புதன், 11 ஆகஸ்ட், 2010

ஆற்க்காட்டில் மீட்கப்பட்ட பள்ளியில் புனரமைப்பு பணிகள் துவங்கின

வேலூர் மாவட்டம் ஆற்காடு அண்ணாசிலை அருகில் பல ஆண்டுகளாக தொழுகை நடைபெறாத 300 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த பள்ளியை கடந்த 13.06.2010 அன்று தமுமுக மீட்டெடுத்தது. இதில் ம.ம.க பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது கலந்து கொண்டார். ஆனால் இந்த பள்ளிவாசல் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினார். பின் அந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளி மிகவும் பழதடைந்து சுற்றிலும் மரங்கள் வளர்ந்து மிகவும் பழதடைந்ததால் 08.08.2010 அன்று பள்ளியை புனரமைக்கும் பணிகள் துவங்கின. இதில் வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஏராளமான தமுமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை: