செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஹிந்து தீவிரவாதத்தை காவித் தீவிரவாதம் என அழைக்க காங்கிரஸ் விரும்பம்!

புதுடெல்லி,ஆக9:ஹிந்துத்துவ தீவிரவாதம் என்ற வார்த்தைப் பதத்தை பயன்படுத்துவதற்கு ஆர்எஸ்எஸ் மட்டும் கவலைப்படவில்லை காங்கிரஸும் ஹிந்துத்துவ தீவிரவாதம் என்பதை அடிக்கடி தொலைகாட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் பயன்படுத்துவதை கண்டு பெரிதும் கவலையடைந்துள்ளது.

அரசியல் விவாதங்களில் ஹிந்துத்துவ தீவிரவாதத்தை காவி பயங்கரவாதம் அல்லது சங்பரிவார் பயங்கரவாதம் என பயன்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.

"ஹிந்து என்பது பெரிய வகையை குறிக்கும். ஆனால் எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் இல்லை. இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் ஹிந்து மதத்தில் தீவிரமாக உள்ள காவிக் கும்பல் அல்லது சங்பரிவார அமைப்புகளால் விரிவாக்கப்படுத்தப்பட்டு நடத்தப்படுகின்றன." என ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.

மேலும் "இது இஸ்லாமிய தீவிரவாதம் எனக் கூறுவது போல் உள்ளது. இது ஒரு மதத்தின் மீது இகழ்ச்சியை உண்டு பண்ணுவது போல் உள்ளது. எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல" என்றும் அவர் கூறினார்.

ஹிந்துத்துவ தீவிரவாதம் என்று பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால் இது பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என அச்சப்படுகிறது காங்கிரஸ்.

தேர்தல் காலங்களில் இது பிஜேபி மற்றும் அதன் பலதரப்பட்ட காவிக் கும்பல் மூலம் மக்களுக்கு தவறாக புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமைந்து விடும்.

நாட்டை பிளவுபடுத்தக் கூடிய இது போன்ற வார்த்தைகளை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும் என அந்தத் தலைவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் கருத்துகளையுடைய எம்ஜி என்ற பாபுராவ் வைத்யா சில தினங்களுக்கு முன்பு 'ஹிந்துவ தீவிரவாதம்' என்று பயன்படுத்துவது இந்நாட்டில் உள்ள முஸ்லிம்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கும் இந்துமக்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது என்று ஆவேசப்பட்டார்.

ஹிந்துத்துவ தீவிரவாதம் என்ற பதம் செய்தித்தொடர்பு துறைகளில் ஒரு இடத்தை பதிவு செய்துவிட்டது. யார் இந்தப் பெயரைக் கண்டுபிடித்தது எனத்தெரியவில்லை என்றும் இதை காங்கிரஸ் செயளாலர் திக்விஜய் சிங் தான் கொண்டு வந்தார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் மற்றவர்களும் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: