சனி, 10 ஜூலை, 2010

பெங்களுர் குண்டுவெடிப்பு வழக்கு: மதானியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

பெங்களுர்:பெங்களுர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முன் ஜாமீன் கோரிய கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனுவை பெங்களுர் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

2008 ஜூலை 25-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நசீர் உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதானி உள்பட 6 பேர் மீது பெங்களூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதை அடுத்து அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே முன்ஜாமீன் வழங்குமாறு விரைவு நீதிமன்றத்தில் மதானி தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை நீதிபதி ஸ்ரீகாந்த் வடவடகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மதானி தரப்பு வழக்கறிஞர் உஸ்மான் மற்றும் அரசு வழக்கறிஞர் ருத்ரசாமி ஆகியோர் வாதாடினார்கள். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை மேலோட்டமாகப் பார்க்கும்போது முன்ஜாமீன் வழங்க அவசியம் இல்லை எனக்கூறி மதானியின் மனுவை டிஸ்மிஸ் செய்தார்

கருத்துகள் இல்லை: