லெபனான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லெபனான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 டிசம்பர், 2011

“இதோ, நீங்கள் ரகசியமாக அனுப்பிய ஆட்களின் பெயர்கள்! சரியா இவை?”


“சி.ஐ,ஏ. உளவாளிகளை நாம் பிடித்திருக்கின்றோம்” என்று ஹிஸ்பொல்லா அமைப்பு வெளியிட்ட தகவல் உண்மைதானா அல்லது போலியான திசைதிருப்பலா என்ற சர்ச்சைகள் மிகச் சூடாக சர்வதேச மீடியாக்களில் ஒரு ரவுன்ட் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த சூடே இன்னமும் ஆறவில்லை. அதற்கு அடுத்த இடியை இறக்கி சி.ஐ.ஏ.-யை பதற வைத்திருக்கிறது ஹிஸ்பொல்லா!

தாம் கைது செய்துள்ள உளவாளிகளின் பெயர்கள் உட்பட அனைத்து அடையாளங்களையும் டி.வி. ஒளிபரப்பு ஒன்றில் வெளியிட்டிருக்கிறது!


“லெபனானில் வேறு பெயர்களில் தங்கியிருந்து உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட சி.ஐ.ஏ. உளவாளிகளின் நிஜமான பெயர்கள் இவை” என்று அறிவிப்போது இந்த விபரங்களை லெபனான் டி.வி. சேனல் ‘அல்-மனார்’ வெளியிட்டிருக்கின்றது.

அல்-மனார், ஹிஸ்பொல்லா அமைப்புடன் நெருக்கமான சேனல் என்பது சர்வதேச மீடியாக்களிடையே பிரசித்தம். இதனால், இந்த விபரங்களை வெளியிட்டு அதிர்வை ஏற்படுத்துவதற்காக ஹிஸ்பொல்லாவின் உளவுப் பிரிவுதான் முழு விபரங்களையும் அல்-மனாருக்கு வழங்கியுள்ளது என்பதில் ரகசியம் ஏதுமில்லை.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த Pizza Hut உணவகத்தை ரகசிய சந்திப்பு இடமாக வைத்திருந்து, சிக்கிக் கொண்ட உளவாளிகள் இவர்கள் (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்). இவர்களை ரகசியமாகக் கண்காணித்து, லெபனானில் சி.ஐ.ஏ. வைத்திருந்த உளவு நெட்வேர்க்கை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ஹிஸ்பொல்லா அறிவித்திருந்தது.

அல்-மனார் டி.வி. சேனல் உளவாளிகளின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட டி.வி-ஷோவில், சிக்கிக் கொண்ட உளவாளிகளின் போட்டோக்கள் ஏதும் காண்பிக்கப்படவில்லை. மாறாக, அனிமேஷன் முறையில் கிராஃபிக் காட்சிகளாக, அவர்கள் கதையே காண்பிக்கப்பட்டது. அவர்கள் சி.ஐ.ஏ.-யினால் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, லெபனானில் தமக்கு தகவல் கொடுக்க லோக்கல் இன்ஃபோமர்களை தேடியது, Pizza Hut ஃபாஸ்ட்-ஃபூட் உணகத்தில் ரகசியமாக சந்தித்து தகவல் பரிமாற்றம் செய்தது, என்று விலாவாரியாக காட்டப்பட்டது.

இந்த டி.வி-ஷோ ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சி.ஐ.ஏ. பெண் பேச்சாளர் ஜெனிஃபர் யங்பிளட், “தீவிரவாத அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் குறித்து ஏஜென்சி (சி.ஐ.ஏ.) கருத்து தெரிவிப்பது வழக்கமல்ல. ஹிஸ்பொல்லா அமைப்பு ஒரு தீவிரவாத இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவர்களது பிரச்சார மீடியாதான் அல்-மனார் டி.வி. சேனல் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான். அதனால், அந்த சேனலில் வெளியிடப்பட்ட விபரங்கள் தொடர்பாக நாம் கருத்து வெளியிட முடியாது” என்று நழுவிக் கொண்டார்.

“அல்-மனாரில் வெளியிடப்பட்ட பெயர்களில் சி.ஐ.ஏ. உளவாளிகள் லெபனானில் இருந்தனரா?” என்ற கேள்விக்கும் பதில் கொடுக்க மறுத்துவிட்டார் ஜெனிஃபர்.

உளவு வட்டாரங்களில் விசாரித்தவரை, அல்-மனார் வெளியிட்ட பட்டியலில் உள்ள பெயர்களில், பெய்ரூட் சி.ஐ.ஏ. சீஃப்-ன் பெயர் மற்றும் அடையாளங்கள் துல்லியமானவை என்றே தெரிகின்றது. அவரது பெயர் சரியாக உள்ளதால், மற்றைய பெயர்களும் நிஜமான பெயர்களாக இருக்கவே சான்ஸ் உள்ளது. அந்த வகையில் இந்த ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு நிச்சயம் ஒரு பெரிய அவமானம்தான்.
நன்றி : http://viruvirupu.com

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

எங்கள் உயிர் உள்ளவரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம் - ஹஸன் நஸ்ருல்லாஹ் சூளுரை


லெபனான்,டிச.18:"நாங்கள் உயிருடன் இருக்கும்வரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம். மேலும் ஃபலஸ்தீனின் ஒரு இஞ்ச் நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்" என லெபனான் ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

முஹர்ரம் 10வது நாள் ஆஷூரா மற்றும் இமாம் ஹுஸைன்(ரலி...) அவர்களின் உயிர் தியாக நினைவு தினத்தில் ஆயிரக்கணக்கான லெபனான் மக்களிடையே ஹஸன் நஸ்ருல்லாஹ் உரை நிகழ்த்தினார்.

ஃபலஸ்தீன் மக்கள் தங்கள் உரிமையை கோருவதை கைவிட்டுவிடுமாறு கூற எவருக்கும் உரிமையில்லை. நாங்கள் எல்லா விஷயத்திலும் ஃபலஸ்தீன் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். அரப் லீக்கின் மேற்பார்வையில் இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன் ஆணையத்திற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை காலத்தை விரயமாக்குவதாகும்.

இஸ்ரேல் கடலோரப் பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஏற்படுத்திய தடையை நீக்கவேண்டும். 15 லட்சம் காஸ்ஸா மக்கள் வறுமையால் வாடுகின்றனர். மத்திய கிழக்கின் மோதலை தீர்க்க ஒரே வழி எதிர்த்துப் போராடுவதுதான். இவ்வாறு நஸ்ருல்லாஹ் உரையாற்றியுள்ளார்.

presstv

வியாழன், 14 அக்டோபர், 2010

ஈரான் அதிபர் நஜாதிற்கு லெபனானில் உற்சாக வரவேற்பு


பெய்ரூத்,அக்.14:ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத் லெபனானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் நஜாதிற்கு உற்சாக வரவேற்பை அளித்தனர் லெபனான் மக்கள்.

முதன்முதலாக லெபனானுக்கு செல்லும் நஜாதை வரவேற்க விமான நிலையம் முதல் அதிபரின் மாளிகை வரை வழியோரங்களில் நூற்றுக்கணக்கான லெபனான் மக்கள் கூடியிருந்தனர். அதிபர் மாளிகைவரை திறந்த ஜீப்பில் சென்ற நஜாதை மக்கள் பூச்செண்டுக் கொடுத்து வரவேற்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான், பிரதமர் ஸஅத் ஹரீரி ஆகியோரை நஜாத் சந்தித்து பேசுவார். அதேவேளையில்,ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வுடனான சந்திப்பைத்தான் உலகம் உற்று நோக்குகிறது.

இஸ்ரேலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ஹிஸ்புல்லாஹ் மேற்கத்திய நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகிறது.

2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த போரில் ஹிஸ்புல்லாஹ்வுக்குத்தான் வெற்றிக்கிடைத்தது. இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட பின்த் ஜுபைல், கன ஆகிய இடங்களுக்கும் நஜாத் செல்கிறார். ஹிஸ்புல்லாஹ் வலுவான நகரங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், நஜாதின் வருகையில் மேற்கத்திய ஆதரவாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்புள்ளதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

லெபனான் அதிபருடனான உரையாடலின் போது அமெரிக்க அரசு நஜாதின் வருகைக் குறித்து கவலைத் தெரிவித்திருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,www.tehrantimes.com

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

லெபனானில் உயிர் தியாகிகளுக்கு தீம் பார்க்கை உருவாக்கிய ஹிஸ்புல்லாஹ்

பெய்ரூட்,ஆக31:தெற்கு லெபனானில் இஸ்ரேலின் எல்லையோடு இணைந்த மிலீத்தாவில் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் உயிர்தியாகிகளை நினைவுக்கூறும் தீம் பார்க்கை திறந்துள்ளது. 'பூமி சுவனத்தோடு பேசுகிறது' என்பது இரண்டுகோடி டாலர் செலவில் உருவாகியிருக்கும் தீம் பார்க்கிற்கு அழைப்புவிடுக்கும் போர்டில் எழுதப்பட்டுள்ள வாசகங்களாகும்.

இஸ்லாமிய தற்காப்பு போருக்கு குடும்பங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது பார்க்கின் நிர்மாணம்.ஹிஸ்புல்லாஹ்வின் செயல்பாடுகளைக் குறித்தும், இஸ்ரேலுக்கெதிரான தற்காப்புப் போரைக் குறித்தும் ஆர்வத்தைத் தூண்டும் காட்சிகள் பார்க்கில் இடம்பிடித்துள்ளன.

'வழி' என்று பெயரிடப்பட்டுள்ள பகுதியின் வழியாக பயணிக்கும் பொழுது ஒரு போர்க்களத்திற்கு சென்ற அனுபவம் ஏற்படும். சுவரில் அழகான வர்ணங்களில் தீட்டப்பட்டுள்ள போர்க்களக் காட்சிகள். அத்துடன் போர்க்களத்தில் மருத்துவமனையும், ராக்கெட் லாஞ்சிங் மையமும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலுடனான போரின் பொழுது ரகசிய பங்க்கராக செயல்பட்ட குகையை கடந்து சென்றால் ஏழாயிரம் போராளிகள் பயன்படுத்திய இடங்களின் விவரங்களைக் காணலாம்.

'கர்த்தம்' என்று பெயரிடப்பட்டுள்ள இடத்தில் ஒரு தனியான குழி ஒன்றில் இஸ்ரேல் ராணுவத்திடமிருந்து கைப்பற்றிய இயந்திரத் துப்பாக்கிகளும், ராக்கெட்டுகளும், டேங்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒருமுறை நம்முடைய வீடுகளை தகர்க்க பயன்பட்டவை இவை. தற்பொழுது நமது காலடியில் வந்துள்ளது என வழிகாட்டியொருவர் பார்க்கை காணவரும் பார்வையாளர்களிடம் விளக்குகிறார்.

அங்கு காணப்படும் ஹெல்மெட்டுகளெல்லாம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினருடையது.

"இந்த சாதனைகளை காணும்பொழுது மகனை இழந்த சோகத்தை நான் மறக்கிறேன்" எனக் கூறுகிறார் 13 பிள்ளைகளின் தந்தையும், விவசாயியுமான அஹ்மத் ஸலீம். ஸலீமின் அனைத்து பிள்ளைகளும் ஹிஸ்புல்லாஹ்வின் உறுப்பினர்களாவர். 1992 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த மோதலில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

லெபனானுக்கு ராணுவ உதவி:ஈரான்

டெஹ்ரான்,ஆக31:இஸ்ரேலின் அச்சுறுத்தல் நீடிக்கும் சூழலில் லெபனானுக்கு ராணுவ உபகரணங்கள் வழங்கத் தயார் என ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி அறிவித்துள்ளார்.

ஈரானின் நீண்டதூர பீரங்கி நிர்மாண துவக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் பொழுது வாஹிதி இதனை தெரிவித்தார்.

லெபனானுக்கு ஆயுதமோ இதர ராணுவ உபகரணங்களோ வழங்கமாட்டோம் என பல நாடுகளும் அறிவித்துள்ளன.ஆனால் தாங்கள் எல்லா உதவிகளையும் அளிக்க தயாராக இருக்கிறோம். என வாஹிதி தெரிவித்தார்.

அரபு நாடுகளிடமிருந்தும்,ஈரானிடமிருந்தும் ராணுவ உதவியை கோரவேண்டும் என லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கோரிக்கை விடுத்த சூழலில்தான் ஈரானின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெபனான் ராணுவத்தை நவீனப்படுத்த ஈரான் உதவவேண்டும் என ஏற்கனவே லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

லெபனானுக்கு ராணுவ உதவி:ஈரான்

டெஹ்ரான்,ஆக31:இஸ்ரேலின் அச்சுறுத்தல் நீடிக்கும் சூழலில் லெபனானுக்கு ராணுவ உபகரணங்கள் வழங்கத் தயார் என ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி அறிவித்துள்ளார்.

ஈரானின் நீண்டதூர பீரங்கி நிர்மாண துவக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் பொழுது வாஹிதி இதனை தெரிவித்தார்.

லெபனானுக்கு ஆயுதமோ இதர ராணுவ உபகரணங்களோ வழங்கமாட்டோம் என பல நாடுகளும் அறிவித்துள்ளன.ஆனால் தாங்கள் எல்லா உதவிகளையும் அளிக்க தயாராக இருக்கிறோம். என வாஹிதி தெரிவித்தார்.

அரபு நாடுகளிடமிருந்தும்,ஈரானிடமிருந்தும் ராணுவ உதவியை கோரவேண்டும் என லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கோரிக்கை விடுத்த சூழலில்தான் ஈரானின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெபனான் ராணுவத்தை நவீனப்படுத்த ஈரான் உதவவேண்டும் என ஏற்கனவே லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

நிவாரணக்கப்பல்:இஸ்ரேலின் மிரட்டலை புறக்கணித்தது லெபனான்

பெய்ரூத்,ஆக22:இஸ்ரேலின் அராஜகத் தடைகளால் அவதியுற்றுவரும் காஸ்ஸா மக்களுக்கு உதவி புரிவதற்காக வடக்கு லெபனான் துறைமுகத்திலிருந்து இன்று புறப்படும் மரியம் என்ற பெயரிலான நிவாரணக் கப்பலை தடுப்போம் என இஸ்ரேலிய அமைச்சர் யஹூத் பாரக்கின் மிரட்டலை லெபனான் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிராகரித்துள்ளார்.

நிவாரணக்கப்பலை எகிப்திய துறைமுகத்திலோ அல்லது இஸ்ரேலிலோ அனுமதிக்கலாம் என பாரக் தெரிவிக்கிறார். லெபனானுடன் மோதல் போக்கை இஸ்ரேல் கையாண்டுவருவதால் நிவாரணக்கப்பல் காஸ்ஸாவிற்குள் பிரவேசிக்க முடியாது. அதற்கு பதிலாக சைப்ரஸ் வழி செல்லவேண்டிவரும். அதேவேளையில் நிவாரணக் கப்பலை தடுக்கப் போவதாக சைப்ரஸ் அறிவித்துள்ளது.

பொலிவியன் கொடியைக் கொண்ட சரக்குக்கப்பலில் 60 லெபனான், ஐரோப்பா, அமெரிக்காவைச் சார்ந்த பெண் சேவைத் தொண்டர்கள் உள்ளனர். புற்றுநோய் மருந்துகளை ஏற்றி வருகிறது இக்கப்பல்.

துருக்கியின் நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேல் நடத்திய அக்கிரம தாக்குதலில் ஒன்பது துருக்கி சேவைத் தொண்டர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இது துருக்கி இஸ்ரேலுக்கிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இஸ்ரேலால் லெபனான்,சிரியா தாக்கப்பட்டால் அவ்விரு நாடுகளுக்கும் ஆதரவாக ஈரான் களமிறங்கும் - ஈரான் அமைச்சர்

டெஹ்ரான்,ஆக12:லெபனான்,சிரியா ஆகிய இரு நாடுகள் இஸ்ரேலால் தாக்கப்பட்டால், ஈரான் முழுமூச்சுடன் அவற்றுக்கு ஆதரவு அளிக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் மனுசெஹர் மொட்டாகி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஈரானில் பயணம் மேற்கொண்டுள்ள லெபனான் வெளியுறவு அமைச்சர் அலி அல்-ஷாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மோட்டாகி செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அண்மையில் நிகழ்ந்த மோதலை கண்டித்ததோடு, இஸ்ரேலின் இந்த செயல்பாடு, அதன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது என்று மொட்டாகி குறிப்பிட்டார்.

பிரதேச மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளில்,ஈரானும் லெபனானும் பொது நிலைப்பாடுகளை கொள்கின்றன.நியாயமான சர்வதேச உறவுகளை அமைப்பதை இரு தரப்பும் ஆதரிப்பதாகவும், அவர் வலியுறுத்தினார்.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

இஸ்ரேல் எல்லையில் அத்துமீறினால் பதிலடிக் கொடுப்போம்- லெபனான்

பெய்ரூட்,ஆக5:இஸ்ரேல் மீண்டும் லெபனான் எல்லைப் பகுதியில் அத்துமீறினால் பதிலடிக் கொடுக்க லெபனான் ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

தெற்கு லெபனானின் எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தை மீண்டும் அனுப்பியுள்ளதாக வந்த தகவலுக்கிடையேதான் லெபனானின் இவ்வறிவிப்பு.

நேற்று முன் தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று லெபனான் நாட்டவர்களும், ஒரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து லெபனான் நடத்திய பதிலடித் தாக்குதலில் ஒரு மூத்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்.

மீண்டும் எல்லையில் இஸ்ரேல் அத்துமீறினால் எங்களின் பதில் சமாதானமாக இருக்காது என லெபனானின் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

லெபனான் எல்லைக்குட்பட்ட பகுதியிலிலுள்ள ஒரு மரத்தை பிடுங்கி எறிய இஸ்ரேல் ராணுவம் மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக செய்தி உண்டு. இதன் காரணமாகத்தான் நேற்று முன் தினம் இரு நாட்டு ராணுவத்தினருக்கிடையே மோதல் வெடித்தது.

லெபனானின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மரம் அப்பகுதியிலுள்ளவற்றை பார்ப்பதற்கு தடையாக உள்ளது எனக்கூறித்தான் இஸ்ரேல் அம்மரத்தை பிடுங்க முயற்சிச்செய்தது.

அதேவேளையில் லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் லெபனான் ராணுவத்தினருக்கு பரிபூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீண்டும் எல்லையில் அத்துமீறினால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். லெபனான் ராணுவத்தினருக்கு எதிராக உயரும் கையை வெட்டிமாற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாதும் இஸ்ரேலின் அத்துமீறலை கண்டித்துள்ளார். லெபனானின் எல்லையில் அத்துமீறுவது இஸ்ரேல் அரசின் நிராசையின் அடையாளம் எனவும், அதற்கெதிராக சர்வதேச சமூகம் எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும் எனவும் நிஜாத், லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமானுடனான டெலிபோன் உரையாடலில் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திங்கள், 21 ஜூன், 2010

உதவிக் கப்பல்களை தடுப்போம் இஸ்ரேல் கொக்கரிப்பு

லெபனானில் பெண்கள் அமைப்பு காஸ்ஸாவுக்கு உதவுவதற்காக கப்பலைத் தயார் செய்து வருகிறது.

இந்நிலையில் "அனைத்து பலங்களையும் பிரயோகித்து அத்துமீறும் கப்பல்களைத் தடுப்பதற்க்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது" என்று இஸ்ரேலிய ஐ.நா தூதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர் இதுக் குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைக் தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் வனொலிகளும் இணைய செய்திகளூம் கூறுகின்றன.

இந்தக் கப்பல்களை ஏற்பாடு செய்பவர்களூக்கு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரோடு தொடர்பு இருக்கலாம் என்று இஸ்ரேலிய ஐ.நா தூதர் கப்ரியல்ல ஷலேவ் கூறினார்.

"சர்வதேசச் சட்டப்படி அனைத்துப் பலங்களையும் பிரயோகித்து இந்தக் கப்பல்களைக் தடுப்பதற்க்கு இஸ்ரேலுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. ஏனெனில் காஸ்ஸா பகுதியின் மேல் கடல் மார்க்கத் தடைவிதிக்கபட்டுள்ளது இதனை மீறக்கூடாது" என்று அவர் சொன்னதாக 'ஹாரெட்ஸ்' நாளிதழின் இனணயதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
7days

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

இஸ்ரேலின் அச்சுறுத்தலுக்கெதிராக ஹரீரி உதவி தேடுகிறார்

பெய்ரூத்:இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தலை சந்திப்பதற்கு லெபனான் பிரதமர் ஸஅத் ஹரீரி சர்வதேச நாடுகளின் உதவியை கோருகிறார்.

கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் லெபனானின் வான் எல்லையை பலமுறை மீறியுள்ளது என்பதை ஹரீரி சுட்டிக்காட்டுகிறார். எந்நேரமும் இஸ்ரேலின் அச்சுறுத்தல் குறித்து சர்வதேச சமூகம் விழிப்புணர்வு பெறவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
லெபனானில் தற்காப்பு போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்விற்கெதிராக இன்னொரு தாக்குதல் தவிர்க்க இயலாதது என இஸ்ரேல் அமைச்சர் யோஸி பெலத் நேற்றுமுன் தினம் கூறியிருந்தார்.

லெபனானில் மதரீதியாக பிளவு ஏற்படுத்தும் இஸ்ரேல் முயற்சி தோல்வியுறும் என ஹரீரி மேலும் தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லாஹ்வை அழித்தொழிக்கவேண்டும் என்று கூறிக்கொண்டு இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய 33 நாட்கள் நீண்ட தாக்குதல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்