மோடியின் தேர்தல் பிரச்சாரம், அக்கட்சிக்கு சட்டசபைத் தேர்தல்களில் வெற்றியைத் தேடித் தரவில்லை. மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை, பா.ஜ.க.வில் இருக்கும் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் போன்ற குட்டித் தலைவர்கள் கூட ஏற்றுக் கொள்வார்களா என்பதும் சந்தேகத்திற்குரியது. இவை அனைத்துக்கும் மேலாக 2002இல் குஜராத்தில் நடந்த இந்துமதவெறிக் கலவரங்கள் காரணமாக, "இட்லருக்கு இணையான கொலைகாரன்'' என்ற அவப்பெயரும் மோடிக்கு இருந்து வருகிறது. இந்த ""நெருடல்களை'' எல்லாம் தாண்டி, தரகு முதலாளிகளின் தளபதிகள் ஒரே குரலில் மோடியை ஆதரிப்பதற்கான காரணம் எதுவாக இருக்க முடியும்?

தரகு முதலாளிகள் மோடிக்கு அளித்துள்ள இந்த ஆதரவைக் காரியவாதத் தொண்டன் தனது தலைவனைக் காக்கா பிடிப்பதைப் போன்ற ஒன்றாகச் சுருக்கி விட முடியாது. ""இவர் பிரதமரானால் நன்றாக இருக்கும்; இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும்'' எனச் சாதாரண வாக்காளர் விரும்புவதைப் போலவும் தரகு முதலாளிகளின் விருப்பத்தை எளிதாக எடுத்துக் கொண்டுவிட முடியாது. மேலும், தரகு முதலாளிகளின் தளபதிகள் சமீப காலத்தில் வேறெந்த அரசியல்வாதியையும் இப்படி வெளிப்படையாக ஆதரித்ததில்லை என்பதால், இப்பிரச்சினையைப் பற்றி பரிசீலிக்க வேண்டியது அவசியமாகி விடுகிறது.

ரத்தன் டாடா மோடியை ஆதரிப்பதற்குப் பின்வரும் காரணத்தைக் கூறுகிறார்: "குஜராத்தில் நானோ கார் ஆலையை அமைப்பதற்கான ஒப்புதல் இரண்டுமூன்று நாட்களில் கிடைத்து விட்டதாகவும்; பிற மாநிலங்களுக்குப் போயிருந்தால் இதற்கு 90 முதல் 180 நாட்கள் வரைக் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும்'' என்கிறார், அவர். டாடா மட்டுமல்ல, மோடியை ஆதரிக்கும் அனைவருமே குஜராத்தில தொழில் வளர்ச்சியில் அவர் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருவதாகவும், பிற மாநில முதல்வர்கள் அவரை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் அடித்துக் கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்த குஜராத் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 12 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டை குஜராத் பெறும் அளவிற்கு தொழில் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் ஆச்சரியத்தோடு குறிப்பிட்டுள்ளன. இதற்கு முன் 2003, 2005, 2007ஆம் ஆண்டுகளில் நடந்த முதலீட்டாளர் மாநாடுகளின் மூலம் 6.34 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான ஒப்பந்தங்களைப் பெற்று சாதனை படைத்த மோடி, 2009 மாநாட்டில் தனது முந்தைய சாதனையை தானே உடைத்துவிட்டதாகப் புகழப்படுகிறார்.

எனினும், மோடியின் இந்தச் சாதனை "ஓவர் பில்ட்அப்'' என ஆர்.எஸ்.எஸ்.இன் கொ..செ. போலச் செயல்படும் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்'' நாளிதழே அம்பலப்படுத்தியிருக்கிறது. "2003, 2005, 2007இல் நடந்த குஜராத் சர்வதேச முதலீட்டாளர் மாநாடுகளின் மூலம் 6.34 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான முதலீட்டை மோடி கவர்ந்து விட்டதாகக் கூறப்பட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.30 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான முதலீடுகள்தான் குஜராத்திற்கு வந்திருப்பதாகவும்; 13,23,452 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறப்பட்டதற்கு மாறாக, 1,62,784 வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியிருப்பதாகவும்'' அந்நாளேடு மோடியின் சாதனைகளைக் கூறு போட்டுக் கிழித்து விட்டது.

மோடியைப் போல, ஒவ்வொரு மாநில முதல்வருமே தனது மாநிலத்தில் நுழையும் முதலீடுகள் பற்றியும்; அம்முதலீடுகள் உருவாக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் பொய்களையே புள்ளி விவரங்களாக வெளியிட்டு வருவதால், நாம் மோடியை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டியதில்லை. ""தொழில் முன்னேற்றத்தில் மோடி காட்டும் அக்கறைக்காகத்தான் அவரை ஆதரிப்பதாக இந்திய முதலாளிகள் கூறினால், அவர்கள் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரைத்தான் பாராட்ட வேண்டும். ஏனென்றால், குஜராத்தில் தொழில் முன்னேற்றத்திற்கான அடித்தளம் காங்கிரசு ஆட்சியின் பொழுதே உருவாக்கப்பட்டு விட்டது . ஆனால், நிதிஷ்குமாரோ "பின்தங்கி தேங்கிப் போன பீகாரில் சாதனைகளைப் படைத்து வருவதாக'' முதலாளித்துவப் பத்திரிகையொன்று குறிப்பிடுகிறது. இந்த அளவுகோலின்படி பார்த்தால், ரத்தன் டாடா போன்றோர் தொழில் முனைவுக்காக மோடியை ஆதரிப்பதாகக் கூறுவது ஊரை ஏய்க்கும் வாதம்தான்.

நானோ கார் ஆலையை குஜராத்தில் அமைப்பதற்காக நரேந்திர மோடி ரத்தன் டாடாவிற்கு 30,000 கோடி ரூபாய்க்கு மேலான சலுகைகளை வாரி வழங்கினார். அடானி குழுமத்தை நடத்தி வரும் கௌதம் அடானிக்கு ஒரு சதுர அடி ஐந்து பைசா என்ற விலையில் 33,000 ஏக்கர் நிலத்தை விற்றார், மோடி. அந்த நிலத்தை சதுர அடி 120 ரூபாய் என்ற விலையில் விற்று, 20,000 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியது, அடானி குழுமம்.

மோடி, இவை போன்ற சலுகைகளை வாரி வழங்குவதால்தான், அவரைத் தரகு முதலாளிகள் ஆதரிக்கிறார்கள் எனக் கூறினால், மோடியைப் போலவே அனைத்து ஓட்டுக் கட்சிகளையுமே தரகு முதலாளிகள் புகழ்ந்து தள்ளியிருக்க வேண்டும். நானோ கார் ஆலையைத் தங்கள் மாநிலத்தில் அமைக்க வேண்டி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில முதல்வர்கள் டாடாவுக்குக் காவடி தூக்கிய வெட்கக் கேட்டை நாம் மறக்க முடியதே!

அனைத்து மாநில முதல்வர்களும், அனைத்து ஓட்டுக் கட்சித் தலைவர்களும் தரகு முதலாளிகளுக்குச் சேவை செய்ய போட்டா போட்டி நடத்தும் பொழுது, ரத்தன் டாடா, அம்பானி போன்றோர் மோடியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்கு வேறென்ன சிறப்பான காரணம் இருந்து விட முடியும்? மற்ற மாநில முதல்வர்களையும் மோடியையும் பிரித்துக் காட்டும் காரணி எது? என்ற கேள்விக்கான பதில்தான், தரகு முதலாளிகளுக்கும் மோடிக்கும் இடையே மலர்ந்துள்ள நெருக்கத்தைப் புரிய வைக்கும்.

•••

இந்து மதவெறி பாசிசம் என்ற அரசியல் காரணிதான் மோடியையும், தரகுமுதலாளிகளின் தளபதிகளையும் நெருக்கமாகப் பிணைத்திருக்கிறது. ரத்தன் டாடா, அம்பானி போன்றோர் மோடியைப் போலப் பச்சையாக முசுலீம்களுக்கு எதிரான வெறுப்பைக் கக்குவதில்லை என்பது உண்மைதான் . அதேசமயம் அவர்கள் "பயங்கரவாதமும், தீவிரவாதமும்தான் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாக'' நாகரீகமான முறையில் இந்துத்துவா அரசியலைப் பேசுகிறார்கள்.

குஜராத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்பொழுது, "பாதுகாப்பில்லாமல் வளர்ச்சியில்லை'' என்றுதான் மோடி பிரச்சாரம் செய்தார்.

தற்பொழுது மோடித்துவம் எனக் கூறப்படும் இந்த இந்துமதவெறி அரசியல், முசுலீம்களுக்கு எதிரானது என்பது ஊரறிந்த உண்மை. அதேசமயம், அது அடித்தட்டு "இந்துக்களையும்'' பாதுகாக்கவில்லை என்பதை குஜராத்தில் நடந்து வரும் விவசாயிகளின் தற்கொலைகளும்; செயற்கை வைரத்தைப் பட்டை தீட்டும் தொழிலாளர்களின் தற்கொலைகளும் நிரூபித்து வருகின்றன. குஜராத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 47 சதவீதம் பேர் போதிய உணவு கிடைக்காமல், நோஞ்சானாகச் சூம்பிப் போய்க் கிடக்கின்றனர். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் போராட வேண்டிய பெரும்பான்மை "இந்து'' சமூகமோ, மோடிக்குப் பின்னால் நின்று கொண்டு, முசுலீம்களுக்கு எதிராகத் திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு திரிகிறது. இந்தப் பிளவு, குஜராத்தில் "தொழில் அமைதி''யைப் பாதுகாப்பதால், தரகு முதலாளிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்!

மற்ற மாநில முதல்வர்களும்கூட, "தொழில் அமைதி''க்காக உழைக்கும் மக்களை ஒடுக்குவதில் சளைத்தவர்கள் இல்லையென்றாலும், மோடி உள்ளிட்ட இந்துமதவெறி பாசிஸ்டுகளோ மூலதனத்தின் நலனைப் பாதுகாப்பதைப் புனிதமான மதக் கடமையைப் போன்று கருதுகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகள் பெயருக்காகவேனும் "சோசலிசம்'' என வாய்ச் சவடால் அடித்து வந்த நாட்களில் கூட, பா.ஜ.க.வும், அதன் தாய் அமைப்பான ஜனசங்கமும் தனியார் முதலாளித்துவத்திற்குத்தான் ""ஜெ'' போட்டு வந்தனர் என்ற உண்மை, மோடிக்கும் மற்ற அரசியல்வாதிகளுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள உதவும்.

மைய அரசு சிறப்புப் பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே, குஜராத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றுவதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார், @மாடி. உலக வங்கியின் கட்டளைக்கு இணங்க, விவசாயத்திற்கான மின் கட்டணத்தை மோடி உயர்த்திய பெழுது, அதனை ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த விவசாய சங்கமே எதிர்த்தது. எனினும், மோடி "இந்து'' சகோதரர்கள் என்று கூட பாராமல், விசவாயிகளின் எதிர்ப்பை ஒடுக்கினார். மறுகாலனியாதிக்கம் எதை விரும்புகிறதோ, அதை ஈவு இரக்கமின்றி செயல்படுத்தும் அடியாளாகச் செயல்படுவதில் மோடி முன்னோடியாக இருந்து வருகிறார். இந்த மறுகாலனியாதிக்க அடிமைத்தனத்தை அடியாள்தனத்தை "குஜராத் இனப் பெருமை'' என்ற முகமூடிக்குள் போட்டு மறைப்பதிலும் அவர் வெற்றி பெற்றுவிட்டார்.

இவைதான் அம்பானி, டாடா, சுனில் மித்தல் ஆகிய தரகு முதலாளிகளை மோடிக்கு முடி‹ட்டிவிடத் தூண்டுகிறது. இதன் பொருள், மற்றொரு ஆளும் வர்க்க பாசிசக் கட்சியான காங்கிரசைக் கைகழுவி விட்டார்கள் என்பதாகாது. மூலதனத்தின் நலனுக்காக, நாட்டை மீண்டும் காலனியாக்குவதற்காக, தரகு முதலாளிகள் ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகிய முகமூடிகளையெல்லாம் கழற்றிப் போட்டுவிட்டு இந்து மதவெறி பாசிசத்தோடும் வெளிப்படையாகக் கைகோர்த்துக் கொள்ளத் தயங்கமாட்டார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

ரத்தன் டாடா, அனில் அம்பானி, சுனில் மித்தல் ஆகியோர் இந்து மதவெறி பாசிசத்தின் புரவலர்களாக மாறியிருக்கும் விசயம் விவாதத்திற்கு வந்தபொழுது, முதலாளித்துவப் பத்திரிகைகளோ, பிரச்சினையை மடை மாற்றிவிடத் தீவிரமாக முயன்றன. மறுகாலனியாதிக்கச் ‹ழலில், தரகு முதலாளிகளுக்கும் இந்துமதவெறி பாசிசத்திற்கும் இடையேயான சித்தாந்தபூர்வமான நெருக்கத்தை அம்பலப்படுத்தாத இப்பத்திரிகைகள், "மோடிக்குச் சகிப்புத்தன்மை கிடையாது; மோடி, 2002 கலவரத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற வாதங்களை எடுத்துப் போட்டு, தரகு முதலாளிகளின் யோக்கியதையைக் காப்பாற்ற முயன்றன. மோடியோ, அம்முதலாளித்துவ அறிவுஜீவிகளின் "அறியாமையை' எண்ணிப் புன்னகைத்துக் கொண்டிருக்குகிறார்!

• செல்வம்

வியாழன், 19 மார்ச், 2009

கோவிலில் வெடிகுண்டு குவியல் பதுக்கிய சங்பரிவார்!

அதிகாலை வேளை பீகார் மாநிலம் ஹத்ரிசராய் என்ற ஊரில் தேவி அஸ் தான் கோவிலில் பூஜைக்காக ஹிந்து மக்கள் கூடினார்கள். அமைதியாக வந்த மக்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. துப்பாக்கிகள், ஐந்து ரவுண்டுகள் சுடும் அளவுக்கு தோட்டாக் கள் இருந்தது, மற்றும் பயங்கர ஆயுதங்களைக் கண்டதும் கிராம மக்கள் அச்சத்தினால் அலறினார்கள்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆயுதங்களை கைப்பற்றினர்.

நாடெங்கும் கலவரங்களை நடத்தி மக்களை பிளவு படுத்தி வரும் சங்பரிவார் அமைப்பினர் மர்மமான முறையில் வெடி குண்டு புதையல்களை குவித்துவைத் திருந்தனர் என்பது நாடறிந்த விசயம்.

மாலேகானிலும், தென்காசியிலும், கேரளாவின் கண்ணூரிலும், ஆந்திராவிலும் வெடிகுண்டு குவியல் வைத்தவர்கள் எப்போது பிடிபடுவார்கள்?