செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

க்ரவுண்ட் ஸீரோ மஸ்ஜித் நிர்மாணம்: ஒபாமா ஆதரவு

வாஷிங்டன்,ஆக15:செப்டம்பர் 11 தாக்குதலுக்குள்ளான உலக வர்த்தக மையம் அமைந்திருந்த க்ரவுண்ட் ஸீரோவுக்கு அருகில் மஸ்ஜித் உள்ளிட்ட கலாச்சார மையம் நிர்மாணிப்பதற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பூரண ஆதரவை அளித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த ரமலான் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார் அவர். அமெரிக்காவின் இந்தியத்தூதர் மீரா சங்கர் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஒபாமா கூறியதாவது:"ஒரு குடிமகன் என்ற நிலையிலும், அதிபர் என்ற நிலையிலும் தேசத்தில் இதர பிரிவினர்களைப்போல் முஸ்லிம்களுக்கும் அவர்களுடைய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமை உண்டு என்பதே எனது நம்பிக்கை. அந்த வகையில் வணக்கஸ்தலங்களை நிர்மாணிப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. இது அமெரிக்காவாகும். மதசுதந்திரத்தைக் குறித்த எங்களது அபிப்ராயத்தில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. உலகத்தின் அனைத்து மத நம்பிக்கையாளர்களையும் அமெரிக்க சமமாகவே கருதுகிறது." இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

க்ரவுண்ட் ஸீரோவுக்கு அருகில் மஸ்ஜித் உள்ளிட்ட கலாச்சார மையம் நிர்மாணிப்பதற்கு ஆதரவும்,எதிர்ப்பும் வெளிப்பட்ட சூழலில்தான் ஒபாமா தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: