சனி, 17 ஜூலை, 2010

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.ன் தலைவருடனான தொடர்பை வெளியிட்ட தொலைக்காட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்

டெல்லி:ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ் தக் தொலைகாட்சி அலுவலகம் மீது டெல்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு இருக்கும் தொடர்பை ரகசிய காமிரா மூலம் படம் பிடித்து, ஆஜ் தக் மற்றும் என்.டி டிவி அலைவரிசைகள் வெளியிட்டிருந்தது.

இதனால் ஆவேசம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இத்தொலைகாட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் தொடுத்தனர்.

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அருகே அமைந்துள்ள ஹெட்லைன்ஸ் டுடே தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுப்பதற்காக எஸ்.எம்.எஸ் மூலம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இச்செய்தி கிடைத்த உடனேயே தொலைகாட்சி அலுவலகத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து பாதுகாப்பு கோரியிருந்தனர்.

இருப்பினும் எஸ்.எம்.எஸ் கிடைத்து ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஒன்று கூடிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், பக்கத்திலுள்ள தொலைகாட்சி அலுவலகம் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்த போது அங்கு வெறும் 5 காவலர்களே பாதுகாப்புக்கு இருந்தனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், தொலைகாட்சி அலுவலகத்தை அடித்துத் தகர்த்தனர்.

நேரடியாக ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திலிருந்தே இத்தாக்குதலுக்குத் தொண்டர்கள் திரட்டப்பட்டு, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதப் பின்னணியை வெளியிட்ட தொலைகாட்சி அலுவலகம் மீது தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல், பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். நடத்திய அத்துமீறல் என பத்திரிக்கை உலகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: