.காவி தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
.காவி தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூன், 2014

இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் ஆபீஸர் ஜி.எல்.சிங்காலுக்கு மீண்டும் பதவி

இர்ஷத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் ஆபீஸர் ஜி.எல்.சிங்கால் தற்போது பெயிலில் உள்ளார். சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையை 90 நாட்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்காததே இவரை பெயிலில் விட முக்கிய காரணமாக உள்ளது. முக்கியமான இந்த கேசில் சிபிஐ எவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டுள்ளது என்பதற்கு இந்த வழக்கே ஒரு சாட்சி. அதிகாரத்தில் இருப்போர் எந்த அளவு இனப் பற்றோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு அடுத்த படியாக ஜி.எல்.சிங்கால் குஜராத் அரசால் திரும்பவும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். போலி என்கவுண்டரில் ஒரு அப்பாவி இளம் பெண்ணின் உயிரை பறிக்க காரணமான ஒரு அதிகாரிக்கு மீண்டும் பதவி கொடுத்து கௌரவித்துள்ளது பிஜேபி அரசு. நரேந்திர மோடி பிரதமரானதால் அவரது இடத்துக்கு வந்துள்ள ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றவுடன் இந்த நிகழ்வு நடந்துள்ளது. கிரிமினல்களை முக்கிய பதவியில் அமர்த்துவதன் மூலம் தானும் ஒரு மற்றொரு மோடி என்பதை இந்த முதல்வரும் நிரூபிக்கிறார்.

'இது ஒரு மட்டரகமான சட்டத்தை மீறிய செயல். இங்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. பிஜேபி நீதியான ஆட்சியை கொடுப்போம் என்று மக்களுக்கு வாக்களித்தது என்ன ஆனது? ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு மீண்டும் அரசு பதவி தருவது முறைதானா?' என்று கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் வீரேந்திர குரோவர்.

மற்றொரு அநியாயமும் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர் தினேஷ் என்ற போலீஸ் அதிகாரி. இவரும் தற்போது பெயிலில் உள்ளார். வசுந்தராவ் அரசு மீண்டும் அவருக்கு பதவியைக் கொடுத்து அழகு பார்த்துள்ளது. ஆட்கள் மாறினாலும் இந்துத்வாவின் நிறம் மட்டும் மாறுவதில்லை என்பது குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களை மீண்டும் பதவியில் அமர்த்தியன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இங்கும் பிஜேபி தான் யார் என்பதை நிரூபித்துள்ளது.

இது போன்ற கிரிமினல்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தபபடுவதால்தான் இஸ்லாமியர்களின் மேல் போலி குற்றச்சாட்டுக்களை தைரியமாக ஆள்வோர்களால் சுமத்த முடிகிறது.

நமது நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்கும் பொறுப்பை நமது இறைவனிடம் தான் கேட்க வேண்டும். காலம் இப்படியே சென்று விடாது. இறந்த அந்த அப்பாவிகளின் குடும்ப உறுப்பினர்களின் பிரார்தனை வீண் போகாது. இறைவனின் தண்டனையை அந்த கொடியவர்கள் நமது கண் முன்னாலேயே அனுபவிக்கும் காலமும் வரும். அதுவரை பொறுத்திருப்போம்.

http://www.ndtv.com/article/india/gl-singhal-accused-in-ishrat-jahan-case-reinstated-by-gujarat-government-532361
நன்றி: http://suvanappiriyan.blogspot.ae/2014/05/blog-post_29.html

திங்கள், 2 ஜூன், 2014

ஹைதராபாத் கலவரம்: முஸ்லிம்களை கருவறுக்க திட்டமிடபட்டு நடத்தப்பட்டது – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

ஹைதராபாத் கலவரம்: முஸ்லிம்களை கருவறுக்க திட்டமிடபட்டு நடத்தப்பட்டது – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

கடந்த மே 24-ஆம் தேதி ஹைதராபாத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சீக்கியர்கள் நடத்திய கலவரம் திட்டமிட்டு கூட்டாக நடத்தப்பட்டது என்று குடியுரிமை கண்காணிப்பு குழு சார்பாக நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் விசாரணையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

1. சீக்கிய கொடியை எரித்ததே கலவரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இது உண்மைக்கு புறம்பானது. கொடி ஏற்றப்பட்டிருந்த திறந்த பகுதி வக்ஃப் நிலமாகும். ஹிந்துத்துவா கொள்கையுடன் நெருக்கமான சீக்கிய குழு ஒன்று அங்கு குருத்துவாரா கட்ட திட்டமிட்டிருந்தது.

2. கலவரத்தில் போலீசின் பங்கும் சந்தேகத்திற்கிடமானது. போலீஸின் துப்பாக்கிச் சூட்டில் வாஜித் அலீ, முஹம்மது சுஜாவுத்தீன், முஹம்மது ஃபரீத் ஆகியோர் கொல்லப்பட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் கூறுகிறது. ஆனால், முடிந்தவரை முஸ்லிம்களை கொலை செய்வதே போலீஸின் நோக்கமாகும். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சில்தான் குண்டு பாய்ந்துள்ளது. உடலின் கீழ் பகுதிகளில் யாருக்கும் குண்டு பாயவில்லை.

3. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது போலீஸ் தடுத்தது. இதனால் நேரம் விரயமாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

4. காலையில் பெட்ரோல் நிரப்பிய கேன்களுடன் சீக்கியர்கள் முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இது திட்டமிட்ட செயல் என்பதற்கான ஆதாரமாகும்.

5. துப்பாக்கிச் சூட்டிற்கான பொறுப்பை போலீஸ் ஏற்றுக்கொள்ள மறுப்பது கவலை அளிக்கிறது. துப்பாக்கிச் சூடு நடந்த இடம் தங்கள் எல்லைக்கு உட்பட்டது அல்ல என்று ஹைதராபாத் போலீசும், ஸைபராபாத் போலீசும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றனர்.

6. கலவரம் நடத்திய சீக்கியர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் முஸ்லிம்களின் உயிர்களுக்கும், சொத்துகளுக்கும் இழப்பு ஏற்பட்டிருக்காது.

7. முஸ்லிம்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கலவரம் நடந்தது உண்மைதான். 3 மணி நேரம் தாக்குதல் நடந்துள்ளது. போலீஸ் மற்றும் பி.எஸ்.எஃப் படையினரின் முன்னிலையிலேயே வன்முறையாளர்கள் வாள் மற்றும் கடாரியுடன் சுற்றி திரிந்துள்ளனர்.

8. ஹிந்துத்துவ சீக்கியர்கள் முற்றிலும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் முன்னணி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிரசித்தி பெற்ற உள்ளூர் இந்துத்துவவாதி ராஜா சிங்கின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. வகுப்புவாத உணர்வுகளை தூண்டி ராஜா சிங் அண்மையில் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்வாறு உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 25 மே, 2014

முசப்பர் நகரில் 'ஆலிம்'கள் மீது 'வகுப்பு வெறியர்கள்' துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி !

முசப்பர் நகரில் 'ஆலிம்'கள் மீது 'வகுப்பு வெறியர்கள்' துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி !

தாருல் உலூம் 'தேவ்பந்த்' மதரசாவில் 'தவ்ரா' பாடங்கள் படித்து வரும், 2 ஆலிம்(மாணவர்)களின் மீது, வகுப்பு வெறியர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகிவிட்டார்.

நேற்று முன்தினம் (23/05), முசப்பர் நகரின் 'மல்லோ புரா' பகுதியில், 'ஜும்ஆ' தொழுகை நடத்தி விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த, அபூசபா ஆசமி, முஹம்மத் முபாரக் ஆகியோர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும், முதலுதவிக்கு பின்னர்' மீரட்' மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

முபாரக்'கின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தபடியால், மேல்சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

வெள்ளிக்கிழமை தோறும், தேவ்பந்த் மதரசாவின் சார்பில், சுற்றுப்புற ஊர்களில் தொழுகை நடத்த அனுப்பி வைக்கும் ஆலிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை தாக்குதலால், மதரசா நிர்வாகம் கடும் அச்சத்தில் உள்ளது.

மதரசா மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது.

குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், தற்போது, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் H.N.சிங், தெரிவித்துள்ளார்

நன்றி :மறுப்பு பக்கம்
https://www.facebook.com/photo.php?fbid=639332772820583&set=a.300599480027249.78504.246687175418480&type=1&theater

திங்கள், 21 ஜனவரி, 2013

ஆர்.எஸ்.எஸ்., பாஜக முகாம்களில் தீவிரவாத பயிற்சி...

பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் முகாம்களில் தீவிரவாத பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே புது குண்டை வீசியுள்ளார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. காவி தீவிரவாத பயிற்சி இது தொடர்பாக சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்த கருத்து: ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா ஆகியவை இந்துத்துவா தீவிரவாத்தை உருவாக்குகின்றன. சில குண்டு வெடிப்பு சம்பவங்களின் விசாரணைக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தங்களது முகாம்களில் பயிற்சி இந்துத்துவா தீவிரவாதத்திற்கு பயிற்சி அளித்து வருகின்றன. சமாஜ்வுதா எக்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு மற்றும் மாலேகான் குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் காரணம் என்பது ஷிண்டேயின் கருத்து.

உள்துறை அமைச்சர் சுஷில்குமார் தெரிவித்த கருத்தை லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சையத் ஆதரித்திருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள ஹபீஸ் சையத், இந்திய உள்துறை அமைச்சர் இந்து தீவிரவாதம் குறித்து அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக உலக நாடுகள் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.