இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
ஞாயிறு, 25 ஜூலை, 2010
வீராங்கனைகளுக்கு செக்ஸ் டார்ச்சர்-பளு தூக்கும் அணி பயிற்சியாளர் நீக்கம்
டெல்லி: இந்திய பளு தூக்கும் அணிக்கான பயிற்சியாளர் ரமேஷ் மல்ஹோத்ரா, செக்ஸ் புகார் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கெளசிக் செக்ஸ் புகாரில் சிக்கிய நிலையல் தற்போது பளுதூக்கும் அணியின் பயிற்சியாளரும் செக்ஸ் புகாரில் சிக்கியிருப்பதால் பரபரப்பு கூடியுள்ளது.
இந்திய பளு தூக்கும் சம்மேளனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரபல பளு தூக்கும் வீராங்கனையான மல்லேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் மல்லேஸ்வரி.
ஜூனியர் பிரிவு வீராங்கனைகளுக்கு மல்ஹோத்ரா தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக புகார் கூறியிருந்தார் மல்லேஸ்வரி. கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த பயிற்சியாளருக்கான துரோணச்சாரியா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர் மல்ஹோத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய பளு தூக்கும் சம்மேளன பொதுச் செயலாளர் சஹாதேவ் யாதவ் கூறுகையில், உடனடியாக மல்ஹோத்ரா நீக்கப்பட்டுள்ளார். பெங்களூர் சாய் மையத்தில் தற்போது பயிற்சியாளராக இருந்து வருகிறார் மல்ஹோத்ரா.
முன்னதாக மல்லேஸ்வரி கொடுத்த புகாரில், கடந்த பத்து வருடங்களாகவே ஜூனியர் வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார் மல்ஹோத்ரா என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து துணைத் தலைவர் கும்பாசி சுப்ரமணியா, பயிற்சியாளர் பால் சிங் சந்து, இணைச் செயலாளர் மதன் லால் சால்வி தலைமையிலான குழு விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை கொடுக்கவுள்ளதாம்.
மல்லேஸ்வரி தற்போது இந்திய பளு தூக்கும் சம்மேளனத் துணைத் தலைவராக இருக்கிரார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக