மும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜூலை, 2011

மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் விசாரணை என்ற பெயரில் வதைத்துக் கொல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மான் தடம் புரளும் புலனாய்வுத்துறை?

ஜூலை 13ம் தேதி மும்பையில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப் புகளில் 21 பேர் பலியானார்கள்; 144 பேர் படுகாயமடைந்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளான ஒபேரா ஹவுஸ், ஜாவேரி பஜார், தாதர் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகளை சதிகாரர்கள் நிகழ்த்தியதன் மூலம் இந்தக் கொடியவர்கள் தாங்கள் ஒரு மனிதகுல விரோதிகள், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

இத்தகைய கொடிய செயலை செய்பவர்கள் யார்? இவர்களது பின்னணியில் இயங்கும் உள்நாடு மற்றும் அயல்நாட்டு சக்திகள் எவை என்பதில் வழக்கம் போலவே புலனாய்வு அமைப்புகள் திணறி வருகின்றன.

நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாதச் செயலை செய்தவர் கள் யார்? என்பதைக் கண்டறிய தீவிரமாக நடுநிலைமையுடன் செயல்படாமல் மீண்டும் தங்களது வழக்கமான, கீழ்த்தரமான, முட்டாள் தனமான, முன்யோ சனை யற்ற, ஒருபக்க சார்பான விசாரணையை மேற்கொண்டு நாட்டையே சர்வதேச அவமானத் தில் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது மகாராஷ்ட்ரா காவல் துறை.

ஃபயாஸ் உஸ்மான் என்ற 35 வயது இளைஞரை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பின்னர் மும்பை சியான் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என குடும்பத்தினரிடம் மிகவும் துணிகரமாக சொல்லியிருக்கிறது. மகாராஷ்ட்ரா அரசு.

காவல்துறையினர் ஃபயாஸ் உஸ்மானை சித்திரவதை செய்து படுகொலை செய்து விட்டதாக கதறுகின்றனர் அவரது உறவினர்கள்.

ஹைபர் டென்ஷனில் பாதிக்கப் பட்டு இருந்த ஃபயாஸ் உஸ்மானை அச்சுறுத்தி, உருட்டி மிரட்டியே சாகடித்துள்ளனர் பாவிகள் என குமுறுகின்றனர் ஃபயாஸின் உறவி னர்கள்.

தனது தந்தையை சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணிக்கு யூனிபார்ம் அணியாத சில மர்ம மனிதர்கள் அழைத்துச் சென்றதாகவும், தங்களிடம் அது குறித்து எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் இழுத்துச் சென்றதாகவும் படு கொலை செய்யப்பட்ட ஃபயாஸ் உஸ்மானின் மகன் அஜீம் உஸ்மானி கூறுகிறார்.

ஃபயாஸ் உடல்நிலை மோச மடைந்து இருப்பதாவும் அவரை சியோன் மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும் உடனடியாக பார்க்க வருமாறும் எங்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற போது ஃபயாஸ் உஸ்மானின் இறந்த உடலைத்தான் பார்க்க முடிந்தது என வெடிக்கிறார் ஃபயாஸின் அண்டை வீட்டுக்காரர் சலீம் ஸித்தக்கி.

மூளைப் பகுதியில் நரம்புகள் வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ஃபயாஸ் இறந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் 2008ல் நிகழ்ந்த தொடர்குண்டுவெடிப் புகளில் தொடர்புடையவர் என்றும் இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் உஸ்மானின் சகோதரர் அஃப்சல் உஸ்மானி தற்போது சிறையில் உள்ளார்.

இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பே போலியானது. அந்த அமைப்பை உருவாக்கியவர்கள் யாரோ பெயர் தெரியாத சில பயங்கரவாதிகளா? என்பதையே நிரூபணம் செய்ய முடியாத நிலையில், இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு உண்மையான தாய் தந்தை சங்பரிவார் அமைப் புகளா? அல்லது புலனாய்வு அமைப்பில் உள்ள சில விஷமம் படைத்தவர்களா? என்ற வினா நாட்டு மக்களின் மனதில் எழுந்தது. கடந்த ஆண்டு இந்திய ஆங்கில சேனல்களிலும் மேற்கூறிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஒருவரின் சகோதரரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் ஒரு அப்பாவியின் உயிரை அநியாயமாக பறித்து விட்டார்களா? என்ற கேள்வி நாடெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் உள்ளங்களில் எழுகிறது.

உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டுமேயல்லாது அப்பாவிகளை இழுத்துச் சென்று அவர்களது உயிர்போகும் வரை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துக் கூடாது என மகராஷ்ட்ர மாநில சமாஜ்வாடிக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அபூ அஸிம் ஆஸ்மி தெரிவித்தார்.

இந்தியாவின் நியூயார்க் என அழைக்கப்படும் வர்த்தகத் தலை நகரான மும்பை, இதுவரை 11 பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது. 704 உயிர்கள் பலியாகி உள்ளன. 2 ஆயிரத்து 289 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் எத்தனை பேர் அதன்பிறகு உயிரிழந்திருப்பர் என்ற விவரம் யாருக்கும் தெரியாது.

18 ஆண்டுகளாக நடைபெறும் மும்பை குண்டுவெடிப்புகளா னாலும் சரி, நாட்டில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளானாலும் சரி கடந்த ஐந்து ஆண்டுகளாக குண்டுவெடிப்பு வழக்குகளின் போக்கும், குண்டுவைப்பவர்கள் யார் என்பது குறித்த போக்கிலும் ஒரு திருப்புமுனையையும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் இந்த தேசம் சந்தித்தது.

அதுவரை இந்திய அரசும் இந்திய புலனாய்வு அமைப்புகளும் காற்றிலே சிலம்பம் விளையாடு வதைப் போன்று குருட்டுப் பூனை விட்டத்தில் தாவுவதைப் போன்று இருந்த நிலை மாறியது.

மாவீரன் ஹேமந்த கர்கரே போன்ற நெஞ்சுரம் மிக்க நேர்மையான காவல்துறை அதிகாரிகள் குண்டுவெடிப்பு வழக்குகளில் விசாரணைகளை தொடங்கிய பிறகு, சங்பரிவார் பாசிஸ பயங்கரவாதத்தின் பின்னணி ஒவ்வொரு குண்டு வெடிப்புகளிலும் பின்னணியாக இருந்து செயல்பட்டது அம்பலமாகி வருகிறது.

இரண்டு பேரை மட்டும் பலிகொண்ட அஜ்மீர் குண்டு வெடிப்பாகட்டும் ஏராள மானவர்களை பலிகொண்ட சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு மாலேகான் குண்டுவெடிப்புகள் போன்றவற்றில் சங்பரிவார் பாசிஸ பயங்கரவாதிகளின் தொடர்புகள் அம்பலம் ஆன பிறகு சங்பரிவார் பயங்கரவாதிகளின் சதிச்செயல்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

பெண்சாமியார் பிரக்யாசிங் முதல் ராணுவத்தில் இருந்து கொண்டே தேசத்துரோக செயல் களை செய்த பயங்கரவாதி லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், ஆர்.எஸ்.எஸ் காரர்களால் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் முக்கியப் பிரமுகர் பயங்கரவாதி சுனில் ஜோஷி போன்றவர்களின் முக்கிய தேசத்துரோக பயங்கரவாத சதிச் செயல்கள் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுவரை இந்நாட்டின் அப்பாவி களை துன்புறுத்தி சிறைப் பிடித்ததற்கு காவல்துறையும் புலனாய்வுத்துறையும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கும் அவர்களது குடும்பங்களும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.

இனி நாட்டில் நடைபெறும் அசம்பாவிதங்கள் அனைத்திற்கும் இனிமேல் நியாயமான முறையில் நீதிவிசாரணை நடத்தப்படும், அப்பாவிகள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என நாட்டு மக்கள் நம்பி வந்த நிலையில்&உண்மைக் குற்றவாளிகளை தேடும் வேலையை விட்டுவிட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படுகிறவர்களை விட்டு விட்டு, இந்நாட்டின் பழமையான பயங்கரவாதிகளை கண்காணிப்பதை விட்டுவிட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் போக்கு மீண்டும் தொடர்வதா?

2008ம் ஆண்டு ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. நிலைமையை அமைதிப் படுத்துவதை விட்டுவிட்டு தொழுகைக்கு வந்தவர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆந்திர காவல்துறை.

ஏராளமான இளைஞர்களைக் கைது செய்து கொடுமைப் படுத்தியது ஆந்திர காவல்துறை; அதில் பலர் பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் தவறுதலாக கைது செய்யப்பட்ட ஹலீம் என்ற இளைஞரை ஹைதராபாத் சிறையில் கண்டு மனம் மாறினார் உண்மைக் குற்றவாளியான சுவாமி அஸீமானந்தா.

இவ்வாறு பல்வேறு நடுநிலை யான காரணங்கள் இருந்தபோதும் மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்ற கதையாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை இழுத்து பிடித்து வளைக்கும் போக்கு தொடர்வது நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் ஒருவித பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு குண்டுவெடிப்பு நிகழும் காலகட்டத்தையும் தீவிர மாக ஆராய்ந்து பார்த்தால் இந்தியா&பாகிஸ்தான் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக இருதரப்பு பேச்சுவார்த் தைகளை மேற்கொள்ளும் பொழு தெல்லாம் அதனை சீர்குலைக்கும் தீய நோக்கோடு குண்டுகளை வைக்கும் சதிகாரச் செயல் நடை பெறுகிறது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

2007ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பேச்சு நடத்தும் முன்முயற்சிகள் நடந்தன. இருநாடுகளுக்கு உறவு ஓரளவு சீர்பட்டு இந்தியா பாகிஸ்தான் இடையே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சென்று வந்தது. பேச்சுவார்த்தைகளையும் சீர்குலைக்க வேண்டும், இருநாட்டு உறவுக்குப் பாலமாக அமைந்து இருக்கும் சம்ஜோதா ரயிலையும் குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் சம்ஜோதா தொடர்வண்டி குண்டுவைத்து சதிகாரர்களால் தகர்க்கப்பட்டது.

அதைப்போன்று 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் பாகிஸ்தான்&இந்தியா இடையே உறவுக்கு கேள்விக்குறியை ஏற்படுத்தியதோடு இரு நாடுகளுக் கிடையே போர் வெறியாக மாறியது நிஜம்.

உள்நாட்டிலும் அமைதி குலைய வேண்டும். அண்டை நாட்டு உறவையும் சீர்குலைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருப்பார்களா? என்ற கோணத்தில் விசாரிப்பதை விடுத்து அப்பாவிகளை வதைப் பது என்ன நியாயம்?

மும்பை குண்டுவெடிப்பைப் பொறுத்தவரை மகராஷ்ட்ரா காவல்துறையினர் காலகாலமாக ஒரே மாதிரியான விசாரணை பாணியையே பின்பற்றுகின்றனர்.

ஆம், தற்போது குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் நண்பர்கள் அல்லது உறவினர்களை வளைத்து சித்திரவதை செய்தனர். தற்போதைய குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையிலும் ஃபயாஸ் உஸ்மான் என்ற இளைஞ ரின் உயிரே பறிக்கப்பட்டு விட்டது. மகாராஷ்ட்ரா அரசு உஸ்மானின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்திருக்கிறது. உயிருக்கு விலை நிர்ணயித்து விட்ட நிம்மதியில் மகராஷ்ட்ர மாநில அரசு இருக்கிறது. மக்களின் மனக்குமுறல்கள் கொந்தளிப்பாக மாறினால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்க மறுக்கும் இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் என்கிறார் ஒரு மூத்த ஊடகவியலாளர்.

ஃபயாஸ் உஸ்மானைப் போலவே மன்சர் இமாம் என்ற மற்றொரு இளைஞரை மகராஷ்ட்ரா காவல் துறை ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து கைது செய்து விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் அஹமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக சிறையில் வாடும் டேனிஷ் ரியாஸ் என்பவரின் நண்பராம். தற்போது மன்சர் இமாம் கதி என்னவானது என்பது குறித்து அவரது குடும்பத்தினர் பெரும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்காக பிடித்து செல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மான் விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு விட்டார். ஜார்கண்ட் மாநிலத்தி லிருந்து மன்சர் இமாம் என்ற இளைஞர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப் பட்டுள்ளார்.

அத்தோடு பீகார் மாநிலத்தி லிருந்து ரியாவுல் சர்க்கார் என்ற இளைஞர் மகராஷ்ட்ரா காவல்துறையால் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும் குஜராத், கர்நாடக மாநிலம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்திற்கும் மகராஷ்ட்ரா காவல்துறை சென்றுள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை என்ற பெயரில் இன்னும் எத்தனை இளைஞர்களின் உயிர்கள் பந்தாடப்படுமோ என்ற அச்சம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அச்சமும் விரக்தியும் நிலவுவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நன்மை அளிக்க முடியாது என சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் தீவிரவாதமும் பயங்கர வாதமும் வீழ்த்தப்பட உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனைகள் வழங்க வேண்டும்.
நேற்று வரை அப்பாவிகளை அச்சுறுத்தி சிறையில் அடைத்த மகராஷ்ட்ர காவல்துறை தற்போது அச்சுறுத்தி அச்சுறுத்தி உயிர்களை கருவறுக்கும் நிலைக்கு சென்றுள்ளது வெட்கக் கேடானது.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு துணிச்சலான நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும்.

திக்விஜய்சிங் போன்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உண்மைக் குற்றவாளியை காப் பாற்றி அப்பாவிகளை அழிக்கும் செயல் ஒடுக்கப்பட வேண்டும்.

சங்பரிவார் அமைப்புகளிடம் விசாரிக்க வேண்டும்-திக் விஜய்சிங்

சங்பரிவார் உட்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும், மும்பை குண்டு வெடிப்பு சம்பவ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். "மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் சங்பரிவார் அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம்' என, குற்றம் சாட்டினார்.: மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இந்து அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். இந்து அமைப்புகளால் தான் நாட்டில் பயங்கரவாதம் பரவுகிறது. அவை வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்று செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

thanks to : tmmk.in

திங்கள், 18 ஜூலை, 2011

”ஹிஜாப் என்னுடைய அணிகலன்! மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி

afreen
மும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்து செல்வதில் ஒரு நிகாப அணிந்த சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.

18 வயதிலேயே இஸ்லாத்திற்கு வந்ததோடல்லாமல் திருமணத்திற்கு பின் சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவும் மக்கள் பிரட்சினைக்காக பாடுபடவும் வேண்டும் என்றதும் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடும் இடத்தில் அக்கறையை மட்டும் மையமாக கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறார், சகோ.ஆஃப்ரீன்.

”ஹிஜாப் என்னுடைய அணிகலன், அதை அணிவதால் என் சமூகத்திற்கு பாடுபட எனக்கு எந்த வித தடையுமில்லை” என்கிறார் சகோதரி. நிகாபை அணிவதாலும், முஸ்லிமாய் இருப்பதாலும் இது வரை தடையெதுவும் கண்டதில்லை எனக்கூறும் இந்த சகோதரி, தன் வெற்றிக்கு முதல் காரணமாக அல்லாஹுத’ஆலாவையும், அதன் பின் தன்னுடைய ஒவ்வொரு அடியிலும் துணை நிற்கும் கணவனையுமே புகழ்கிறார். நிகாப் இருப்பதால் வேலை செய்யுமிடத்தில் ஏதேனும் இடையூறோ தயக்கமோ இருக்குமே என்றால், எல்லா நிலையிலும் இந்த மக்கள் எனக்கு துணை நிற்பதோடல்லாமல், சில சமயம் எதிர்பார்க்காத அளவிற்கும் ஒத்துழைப்பு நல்கின்றனர் என்கிறார்.

மராத்தி, ஹிந்தி, குஜராத்தி தவிர ஆங்கிலமும் தெரிந்த இவர், தேர்தலில் முக்கிய வாக்குறுதிகள் அளித்தது குடிநீர், ரோடு மற்றும் சுகாதார வசதிகளின் மேல்தான். அதனாலேயே பிரச்சார நேரத்தில் சில பிரச்சினைகளையும் சந்தித்துள்ளார். “அன்றைய தினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதி மக்களோ அதிகாலை 4 மணிக்கே எழுந்து குடிநீருக்காக லைனில் நிக்க வேண்டிய நிலை, எனவே அவர்களின் கோபாவேசத்தினாலும், அதில் ஏற்பட்ட சலசலப்பினாலும் கிட்டத்தட்ட என்னுடைய வாகனத்திலிருந்தே கீழே விழும் சூழ்நிலையாகி விட்டது” என்கிறார்.

தன்னுடைய பணியில் சாதனையாக சகோ.ஆஃப்ரீன் நினைப்பது, முனிசிபாலிட்டியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மசோதா. அப்படி என்ன மசோதா? பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு கொண்டு போகும்போதும், போஸ்ட்மார்ட்டம் முடித்து வரும்வரையும் ஒரு பெண் டாக்டரும், உதவிக்கு ஒரு பெண்ணும் கட்டாயம் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆணையே அது. ஏன் இப்படி ஒரு மசோதா என்றால், சட்டென பதில் வருகிறது, சகோதரியிடமிருந்து. “ஓர் தடவை ஒரு 20 வயதுப்பெண் விபத்தில் இறந்து போனார். அவருடைய உடலை வாங்க மருத்துவமனைக்கு சென்றபோது ஒரு மனிதன் அந்தப்பெண்ணின் உடலில் போர்வை போர்த்தும் சாக்கில் அவளை அவசியமற்ற விதத்தில் தொடுவதைக் கண்டேன். அன்றெழுந்த முடிவு இது” என்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினையே கல்வியறிவில்லாததும், வேலைஞானமும் இல்லாததுதான் என்னும் சகோ.ஆஃப்ரீன், தன்னுடைய கணவரின் துணை கொண்டு மக்களுக்கென ரேஷன் கார்டு, பிசி, ஓபிசி பத்திரங்கள், வாக்காளர் அட்டை போன்ற அத்தியாவசிய அட்டைகளை பெறுவதற்கான வழிமுறை வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துகிறார். ”நம் முஸ்லிம் சமூகத்தில் இந்த மாதிரி தேவையான அட்டைகளை வாங்கும் வழிமுறைகள் தெரியாததே ஸ்காலர்ஷிப், அரசாங்க வேலை போன்ற பல அரசாங்க உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போக வைக்கிறது” என்கிறார். இதற்காக கோடை காலத்தில் மாதம் முழுக்கவும் கேம்ப்கள் நடத்துகிறார். இவரின் உதவியாளார்கள், வீட்டிற்கு வீடு சென்று கதவை தட்டியழைத்தும் வந்து இவற்றில் பங்கு பெற வைக்கின்றனர்.

அரசியலில் நுழைந்து விட்டால் ஆண்களின் ஆதிக்கத்தை சந்தித்துத்தானே ஆகவேணும் என்ற நிலையில், சட்டரீதியான, நுணுக்கமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அரசியல் ரீதியான பேச்சுக்களுக்கும், செயல்களுக்கும் தன் கணவரின் முடிவில் விட்டுவிடுகிறார்.

செய்தி மூலம், ஆங்கிலத்தில் படிக்க : - http://www.coastaldigest.com/index.php?option=com_content&view=article&id=26458:hijab-is-my-ornament-mumbai-corporator-afreen

THANKS TO ANNU
source :

புதன், 7 ஜூலை, 2010

இஸ்ரத்தின் மீதான குற்றச்சாட்டிற்கு குடும்பத்தினர் மறுப்பு- உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்த கோரிக்கை

மும்பை:மோடியை கொல்ல வந்த தீவிரவாதிகள் என்று கூறி 2004ம் ஆண்டு 3 பேருடன் கொல்லப்பட்ட இஸ்ரத், லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்தவர் என்ற டேவிட் ஹெட்லியின் வாக்குமூலத்தை இஸ்ரத் ஜஹானின் குடும்பத்தார் முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். "என் மகள் ஒரு அப்பாவி, அவள் இதை செய்திருக்கவேமாட்டாள், எப்பொழுதும் நாட்டை விரும்பவே எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து இருக்கிறோம், இந்த அறிக்கை தவறானது" என்கிறார் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா கவுஸர்.

தானே நகரின் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரத். இவரை லஷ்கர்-இ-தொய்பாவின் இந்தியப் பிரிவு தலைவராக கூறப்படும் முஸமில் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவின் தீவிரவாதப் பணிகளுக்காக தேர்வு செய்திருந்தார் என்றும், முஸமில் 2007 வரை இந்தியப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார் எனவும் அமெரிக்கா சென்றிருக்கும் இந்திய விசாரணைக் குழுவிடம் ஹெட்லி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாயின.

ஹெட்லியின் பணி இந்தியாவில் 2006ல் தான் தொடங்கியது ஆனால் இஸ்ரத் உட்பட நான்குபேர் ஜூன் 15 2004ல் கொல்லப்பட்டனர் என்று அதே அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் இஸ்ரத்தின் தாயார் ஒரு மனுதாக்கல் செய்து அதில், தனது மகள் ஒரு சேல்ஸ்பெண். ஜாவேத் ஷேக்குக்காக நருமணப் பொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தார் என்று கோரியிருந்தார்.

அஹமதாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி S.P.தமாங்க்,இது ஒரு போலி என்கவுண்டர் என்று தீர்ப்பளித்திருந்தார்.252 பக்க அறிக்கையில் இது ஒரு கொலை வெறித்தாக்குதல் என்று என்கவுண்டர் நடத்திய போலீஸ் டி.ஜி.பி., வன்சாராவை சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 27 ஜூன், 2010

ராஜ் தாக்கரே மகன் மராத்தியில் படிக்க மாட்டார் ?

மும்பை : ராஜ் தாக்கரேவியின் மகாராஷ்டிர நிர்மாண் சேனா மராத்தி மொழியை எப்படியாவது வளர்க்க மராத்தி மொழி தெரியாத வட இந்தியர்கள், தென்னிந்தியர்களுக்கு மராத்தி வகுப்புகள் நடத்துகிறது. மராட்டியம் மராட்டியர்களுக்கே எனும் கோஷத்துடன் மராத்திய மொழி வெறியை தூண்டி விடும் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் மகன் அமித் மாதுங்காவில் உள்ள ருயீயா கல்லூரியில் மாஸ் மீடியாவில் பட்டப் படிப்புக்காக ஆங்கில மீடியத்தில் சேர்ந்துள்ளார், அதே படிப்பு அக்கல்லூரியில் மராத்திய மீடியத்தில் இருந்த போதிலும்.

மராத்தி மொழிக்குரிய அந்தஸ்தை பெற்று தருவதே தனது நோக்கம் என கடந்த இரண்டு வருடங்களாக முழங்கி வரும் ராஜ் தாக்கரே நேற்று சுமார் 50 ஆதரவாளர்கள் புடை சூழ கல்லூரிக்கு சென்று முதல்வரின் அறைக்கு நேரடியாக சென்று தன் மகனை ஆங்கில வழி கல்வியில் சேர்த்து விட்டார். இதை பற்றிய கூறிய தாக்கரேயின் மனைவி தன் மகன் அங்கு தான் படிக்க போகிறான் என்றும் எந்த மொழியில் என்பது தன்க்கு தெரியாது என்றும் கூறினார்.

அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அமித் அக்கல்லூரியில் சேர்ந்தால் அரசியல் பாடம் நடத்தும் ஆசிரியர் இது போன்ற மொழி வெறியை தூண்டும் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து எடுப்பார். தாக்கரேயின் ம்கன் முன்னாலேயே அவர் தன் கருத்துக்களை வெளிப்படையாக கூற முடியுமா என்று கவலைப்படுவதாக கூறினார். ஏற்கனவே இது போல் ராஜ் தாக்கரேயின் மகன் ஒரு கல்லூரியில் இரண்டாவது மொழியாக மராத்திக்கு பதிலாக ஜெர்மனை தேர்ந்தெடுத்த போது அதில் எளிதாக மதிப்பெண் எடுக்கலாம் என்பதற்காகவே தலைவர் மகன் அதை தேர்ந்தெடுத்ததாக சப்பை கட்டு கட்டியது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 17 ஜூன், 2010

‘அப்துல்’ என்ற பெயர் இருந்ததனால் தான் 'அப்துஸ் ஸமத்' கைது செய்யப்பட்டார் – நீதிமன்றத்தில் ஏ.டி.எஸ். உளறல்

கர்நாடகா மாநிலம் பட்கலைச் சேர்ந்த அப்துஸ் ஸமத் ஆயுத வழக்கில் கைது செய்யப்பட்டதாக ஏ.டி.எஸ். சப்பைக்கட்டு கட்டினாலும், அவருக்கெதிராக குற்றவாளி என்று சித்தரிக்கும் ஆவணமோ அல்லது ஆதாரமோ இல்லாததனால் தான், அவருக்கு ஜாமீன் மிக எளிதில் கிட்டியுள்ளது.

கடந்த திங்களன்று மும்பை நீதிமன்றத்தில் ஸமதின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, “எதன் அடிப்படையில் அப்துஸ் ஸமத் கைது செய்யப்பட்டார்?” என்ற கேள்விக்கு ஏ.டி.எஸ் அளித்த பதிலோ! “அப்துஸ் ஸமத் ஆயுத வழக்கில் கைது செயப்படுள்ளதாகவும், ஆயுத வழக்கின் ஆவணங்களின் படி ‘அப்துல்’ என்ற பெயர் இடம் பெற்றுள்ளதால் தான் ‘அப்துஸ் ஸமத்’ கைது செய்யப்பட்டதாக ஏ.டி.எஸ். உளறியது.

அப்போது குறுக்கிட்ட ஸமதின் வழக்கறிஞர் முபீன் ஷோல்கர், "‘அப்துல்’ என்பது முஸ்லீம்களின் பொதுவான முன்பெயர் என்றும் அப்படியென்றால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான அப்துல்களை ஏ.டி.எஸ். கைது செயும்மா?" என்று கிண்டலாக கேட்டார். "அப்படியே இருந்தாலும் கூட, ஏன் குற்றப்பத்திரிகை ‘அப்துலின்’ பெயரில் தாக்கல் செய்யப்படாமல் ‘அப்துஸ் ஸமத்’ என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினார்.

"ஆயுதவழக்கின் ஆவணங்களின் படி ‘பைக்’ என்ற நபர் தான் ஏ.டி.எஸ். தேடப்படும் ஆளே தவிர அப்துலோ அல்லது அப்துஸ் ஸமதோ அல்ல" என்று முபீன் மேலும் விவரித்தார்.

ஆயுதவழக்காக இருந்தாலும் அல்லது புனே குண்டுவெடிப்பு வழக்காக இருந்தாலும், அப்துஸ் ஸம்திற்கெதிராக ஒரு ஆதாரமும் வைக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய நீதிபதி எஸ்.எல். பதான், ஏ.டி.எஸ். உண்மையான கோணத்தில் இவ்வழக்கை விசாரிப்பதிலிருந்து தவறிவிட்டதாக கூறி அப்துல் ஸமதிற்கு ஜாமீன் வழங்கினார்.

கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட மும்பை ஏ.டி.எஸ். அரசியல்வாதிகளை திருப்தி படுத்த பலமுறை சூழ்ச்சிகள் மேற்கொண்டும், ஸமத் போன்ற வழக்குகள் ஏ.டி.எஸ்ஸின் முகமூடியை கிழித்துள்ளது. இதேபோல தான், மலேகான் வழக்கிலிருந்து ஹிந்துத்துவ தீவிரவாதிகளை MCOCA என்ற படிக்கையிலிருந்து விடுவிக்க முயற்சி செய்திருந்தபோதும், மும்பை ஏ.டி.எஸ். பல அவமானங்களை வாங்கிக் கட்டியுள்ளது.

Siasat and Mumbai Mirrorஐ.பியின் தொடர்பில் இருக்கும் சில அதிகாரிகளின் சூல்சிகளினால் தான் மும்பை ஏ.டி.எஸ்சிற்கு ஒருபோதும் நல்ல பெயர் கிட்டுவதில்லை என்று சட்ட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

source:siasat,MM

சனி, 12 ஜூன், 2010

26/11 இரவன்று காமா மருத்துவமனையில் என்ன நடந்தது?

மும்பை 26/11 வழக்கில் கசாபிற்கு தூக்கு தண்டனை விதித்து சரியாக ஒரு மாதமாகும் நிலையில், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கையாக, கசாபின் கருணை மனு தொடர்பாக முபீன் சோல்கர் மற்றும் ஃபர்ஹானா ஷா ஆகிய இரண்டு மூத்த வக்கீல்களை கசாபிற்காக வாதாடும்படி மும்பை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

கிரிமினல் வக்கீல் முபீன் சோல்கர் பல தீவிரவாத வழக்குகளை கையாண்டவர். தற்போது இவர்தான் அப்துஸ்ஸமத் பட்கலின் வழக்கையும் கையாள்கிறார்.

அதேபோல்,ஃபர்ஹானா ஷாவும் சஞ்சய் தத்தின் வழக்கு உட்பட பல வழக்குகளை வெற்றிகரமாக முடித்தவர்.

நியமணத்திற்க்குப் பின் இருவரும் இணைந்து 'மும்பை மிரர்'என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியை இங்கு தருகின்றோம்:

1.இந்த முக்கியமான வழக்கை எப்படி கையாள உள்ளீர்கள்?
கசாப் விவகாரத்தில் மீடியா என்ன தெரிவித்ததோ அது தான் எங்களுக்கு தெரியும். ஆகவே, முதல் கட்டமாக நாங்கள் இருவரும் கசாபுடன் உட்கார்ந்து உண்மையான செய்திகளை வெளிக்கொண்டு வருவோம். இவ்வழக்கின் பெருவாரியான போலீஸ் மற்றும் நீதிமன்ற ஆவணங்களை படித்து அதை பரிசீலிப்போம்.

2.நீதிமன்றத்தின் உங்கள் நியமனத்தை எவ்வாறு காண்கிறீர்கள்?
ஆச்சரியம் அளிக்கும் வகையில், நீதிபதி ஜே.என்.படேல் எங்களை குறிப்பாக இவ்வழக்கில் நியமித்தது பெருமையடையச் செய்கிறது. இந்த வழக்கு தேசிய மீடியா மட்டுமல்லாமல் உலகமே உற்று நோக்குகின்ற முக்கியமான வழக்காக இருக்கிறது. நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு எங்களுக்கு புரிகிறது. அதை நிறைவேற்றுவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம்.

3.கசாபிடம் ஸ்பெஷலாக கேட்பதற்கு உங்களிடம் ஏதாவது உள்ளதா?
ஆம், பல சதிகளும், சந்தேகங்களின் பின்னணியில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள காமா மருத்துவமனையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே உட்பட 4 மூத்த அதிகாரிகளின் கொலைக் குறித்து உண்மையாக நடந்தது என்ன? என்ற கேள்வியை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

புதன், 19 மே, 2010

மும்பைத் தாக்குதல்: விடைகாண முடியாத புதிர்கள்

மும்பை:மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது கைதுச் செய்யப்பட்டதாக போலீஸ் கூறும் அஜ்மல் கஸாபிற்கெதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆர்தர் ரோடு சிறையில் சிறப்பு நீதிமன்றம் உறுதிச் செய்யும் பொழுது தேசத்தை உலுக்கிய தாக்குதலுடன் தொடர்பான ஏராளமான புதிர்களுக்கும், மர்மங்களுக்கும் விடைகள் காணப்படவில்லை.
•தாக்குதலுடன் தொடர்புடைய போலீசின் கூற்றுகளையும், நேரடி சாட்சிகளின் கூற்றும், பத்திரிகைகளின் அறிக்கையையும் குறித்து எவ்வித புலனாய்வும் அதிகாரிகளிடமிருந்து இதுவரை நடக்கவில்லை.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒரு பிரிவினர் தங்கியிருந்தது யூதர்களின் மையமான நரிமான் ஹவுசில் என்று துவக்கம் முதலே செய்திகள் வெளிவரத் துவங்கியிருந்தன. லியோபோர்ட் கஃபெயில் தாக்குதல் நடத்தியது யூத மையத்தில் தங்கியிருந்தவர்கள் என்று தாக்குதலுக்கு இலக்கானவர்களின் நேரில் கண்ட சாட்சி வாக்குமூலங்களில் காணப்படுகின்றன.

மும்பைத் தாக்குதலைக் குறித்த சரியான விபரங்கள் ‘ரா’ அதிகாரிகளுக்கு கிடைத்த பிறகும் தாக்குதலை தடுக்க அதிகாரிகளுக்கு இயலாமல் போனது மர்மமானதாகும்.

கராச்சியிலிருந்து வந்த கும்பல் குஜராத்தைச் சார்ந்தவரின் படகை பறித்தது தொடர்பான புலனாய்வின் முடிவும் என்னவென்று தெரியவில்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய சிம்கார்டுகள் குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து வாங்கியது உறுதியான பின்னரும் அதிகாரிகள் அதுகுறித்து புலனாய்வு நடத்த தயாரில்லை.

கடும் பாதுகாப்பு நிறைந்த தாஜ்-ட்ரைடண்ட் ஹோட்டல்களில் மிகப்பெரும் வெடிப்பொருட்களை எவ்வாறு கொண்டுச் செல்ல முடிந்தது?

பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலோனார் பர்தாவும், தொப்பியும் அணிந்த முஸ்லிம்களாவர் இது எவ்வாறு நிகழ்ந்தது?

தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் உள்ளூர் மராத்தி மொழியில் உரையாடியுள்ளனர் உள்ளிட்ட ஏராளமான சந்தேகங்களுக்கு தற்பொழுதும் விடை கிடைக்கவில்லை.

இவற்றையெல்லாம் விட முக்கியமானது ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே உள்ளிட்ட மூன்று முக்கிய போலீஸ் அதிகாரிகள் மும்பை தாக்குதலுக்கிடையே மர்மமான முறையில் கொல்லப்பட்டதைக் குறித்து எழும் சந்தேகங்கள்.

மலேகான் உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு புலனாய்வு முக்கிய நபர்களை நோக்கி நகர்ந்த சூழலில்தான் மும்பைத் தாக்குதல் நடைபெற்றது.

புலனாய்வு பொறுப்பை வகிக்கும் ஏ.டி.எஸ் தலைவரை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணிக்கு அதுவும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அனுப்பியது யார் என்பது இப்பொழுதும் மர்மமாகவே உள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் தங்கியிருந்த காமா மருத்துவமனைக்கு சென்ற கர்காரேயும் அவரோடிருந்தவர்களும் கூடுதல் படையினரை அனுப்ப கோரிய செய்தி புறக்கணிக்கப்பட்டதாக கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் மனைவியர் உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கர்காரே அணிந்திருந்த புல்லட் ப்ரூஃப் ஆடை தொடர்பான சந்தேகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் கர்காரேயைக் கொன்றது யார் என்பதுக் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

சி.எஸ்.டியிலும், கர்காரே கொல்லப்பட்ட காமா மருத்துவமனையிலும் கஸாபும், அபூ இஸ்மாயிலும் சேர்ந்து தாக்குதல் நடத்தினர் என போலீஸ் கூறுகிறது. ஆனால் நேரில் கண்ட சாட்சிகளோ காமா மருத்துவமனையிலும், சி.எஸ்.டி யிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடந்ததாக கூறுவதை போலீஸ் கண்டுக்கொள்ளவே இல்லை.

அமெரிக்காவில் கைதுச் செய்யப்பட்ட டேவிட் கோல்மென் ஹெட்லி மும்பை தாக்குதலில் தனது பங்கை ஒப்புக்கொண்டது இவையெல்லாவற்றையும் விட மர்மமாக உள்ளது.

லஷ்கர்-இ-தய்யிபா மற்றும் எஃப்.பி.ஐயின் ஏஜண்ட் ஹெட்லி என செய்திகள் வெளிவந்தன. ஹெட்லியை இந்தியாவிற்கு அமெரிக்கா ஒப்படைக்கா விட்டாலும் கூட விசாரனைச் செய்யக்கூட இந்திய அதிகாரிகளுக்கு இயலவில்லை.

மும்பை தாக்குதலில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹெட்லியை இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்காமலிருந்ததும் மர்மமாக உள்ளது.

மும்பை தாக்குதல் இந்தியாவில் ஹிந்துத்துவா சக்திகளும், மொஸாத்-சி.ஐ.ஏ உளவு நிறுவனங்களின் ஏற்பாடு என துவக்கம் முதலே குற்றஞ்சாட்டப்படுகிறது. மும்பை தாக்குதல் வழக்கில் தீர்ப்புக்கூறிய நீதிபதி எம்.எல்.தஹ்லியானி இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து விசாரணைச் செய்யப்பட்ட இரண்டு இந்திய குடிமகன்களை குற்றமற்றவர்களாக்கி விடுதலைச் செய்திருப்பது ஆறுதலான செய்தியாகும்.

ஃபஹீம் அன்சாரி, ஸபாஉத்தீன் ஆகிய இருவரும் தீவிரவாதக் குழுவுடன் இணைந்து பணியாற்றினார்கள் என்ற போலீசின் கூற்று முற்றிலும் பொய்யானதும், இட்டுக்கட்டப்பட்டதும் என நீதிமன்றம் கண்டறிந்தது. மிகவும் கடுமையான வார்த்தைகளால் போலீசாரின் இத்தகைய நடவடிக்கையை நீதிபதி விமர்சித்துள்ளார். இவ்வழக்கில் மேற்கண்ட இருவரையும் குற்றவாளிகளாக்கி இந்தியாவிற்குள்ளும் ஒரு பிரிவினர் மும்பைத் தாக்குதலுக்கு துணை நின்றார்கள் என்று கூறி முஸ்லிம் சமுதாயத்தை குற்ற பரம்பரையாக்க போலீசார் போட்ட சதித்திட்டம் நீதிமன்றத்தில் தவிடு பொடியானது.

இதுபோல் முஸ்லிம் இளைஞர்கள் மீது சுமத்திய தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் ஏராளமான வழக்குகளில் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாமல் போன பிறகும் மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை குற்றவாளியாக சித்தரிக்கும் போலீசாரின் போக்கு தொடரவே செய்கிறது.

இந்தியாவின் எப்பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தாலும் போலீசும் சில பாசிச, வியாபார நோக்கங்கொண்ட மீடியாக்களும் புதிய புதிய பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி பரப்புரைச் செய்வதும், தீவிரவாத குற்றஞ் சுமத்தி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிறையில் தள்ளி சித்திரவதைச் செய்து அவர்களின் வாழ்வை பாழாக்குவதும் போலீசாரின் ஸ்திரமான சடங்காகவே மாறிவருகிறது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரின் பொய்க்குற்றச்சாட்டுகளால் ஜாமீனில் வெளியே வரமுடியாத சட்டப் பிரிவுகளில் கைதுச்செய்யப்பட்டு சிறைக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

அப்பாவிகளுக்கு வாதாடிய இரு முக்கிய வழக்கறிஞர்களான நவ்ஷாத் ஹாஷிம்ஜியும், ஷாஹித் ஆஸ்மியும் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஷாஹித் ஆஸ்மி மும்பை தாக்குதல் வழக்கில் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் எனக்கூறி விடுதலைச் செய்த ஃபஹீம் அன்சாரிக்காக வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மும்பைத் தாக்குதலில் கைதுச்செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள ஃபஹீம் அன்சாரியும், ஸபாஉத்தீன் அஹ்மதும் ஒருவகையில் பார்த்தால் அதிர்ஷ்டசாலிகள் தான்.

இவ்வழக்கை விரைவு நீதிமன்றம் 17 மாதத்தில் விசாரணைச் செய்து தீர்ப்பு வழங்கியதால் இவ்விருவருக்கும் அவ்வளவு காலம் மட்டுமே சித்திரவதைகளை தாங்கவேண்டியிருந்தது என்பதை நினைத்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

புதன், 23 டிசம்பர், 2009

பக்தர்களைத் தாக்கிய ராஜ் தாக்கரே குண்டர்கள்!

மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோவிலுக்கு வெளியே படுத்துத் தூங்கிய அப்பாவி பக்தர்களை தாக்கி காட்டுமிராண்டிகள் போல நடந்துள்ளனர் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர்.

நேற்று இரவு இந்த அக்கிரமம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் என்றும் பெருமையாக அவர்கள் ஒப்புக் கொள்ள வேறு செய்துள்ளனர்.

ராஜ் தாக்கரேவை யார் பளார் என கன்னத்தில் அறைகிறாரோ அவருக்கு ரூ. 1 கோடி கொடுக்கப்படும் என சமீபத்தில் அகில பாரத பிராமணர் மகா சங்க தலைவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் ராஜ் தாக்கரே கட்சியினர் கடும் கோபமடைந்தனர்.

அதன் விளைவே நேற்று இரவு நடந்த சித்திவிநாயகர் கோவில் தாக்குதல் என்று கூறப்படுகிறது.

கோவிலுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்த பக்தர்களை மரக் கட்டைகளால் ராஜ் தாக்கரே கட்சியினர் காட்டுத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதுகுறித்து போலீஸார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 22 டிசம்பர், 2009

கர்காரேயை நான் கொல்லவில்லை: அஜ்மல் கஸாப்

மும்பை:மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது ஏ.டி.எஸ் தலைவர் கர்காரே உட்பட மூத்த போலீஸ் அதிகாரிகளை தான் கொல்லவில்லை என்று அஜ்மல் கஸாப் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எல்.தஹலியானி முன்பாக நேற்று வாக்குமூலம் அளித்தபோது மும்பை தாக்குதலின் போது கைதுச்செய்யப்பட்ட ஒரேயொரு குற்றவாளி என்று காவல்துறையால் கூறப்படும் அஜ்மல் கஸாப் இதனை வெளியிட்டார்.

தாக்குதல் நடைபெற்ற செப்டம்பர் 26 அன்று இரவு நான் சி.எஸ்.டி ரயில்வே நிலையத்திலோ, காமா மருத்துவமனை அருகிலோ, காவல்துறை என்னை கைது செய்ததாக கூறும் கிர்கோம் சவ்பாட்டியிலோ நான் இல்லை. ஹேமந்த் கர்காரே, விஜய் சாலஸ்கர், அசோக் காம்தே ஆகிய போலீஸ் அதிகாரிகளுக்கு நேராக நான் துப்பாக்கியால் சுடவுமில்லை. தாக்குதல் நடைபெற்ற வேளையில் நான் போலீஸ் கஸ்டடியிலிருக்கும் போது நான் எவ்வாறு இதனைச் செய்வேன்? என்றும் கஸாப் வினவினார்.

மும்பை தாக்குதல் நடப்பதற்கு 20 தினங்களுக்கு முன்பே இந்தியாவுக்கு வந்த என்னை தாக்குதல் நடப்பதற்கு முன்தினம் ஜுஹு பீச்சில் வைத்து போலீஸ் என்னை கைது செய்தது என்று நேற்று முன்தினம் கஸாப் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

தாக்குதல் நடைபெற்ற மும்பையிலுள்ள இடங்களெல்லாம் நன்றாக தெரியுமல்லவா? என்று நீதிபதி கேட்டதற்கு க்ரைம்பிராஞ்ச் வசமிருந்த என்னை மும்பை தாக்குதலுக்கு பின்னர் போலீஸ் அதிகாரிகள் இவ்விடங்களுக்கெல்லாம் என்னை வாகனத்தில் அழைத்துச்சென்றனர் என்று கஸாப் பதில் கூறினார். "அவர்கள் போலீஸ்காரர்கள் அவர்களுக்கு ஒரு நபர் தேவை. அதற்கு தன்மீது குற்றஞ் சுமத்துகின்றார்கள், என்று கூறிய கஸாபிடம் கையில் துப்பாக்கி குண்டடிப்பட்ட காயம் எவ்வாறு ஏற்பட்டது? என நீதிபதிக்கேட்டபொழுது, "கஸ்டடியிலிருந்த என்னை அனஸ்தீசியா(மயக்கமருந்து) தந்து மயக்கிய பிறகு போலீஸ் துப்பாக்கியால் எனது கையில் சுட்டது என்று கஸாப் பதில் கூறினார்.

நவம்பர் 26 அன்று இரவு 11.15 மணியளவில் தன்னை மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதித்ததாகவும் கஸாப் கூறினார். அரசு தரப்பு கோர்ட்டில் ஆஜராக்கிய ஆடைகளும், ஏ.கே.47 துப்பாக்கியும் புகைப்படங்களும் தன்னுடையதல்ல என்று கஸாப் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இரத்தகறை படிந்த கால் சட்டையும் நீல நிறச்சட்டையும் காண்பித்தபொழுது இவை தன்னுடையதல்ல என்றும் தனது இரத்தத்தை எடுத்து போலீஸ் அதில் தேய்த்துள்ளது என்று கூறிய கஸாப் இந்த ஆடை எனக்கு பொருந்தாது ஏனெனில் அவை சிறியவை என்று கூறினார்.

ஏ.கே.47 துப்பாக்கியுடன் சி.எஸ்.டி யில் தாக்குதல் நடத்துபவர்களின் புகைப்படத்தில் உள்ளது தான் அல்ல என்றும் கஸாப் கூறினார். புகைப்படத்தில் யாராக இருந்தாலும் அவர் துப்பாக்கியை பிடித்திருப்பது நிலத்தை நோக்கிய நிலையில் என்றும் அவர் எவருக்கும் நேராகவும் துப்பாக்கியால் சுடவில்லை என்றும் கஸாப் மேலும் தெரிவித்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழின் அலுவலகத்தின் மூன்றாவது மாடியிலிருந்து புகைப்படமெடுத்த போட்டோகிராஃபரை நோக்கி கஸாப் துப்பாக்கியால் சுட்டதாக அரசுதரப்பு கூறுகிறது. ஏ.கே.47 துப்பாக்கி தன்னுடையதல்ல இதனை நான் முதன் முதலாகத்தான் பார்க்கிறேன் என்றும் கஸாப் கூறினார்.

உடல்நிலை சரியில்லாததால் வாக்குமூலம் அளிப்பதை வேறொரு தினம் மாற்றவேண்டும் என்ற கஸாபின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடிச்செய்தது. ஒன்றும் கூறாவிட்டால் அது கஸாபின் விருப்பத்தைப் பொறுத்தது என்று நீதிபதி பதிலளித்தார். இரண்டாவது நாளாக நீதிமன்றம் கஸாபின் வாக்குமூலத்தை பதிவுச்செய்கிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்