செவ்வாய், 3 ஜூன், 2014

இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் ஆபீஸர் ஜி.எல்.சிங்காலுக்கு மீண்டும் பதவி

இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் ஆபீஸர் ஜி.எல்.சிங்கால் தற்போது பெயிலில் உள்ளார். சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையை 90 நாட்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்காததே இவரை பெயிலில் விட முக்கிய காரணமாக உள்ளது. முக்கியமான இந்த கேசில் சிபிஐ எவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டுள்ளது என்பதற்கு இந்த வழக்கே ஒரு சாட்சி. அதிகாரத்தில் இருப்போர் எந்த அளவு இனப் பற்றோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு அடுத்த படியாக ஜி.எல்.சிங்கால் குஜராத் அரசால் திரும்பவும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். போலி என்கவுண்டரில் ஒரு அப்பாவி இளம் பெண்ணின் உயிரை பறிக்க காரணமான ஒரு அதிகாரிக்கு மீண்டும் பதவி கொடுத்து கௌரவித்துள்ளது பிஜேபி அரசு. நரேந்திர மோடி பிரதமரானதால் அவரது இடத்துக்கு வந்துள்ள ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றவுடன் இந்த நிகழ்வு நடந்துள்ளது. கிரிமினல்களை முக்கிய பதவியில் அமர்த்துவதன் மூலம் தானும் ஒரு மற்றொரு மோடி என்பதை இந்த முதல்வரும் நிரூபிக்கிறார்.

'இது ஒரு மட்டரகமான சட்டத்தை மீறிய செயல். இங்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. பிஜேபி நீதியான ஆட்சியை கொடுப்போம் என்று மக்களுக்கு வாக்களித்தது என்ன ஆனது? ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு மீண்டும் அரசு பதவி தருவது முறைதானா?' என்று கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் வீரேந்திர குரோவர்.

மற்றொரு அநியாயமும் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர் தினேஷ் என்ற போலீஸ் அதிகாரி. இவரும் தற்போது பெயிலில் உள்ளார். வசுந்தராவ் அரசு மீண்டும் அவருக்கு பதவியைக் கொடுத்து அழகு பார்த்துள்ளது. ஆட்கள் மாறினாலும் இந்துத்வாவின் நிறம் மட்டும் மாறுவதில்லை என்பது குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களை மீண்டும் பதவியில் அமர்த்தியன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இங்கும் பிஜேபி தான் யார் என்பதை நிரூபித்துள்ளது.

இது போன்ற கிரிமினல்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தபபடுவதால்தான் இஸ்லாமியர்களின் மேல் போலி குற்றச்சாட்டுக்களை தைரியமாக ஆள்வோர்களால் சுமத்த முடிகிறது.

நமது நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் பொறுப்பை நமது இறைவனிடம் தான் கேட்க வேண்டும். காலம் இப்படியே சென்று விடாது. இறந்த அந்த அப்பாவிகளின் குடும்ப உறுப்பினர்களின் பிரார்தனை வீண் போகாது. இறைவனின் தண்டனையை அந்த கொடியவர்கள் நமது கண் முன்னாலேயே அனுபவிக்கும் காலமும் வரும். அதுவரை பொறுத்திருப்போம்.

http://www.ndtv.com/article/india/gl-singhal-accused-in-ishrat-jahan-case-reinstated-by-gujarat-government-532361
நன்றி: http://suvanappiriyan.blogspot.ae/2014/05/blog-post_29.html

கருத்துகள் இல்லை: