
முன்னாள் முதல்வரும் அஇஅதிமுக பொதுச் செயலாளருமாக ஜெயலலிதா அவர்களை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களை சந்திக்க வருமாறு அஇஅதிமுகவின் தலைமை நிலையம் சார்பில் முன்னாள் அமைச்சர் கே. செங்கோட்டையன் தமுமுகவின் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 30 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அஇஅதிமுகவின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது.
இன்று ஆகஸ்ட் 5 அன்று மாலை 3 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வரின் இல்லத்தில் எதிர்கட்சி தலைவருமான அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவை மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் தமுமுக பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர்.

முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளரை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள்க சந்தித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக