அஹ்மதாபாத்:ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில், ஒரு மூத்த அரசியல்வாதியும், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.
மூத்த அரசியல்வாதியின் பங்கினை நிரூபிக்கும் வகையில் பல ஆதாரங்களை சி.பி.ஐ. திரட்டியுள்ளது.
ஆதாரங்களை சேதப்படுத்தியதற்காக மற்ற இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.
அனைத்து ஆதாரங்களும் சி.பி.ஐ.யின் தலைமையைக் கொண்ட டெல்லிக்கு அனுப்பப்பட்டு, கைதுக்காண ஒப்புதல்களும் வாங்கப்பட்டுள்ளது.
எனினும், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க ரதயாத்திரை முடியும் வரை சி.பி.ஐ காத்திருக்க முடிவுசெய்துள்ளது.
ஜூலை 13ம் தேதியன்று யாத்திரை முடிந்த உடனேயே ஓரிரு நாட்களில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source:mumbaimirror
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
அஹ்மதாபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஹ்மதாபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 7 ஜூலை, 2010
திங்கள், 5 ஜூலை, 2010
இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு: சி.பி.ஐ. பதில் தயாராகிறது

சி.பி.ஐ விசாரணை உத்தரவிடுவது குறித்து, ஜூலை 5ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்யுமாறு அனைத்து தரப்புகளுக்கும் உயர்நீதிமன்றம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.
இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கவில்லை என்றால், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.
முன்னதாக,இஸ்ரத் ஜஹான் மற்றும் மற்ற மூவரின் போலி என்கவுண்டர்களை நியாயப்படுத்தி மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவை திருத்தவே இம்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே பதில் மனுவில் தான், சி.பி.ஐ. இவ்வழக்கை விசாரிக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இப்போது இதை மாற்றும் வகையில் பெரிய பல்டி அடித்துள்ளது.
முன்னதாக இஸ்ரத் ஜஹான்,ஜாவித் ஷேய்க் என்கிற பிரனேஷ் பிள்ளை, அம்ஜத் அலி ரானா மற்றும் ஜீஷான் ஜோகர் ஆகியோர் லஷ்கர்-எ-தொய்பாவை சார்ந்தவர்கள் என்றும், மோடியை கொள்ளவந்தவர்கள் என்றும் கூறி குஜராத் போலீசார் போலி என்கவுண்டரில் கொலைச் செய்தனர்.
இஸ்ரத் தயார் ஷமீமா கவுசர் மற்றும் பிரனேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாத் ஆகியோர், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று மனுத்தாக்கல் செய்ததை தொடர்ந்து இவ்வழக்கின் முன்னேற்றங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
Timesofindia
புதன், 30 ஜூன், 2010
சுதாசமாவின் கைது சி.பி.ஐக்கு புதையல்!
அஹ்மதாபாத்:கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ மேற்கொண்ட சுதாசமாவின் கைதுக்குப் பிறகு, இதுவரை சுமார் 197 புகார் மனுக்கள் அவருக்கெதிராக கிடைத்துள்ளன.
இவை அனைத்தும் ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையில் சி.பி.ஐக்கு கிட்டியவை.
எனினும், இப்புகார்கள் ஷொராஹ்ப்தீன் வழக்கில் நேரடியாக தொடர்பு இல்லாததனால். சி.பி.ஐ இதை விசாரிக்காது என்று தெரிகிறது.
மிரட்டிப் பணம் பறித்தல், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துதல், சட்ட விரோத பொருளாதார குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இப்புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு சி.பி.ஐ அளித்துவரும் மாதாந்திர முன்னேற்ற அறிக்கையில் பதிவுச் செய்யப்படும்.
சுதாச்சமா முதலீடுகள், பொருளாதார கோல்மால்கள் என இரண்டாம் தர வழக்கையும் சுதாச்சமாவிற்க்கெதிராக சி.பி.ஐ தொடர இம்மனுக்களும், ஆதாரங்களும் வாய்ப்பளிக்கும்.
உதாரணமாக, சுதாச்சமாவை கைது செய்யும் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் வங்கி கணக்கிலிருந்து சுமார் 1 கோடி ரூபாய் அவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மேலும் சுதாசாமவிற்கெதிராக பல ஆதாரங்கள் உள்ளதாக சி.பி.ஐ. வாதிடுகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கட்டுமானத் தொழிலில் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது என பல ஆதாரங்கள் சி.பி.ஐயிடம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவை அனைத்தும் சுதாசமாவிற்கெதிராக ஊழல் வழக்குகளை கட்டியமைக்க வழி வகுக்கும் என்றும் சி.பி.ஐ. நம்புகிறது.
அதே சமயம், ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் இதே சுதாச்சமாதான் முக்கிய சூத்திரதாரி என்றும் சி.பி.ஐ கூறுகிறது.
இப்பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக வழக்குகள் தொடர சி.பி.ஐ விரைவில் வருமான வரித்துறையினரையும் அணுகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TOI
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)