இந்துத்துவப்பயங்கரவாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்துத்துவப்பயங்கரவாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூலை, 2014

ஆவணங்களை அழித்து வரலாற்றை மாற்றும் சதி

“என்னது, காந்தி செத்துட்டாரா” – இன்னும் கொஞ்ச நாளில் இந்த கலாய்த்தல் எடுபடாமல் போய் விடும். அதாவது காந்தியை கோட்சே கொன்றது மட்டும் வரலாற்றில் இருக்கும். கோட்சேவின் இந்துத்துவ தொடர்பு, சங்க பரிவார தொடர்பு – சிந்தனை அனைத்தும் அதிகாரப் பூர்வ ஆவணங்களில் இல்லாமல் போகலாம்.
rewriting-history-2வாஜ்பாயி தலைமையில் அமைந்த முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு வரலாற்று பாடப் புத்தகங்களை திருத்தி புகழ் பெற்றது. இப்போது பா.ஜ.க.வின் தனிப்பெரும்பான்மை அரசு புத்தகங்களை மட்டுமின்றி அரசு ஆவணங்களையும், தரவுகளையும் அழிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
மோடி பதவி ஏற்ற பிறகு மத்திய உள்துறை அமைச்சகம் மகாத்மா காந்தி கொலை வழக்கு தொடர்பான கோப்புகள் உட்பட 1.5 லட்சம் முக்கிய கோப்புகளை அவசர அவசரமாக அழித்திருக்கிறது. காந்தி கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் கோப்புகளை அழித்து விடுமாறு மோடி கூறியதன்படி இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று  சி.பி.எம் உறுப்பினர் ராஜீவி மாநிலங்களவையில் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் “கோப்புகளை அழிக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார் என்பதை நான் உறுதியாக மறுக்கிறேன்” என்று அரசின் சார்பில் பதில் சொல்லியிருக்கிறார். அதாவது, கோப்புகள் அழிக்கப்பட்டதை அரசு மறுக்கவில்லை, மோடி அறிவுறுத்தலின் பேரில் அது நடக்கவில்லை என்பது மட்டும்தான் அவர்களது பதில்.
காந்தி கொல்லப்பட்ட செய்தியை வெளியிடுவதற்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தின் பதிவுகள் அடங்கிய கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் என்னென்ன கோப்புகள் அழிக்கப்பட்டன என்பது மோடிக்கும் உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும்தான் வெளிச்சம்.
இன்னும் கொஞ்ச நாளில் காந்தி சாகவேயில்லை, காந்தியை கோட்சே கொல்லவேயில்லை, காந்தியை சுட்ட கோட்சேவுக்கு ஆர்.எஸ்.எஸ்சுடன் தொடர்பே இல்லை, ஆர்.எஸ்.எஸ் இந்து பாசிச பயங்கரவாத அமைப்பு இல்லை என்று அடுத்தடுத்து வரிசையாக வரலாற்றை திருத்துவதற்கு ஏற்ப பதிவுகள் அழிக்கப்படும், அல்லது மாற்றப்படும்.
இதைத் தொடர்ந்து அரவிந்தன் நீலகண்டன் போன்ற ‘ஆய்வாளர்கள்’ காந்தி கொல்லப்படவே இல்லை என்று ஆதாரங்களுடன் ஆய்வு நூல் வெளியிடுவார்கள். கோட்சே காந்தியை கொன்றதற்கும், இந்து-முஸ்லீம் பிளவை ஆர்.எஸ்.எஸ் ஊக்குவித்ததற்கும் ஆதாரமே இல்லை என்று வாதிடுவார்கள்.
குஜராத் படுகொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் மோடியை பிரதமராகவும், கிரிமினல் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் அமித் ஷாவை கட்சித் தலைவராகவும் அமர்த்தியுள்ள கிரிமினல் கும்பலின் நிர்வாகத்திடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
ஆனால், மோடி அரசு கொண்டு வரும் அன்னிய அடிமைத்தனம் வழங்கும் பலன்களை எதிர்பார்த்து சப்புக் கொட்டிக் கொண்டிருக்கும் நடுத்தரவர்க்க அறிவுஜீவிகள், இந்து உணர்வு கொண்ட கரையான்கள் கோப்புகளை தின்று விட்டன என்றோ, அக்கினி பகவான் அருளால்  கோப்புகள் தானாக எரிந்து விட்டன என்று சொன்னாலும் அதற்கும் சப்பைக் கட்ட தயாராகத்தான் இருக்கின்றனர்.
உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் (வழக்கம் போல பெயர் சொல்ல விரும்பாதவர்), “தற்போதைய அரசின் கீழ் ஏதாவது முக்கியமான கோப்புகள் அழிக்கப்பட்டனவா என்ற கேள்விக்கு அமைச்சரவையின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் இல்லை என்ற பதில் கிடைத்திருக்கிறது. அமைச்சகம் இதை நாடாளுமன்ற பதிவுகளில் கொண்டு வரப் போகிறது” என்று கூறியிருக்கிறார். காந்தி கொலை தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை கண்டறிய துறை முழுவதும் அதிகாரிகளிடம் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆதாரம் இருக்கா இல்லையா என்பதை ஒரு கமிட்டி போட்டு நேரில் பார்த்தால் தெரிந்து விடப்போகிறது? இதற்கு ஏன் கருத்துக் கணிப்பு?
இப்பேர்ப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிகாரிகள் அனைவரும் எந்த முக்கியமான கோப்பும் அழிக்கப்படவில்லை என்று கருத்து சொல்லியிருப்பதால், அதை நாடாளுமன்றமும், நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தமது நம்பிக்கையின்படி அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதையே நீதிமன்றம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என உத்திரவு போட்ட பா.ஜ.கவினருக்கு இது எல்லாம் புதிதில்லை.
மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் கூறிய பதிலை அடுத்து இந்த விஷயத்தை மேலும் விவாதிக்க முடியாது என்று இழுத்து மூடியிருக்கிறார் மாநிலங்களவை துணைத்தலைவர் காங்கிரசைச் சேர்ந்த சூரியநெல்லி புகழ் பி.ஜே.குரியன். இவர் தலைமையில் இயங்கும் மாநிலங்கள் அவை இனி மோடி அரசின் கிரிமினல் தனங்களை மறைக்கும் அறிகுறி இப்போதே தெரிகிறது.
கோப்புகளை அழித்தாலும் வரலாற்றை மாற்றி விட முடியாது என்று கூறியிருக்கும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் சென்ற ஆண்டு வரை பா.ஜ.கவுடன் கூடிக் குலாவி மத்தியிலும், பீகார் மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தவர்தான். இந்த வரலாற்றிலிருந்து பார்த்தால் சரத் யாதவின் கூற்றுக்கு என்ன வரலாற்று முக்கியத்துவம் இருக்க முடியும்?
பாசிஸ்டுகளின் ஆட்சியில் உண்மையும், ஜனநாயகமும் எப்படி படிப்படியாக அரிக்கப்படும்; அதற்கு ‘ஜனநாயக’ அமைப்புகளும், நடுத்தர வர்க்கமும் எப்படி மௌன சாட்சியங்களாக இருப்பார்கள் என்பதற்கும் இந்த கோப்புகள் அழிப்பு ஒரு சான்று. 2-ம் உலகப்போரில் உலகைக் காப்பாற்றிய சோவியத் யூனியன் பங்கை அழிப்பதற்கு அமெரிக்கா எடுத்த வரலாற்று முயற்சி போல அமெரிக்காவின் அடிமையாக இருக்கும்  மோடி அரசு தனது கொடுமைகளை அழிக்க முயற்சி செய்கிறது.
ஆனால் ஆவணங்களில் மட்டும் வரலாறு இல்லை. வர்க்கப் போராட்டத்தால் உருவாகும் வரலாற்றை உழைக்கும் மக்கள் மீட்டு வருவார்கள்.

thanks : http://www.vinavu.com/2014/07/11/modi-govt-destroys-historic-files/

சனி, 13 பிப்ரவரி, 2010

ஒண்ட இடம் தேடும் பால்தாக்ரே கும்பல்!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி

அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி


தற்போது இந்திய அரசியலில் நந்தவனத்து ஆண்டி என்ற பட்டப்பெயர் பால்தாக்கரே கும்பலுக்கு கச்சிதமாகப் பொருந்தும் எனலாம்.

இரண்டு தடவையாக ஆட்சிக்கு வரும் வாய்ப்பிழந்ததோடு மக்களின் செல்வாக்கினை சுத்தமாக தொலைத் துக்கட்ட அவர்களே வலிந்து எடுத்த முயற்சிகளின் பலனாக பால்தாக்கரே, உத்தவ்தாக்கரே, ராஜ் தாக்கரே கும்பல்களின் கூச்சல்கள் எடுபடாமலேயே போய்விட்டது. அப்பாவி பீகாரிகளின் மேல் சிவ சேனா என்ற பாம்பின் குட்டியான மகராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் வெறியாட்டம் அதனைத் தொடர்ந்து அப்பாவி பீகாரிகள் வடித்த கண்ணீர் இனவெறியர்களின் செல்வாக்கினை மங்கச்செய்தது.

ஹிந்தியில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட அபூ ஆஸ்மியின் மீது மகராஷ்ரா நவநிர்மான் சேனா சட்டமன்ற உறுப்பினர்கள் பாய்ந்து பிறாண்டிய சம்பவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அபூ ஆஸ்மி அகில இந்திய பிரபலமானார்.

ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனிதனைக்கடித்த கதையாக தாக்க ரேக்களின் வெறியாட்டம் எல்லை மீறியது.

அரசியல் இனம் மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒருங்கிணைப்பது விளையாட்டுக் கலை போன்றவையாகும்.

ஆனால் அதிலும் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தது தாக்கரேகும்பல். பாகிஸ்தானின் அயலுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்வார்கள்? விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்கிற ரீதியில் கருத்து கூறிய ஷாரூக்கான் மீதும் தனது குதறலை தொடங்கி வைத்தார் தாக்கரே. ஆனால் இதில் எதிர் மறையாக மிகப்பெரிய மூக்கறுப்பை எதிர் கொள்ள வேண்டியவரானார்.

சாதாரண மும்பைவாசிகள் கூட தாக்கரேயின் பைத்திய காரத்தனமான வாதத்தினைக் கண்டு பரிகசிக்க தொடங்கியுள்ளனர்.

தாக்கரேயின் வீழ்ச்சியுகம் உறுதியானது. மும்பை ஒன்றும் தர்மசத்திரம் அல்ல என தாக்கரே கூறினார். உண்மை தான் மும்பை ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல தாக்கரே கூட்டம் குத்தாட்டம் போடுவதற்கு? என்று கேள்வி கேட்க ஆளில்லை. எனினும் இந்தியர்கள் அனைவருக்கும் மும்பை சொந்தமானது என அடித்துக் கூறி தாக்கரே கும்பலின் முகத்தில் கரியையும், அடிவயிற்றில் நெருப்பையும் அள்ளிக்கொட்டினார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி.

ராகுல் காந்தியின் போர்ப்பிரகடனத்தைக் கண்டு சீற்றமடைந்த கிழட்டுச் சிங்கம் கர்ஜிக்க முயற்சித்தது. சிங்கத்தின் வாயிலிருந்து கர்ஜனைக்கு பதிலாக மியாவ் என்ற குரலே வெளிப்பட்டது.

ராகுல் காந்திக்கு மும்பை நுழைவதற்கு முன்பே கறுப்புக் கொடி காட்டப்போவதாக திரிந்து போன 'பால்'தாக்கரே அறிவித்தார்.

ஆனால் ராகுல் காந்தி தாக்கரே கும்பலின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தார். சிவசேனாவினர் ராகுல் காந்தியை முற்றுகையிடுவார்கள் என எதிர்பார்த்ததற்கு மாறாக மின் தொடர் வண்டியில் பணயம் செய்தார். மும்பை மாநகரையே ரவுண்டு கட்டினார்.

மாணவர்களுடன் சந்திப்பு, ஏ.டி.எம்மில் பணம் என முமைபையில் சர்வ சாதாரணமாக உலாவினார். ராகுல்காந்தி. காகிதப்புலிகளின் காட்டுக்கூச்சல் எடுபடவில்லை. அதைத் தொடர்ந்து பாண்டிச் சேரியிலும், கேரளாவிலும் உற்சாகமாக முழங்கினார் ராகுல். பிரிவினைவாதிகளை வளர விடமாட்டோம் என்று சூளுரைத்தார்.

வெறும்பேச்சோடு இல்லாமல் சூளுரைத்தப்படியே சுளுக்கெடுங்கள் ராகுல் நாடே ஆவலாக காத்திருக்கிறது.

-தமிழ்மாறன்

செவ்வாய், 12 ஜனவரி, 2010

குஜராத் தம்பதி போலி என்கெளண்டர்: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Soharabuddin Kasurbi
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்த லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் என்று கூறி போலி எண்கெளண்டரில் அப்பாவி தம்பதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2005ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சொராபுதீன் ஷேக் என்பவரை குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதி என்றும் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்ததாகவும் போலீசார் நாடகமாடினர்.

அதே நேரத்தில் அவரது மனைவி கசூர் பீவியும் காணாமல் போனார். ஆனால், சொராபுதீனை மட்டும்தான் தாங்கள் கொன்றதாகவும் கசூர் பீவி என்ன ஆனார் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் குஜராத் போலீசார் கூறினர்.

ஆனால், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கசூர் பீவியையும் போலீசார் சுட்டுக் கொன்று அவரது பிணத்தை ரகசியமாக எரித்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் கடும் நெருக்கடியால் இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை குஜராத் அரசு அமைத்தது.

அதை தொடர்ந்து போலி எண்கெளன்டர் நடத்திய போலீஸ் அதிகாரிகளான வன்சரா ஐபிஎஸ், ராஜ்குமார் பாண்டியன் ஐபிஎஸ் உள்பபட 13 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இதில் டிபிஜியாக இருந்த வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் (இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்), எம்.என். தினேஷ் ஐபிஎஸ் ஆகியோரே முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடும் நெருக்கடியால் இந்த மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆனால், அவர்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையை குஜராத் அரசு எடு்க்கவில்லை. மேலும் வழக்கு விசாரணையையும் அப்படியே அமுக்க முயன்று வருகிறது.

இந் நிலையில் ரூபாபுதீன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், இந்த வழக்கை குஜராத் அரசு முறையாக விசாரிக்கவில்லை. யார் மீதும் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை நரேந்திர மோடி அரசு விசாரிக்கவும் போவதில்லை. எனவே இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தருண் சட்டர்ஜி, நீதிபதி ஆப்தாப் ஆலம் ஆகியோர் வழக்கை சிபிஐ விசாரிக்க உததரவிட்டனர்.

ஆந்திராவைச் சேர்ந்தவரான சொராபுதீனும் அவரது மனைவி கசூர் பீவியும் ஒரு பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர்களை குஜராத் போலீசார் இடைமறித்து இழுத்துச் சென்றனர். பின்னர் இவர்களை தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டி சுட்டுக் கொன்றனர்.

இதில் கசூர் பீவியின் உடலை எரித்துக் கொன்றுவிட்டு அவரது கொலையை மறைக்கவும் குஜராத் தீவிரவாதத் தடுப்பு போலீசார் முயன்றனர்.

மேலும் இவர்களுடன் இருந்த துல்சிராம் பிரஜாபதி என்பவர் இந்தக் கொலைகளை நேரில் பார்த்துவிட்டதால் சாட்சியத்தை அழிப்பதற்காக அவரையும் தீர்த்துக் கட்டிவிட்டனர்.

இப்போது இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.

புதன், 23 டிசம்பர், 2009

பக்தர்களைத் தாக்கிய ராஜ் தாக்கரே குண்டர்கள்!



மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோவிலுக்கு வெளியே படுத்துத் தூங்கிய அப்பாவி பக்தர்களை தாக்கி காட்டுமிராண்டிகள் போல நடந்துள்ளனர் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர்.

நேற்று இரவு இந்த அக்கிரமம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் என்றும் பெருமையாக அவர்கள் ஒப்புக் கொள்ள வேறு செய்துள்ளனர்.

ராஜ் தாக்கரேவை யார் பளார் என கன்னத்தில் அறைகிறாரோ அவருக்கு ரூ. 1 கோடி கொடுக்கப்படும் என சமீபத்தில் அகில பாரத பிராமணர் மகா சங்க தலைவர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் ராஜ் தாக்கரே கட்சியினர் கடும் கோபமடைந்தனர்.

அதன் விளைவே நேற்று இரவு நடந்த சித்திவிநாயகர் கோவில் தாக்குதல் என்று கூறப்படுகிறது.

கோவிலுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்த பக்தர்களை மரக் கட்டைகளால் ராஜ் தாக்கரே கட்சியினர் காட்டுத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதுகுறித்து போலீஸார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புதன், 9 டிசம்பர், 2009

நரசிம்மராவ் ஆசியோடு பாபர் மசூதியை இடித்தோம்: வேதாந்தி சாமியார் சொல்கிறார்.


பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 60 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதில் முன்னாள் பாரதீய ஜனதா எம்.பி.யும், ராம ஜென்மபூமி கமிட்டி உறுப்பினருமான ராம்விலாஸ் வேதாந்தி சாமியாரும் ஒருவர்.லிபரான் கமிஷன் அறிக்கையில் முன்கூட்டியே திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை பாரதீய ஜனதா தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.

ஆனால் வேதாந்தி சாமியார் மட்டும் திட்டமிட்டுதான் இடித்தோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நடக்கும் கரசேவையின்போது பாபர் மசூதியை இடித்து தள்ளவேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்து இருந்தோம். அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவை 1992 நவம்பர் மாதம் 20-ந்தேதி நான் சந்தித்தேன்.

அப்போது அவர் கரசேவையின்போது என்ன செய்யப்போகிறீர்கள்? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 6-ந்தேதி பாபர் மசூதியை இடித்து தள்ளுவோம் என்று கூறினேன்.

இடிக்க போகிறோம் என்று அவரிடம் சொல்லி விட்டுத்தான் இடித்தோம். எனவே அவருடைய ஆசீர்வாதத்தோடுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

6-ந்தேதி கரசேவகர்கள் பாபர் மசூதி பகுதிக்குள் நுழைந்து மசூதியில் “டூம்” மீது ஏறினார்கள். அப்போது சங்பரிவாரை சேர்ந்த சில தலைவர்கள் அவர்களை இறங்கி வரும்படி கேட்டனர். ஆனால் நான் அவர்களை மேலும் முன்னேறி செல்லுங்கள். இடித்து தள்ளுங்கள் என்று கூறினேன். அதன்படி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடித்து அதை தரைமட்டமாக்கி சமப்படுத்தும் வரை அதாவது 7-ந்தேதி இரவு வரை அங்கேதான் நான் இருந்தேன். மசூதியை இடிப்பதை முழுவதும் நான் மேற்பார்வையிட்டேன்.

இதை சொல்வதற்காக நான் கவலைப்படவில்லை. முடிந்தால் என்னை தூக்கில் போடுங்கள்.
இவ்வாறு வேதாந்தி சாமியார் கூறினார்

ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி: திருமாவளவன்


ராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளளார்.

இதுகுறித்து அவர் மேலும் நாடாளுமன்றத்தில் பேசியதாவது,

நேற்றும் இன்றும் லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்கிறது. இந்த விவாதங்களுக்குப் பின்னர், அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் நடுநிலையான அரசியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் வழக்கமான கமிசன் அறிக்கைகளை போல இதுவும் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுவிடுமோ என்கிற அய்யமும் பொதுமக்களிடையே உள்ளது.

எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். ஊருக்குத் தெரிந்த உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார். இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்சியடையக்குடிய புதிய சதிகளையோ கூறிவிடவில்லை இந்த அறிக்கையில் எமக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார். அதற்காக அவரைப்பாராட்டுகிறேன். குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஸி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக்க் காரணமானவர்கள் என்றும் ஆர்எஸ்ஸ், சிவசேனா, பாரதியஜனதா ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்களும் திட்டமிட்டே மசூதியை இடித்துத்தரைமட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றிதெரிவிக்கும் வகையிலாவது, இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இது முஸ்லீம்களுக்கு காங்கிர‌ஸ் கட்சி துரோகமிழைத்தாக அமையும், இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியைமட்டுமல்ல பௌத்த, சமண மடங்களையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்து தள்ளி, அங்கே இந்த கோயில்களை எழுப்பியுள்ளனர்.

ராமனின் பெயரால் சிவபக்தனான இராவணனையே அழித்துருக்கிறார்கள் என்பதை இராமாயணம் என்கிற புராணத்தின் மூலம் அறிய முடிகிறது இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று தெரிய வருகிறது. அந்த வகையில் இராமனின் வாரிசுகளாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் வாஜ்பாய் ,அத்வானி, ஜோஸி, போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் அனைவரையும் அரசு உட‌னே கைதுசெய்ய வேண்டும்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா? அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி போன்றவர்களை போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகக் கூறுகிறார்.எனவே இந்துத்துவப்பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் மதவெறியர்களுக்கு இதன்மூலம் ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று திருமாவளவன் பேசினார்.