ஞாயிறு, 15 ஜூன், 2014

கூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள்?

கூடங்குளம் அதிகாரிகளுக்கு சில கேள்விகள்?
[1] 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி நடந்துவிட்டது, அது அங்கேப் போயிற்று, இங்கேப் போயிற்று என்கிறீர்கள். ஏன் ஒரு மாநில முதல்வர் கூட எங்கள் மாநிலத்துக்கு இவ்வளவு கூடங்குளம் மின்சாரம் வருகிறது என்று இதுவரை சொல்லவில்லை?
[2] சூப்பர் டூப்பர் அணுமின் நிலையத்தை இதுவரை தேசத்துக்கு அர்ப்பணிக்கவில்லை ஏன்?
[3] பிரதமர் மோடி கூடங்குளம் வந்து அணுமின் நிலையத்தை திறந்து வைத்து, இங்கே எந்தக் குளறுபடிகளும் நடக்கவில்லை, கோளாறுகளும் இல்லை, பரிபூரண பாதுகாப்புடன் இருக்கிறது என்று உத்தரவாதமளித்துச் செல்வாரா?
[4] இதுவரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தயாரித்த மின்சாரத்தால் எவ்வளவு வருமானம் வந்திருக்கிறது?
[5] கடந்த 17 மாதங்களில் சுமார் 5.25 கோடி ரூபாயை உங்கள் ஊழியர்களின் மருத்துவப் பிரச்சினைகளுக்கு செலவு செய்திருக்கிறீர்கள். கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் கண் மருத்துவத்துக்கென நாகர்கோவிலிலுள்ள ஒரு கண் மருத்துவமனையில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. உங்கள் ஊழியர்களின் கண் பிரச்சினைக்கு காரணம் என்ன? அருகாமையிலுள்ள பொதுமக்களின் கண்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?
சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்
யூன் 15, 2014

கருத்துகள் இல்லை: