
உ.பி. மாநிலம் முசாப்பர் நகரை சேர்ந்த விஷால் என்ற அவ்விளைஞன், கடந்த ஜூலை 2ம் தேதி இரவு 08.57 மணியளவில் போலீஸ் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு,டெல்லி ஜும்மா பள்ளியில் வெடிகுண்டுகள் வைகப்பட்டுள்ளதாகவும்,சரியாக 11 மணிக்கு இக்குண்டுகள் வெடிக்க உள்ளதாக தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் போலீஸ் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய இவ்வழைப்பு, பின்னர் வெறும் புரளி தான் என்று உறுதி செய்யப்பட்டது.
சமஸ்கிருதத்தில் டிகிரி பயிலும் விஷால்,விசாரணையில் பொழுது போக்கிற்காகத் தான் அப்படி செய்ததாக தெரிவித்துள்ளார்.
17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜும்மா மஸ்ஜித்,பழைய டெல்லியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.இம்மசூதி தெற்கு ஆசியாவில் உள்ள பெரிய மஸ்ஜித்களில் இதுவும் ஒன்று.
Twocircles.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக