பாட்னா,ஆக29:ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை தடைச் செய்யவேண்டுமென லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவருடையை கோரிக்கையை ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆதரித்துள்ளார்.
இதுக்குறித்து பஸ்வான் கூறியுள்ளதாவது:"காவிபயங்கரவாதத்தைக் குறித்து உள்துறை அமைச்சகத்தின் வசமிருக்கும் ஆதாரங்களை வெளியிடவேண்டும். இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மிக விரைவில் பிரதமர் கட்டளைப் பிறப்பிக்க வேண்டும்.
தேசத்தில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களான சந்தீப் தாங்கே, ராமி ஜீ ஆகியோரை கைதுச் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
2007 மே 18 ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் செயல்பட்டுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு அஜ்மீர் ஷெரீஃப் தர்கா குண்டுவெடிப்பு, 2008 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தானேயில் சினிமா தியேட்டர் குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்டவைகளில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பங்கேற்றுள்ளனர். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால் காவிபயங்கரவாதத்தைக் குறித்த ப.சிதம்பரத்தின் நிலைப்பாடு சரியாகும்." இவ்வாறு பஸ்வான் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
ஹிந்துத்துவா தீவிரவாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிந்துத்துவா தீவிரவாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
சனி, 7 ஆகஸ்ட், 2010
ராமர் கோயில் விவகாரத்தை அரசியலாக்கியதால் பாஜக வலுவிழந்துவிட்டது: அசோக் சிங்கால்

இதுகுறித்து போபாலில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் கூறியதாவது:
"அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வரவுள்ளது.நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் குழப்பத்தையே விளைவிக்கும்.சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது அதிருப்தியளிக்கிறது.
உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்படலாம். நீதிமன்றத்தால் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. இந்த பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி நாடாளுமன்றத்தில் சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதுதான்.
ராமர் கோயில் பிரச்னையை பாஜக, அரசியலாக்கியதால் அந்தக் கட்சி வலுவிழந்துவிட்டது. இந்த விவகாரத்தால் கட்சி மட்டுமல்லாமல் ராமர் கோயில் பிரச்னையும் வலுவிழந்துவிட்டது. இதனால் மக்களும் பாஜகவின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்கத் தொடங்கியுள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கையில் ஹிந்துக்கள் ஈடுபடுவதாக நாட்டில் குற்றம் சாட்டப்படுகிறது. இது சரியல்ல. பயங்கரவாதிகளுக்கு மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறது" என்றார் அவர்.
செவ்வாய், 15 ஜூன், 2010
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு - ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பற்றி தொடர்ந்து மர்மம்
ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் பிரதான தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகிய குற்றவாளிகளை சி.பி.ஐ மேலும் விசாரணைக்காக ஹைதரபாத் கொண்டுவரும் நிலையில், மற்ற தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி கல்சங்காராவைப் பற்றி தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. இவர்கள் இருவர் தான் குண்டுகளை தயார் செய்ததுள்ளதாக சி.பி.ஐ. நம்புகிறது.
சந்தீப்பை சி.பி.ஐ. எளிதில் கைது செய்யும் வாய்ப்புகள் இருந்தாலும், சுனில் ஜோஷி என்ற மற்றொரு தீவிரவாதியை சி.பி.ஐ கைது செய்வதிலிருந்து சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த 2007ல் ஜும்ஆ தொழுகையின்போது ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் மார்பில் இருக்கையில் ஒழித்து வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் சுமார் 9 பேர் பலியாகினர், பலர் படுகாயம் அடைந்தனர். இக்குண்டுவெடிப்பிற்கு பிறகு சில வெடிக்காத குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இக்குண்டுவெடிப்பை கண்டித்து போராட்டம் நடத்திய அப்பாவி முஸ்லீம்களை காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 5 பேரை கொன்றனர்.
மாநில காவல்துறையோ இக்குண்டுவெடிபிற்கு பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தான் காரணம் என்று கூறி சுமார் 100க்கும் மேற்பட்ட ஆந்திரா முஸ்லீம் இளைஞர்களை கைது செய்து சித்தரவதைக்குள்ளாக்கியது.
இதில் 26 இளைஞர்கள் இக்குண்டுவெடிப்பு அல்லாது பிற வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். சரியான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் பின்னர் இவர்களை விடுவித்தது.
இவ்வழக்கு பின்னர் சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் பின்னணியில் குப்தா, ஷர்மா, டாங்கே மற்றும் கல்சங்கரா ஆகிய தீவிரவாதிகள் இக்குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இத்தீவிரவாதிகள் தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்றும் நிரூபிக்கப்பட்டது.
வெளி வட்டாரங்களின் தகவல்களின் படி,குப்தா மற்றும் ஷர்மா இக்குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு முன்,ஹைதராபாத்திற்கு வாரம் இருமுறை வந்து சென்றுள்ளதாக தெரிகிறது.இவர்களுக்கு ஆந்திரா விஞ்ஞானி ஒருவர் பக்கபலமாக இருந்துள்ளார். ஆனால் ஆந்திராவிலிருந்து யாரும் இவர்களுக்கு உதவவில்லை என்று சி.பி.ஐ நம்புகிறது.
ஆனால் உள்ளூர் நபர்களின் உதவியின்றி இந்த குண்டுவெடிப்பை எப்படி நடத்தியிருக்க இயலும்? என்று ஹைதராபாத் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். Siasat
வியாழன், 10 ஜூன், 2010
மார்கோவா குண்டுவெடிப்பு:ஹிந்துத்துவா தீவிரவாதி சரண்
பானாஜி:மார்கோவா குண்டுவெடிப்பு வழக்கில்,தலைமறைவகியுள்ள 5 ஹிந்துத்தவ தீவிரவாதிகளில்,ஒரு தீவிரவாதி இன்று நீதிமன்றத்தில் சரண்னடைந்தான்.
இதுக்குறித்து,அரசு தரப்பு வக்கீல் எஸ்.பி.பாரியா கூறுகையில், பிரஷாந்த் அஷ்டேகர் என்ற அந்த தீவிரவாதி மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்தவனென்றும், கடந்த வருடம் தீபாவளி தினத்தன்று கோவாவில் தொடர்குண்டு வெடிப்பு நடத்த திட்டம் தீட்டியவர்களில் இவனும் ஒருவன் என்றும் அவர் தெரிவித்தார்.
மார்கோவா குண்டுவெடிப்பபை தேசிய புலனாய்வு ஆணையமான (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. பிரஷாந்த்தின் சகோதரன் தனன் ஜெயத்தையும் முன்பு என்.ஐ.ஏ கைது செய்தது.
கடந்த அக்டோபர் 16,2009ல் மால்டோண்டா படில் மற்றும் யோகேஷ் நாயிக் ஆகியோர் குண்டு வைக்கும் முன்னர் வெடித்து பலியாகினர்.
இதுக்குறித்து,அரசு தரப்பு வக்கீல் எஸ்.பி.பாரியா கூறுகையில், பிரஷாந்த் அஷ்டேகர் என்ற அந்த தீவிரவாதி மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்தவனென்றும், கடந்த வருடம் தீபாவளி தினத்தன்று கோவாவில் தொடர்குண்டு வெடிப்பு நடத்த திட்டம் தீட்டியவர்களில் இவனும் ஒருவன் என்றும் அவர் தெரிவித்தார்.
மார்கோவா குண்டுவெடிப்பபை தேசிய புலனாய்வு ஆணையமான (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. பிரஷாந்த்தின் சகோதரன் தனன் ஜெயத்தையும் முன்பு என்.ஐ.ஏ கைது செய்தது.
கடந்த அக்டோபர் 16,2009ல் மால்டோண்டா படில் மற்றும் யோகேஷ் நாயிக் ஆகியோர் குண்டு வைக்கும் முன்னர் வெடித்து பலியாகினர்.
விநாயக் படில்,வினை தலேகர்,தனஞ்சய் அஷ்டேகர் மற்றும் திலிப் மங்கோங்கர் ஆகியோரை இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கோவா போலீஸ் ஏற்கனேவே கைது செய்ததிருந்தது.
பிரஷாந்த் அஷ்டேகர் என்.ஐ.ஏவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாவான். இவன் தான் குண்டுகளை தயாரிக்க சர்க்கியுட் வரைபடங்களை தயார் செய்துள்ளான். பின்னர் சதிகளை மறைக்க கணினியின் ஹார்ட் டிஸ்கையும் மாற்றியவனாவான்.
source:Times Of India
பிரஷாந்த் அஷ்டேகர் என்.ஐ.ஏவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியாவான். இவன் தான் குண்டுகளை தயாரிக்க சர்க்கியுட் வரைபடங்களை தயார் செய்துள்ளான். பின்னர் சதிகளை மறைக்க கணினியின் ஹார்ட் டிஸ்கையும் மாற்றியவனாவான்.
source:Times Of India
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)