சனி, 14 ஆகஸ்ட், 2010

ஆர்.எஸ்.எஸ் ன் உண்மை முகத்தை படம்பிடித்துக் காட்டுவது எப்படி சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும்?: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

ஆக,13:ஹிந்துத்துவாவின் பயங்கரவாதத்தை படம்பிடித்துக் காட்டினால் நாட்டின் சமுக நல்லினக்கம் பாதிக்கப்படுமா? என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச் செயலாளர் P.அப்துல் ஹமீத் வினவியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள், நமது நாட்டில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.ன் தொடர்பை வெளிப்படுத்தும் விதமாக, போஸ்டர்களை ஒட்டும்போது காவல்துறை கைது செய்ததையடுத்து இந்த வினா எழுப்பப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆகஸ்ட்'09 'SAVE INDIA DAY' பிரச்சாரம் நடந்தையொட்டி இப்போஸ்டர்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சாரத்தின் நோக்கம் ஹிந்துத்துவாதிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் தீவிரவாதம் மற்றும் உண்மை முகத்தை நாடு முழுவதும் படம் பிடித்துக் காட்டுவதே.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்களை கைது செய்ததற்கு அப்துல்ஹமீத் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்த கைது அநீதி மற்றும் பாரபட்ச போக்கை காட்டுகிறது என்றார்.

மேலும் அவர் குறிப்பிடும்போது "ஹிந்துத்துவ இயக்கங்களுக்கு, 4 வருடங்களில், 7 மாநிலத்தில் நடந்த 10 குண்டுவெடிப்புகளில் நேரடி தொடர்பிருப்பதை வெளிப்படுத்தியது நமது நாட்டின் புலனாய்வுத்துறை, இதைத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் போஸ்ட்ர்கள் தெரிவிக்கின்றது.

இந்த சமூகவிரோதிகள் முஸ்லிம் அதிகம் வசிக்கும் இடங்களான அஜ்மீர்,மெக்கா மஸ்ஜித்,மாலேகான் போன்ற இடங்களில் குண்டுகளை வெடிக்கச்செய்து நாட்டின் அமைதியை சீர்குலைத்தனர். மேலும் இதனால் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர், பல துன்பங்களுக்கு ஆளாயினர்.

இந்த குண்டுவெடிப்புகளை நடத்திய ஹிந்துத்துவ சக்திகளை படம் பிடித்துக் காட்டுவதற்காக நாடு முழுவதும் போஸ்டர் பிரச்சாரத்தை நடத்தியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

இந்த உண்மை பிரச்சாரத்தை நடத்துவதால் சமூக நல்லிணக்கம் எப்படி பாதிக்கப்படும் என்று காவல்துறையும் இந்த அரசாங்கமும் தெரிவிக்கவேண்டும்.

மற்றவர்கள் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று தெரிவிக்கும்போது நாங்கள் 'ஹிந்து தீவிரவாதம்' என்று தெரிவிப்பதில்லை ஏனென்றால் இந்த தீவிரவாதத்திற்கும் ஹிந்து மதத்துக்கும் எந்த தொடர்புமில்லை அதற்கு பதில் நாங்கள் பயன்படுத்துவது ஹிந்துத்துவ தீவிரவாதம் அது சங்கபரிவார்களை குறிப்பதாகும்" என்றார்.

கருத்துகள் இல்லை: