திருவனந்தபுரம்,ஆக8:நபி(ஸல்...) அவர்களை அவமதிக்கும் வகையில் மோசமான வார்த்தைகளை பிரயோகித்து கேள்வித்தாள் தயாரித்த கேரளமாநிலம் தொடுபுழா நியூமென் கல்லூரியின் பேராசிரியர் டி.ஜே.ஜோசப் கை வெட்டப்பட்ட சம்பவத்தில் பொய்க்கதைகளை புனைந்து கோலகலாமாக்கி வரும் சி.பி.எம்-ஆர்.எஸ்.எஸ். செய்தி ஊடக மையங்கள் கேரளாவில் நேற்று முன் தினம் இரவில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அபிலாஷ்(வயது 25) என்ற அப்பாவி இளைஞரின் கையை முழங்கைக்கு கீழே துண்டாக வெட்டி எறிந்த சம்பவத்தில் மெளனம் சாதிக்கின்றன.
கைவெட்டு சம்பவங்களில் கேரள உள்துறை அமைச்சகம் இரட்டை நீதியை நடைமுறைப்படுத்துவது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சாதாரண பிரச்சனைகளையும் தீவிரவாதமாக சித்தரித்து பொய்க்கதைகளை பரப்பிவரும் ஊடகங்கள் ஹோட்டல் உரிமையாளரான இளைஞரின் கையை கொடூரமாக வெட்டியெறிந்த சம்பவத்தில் கண்ணை மூடிக்கொண்டுள்ளன.
நேற்று இரவு எட்டு பேரைக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதக் கும்பல் ஆற்றமுழா என்ற பகுதியைச் சார்ந்த அபிலாஷின் கையை மூட்டுக்கு கீழே வெட்டித் துண்டாக்கியது.
அபிலாஷின் உறவினரான ஒரு இளம்பெண்ணிடம் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சார்ந்த மனோஜ் பாலியல் ரீதியாக தவறாக நடந்து அவமானப்படுத்தியுள்ளான். இதனைக் குறித்து அபிலாஷ் கேட்கச் சென்றதற்கு கிடைத்த பரிசுதான் கைவெட்டு.
இத்தாக்குதலில் அபிலாஷின் தாயார் உட்பட நான்குபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஜோசப்பின் கை வெட்டு சம்பவத்தில் பிரபல ஊடகங்கள் தீவிரவாத முத்திரையைக் குத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற சமூக நல இயக்கத்தை முன்னிறுத்தி முஸ்லிம் சமுதாயத்தை குற்றவாளியாக சித்தரித்தனர். இதன்பெயரில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களைக் கைதுச் செய்ததுடன், அவர்களின் வீடுகளில் ரெய்டு என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து பயங்கரவாத சூழலை உருவாக்கினர்.
மேலும் மாநில முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தி பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டனர்.
ஆனால் ஜோசப்பின் கைவெட்டு வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் பங்குக் குறித்து தெளிவான ஆதாரம் இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை. ஆனால் நேற்று முன் தினம் அபிலாஷ் என்பவரின் கைவெட்டிய சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு தெளிவான பிறகும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எட்டுபேர்க் கொண்ட கும்பல் இத்தாக்குதலை நடத்தியது என்பதை தாக்குதலுக்குள்ளானவர்கள் கூறியபிறகும் இரண்டு பைக்குகளையும், இரண்டு நபர்களையும் கைதுச்செய்து சாதாரண வழக்காக மாற்ற முயற்சி நடந்துவருகிறது.
ஜோசப்பின் கைவெட்டப்பட்ட சம்பவத்தை ‘தாலிபான் மாடல்’ தாக்குதல் என பிரச்சாரம் செய்து வகுப்புவெறியைத் தூண்டிவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஆர்.எஸ்.எஸ்ஸும் இத்தாக்குதலை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது எனக்கூறி தப்பிக்க முயல்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக