சனி, 17 ஜூலை, 2010

இந்திய ரூபாய்க்கு புதிய அடையாள சின்னம்

அமெரிக்காவின் டாலர், இங்கிலாந்தின் பவுண்டு, ஐரோப்பிய யூனியனின் யூரோ போன்ற பணங்களுக்கு அடையாள சின்னங்கள் உள்ளன. இதே போல இந்தியாவின் ரூபாய்க்கும் அடையாள சின்னத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்காக நிபுணர்கள் சிலர் அடையாள சின்னத்தை உருவாக்கி கொடுத்தனர். இதில் சிறந்த சின்னங்களை தேர்வு செய்ய 5 கொண்ட பேர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் 5 சின்னங்களை தேர்வு செய்தனர்.

அதில் ஐ.ஐ.டி. மாணவர் உதய குமார் உருவாக்கி இருந்த அடையாள சின்னம் அனைவருக்கும் பிடித்து இருந்தது. அதைஇறுதியாக தேர்வு செய்தனர்.

இந்த சின்னம் மத்திய மந்திரி சபை ஒப்புதலுக்கு அனுப்பப்ட்டது இன்று கூடிய மந்திரி சபை கூட்டத்தில் இந்த சின்னத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய மந்திரி அம்பிகாசோனி நிருபர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: