இடஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இடஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 செப்டம்பர், 2010

முஸ்லிம்களுக்கும் மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு – ஆணை வெளியிட்டது புதுவை அரசு

புதுவையில் வாழும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 2 சதவிகித தனி இடஒதுக்கீடு அளித்து புதுவை அரசு ஆணையை கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியிட்டது. புதுவையில் இதுவரை அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் 13 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்த்து, இதில் 2 சதவிகிதம் இனி பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் தனியான ஒதுக்கப்படும். இதே போல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் மீனவச் சமூகங்களுக்கு 2 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வகைச் செய்யும் ஆணையும் வெளியிடப்பட்டது.



பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பட்டியலில் பின் வரும் சமூகங்கள் இடம் பெற்றுள்ளன

1.தக்னி முஸ்லிம் (பாண்டி, காரைக்கால் மற்றும் யானம் ஆகிய பகுதிகளில் வாழ்வோர் மட்டும்

2.மாப்பிளா

3.லெப்ப்பை (இதில் மரைக்காயர், ராவுத்தர், சாயிபு, சேக், சையித் ஆகியோரும் அடங்குவர்)



மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி இடஒதுக்கீடு பெறும் மீனவர் சமூகத்தில் பின்வருவோர் அடங்குவர்

1. செட்டியார்

2. சின்ன பட்டினவர்

3. மீனவ செட்டியார்

4. நாட்டார்

5. பர்வர்தராஜகுலம்

6. பட்டினவர்

7. பட்டினவ செட்டியார்

8. பெரிய பட்டினவர்

9. செம்பதவர்

அரசு ஆணையை இதில் காணலாம்...

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

மேற்குவங்காளத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒ.பி.சி சான்றிதழ்

கொல்கத்தா,ஆக31:முஸ்லிம் சமுதாயத்தில் ஏழ்மை நிலையிலிலுள்ள முஸ்லிம்களுக்கு மேற்குவங்காள அரசு கொண்டுவந்துள்ள இடஒதுக்கீடு சட்டத்தின்படி அம்மாநிலத்தின் ஒன்றரைகோடி அளவிலான முஸ்லிம்களுக்கு ஒ.பி.சி சான்றிதழ் வழங்கப்படும்.

இதுத்தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவை அடுத்த மாதம் 22 ஆம் தேதி மேற்கொள்ளும். இவ்விஷயத்தில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்தார்.

கொல்கத்தாவில் ஹஜ் ஹவுஸை திறந்துவைத்து உரைநிகழ்த்திய அவர். அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதிப்பிரிவினர்களை இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவரும்பொழுது முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை பிரிவினரை ஏன் கொண்டுவரக் கூடாது என அவர் கேள்வி எழுப்பினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 7 ஆகஸ்ட், 2010

விரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம்

இந்திய அளவில் முதன் முறையாக இட ஒதுக் கீட்டு விழிப்புணர்வை அனைத்து இயக்கங்களுக்கும் வழங்கிய தமுமுகவிற்கு வெற்றி.


முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கைப் போர் அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் தொடுக்கும் காலகட்டம் இது.

முஸ்லிம்களை இன ஒதுக்கல் முறையில் காலங்காலமாக ஒடுக்கி வந்த ஆதிக்க சக்திகள் முஸ்லிம்கள் பெற்றுவந்த உரிமை களை படிப்படியாக பறித்துக் கொண்டது. இந்த நாட்டின் கெடுதல்களுக்கு எல்லாம் முக்கிய காரணியான சங்பரிவார் சதி சக்திகள் ஒருங்கிணைந்த இந்திய நாட்டை துண்டாடியதில் முக்கிய பங்கு வகித்தன.

ஆனால் நாட்டு பிரிவினைக்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்ற துடைக்க முடியாத களங்கத்தையும் முஸ்லிம்கள் மீது சுமத்தினர்.

இந்த கறை மிகுந்த களங்கத்தை சுமக்க முடியாமல் நலிந்து கிடந்த இந்த சமுதாயம் அரசியல் அரங்கில் தங்களுக்கென ஓர் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை.

கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு அம்சத்திலும் பின்தங்கியிருந்த இந்த சமூகம் நத்தை தன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வதைப் போல சுருக்கிக் கொண்டது.

இடையில் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகள் வேறு இந்த இடிதாங்கி சமுதாயத்தின் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டது.

இத்தனையும் சதிக்கூட்டம் செய்ததற்கு முக்கியக் காரணம், எக்காரணம் கொண்டும் முஸ்லிம் கள் சமூக அளவில் எழுச்சியுடன் எழுந்து நின்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.

கொடு மதியாளர்கள் கனவு கண்டதைப் போல அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் எழுச்சிப் பெறும் வழியைக் காணவில்லை.

கண்ணிருந்தும் குருடராக, வாயிரு ந்தும் ஊமையராய் சோர் ந்திருந்த அகில இந்திய முஸ்லிம் சமுதாய த்திற்கு பாலைவனத்தில் ஒரு சோலைவனமாக வாய்த்தது தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையாக இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை முன் முழங்கியது தமுமுக. தமுமுக ஒவ்வொரு அசைவும், இலக்கும் இலட்சியமும் இந்திய விடுதலைக்கு முன்பாக இழந்த இடஒதுக்கீட்டு உரிமையை மீட்க வேண்டும் என்பதே.

அதற்காக தமுமுக கண்ட களங்கள் எண்ணற்றவை. பிரச்சார வியூகங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. தமிழ கம் மற்றும் புதுவையின் பட்டி தொட்டியெங்கும் இழந்த இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்க களமி றங்கியது தமுமுக. அகில இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெற தலைநகர் டெல் லியில் களம்கான முடிவு செய்தது. 2007 ஆம் ஆண்டு மார்ச் 7&ல் டெல்லியில் கூடிய மாபெரும் பேரணி இரண்டு இலக்குகளை வென்றெடுத்தது.

ஒன்று அகில இந்திய ஆட்சி யாளர்களை சிறுபான்மையின ருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்ற சிந்தனைப் பொறிகளை தட்டி விட்டு இட ஒதுக்கீட்டினை நிறை வேற் றுவதற்கான அடுத்த கட்டத்தை நகர்வதற்கான ஒரு முன் முயற்சியை தமுமுக&வின் டெல்லி பேரணி ஏற்படுத்தியது. இரண்டாவதாக தமுமுக அடைந்த இலக்கு வென்றெடுத்த இலட்சியம் என்னவெனில் இட ஒதுக்கீடு என்ற ஜீவாதார உரிமை குறித்து அகில இந்திய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

நாடாளுமன்றம் நோக்கி நடந்த பேரணியிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமூக நீதி மாநாட்டிலும் பங்கேற்காத, உரையாற்றாத பிரபலமான சமுதாய இயக்கங்களின் தலைவர்களே இல் லை என்ற அளவுக்கு அனைத்து தலைவர்களும் பங்கேற்றனர். சமூக நீதிப் போராட்டத்தில் தமுமுக இந்தியாவிலேயே முன்னோடியாக விளங்குகிறது என பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

தமுமுகவின் போராட்ட வியூகத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள இயக்கங்கள் இட ஒதுக்கீட்டு போராட்டங்களை முன்னெடுத்தன. அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான ஓபிசி பிரிவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் இறங்கியிருப்பதாகவும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச் சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருக்கிறார்.

நாங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். காங் கிரஸ் அதன் செயல்திட்டத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடிவெடுத் துள்ளதாகவும் காங்கிரஸ் நிச்சயம் இதனை செயல்படுத்தும் இதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.


ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம் களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் இதை செயலாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன.

மண்டல் கமிஷன் அறிக்கை யில் கூறியுள்ளவாறு பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட் டில் 8.4 சதவீதம் சிறுபான் மையி னர் விரிவாக் கத்திற்காக உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரையரை செய்யப்பட்டுள்ள மொத்த 27 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 8.4 சதவீதம் சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்டதில் 6 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.

மிஸ்ரா ஆணையம் சிறுபான் மையினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அல்லது ஓபிசி என்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து பகிர்ந்து அளிக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதில் இரண்டாவதை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் என் றும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பாக கடந்த மே மாதம் முஸ்லிம் தலைவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு இன்னும் 6 மாதங்களில் செயல்படுத் தப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.

மிஸ்ரா ஆணையம் பரிந்துரை யின்படி முஸ்லிம்களுக்கு 10 சதவீ தம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே த.மு.மு.கவின் கோரிக்கையாகும். இடஒதுக்கீடு விவ காரத்தில் இதுவரை மவுனம் சாதித்து வந்த மத்திய அரசு இணக்கமான நடவடிக்கை நோக்கி பயணிப்பதை பாராட்டும் அதேவேளையில் முஸ் லிம்களுக்கு ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் படி 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த தேசத்தில் காலகா லமாக ஒடுக்கப்பட்டுவரும் முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவு என்ற நோயை நீதியரசர் ராஜிந்தர் சச்சார் கண்டறிந்தார் என்றால் அதற்கான தீர்வினை நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா வின் பரிந்துரைகள் அடித்துக் கூறிய து. 10 சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதன், 14 ஜூலை, 2010

69 சதவிகித இடஒதுக்கீடு வழக்கு:- உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பயன்படுத்தி இடஒதுக்கீடு வரம்பை மேலும் உயர்த்த தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை

"தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீடு இன்னும் ஓர் ஆண்டுக்கு செல்லும் என்றும் இந்த ஒரு ஆண்டுக்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட ஆணையத்திடம் முறையிட்டு மண்டல் அறிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை தமிழக அரசு நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தினர் என 88 விழுக்காடு மக்கள் வாழும் நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை. உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பில் வழங்கியுள்ள தீர்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் உட்பட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ள இடஒதுக்கீடு வரம்பை உயர்த்த தேவையான ஆவணங்களை சமர்பித்து உரிய உத்தரவை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் தமிழக அரசு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

இடஒதுக்கீடு 50 சதவிகிதத்தை மிகைக்கக் கூடாது என்பது நிரந்தரமானது அல்ல என்பதையும் தேவையிருப்பின் அது 50 விழுக்காட்டை விட அதிகமாக இருக்கலாம் என்பதையும் உணர்ந்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பிரிவு அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சமூக நீதியை சரியான முறையில் நிலைநிறுத்த இந்தத் தீர்ப்பு பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

இடஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை: இ.எம்.அப்துற்றஹ்மான்

"நீதி, நிர்வாகம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமையின் அடிப்படையிலான விகிதாச்சார பங்களிப்பு முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அதனைப் பெற முஸ்லிம்கள் போராட முன்வர வேண்டும்" எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயலர் இ.எம். அப்துல் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.கத்தாரிலுள்ள இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம்(India Fraternity Forum) என்ற அமைப்பு வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணிக்குக் கத்தார் ரெட் க்ரசண்ட் கேட்போர் கூடத்தில் நடத்திய "இடஒதுக்கீடு சலுகையா? உரிமையா?" என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் அவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது. இது சமூக ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமேயல்லாது பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று வரையறுக்காதது குறிப்பிடத்தக்கது. 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, அனைத்து சமுதாயங்களை விட மிக மோசமான அளவுக்குப் பின் தங்கிய நிலையிலேயே இன்று இந்திய முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அனைவருக்கும் சம உரிமையும் சம அந்தஸ்தும் உறுதிபடுத்தும் முகமாக, மண்டல் கமிசன் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் தலித்களுக்காக இடஒதுக்கீடு பரிந்துரைத்தது. அதனை தலித், யாதவ சமூகங்கள் மிக சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், மாயாவதி என தலித், யாதவ சமுதாய மக்களின் பிரதிநிதிகள் சட்டமியற்றும் மையங்களில் பிரதிநிதித்துவப் படுத்த முடியும் போது, 20 கோடி முஸ்லிம்களுக்கு அந்த உரிமைகளுக்காக போராடும் அளவுக்குக் கூட விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது ஆச்சரியமானதாகும்.

இடது, வலது என மதச்சார்பற்ற வேடமிடும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த 20 கோடி முஸ்லிம்களையும் பரிசோதனை கூடங்களாக பயன்படுத்துவதற்கு வழியமைத்துக் கொடுத்ததே இதற்கான காரணமாகும். 40 ஆண்டுகாலமாக கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் சுமார் 20 சதவீத முஸ்லிம்களின் நிர்வாகப் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் மட்டுமே. மதச்சார்பற்ற வேடமிட்டு 40 ஆண்டுகாலமாக இந்தச் சமுதாயத்தை ஏமாற்றி வரும் கம்யூனிஸ்ட்கள், அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலுக்காக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கில் முஸ்லிம்களைக் கவர மட்டுமே சமீபத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதை எவரும் உணர்ந்து கொள்வர். இந்தியாவிலேயே சற்று மெச்சப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் வாழும் கேரளத்திலும் மற்ற சமுதாயங்களை ஒப்பிட்டு நோக்கினால் மிகப் பின் தங்கிய நிலையிலேயே கேரள முஸ்லிம்களும் உள்ளனர்.

நோய்களைக் கண்டுணர மருத்துவர்களை ஆய்வாளர்களாக நியமிப்பது போன்று அவ்வபோது மண்டல், சச்சார், மிஸ்ரா என மருத்துவர்களை நியமிப்பதோடுத் தங்களின் கடமை முடிந்து விட்டது என்ற நிலையிலேயே இடது, வலது கட்சிகள் நடந்து கொள்கின்றன. கண்டறியப்பட்ட நோய்க்கு மருந்தளித்துக் குணமாக்க எவருமே முன்வர தயாரில்லை.

இதுவரையிலான கமிசன்களிலேயே நீதிபதி சச்சார் தலைமையிலான கமிசன் மட்டுமே இந்தியாவில் முஸ்லிம்களின் யதார்த்த நிலையை மிகத் தெளிவாக ஆய்வு செய்து அறிக்கைச் சமர்ப்பித்துள்ளது. ஆனால், அதுவே, முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது என்ற நிலைக்குச் சச்சார் கமிட்டி அறிக்கையை முஸ்லிம் அமைப்புகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. ஆனால், நோய் என்ன என்பதை மட்டும் தான் சச்சார் கமிசன் கண்டறிந்து கூறியுள்ளதே தவிர, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையைக் குறித்து எந்தப் பரிந்துரையும் அது செய்யவில்லை என்பதைக் கவனித்தால், நீதிபதி சச்சார் கமிசன் அறிக்கையும் தெளிவாக முஸ்லிம்களின் வயிற்றில் அடித்துள்ளது என்றே எடுத்துக் கொள்ள முடியும்.
முஸ்லிம் சமுதாயத்தின் பின் தங்கிய நிலையினை முன்னேற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிசன் மட்டும் தான் 10 சதவீத இடஒதுக்கீடு அனைத்து முஸ்லிம்களுக்கும் வழங்குவது மட்டுமே சரியான தீர்வு என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது. முஸ்லிம் சமுதாயத்துக்குப் பாதுகாவலன் என அவ்வபோது கண்துடைப்பு நாடகம் நடத்தும் காங்கிரஸ், அந்தப் பரிந்துரையை வாங்கி அழகாக அட்டைப் போட்டு, குளிர்சாதன அறையில் ஒதுக்கி வைத்து விட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், பிரதமருக்கு அளிக்கப்பட்ட அந்த அறிக்கை லீக்கான விஷயம் மட்டும் நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்டது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பரிந்துரைக்கப்பட்ட அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதை விட்டுத் தடுப்பது மட்டும் தான் அதன் நோக்கம் என்பதை எவரும் அறிந்து கொள்ள முடியும். இந்த விஷயத்தில் மதச்சாரபற்ற வேடமிடும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக நாடாளுமன்றம் கண்ட 30 முஸ்லிம் எம்பிக்களில் ஒருவர் கூட மிஸ்ரா கமிசன் பரிந்துரையை நாடாளுமன்ற ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதைக் குறித்து வலியுறுத்தாதது மகா அயோக்கியத்தனமாகும்.

ஒருபோதும் இல்லாமல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பட்ட முறையில் காங்கிரஸுக்கு அதிக எம்பிக்கள் கிடைத்ததோடுக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. இதற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜகவுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அந்தோ கடந்த நாடாளுமன்ற அவையில் இருந்த 36 எம்பிக்களின் எண்ணிக்கை இந்த முறையாக 30 குறைய மட்டுமே செய்தது. இது தான் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கிடைக்கும் பரிசு. 543 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலைப்புச் சட்டம் வழங்கும் உரிமையின் அடிப்படையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமெனில் குறைந்தது 86 முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதே நிலை தான் அதிகாரம், நிர்வாகம், நீதித்துறைகளிலும் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கும் மிக மிக குறைந்த அளவிலான பிரதிநிதித்துவமே முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலை மாற வேண்டும். 80 சதவீதம் முஸ்லிம்கள் மட்டுமே வாழும் மாவட்டத்தில் கூட நாடாளுமன்ற உறுப்பினராக, உயர்ஜாதியைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியே காங்கிரஸின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குப் பிரதிநிதியாக அழைத்துச் செல்லப்படுகிறார் எனில், இடது வலது என்ற வித்தியாசம் இன்றி 20 கோடி முஸ்லிம்கள் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுக்கும் எவ்வாறு பரிசோதனை கூடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலை மாற வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை - அவை வெறும் சலுகைகள் அல்ல; நமது உரிமைகள் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றைப் - பெறுவதில் முஸ்லிம் சமுதாயத்தின் ஒவ்வொரு இளைஞனும் போராட முன்வர வேண்டும்" என்று இ.எம்.அப்துல் ரஹ்மான் அக்கலந்துரையாடலில் பேசினார். சிறப்புரைக்குப் பின், இடஒதுக்கீடு, முஸ்லிம்களின் உரிமைகளைப் பெறுவதற்கான செயல்திட்டம் போன்றவை குறித்து பார்வையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
inneram

வியாழன், 11 பிப்ரவரி, 2010

முஸ்லிம் இயக்கங்கள் தேச அளவிலான போராட்டத்திற்கு தயாராகின்றன

புதுடெல்லி:சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் நிச்சயிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்கக்கோரி தேச அளவிலான போராட்டத்தை துவக்க முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அனைத்து முஸ்லிம்களையும் ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தவேண்டும் என்றும் முஸ்லிம் அமைப்புகளின் 300 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.மேலும் இதற்கான ஒருங்கிணைந்த கமிட்டி ஒன்றும் உருவாக்கப்பட்டது.இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதற்காக சட்டரீதியான போராட்டம் நடத்தப்படும்.

இடஒதுக்கீட்டிற்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு விரோதமான சமீபகாலங்களில் வழங்கப்பட்ட நீதிமன்றத்தீர்ப்புகள் பற்றி கேள்வி எழுப்பப்படும். இம்மாநாட்டில் ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், அஹ்லே ஹதீஸ், ஆல் இந்தியா மைனாரிட்டி கமிட்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு அமைப்பின் பிரதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஒ.பி.சி பட்டியலில் வேறுபாடுகள் உள்ளது மிகப்பெரிய குழப்பமானது என்று மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். முஸ்லிம்களுக்கிடையில் சாதிகள் இல்லையென்பதால் இடஒதுக்கீட்டின் பலன் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து முஸ்லிம்களையும் ஒ.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்.

அரசியல் சட்டம் இடஒதுக்கீட்டிற்கு தடையாக இல்லை.மாறாக அரசியல் சட்டத்திற்கு விரோதமான நீதிமன்றத் தீர்ப்புகளும், அரசியல் கட்சிகளும்தான் இடஒதுக்கீட்டு விவகாரத்தை சிக்கலாக்குகின்றனர் என்ற அபிப்ராயம் தெரிவிக்கப்பட்டது. 27 சதவீதம் மக்கள் தொகைக் கொண்ட மேற்குவங்காளத்தில் தற்ப்பொழுதுதான் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதுவும் எல்லா முஸ்லிம்களுக்கும் இந்த இடஒதுக்கீடு கிடையாது என்றும் மேற்குவங்காள மாநிலத்திலிருந்து கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

அரசு வேலையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெறும் 2.1 சதவீதமானதால் அனைத்து முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு பயன் கிடைக்க வேண்டும். கேரளத்தில் இடஒதுக்கீடு இருந்தும் முஸ்லிம்கள் பிற்பட்ட நிலையிலிருப்பதற்கு காரணம் வளைகுடா நாடுகளுக்கு செல்வதாலோ அல்லது கல்வி இல்லாததாலோ அல்ல என்றும் ஒவ்வொரு மாநிலத்தின் நிலை வித்தியாசமானது என்றும் இம்மாநாட்டில் தலைமைவகித்த சச்சார் கமிட்டின் முன்னாள் உறுப்பினரான டாக்டர்.அபூஸாலிஹ் ஷரீஃப் தெரிவித்தார்.

கல்வி ரீதியாக முஸ்லிம்கள் ஆதிவாசிகளைவிட பின் தங்கிய நிலையிலில்லை.ஆனால் அரசு வேலைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பரிசோதித்தால் பல மாநிலங்களிலும் முஸ்லிம்கள் ஆதிவாசிகளைவிட பின் தங்கிய நிலையில் உள்ளது தெளிவாவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜாமிஆ ஹம்தர்த் பல்கலைக்கழக வைஸ் சான்ஸ்லர் செய்யத் ஹாமித் மாநாட்டை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி.செய்யத் ஷஹாபுத்தீன், முஜ்தபா பாரூக், ஸஃபர் செய்புல்லாஹ், ஷாஹித் சித்தீகி ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு

கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உட்பட்ட முஸ்லிம்களை ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தி 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மேற்கு வங்காள அரசு முடிவெடுத்துள்ளது.
கல்வி,பொருளாதாரம்,சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களுக்குத்தான் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கரை லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள முஸ்லிம்கள் இந்தப்பிரிவில் இல்லை. முஸ்லிம்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காக ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அளித்துள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த மேற்குவங்காள அரசு தீர்மானித்துள்ளதாக முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா தெரிவித்தார்.

"மத்திய அரசு மிஷ்ரா கமிஷனை நடைமுறைப்படுத்துமா என்பது எங்களுக்கு தெரியாது ஆனாலும் நாங்கள் அதனை நடைமுறைப்படுத்துகிறோம்" என புத்ததேவ் தெரிவித்தார். பிற மாநிலங்களைப் போல் மேற்குவங்காளத்திலும் எஸ்.டி, எஸ்.சி, ஒ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது 7 சதவீதம் ஆகும். தற்ப்பொழுது முஸ்லிம்களுக்கு தனியாக 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் இந்த சதவீத வரம்பு 17 சதவீதமாக உயர்வதாகவும் அவர் தெரிவித்தார். கல்வி, பொருளாதாரம், சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன், பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி கமிஷன் ஆகியவற்றை உட்படுத்தி கமிட்டி உருவாக்கப்படும்.

கடந்த பிப்ரவரி1-ஆம் தேதி கூடிய இடது முன்னணி கூட்டத்தில் ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. மதத்தின் அடிப்படையில் அல்ல மாறாக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார பிற்படுத்தப்பட்ட நிலைமையின் அடிப்படையில்தான் இடஒதுக்கீட்டை வழங்கப்போவதாக இடது முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்தார்.

கொல்கத்தா மாநகராட்சி, 82 நகராட்சிகளுக்கு வருகிற மே-ஜூன் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில்தான் இந்த இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பு வந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கு முக்கியக்காரணம் இங்குள்ள முஸ்லிம்கள் இடதுசாரிகளை கைகழுகிவிட்டார்கள் என்று கூறப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த ஆட்சேபனை ஆணையத்துக்கு அனுப்பப்படும்: முதல்வர் வைத்திலிங்கம்

புதுச்சேரி, ஆக. 7: முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த ஆட்சேபனை ஆணையத்துக்கு அனுப்பப்படும் என முதல்வர் வைத்திலிங்கம் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் பா.ம.க. உறுப்பினர் அனந்தராமன் பேசியதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டு தங்கமணி கமிஷனின் பரிந்துரையின் பேரில் தான் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமானால் 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் செய்ய முடியும். மேலும் முஸ்லிம்கள் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் தான் அடங்குவார்கள். எனவே அவர்களுக்கு பிற் படுத்தப்பட்டோர் பிரிவிலேயே உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முதல்வர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளோம். இதில் உங்களின் ஆட்சேபனையை ஆணையத்துக்கு அனுப்ப உள்ளோம். இதன் பிறகு ஆணையம் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். காங்கிரஸ் அரசு தான் முதல் முறையாக இடஒதுக்கீட்டையே அமுல்படுத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.