ஹைதராபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹைதராபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜனவரி, 2013

காந்தியைக் கொன்றவர்கள் எங்களுக்கு நாட்டை நேசிக்கக் கற்றுத்தர தேவையில்லை: எம்.பி. ஒவைசி


ஹைதராபாத்: மதக் கலவரத்துக்கு இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மல் நகரில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் எம்.எல்.ஏ. அக்பருத்தீன் ஒவைசி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது சகோதரர் ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் இ இத்திஹத்துல் முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுத்தீன் ஒவைசி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள டண்டூரில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் எதிரிகள் காங்கிரஸும், பாஜகவும் தான். இது என் நாட்டு. என் நாட்டை நான் நேசிக்கிறேன். எனது தாய்நாட்டை நேசிப்பது எப்படி என்று காந்தியைக் கொன்றவர்கள், பாபர் மசூதியை இடித்தவர்கள், குஜராத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றவர்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸுக்கு நாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால் ஆந்திர அரசு வேண்டும் என்றே எனது சகோதரர் மீது வழக்குகள் போடுகிறது. ஆனால் இந்திய சட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அக்பருத்தீன் சட்டத்தில் இருந்து ஓடிவிட மாட்டார். இந்து சமுதாயத்தை தூண்டிவிடும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

source : http://tamil.oneindia.in/news/2013/01/07/india-ban-rss-vhp-asaduddin-owaisi-167506.html

புதன், 7 ஜூலை, 2010

ஏ.டி.எஸ். முந்திக் கொண்டதால் சி.பி.ஐ. க்கு பின்னடைவு!

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பின் முக்கிய ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோரை அவசரப்பட்டு கைது செய்யாமல் அவர்களின் அசைவுகளை வைத்து மற்ற பிரதான தீவிரவாதிகளான ராமச்சந்திர கல்சங்கரா மன்றும் சந்தீப் டாங்கே ஆகியோரை உன்னிப்பாக சி.பி.ஐ., கவனித்து வந்த நிலையில், ராஜஸ்தான் ஏ.டி.எஸ். முந்திக்கொண்டு குப்தா மற்றும் சர்மாவை கைது செய்தது, சி.பி.ஐ. திட்டங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இதனால் தலைமறைவாக உள்ள மற்ற தீவிரவாதிகளை பிடிக்க முடியாமல் இன்று வரை சி.பி.ஐ மற்றும் ஏ.டி.எஸ். திணறி வருகிறது. இவர்கள் ஜூன் 2009 லிருந்தே சி.பி.ஐ. மற்றும் ஏ.டி.எஸ். கண்காணிப்பில் இருந்தவர்கள்.

இன்னும் சிறிது நேரம் பொறுத்திருந்தால் தீவிரவாதத் தாக்குதல் பின்னணிகள் உட்பட பல புதிர்கள் வெளிவந்திருக்கும்.

ராஜஸ்தானில் புதிதாக பதிவியேற்ற காங்கிரஸ் அரசின் நெருக்கடியில் இவர்கள் கைது செய்யப்பட்டார்களா? அல்லது ஏ.டி.எஸ். ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், வழக்கின் முன்னேற்றத்தை நிரூபிப்பதற்கு ஒரு ஆர்வக் கோளாறில் கைது செய்யப்பட்டார்களா? என்பது தெரியவில்லை.

இவர்களின் அவசரக் கைது அனைவரையும் இருட்டில் துலாவவிட்டுள்ளது. குறிப்பாக, ராம்ஜி கல்சங்கரா. இவன் ஆறுக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் தேடப்படுபவன். இவன் சிக்கினால், அனைத்து பின்னணிகளும் வெளிச்சத்திற்கு வரும்!
TOI

புதன், 23 ஜூன், 2010

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.10 லட்சம் சன்மானம்: சிபிஐ

ஹைதராபாத்:ஹைதராபாத்தில் உள்ள மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான சந்தீப் டாங்கே என்கிற பர்மானந்த் மற்றும் ராம்சந்தர கல்சங்க்ரா என்கிற ராம்ஜி. இருவரும் மத்திய பிரதேசம்- இந்தூர் வாசிகள். தலைமறைவாக இருக்கும் இவர்களை கைது செய்ய தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று மத்திய புலனாய்வுத்துறை சி.பி.ஐ அறிவித்திருக்கிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேவேந்தர் குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோரை ராஜஸ்தானிலிருந்து PT வாரண்டில் சிபிஐ அழைத்து வந்திருக்கிறது. ஆனால் மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் இரண்டு குற்றவாளிகளான சந்தீப் டாங்கே என்கிற பர்மானந்த் மற்றும் ராம்சந்தர கல்சங்க்ரா என்கிற ராம்ஜி ஆகியோரின் பெயர்கள் சிக்கியுள்ளன.

இவர்கள் தலைமறைவாக இருப்பதால், இவர்களை கைது செய்யும் பொருட்டு தகவல் தருவோருக்கு 10 லட்சம் சன்மானத்தை சிபிஐ அறிவித்திருக்கிறது.
Siasat News

திங்கள், 21 ஜூன், 2010

ஆந்திர தொழில்நுட்ப பொது நுழைவுத் தேர்வில் ஆட்டோ ஓட்டுநர் மகன் முகம்மது கவுஸ் முதலிடம்

ஹைதராபாத்:பொறியியல், மருத்துவம், விவசாயம் ஆகிய பிரிவுகளின் 2010 ஆம் ஆண்டுக்கான(EAMCET) பொறியியல் பிரிவில் ஆட்டோ ஓட்டுநர் மகன் முகம்மது கவுஸ் ஜனி முதலிடம் பிடித்துள்ளார்.

பொது நுழைவுத் தேர்வு ஆந்திர அரசின் உயர் கல்வி துறை (APSCHE) சார்பாக ஹைதராபாத் ஜே.ஏன்.தி. பல்கலைகழகத்தால் நடத்தப்பட்டது. முதலிடத்தை பிடித்த முகம்மது கவுஸ் 160 க்கு 159 மதிப்பெண் பெற்றார்.
முதலிடத்தை கவுஸ் ஜனியுடன் பாபத்தி பல்லவியும், ஜே.ஜனார்த ரெட்டியும் பகிர்ந்து கொண்டனர்.

சத்யவலு சாய் சுரேஷ் தித்தேஷ்(158) கொன்னேறு கிரண் பாபு யங்கலா லஷ்மிபதி(157), புத்தி ராம் சரண்(156), ஸ்ரீதர் கந்திமல்லா, எம்.வி.எஸ். சாய் ராகவேந்திரா, ஒய். அக்சாய் (155) ஆகியோர் அடுத்த 10௦ இடங்களை பெற்றனர்.
ஜனியின் தகப்பனார் முகம்மது அமீர் ஆட்டோ ஒட்டி ரூ 200 ஐ வருமானமாக ஈட்டி ஒட்டுமொத்த குடும்பத்தையும் நடத்தி வருகின்றார். மேலும் ஜனியின் தாயார் அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலையில் ஈடுபட்டு வருகின்றார். இவர்களது குடும்பம் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகின்றது.

ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஜனி "எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் தான் வெற்றி பெற்றதாகவும், தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்து முடிக்க இலவசமாக பள்ளியில் இடம் தந்த நாராயணா சார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்" என்றார்.

"பணம் எனது படிப்புக்கு தடையாக இருந்தது; இன்று எனக்கு பொருளாதார ரீதியில் உதவ முன்வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்" எனவும், தான் தினமும் 10 மணி நேரம் படித்ததாகவும் கூறியுள்ளார்.

இதனைப் போன்று மருத்துவ தேர்வில் சையது முஸ்தபா காசிமி 160 க்கு 153 மதிப்பெண்கள் பெற்று முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளார்.

EAMCET என்ற இந்த பொது நுழைவுத் தேர்வு என்பது ஆந்திரா மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தொழில் நுட்பம் படிப்பதற்கான அடிப்படை நுழைவுத் தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
source:twocircles.net

செவ்வாய், 15 ஜூன், 2010

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு - ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பற்றி தொடர்ந்து மர்மம்

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் பிரதான தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகிய குற்றவாளிகளை சி.பி.ஐ மேலும் விசாரணைக்காக ஹைதரபாத் கொண்டுவரும் நிலையில், மற்ற தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி கல்சங்காராவைப் பற்றி தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. இவர்கள் இருவர் தான் குண்டுகளை தயார் செய்ததுள்ளதாக சி.பி.ஐ. நம்புகிறது.

சந்தீப்பை சி.பி.ஐ. எளிதில் கைது செய்யும் வாய்ப்புகள் இருந்தாலும், சுனில் ஜோஷி என்ற மற்றொரு தீவிரவாதியை சி.பி.ஐ கைது செய்வதிலிருந்து சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த 2007ல் ஜும்ஆ தொழுகையின்போது ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் மார்பில் இருக்கையில் ஒழித்து வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் சுமார் 9 பேர் பலியாகினர், பலர் படுகாயம் அடைந்தனர். இக்குண்டுவெடிப்பிற்கு பிறகு சில வெடிக்காத குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இக்குண்டுவெடிப்பை கண்டித்து போராட்டம் நடத்திய அப்பாவி முஸ்லீம்களை காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 5 பேரை கொன்றனர்.

மாநில காவல்துறையோ இக்குண்டுவெடிபிற்கு பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தான் காரணம் என்று கூறி சுமார் 100க்கும் மேற்பட்ட ஆந்திரா முஸ்லீம் இளைஞர்களை கைது செய்து சித்தரவதைக்குள்ளாக்கியது.

இதில் 26 இளைஞர்கள் இக்குண்டுவெடிப்பு அல்லாது பிற வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். சரியான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் பின்னர் இவர்களை விடுவித்தது.

இவ்வழக்கு பின்னர் சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் பின்னணியில் குப்தா, ஷர்மா, டாங்கே மற்றும் கல்சங்கரா ஆகிய தீவிரவாதிகள் இக்குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இத்தீவிரவாதிகள் தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்றும் நிரூபிக்கப்பட்டது.

வெளி வட்டாரங்களின் தகவல்களின் படி,குப்தா மற்றும் ஷர்மா இக்குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு முன்,ஹைதராபாத்திற்கு வாரம் இருமுறை வந்து சென்றுள்ளதாக தெரிகிறது.இவர்களுக்கு ஆந்திரா விஞ்ஞானி ஒருவர் பக்கபலமாக இருந்துள்ளார். ஆனால் ஆந்திராவிலிருந்து யாரும் இவர்களுக்கு உதவவில்லை என்று சி.பி.ஐ நம்புகிறது.

ஆனால் உள்ளூர் நபர்களின் உதவியின்றி இந்த குண்டுவெடிப்பை எப்படி நடத்தியிருக்க இயலும்? என்று ஹைதராபாத் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். Siasat