செவ்வாய், 10 ஜூன், 2014

புனே முஸ்லிம் இளைஞர் படுகொலை இந்துக் குடும்பங்கள் தாக்கப்படாத வண்ணம் ரோந்து சுற்றிய முஸ்லீம் சகோதரர்கள்



கடந்த வாரம் புனே தொழில்நுட்ப பணியாளரான சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (24) என்ற வாலிபர் மாலை தொழுகைக்குச் சென்று திரும்பியபோது, மர்மநபர்களால் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாகப் பலியானார்.
இந்நிலையில் புனேயில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஹடாப்சர் பகுதியிலுள்ள சைய்யது நகரில் கலவரம் வெடிக்கலாம் என அச்சம் எழுந்தது. ஆனால், மாறாக அங்குள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
மேலும், முஸ்லீம் வாலிபர் மொசைன் அடித்துக் கொல்லப்பட்ட நாளன்று மர்மநபர்களால் தங்கள் பகுதி இந்துக் குடும்பங்கள் தாக்கப்படலாம் என கருதிய சைய்யது நகர் முஸ்லீம் குடும்பத்தார், அவர்களைப் பாதுகாக்கும் விதமாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அப்பகுதியில் குடியிருக்கும் அக்பர் ஷேக் என்பவர் கூறியுள்ளார்.
கலவரம் உண்டான அன்று முஸ்லீம் சகோதரர்களின் நடவடிக்கையால் தாங்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த கந்தாரே என்பவர் தெரிவித்துள்ளார்.
காவிக்கயவர்கள் நம் தாய் திரு நாட்டில் இந்து முஸ்லிம் மக்கள் இடையே குழப்பங்களை விளைவித்து கலவரங்களை ஏற்ப்படுத்தி,பல உயிர்களை அதற்க்கு இரையாக்கி அதன் மூலம் குளிர்க் காய நினைக்கின்றனர்.ஆனால் இது போன்ற சமபவங்கள் மூலம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் சகோதரத்துவத்தையும்,அமைதியையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கொருவர் இணக்கத்தையும் விரும்புவதையே நமக்கு உறுதிப் படுத்துகிறது.
மேலும் நம் இரு சமூகம்திர்க்கு இடையே ஒரு மிகப் பெரிய புரிந்துணர்வை இது போன்ற சம்பவங்கள் ஏற்ப்படுதுவிடுகின்றனர்
வாழ்க சகோதரத்துவம்!! வளர்க இந்தியா !!

கருத்துகள் இல்லை: