வியாழன், 12 ஆகஸ்ட், 2010

அதிரும் தி.மு.க-காங்கிரஸ் உறவு?

சமீபகாலமாக தி.மு.க&காங் கிரஸ் கட்சிகளுக்கிடை யேயான அரசியல் உறவு சுமூகமாக இல்லை. முந்தைய ஐந்தாண்டு கூட்டணி ஆட்சியில் இருந்தது போன்ற நெருக்கம் இந்த மத்திய ஆட்சியில் இல்லை என்பது எல்லோ ருக்கும் தெரிந்த விஷயம்.
முதல் நெருடல்:

தேர்தல் முடிந்து ஆட்சி அமைக் கும் நேரத்தில் அமைச்சரவை தேர்வு செய்யும் போது ‘வருமானம்’ மிகும் இலாகாக்கள் கிடைக்கவில்லை என்பதாலும், கிடைத்த இலாகாக் கனில் கட்டுப்பாடும், கண்கா ணிப்பும் இருக்கும் வகையில் காங்கிரசை சேர்ந்த துணை, இணை அமைச்சர்களை நியமித் ததாலும், அதிருப்தியான கலைஞர் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச் சியை புறக்கணித்து விட்டு கோபத்தோடு (?) சென்னை திரும்பினார்.

அது சோனியாவையும், ராகுலையும் சீண்டிவிட்ட நிகழ்வாகி விட்டது. கலைஞர் மகன் அழகிரி ரசாயனம் மற்றும் உரதுறை அமைச்சராக திறம்பட பணியாற்ற முடியாமல் திணறியது பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அதிருப்தியை தர, அது உறவை மேலும் சிக்க லாக்கி விட்டது.

மிரட்டும் ராகுல்:


காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி களுக்காக ராகுல் வெவ்வேறு நாட்களில் தமிழகம் வந்தார். ஆனால், கலைஞரை சந்திக்க வில்லை. சென்னையில் இருந்த போதும் ராகுல் காந்தி திட்டமிட்டே கலைஞர் சந்திப்பை தவிர்த்ததாகவும் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

துரோகம்: கோபம்

அந்த உற்சாகத்தில் இளங் கோவன் சரவெடிகளை தொ டர்ந்து தி.மு.க&வுக்கு எதிராக கொளுத்தி போட்டார். தமிழக அரசியல் சூடுபிடித்தது. அவரும் சரி, தங்கபாலுவும் சரி, தங்களை ஆட்சியில் பங்கு கேட்டதற்காக கூட்டணியில் வைத்தே தி.மு.க. வினர் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து விட்டதாக உள்ளூர குமுறுகிறார்கள். ப.சிதம்பரத்தை ‘காப்பாற்றியது போல்’ அல்லா மல் தங்கள் வெற்றியையே கெடுத் துவிட்ட கோபம் இன்னும் தீர வில்லை.

நெருங்கும் ஜெயலலிதா:

இப்படி மறைமுகப் பனிப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் சோனியாவுடன் நெருங்க ஜெயலலிதா எல்லா முயற்சிக ளையும் செய்துக் கொண்டிருக் கிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று.

தேர்தல் ஆணைய நிகழ்ச்சியில் பங்கேற்க அவசரம் அவசரமாக அவர் டெல்லி போனதும், மரியா தை நிமித்தமாக சோனியாவுடன் சந்திப்பு நடத்தியதும் அறிவால யத்தை ஆட்டம் காணச் செய்து விட்டது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக ரயில்வேபட்ஜெட்டை தி.மு.க வரவேற்பதைப் போல அ.தி.மு.க. வும் வரவேற்றது பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது. பொது பட்ஜெட்டை பற்றி எதிர்ப்பு தெரிவிக்காத அளவில் சங்கதிகள் உண்டு சாராம்சங்கள் இல்லை; என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.

இதுவெல்லாம் ஏதோ ஒரு அரசியல் மாற்றங்களுக்கான அறிகுறி என கூறப்பட்டது.

ஏப்ரல் 24 அன்று ஜெயலலி தாவின் பிறந்த நாளுக்கு ராகுல் காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக அ.தி.மு.க. வட்டாரம் அகமகிழ்ந்தது.

தொடரும் அதிருப்தி:


முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஊழல், நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்தில் ஊழல் என ராஜா மற்றும் பாலு மீது காங்கிரஸ் மேலிடம் வெறுப்பை உமிழ்ந்ததாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு வலுவாக உலவியது. இப்போதும் மத்திய அமைச்சர் ராஜா மீது காங்கிரஸின் அதிருப்தியும், கோபமும் கூடிக் கொண்டே போவதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. அவரது ஊழல் மன்மோகன் சிங்கின் “மிஸ்டர் கிளின்” இமேஜூக்கு பங்கம் விளைவிப்பதாக சோனியாவும், ராகுலும் கருதுகிறார்கள். அவரை மாற்றி அவருக்கு பதிலாக வேறொருவரை அமைச்சர் ஆக்க லாம் வோம் என காங்கிரஸ் மேலி டம் கூறுகிறது. ஆனால் கலைஞர் கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கும் ராஜாவை விட்டுக் கொடுப்பதாக இல்லை. அது தான் இருதரப்பையும் உரசிக் கொள்ள வைக்கிறது.

மதுரையில் ஒற்றுமை


சமீபகாலமாக திமுக, காங்கிரஸ் உறவு இறுதி கட்டத்திற்கு வந்து இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆகஸ்ட் 1 அன்று தமிழக காங்கிரஸ் சார்பில் மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கக்கன் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகள் பலரையும் புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் காங்கிரஸ் சார்பில் ஃபிளக்ஸ் பேனர்களும், சுவர் விளம்பரங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

விழா மேடையில் தங்கபாலு, ப,சிதம்பரம், வாசன், இளங் கோவன் என நான்கு கோஷ்டி தலைவர்களும் ஒன்றாக அமர்ந் திருந்தது காங்கிரஸ் தொண் டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அங்கு பேசிய தேனி மக்களவை உறுப்பினர் ஹாரூண் திமுக&காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று பேசினார். அப்போது கூட்டத் தில் முக்கால்வாசி பேர் ஹாரூ னுக்கு எதிராக கோஷமிட்ட னர். வாழ்நாளில் இப்படி ஒரு அவமானத்தை ஹாரூண் சந்தி த்து இருக்க மாட்டார் என காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார் கள். இதன்மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் திமுக உறவை எதிர்க்கிறார்கள் என்பது எல் லோருக்கும் புரிந்தது. அடுத்து வந்த இளங்கோவனுக்கு தொண் டர்களுக்கு மத்தியில் எழுந்த கரகோஷம் அவரது நிலை பாடுதான் எங்களின் நிலைபாடு என்பது போல் இருந்தது. ஹாரூண் பேச்சுக்கு எதிரான கோஷங்களை சுட்டிக் காட்டிய இளங்கோவன் தொண்டர்களின் உணர்வுகளை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் புரிந்து கொண்டு மேலிடத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இளங்கோவன் பேச்சை மறை முகமாக ஆதரிக்கும் வகையில் பேசிய வாசன் காங்கிரஸ் தமிழ கத்தில் முதன்மை கட்சியாக வளர வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

அடுத்து பேசிய ப.சிதம்பரமும் சிறுபான்மையினர், தலித்துகள், காங்கிரஸ் இணைந்தாலே சாதி க்க முடியும் என பேசியதும் அனைவராலும் கூர்ந்து கவனி க்கப்பட்டது. மொத்தத்தில் திமுக&வை உதறும் மனநிலைக்கு காங்கிரஸ் கட்சி வந்துவிட்டது. இனி முடிவு எடுக்கும் அதிகாரம் சோனியாவிடமா--? அல்லது ராகுல் காந்தியிடமா? என அடுத்த விவாதம் தொடங்கி இருக்கிறது-.

பதிலடி?

இதனிடையே தென்மாவட்டத் தில் ஒரு பொது மேடையில் அழகிரி முன்னிலையில் ராகுல்காந்தியை திட்டி திமுகவினர் பேசியதும், அதற்கு இளங்கோவன் கண்டனம் தெரிவித்திருப்பதும் அழகிரி, காங் கிரஸ் உறவை விரும்பவில்லை என்பதை வெளிக்காட்டுவதாக தெரிகிறது.
சமீபத்தில் ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம் எங்களுக்கு 78 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார்.

புதிய சிந்தனை


தி.மு.க.வை விட, அ.தி.மு.க. தேவலாம் என்ற சிந்தனை ராகுல் காந்திக்கு வந்து இருப்பதாக கூறுபவர்களும் உண்டு. அ.தி.மு.க. வுக்கு கோவையில் கூடிய கூட்டம் அதன் செல்வாக்கு அப்படியே இருக்கிறது என்பது மத்திய உளவுத்துறை மூலம் காங்கிரஸ் தலைமைக்கு எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.

தேர்தல்களில், ஊழல்பணம் “திருமங்கலம் ஃபார்முலா” என்ற பெயரில் இறைக்கப்படுவதால் அடுத்து திமுக ஆட்சிக்கு வந் தால் எல்லா கட்சிகளையும் பலகீனப்படுத்தி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்து ஒரு கட்சி ஆட்சியே நீடிக்கும் ஆபத்து உருவாகிவிடும் என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது . இது ஒரு கட்டத்தில் தங்களையே பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியி னரும் அஞ்சுகிறார்கள். எனவே தே.மு.திக உடன் மூன்றாவது அணி அமைப்பது அல்லது அ.தி.மு.க உடன் கூடுதல் தொகுதிகளை பெற்று கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பது. இவற்றில் இரண்டில் ஒன்றை செய்ய வேண்டுமென காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகிறார்கள். இப்போதைய நிலையில் இலவச திட்டங்கள் எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு விலைவாசி உயர்வு திமுக ஆட்சிக்கு எதிராக அலையாக வீசும் நிலையில் திமுக உடன் இருப்பது தங்களுக்கு நல்லது அல்ல என்பதும் அவர்களது எண்ணம்.

மனமாற்றம்

தி.மு.க-காங்கிரஸ் உறவு உடைந்தால்தான் ஆளும் தி.மு.க .வின் தேர்தல் அராஜகங்களை தேர்தல் ஆணையம் மூலம் நசுக்க முடியும் என ஜெயலலிதா கருதுகிறார்.

அவருக்கு காங்கிரஸ் உறவு வாழ்வா? சாவா? என்ற அடிப் படையில் இருப்பதால் 2011 சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரசுக்கு 70 தொகுதிகள் வரை கொடுக்கவும் தயங்க மாட்டார்.

காங்கிரஸார், ஆட்சியில் பங்கு அல்லது ஆளுக்கு தலா இரண்டரை வருடம் முதல்வர் பதவி என்ற ஃபார்முலாவை வைக்கக் கூடும்.

இக்கூட்டணியில் தே.மு.திகவும் இணைய வாய்ப்புள்ளதால் தொ குதிப் பங்கீட்டில் கடைசி நேர பரபரப்பு உருவாகக் கூடும்.

அணி மாறுமா?

இத்தருணத்தில் சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) கொங்கு முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் எந்தக் கூட்டணியில் இடம் பெறும் என்பது தான் இவ்வருட அரசியல் திருப்பு முனையாக இருக்கும். மனிதநேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெறும் சூழல் உருவாகியுள்ளதால் அந்த அணி கூடுதல் பலத்தில் இருக்கிறது. காங்கிரஸ் வந்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என வைகோ கருதுவதாக கூறப்படுகிறது.

நடப்பு நிகழ்வுகளை உற்று நோக்கும் போது தி.மு.க.வும், காங்கிரசை உதறும் மனநிலைக்கு வரக்கூடும்.இதற்கான அதிர்வேட்டு அழகிரி தரப்பிலிருந்து தான் வரும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நேரம் நெருங்குகிறது

மத்தியில் எங்களிடம் 7 அமைச்சர்களைப் பெற்ற தி.மு.க. தமிழகத்தில் மட்டும் எங்களை ஆட்சியில் சேர்க்காமல் மைனா ரிட்டி பலத்துடன் எங்கள் முதுகைப் பற்றிக் கொண்டு நடப்பது என்ன நியாயம்? என கடந்த நான்கு ஆண்டுகளாக கேட்கும் காங்கிரஸாரின் கேள்விகளுக்கு விடை தெரியும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறன.

கருத்துகள் இல்லை: