பாட்னா,ஆக29:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை தடைச் செய்யவேண்டுமென லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவருடையை கோரிக்கையை ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆதரித்துள்ளார்.
இதுக்குறித்து பஸ்வான் கூறியுள்ளதாவது:"காவிபயங்கரவாதத்தைக் குறித்து உள்துறை அமைச்சகத்தின் வசமிருக்கும் ஆதாரங்களை வெளியிடவேண்டும். இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மிக விரைவில் பிரதமர் கட்டளைப் பிறப்பிக்க வேண்டும்.
தேசத்தில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களான சந்தீப் தாங்கே, ராமி ஜீ ஆகியோரை கைதுச் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
2007 மே 18 ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு அஜ்மீர் ஷெரீஃப் தர்கா குண்டுவெடிப்பு, 2008 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தானேயில் சினிமா தியேட்டர் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்டவைகளில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால் காவிபயங்கரவாதத்தைக் குறித்த ப.சிதம்பரத்தின் நிலைப்பாடு சரியாகும்." இவ்வாறு பஸ்வான் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக