அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 நவம்பர், 2010

திருச்சி: தீண்டாமைச் சுவர் என்ற பெயரில் அரசியல்...

திருச்சி மாநகராட்சி 40வது வார்டு எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள பழைய சக்திவேல் காலனியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுவர் என்று கூறப்படும் வீட்டிற்கு உரிமையாளரான நல்லமுஹம்மதுவின் தந்தை 1964ம் ஆண்டு இந்த காலனியைச் சுற்றி பாதுகாப்பு கருதி சுமார் 10 அடி உயர சுவர் எழுப்பி இருக்கிறார். அந்த காலனியில் அங்கு வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே சாலையும் அமைத்துள்ளார்கள். சாலை முடியும் இடத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 அடி நீளத்தில் ஆஸ்பெடாஸ் வீட்டைக் கட்டி தனது தங்கைக்கு வழங்கி உள்ளார்.

தற்பொழுது இந்த காலனிக்குப் பின்புறம் முத்து மாரியம்மன் கோவில் தெரு என்ற பெயரில் வீடுகள் உருவாகி அங்கு அனைத்து சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25ம் தேதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகள், முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தலித் மக்கள் பழைய சக்திவேல் காலனியில் வரக்கூடாது என வேண்டுமென்றே தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது என பொய்க் கதை புனைந்து 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் நவம்பர் 9ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் சுவரை இடிக்காவிட்டால் நாங்களே இடிப்போம் என கூறியுள்ளனர் வலது கம்யூனிஸ்ட்கள்.


இந்நிலையில் 28ம் தேதி சர்ச்சைக்குள்ளான பகுதியைப் பார்வையிட வந்த இடது கம்யூனிஸ்ட் எம்.பி திரு.லிங்கம் அவர்கள், இந்த சுவர் தீண்டாமை சுவர் அல்ல எனவும், மனிதாபிமானத்துடன் பேசி இப்பிரச்சனையை இருவரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு மாவட்ட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


அதனைத் தொடர்ந்து 29ம் தேதி சர்ச்சைக்குள்ளான பகுதியை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் எஸ். முஹம்மது ஜெய்னுலாபுதீன் பார்வையிட்டு அப்பகுதி மக்களை சந்தித்தார். அவருடன் தமுமுக, மமக மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தார்கள். அங்கு வந்த பத்திரிக்கை நிருபர்களிடம் மாநில அமைப்பு செயலாளர், ‘‘இது ஒருபோதும் தீண்டாமைச் சுவர் ஆகாது. எனவே அரசியல் ஆதாயத்துக்காக விளம்பரம் தேட முயற்சிக்கும் கட்சிகள் மீது அரசும் காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.


‘‘மெயின் ரோட்டில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள பழைய சக்திவேல் காலனியில் உள்ள ஆஸ்பெடாஸ் வீட்டையும் இடித்து விட்டால் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டு மனைகளுக்கு விலை உயரும் அதனால் தாங்கள் அதிகம் பயன் அடையலாம் என நினைக்கும் சில நபர்களுக்காக ஒரு தூய்மையான நேர்மையான அரசியல் கட்சி வாதாடுவது உகந்தது அல்ல என்பதை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சொல்லிக் கொள்கிறோம்’’ என்றும் அவர் மேலும் கூறினார்.


வியாழன், 22 ஜூலை, 2010

பிஜேபி-யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை - எஸ்.டி.பி.ஐ. குற்றச்சாட்டு

கோழிக்கோடு:அரசியல் ஆதாயங்களுக்காக இன உணர்வுகளைத் தூண்டி, வரும் பஞ்சாயத் தேர்தல்களில் ஓட்டுக்களை பறிக்க பி.ஜே.பி.யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு ரகசிய உடன்படிக்கை வைத்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து,செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மாநில பொதுச் செயலாளர் அப்துல் மஜீத் மற்றும் கமிட்டி நிர்வாகி பி.அப்துல் ஷரிப் கூறுகையில்; பி.ஜே.பி.யின் முஸ்லிம் மற்றும் தலித் இனத்தவர்களின் மீதான விரோத கொள்கையை தற்போது சி.பி.ஐ.(எம்). கையில் எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாகவே, பி.எப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகளுக்கெதிராக சி.பி.ஐ.(எம்). பல அவதூறுகளை பரப்புவதாக தெரிவித்தனர்.

யு.டி.எஃப்பின் ஆதரவாளராக எங்கள் இயக்கங்களை சித்தரிப்பது சரியான முடிவுகளை தராது என்று குறிப்பிட்ட அவர்கள், சமுதாயத்தில் தலித், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் என அனைவரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளதாக தெரிவித்தனர்.

கேரளத்தில் சிறுபான்மையினர்கள் அனைவரும் சி.பி.ஐ.(எம்) க்கு எதிராக மாறி உள்ள நிலையில், உயர் ஜாதி ஹிந்துக்களின் ஓட்டுக்களை பறிக்கவே இச்சதித் திட்டங்கள் அரங்கேருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணத்தினாலேயே,எஸ்.டி.பி.ஐ. கூட்டங்களுக்கும், நடவடிக்கைகளுக்கும் போலீசார் தடைவிதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எர்ணாகுளத்தில் நடந்த எஸ்.டி.பி.ஐ. கூட்டத்தில் போலீசார் அத்து மீறி நுழைந்தது மட்டும்மல்லாமல் போலீஸ் முன்னிலையிலே அச்சந்திப்பை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதை நாங்கள் ஏற்று நடந்தாலும், மற்ற அரசியல் கட்சிகள் கூட்டத்தில் போலீசார் இப்படி கலந்து கொண்டது உண்டா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசியல் கட்சிகள் கூட்டத்தில் போலீஸ் பங்கேற்றது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

போலீசின் இந்த அராஜகங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கருத்துக் கூறிய மாநிலத் தலைவர் முஹம்மது ஷரீப், போலீசார்களை பயன்படுத்தி தங்கள் கட்சியின் உறுப்பினர்களை அரசு சித்திரவதைக்குள்ளாக்குவதாக தெரிவித்தார்.

இது குறித்து கடுமையாக அரசை எச்சரித்த அவர்,மக்கள் நீதிமன்றத்தில் விரைவில் வழக்குகள் தொடரப்படும் என்பதாகவும் தெரிவித்தார்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

முஸ்லிம்களுக்கு 3.5 % இதயத்தில் மட்டுமே இடம்

  1. தென்சென்னை - எஸ்.ஆர்.பாரதி
  2. மத்திய சென்னை- தயாநிதி மாறன்
  3. வடசென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன்
  4. திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்
  5. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
  6. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
  7. கிருஷ்ணகிரி- சுகவனம்
  8. தர்மபுரி- தாமரைச் செல்வன்
  9. திருவண்ணா‌மலை - வேணுகோபால்
  10. கள்ளக்குறிச்சி - ஆதிசங்கரன்
  11. நாமக்கல்- காந்திசெல்வன்
  12. நீலகிரி(தனி)- ஆ.ராசா
  13. கரூர் - கே.சி.பன்னீர்சாமி
  14. பெரம்பலூர்- நெப்போலியன்
  15. மதுரை- மு.க.அழகிரி
  16. பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்
  17. நாகை- ஏ.கே.எஸ்.விஜயன்
  18. தஞ்சை - பழனி மாணிக்கம்
  19. ராமநாதபுரம் - ஜெ.கே.ரீத்தீஸ்
  20. தூத்துக்குடி- ‌எஸ்.ஆர்.ஜெயதுரை
  21. கன்னியாகுமரி- ஹெலன்டேவிட்சன்

நமது வாக்கை சிந்தாமல் சிதறாமல்

"உதய சூரிய"னுக்கு குத்தாமல் இருப்போம்.....!


செவ்வாய், 31 மார்ச், 2009

சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்

சி.எம்.என். சலீம்

நாட்டின் ஜனாதிபதியால் தேர்வு செளிணியப்படுபவர் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி. இந்த தேர்தல் ஆணையம் தான் நாட்டின் மிக உயரிய பஞ்சாயத்து அமைப்புகளான பாராளுமன்றம், மாநில சட்டமன்றம், போன்றவற்றிற்கு தேர்தல் நடத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பதவிக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கும் கூட தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு. தேர்தலில் சட்ட திட்டங்களை வகுப்பது, அரசியல் கட்சிகளை பதிவு செளிணிவது, போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதியை நிர்ணயிப்பது, அவர்களுக்கு சின்னம் வழங்குவது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குச் சாவடிகளை கண்காணிப்பது, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, தகுதியிழக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் ஆளுநர் ஆகியோரிடம் பரிந்துரைப்பது, அனைத்து தேர்தல் நடவடிக்கைகளுக்கும் இந்த அமைப்புதான் பொறுப்பு. சுருங்கச் சொன்னால் இந்தியாவில் வாழும் 110 கோடி மக்களை ஆளுகின்ற வர்க்கத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை (தேவை ஏற்படின் இடையில்) தேர்வு செய்ய அரசியல் சாசன சட்டம் 324ன் கீழ் அமைக்கப்பட்ட தன்னாட்சிப் பெற்ற அமைப்புதான் இந்த இந்தியத் தேர்தல் ஆணையம். இந்த தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரிகஷீமீ பட்டியலைப் பார்ப்போம். நாடு விடுதலை பெற்றதிலிருந்து இது வரையில் பொறுப்பில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

1. சுகுமார் சென் - 1950 - 1958
2. கே.வி.கே.. சுந்தரம் - 1958 - 1967
3. எஸ்.பி. சென் வர்மா - 1967 - 1972
4. டாக்டர் நாகேந்திர சிங் - 1972 - 1973
5. டி. சாமிநாதன் - 1973 - 1977
6. எஸ்.கே. ஷாக்தார் - 1977 - 1982
7. ஆர்.கே. திரிவேதி - 1982 - 1985
8. ஆர்.வி.எஸ். பெரிசாஸ்திரி - 1986 - 1990
9. வி.எஸ். ரமாதேவி - 1990 நவ26 - டிச 26வரை.
10. டி.என். சேசன் - 1990 - 1996
11. எம்.எஸ். கில் - 1996 - 2001
12. ஜே.எம். லிங்டோ - 2001 - 2004
13. டி.எஸ். கிருட்டிணமூர்த்தி - 2004 - 2005
14. பி.பி. டாண்டன் - 2005 - 2006
15. என். கோபாலசாமி - 2006 - இன்று வரை

நாடு விடுதலை பெற்று 61 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகளில் இதுவரையிலும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக உஷீமீள முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவர்
கூட நியமிக்கப்படவில்லையே ஏன்? இத்தகைய உயரிய பொறுப்புகளுக்கு ஏற்ற தகுதி மிக்கவர்களாக முஸ்லிம் சமூகத்தவர் போதுமான அளவில் இருந்தும் மத்திய அரசின் உயர் பதவிகளில் கூட நியமிக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு அதிர்ச்சித் தகவலும் உண்டு. மத்திய அரசின் துறை வாரியான செயலகங்கள் மொத்தம் 83. இதில் தற்போது செயலர்களாக இருப்பவர்களில் ஒரு முஸ்லிமையும் நியமிக்கவில்லை.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் இடம் பெற வேண்டும். அப்படி இடம் பெற்றால் தான் அது ஒரு முழுமை பெற்ற ஜனநாயகமாகத் திகழும். தேசிய நீரோட்டத்தில் பங்களிப்பு செளிணியாத எந்த சமூகமும் காலப் போக்கில் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும். அத்தகைய நிலையில் தான் இன்றைய முஸ்லிம் சமூகம் இருக்கிறது. முஸ்லிம்கள் கால மாற்றத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


இனி வருங்காலங்களில் இது போன்ற நிலையிலிருந்து மாற வேண்டும். இத்தகைய உயரிய பொறுப்புகளுக்கும் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் வேட்கையையும் இளம் உள்ளங்களில் விதைத்திட வேண்டும். அவர்களுக்கு வழிக்காட்டிட வேண்டும். அதை இந்தச் சமூகமும் சமூக ஆர்வலர்களும் தான் செய்ய வேண்டும்.

சனி, 28 மார்ச், 2009

இன்னும் 2 நாட்களில் நல்ல முடிவு : ஜவாஹிருல்லாஹ் தகவல்


சென்னை: ''தொகுதி ஒதுக்கீட்டில் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்,'' என ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லாஹ் கூறினார். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொருளாளர் ரகமதுல்லா ஆகியோர் முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

அதன்பின் ஜவாஹிருல்லாஹ் கூறுகையில், ''லோக்சபாத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு முதல்வரைச் சந்தித்தோம். ஒரு தொகுதி கொடுத்தால் ஏற்க மாட்டோம். எங்களது கோரிக்கையைக் கேட்ட முதல்வர், அதை கனிவுடன் பரிசீலிப்பதாகக் கூறினார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்,'' என்றார்.

நன்றி: தினமலர்

புதன், 18 மார்ச், 2009

வெற்றிக்கு மட்டுமல்ல; தோற்கடிக்கவும் ஒரு கூட்டணி

மும்பை : அதிக இடங்களைப் பிடிக்கத்தான் கூட்டணி அமைத்து கட்சிகள்போட்டியிடுவது வழக்கம்; ஆனால், மகாராஷ்டிர "ஸ்டைல்' வேறு; வெற்றிக்கு ஒரு பகிரங்க கூட்டணி; அதே சமயம், ஒருவரை "ஒருவர்உள்ளடி வேலை'யில் தோற்கடிக்க ரகசிய கூட்டணியும் ஒன்று உண்டு.

மகாராஷ்டிராவில், காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது பவாரின் தேசியவாத காங்கிரஸ்; அதுபோல, பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியோ, பல ஆண்டுகளாக பா.., கூட்டணியில் உள்ளது. இதில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு, தங்கள் தோழமைக் கட்சிகளுக்கு "நம்பிக்கை துரோகம்' செய்கின்றன. இப்படி நம்பிக்கை துரோகம் செய்கிறது தன் தோழமைக் கட்சி என்று தெரிந்தும், அதை கூட்டணியில் இருந்து நீக்கவும் முடியவில்லை. காரணம், தேசியவாத காங்கிரஸ் தயவில் தான் காங்கிரஸ் உள்ளது; அதுபோல, சிவசேனா தயவில் தான் பா.., உள்ளது. சமீப காலமாகவே, பொதுக்கூட்டங்களில் சிவசேனாவைத் தாக்கி, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பேசுவதில்லை.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மாஜி துணை முதல்வருமான ஆர்.ஆர்.பாட்டீல், சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, "சில காரணங்களுக்காக சிவசேனாவை நான் விமர்சிக்க தயாரில்லை' என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டது, அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ் தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சிவசேனாவுடன் பகைத்துக்கொள்ள முடியாவிட்டாலும், ரகசியமாக அதற்கு பாடம் புகட்ட பா.., திட்டமிட்டுள்ளது. அதனால், சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற பால் தாக்கரேயின் சகோதரி மகன் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவ நிர்மாண் கட்சியுடன் ரகசிய பேரம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, சிவசேனா நிற்கும் தொகுதிகளில் ராஜ் தாக்கரே வேட்பாளர்களுக்கு பா..,வினர் ஓட்டு போடுவர். இதன் மூலம், சிவசேனா வெற்றி பெறுவதை பா..,வே தடுக்க முயற்சிக்க உள்ளது. எனினும், இந்த ரகசிய உடன்பாட்டுக்கு உள்ளூர் தலைவர்கள் தான் முயற்சி செய்து வருகின்றனர். மேலிடத்துக்கு எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை.

மனிதநேய மக்கள் கட்சி எந்த கூட்டணியில்…?

மனிதநேய மக்கள் கட்சி அரசியல் களத்தில் புதிய குழந்தை என்பது யாவரும் அறிவர். ஆனால், அக்குழந்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செய்தியாளர்கள் நாள்தோறும் இன்று யாருடன் கூட்டணி பேசினீர்கள்? என விசாரிக்கிறார்கள்.


வாரமிருமுறை இதழ்களும், வார இதழ்களும் அரசியல் செய்திகளில் தவறாமல் மனிதநேய மக்கள் கட்சி யின் நிகழ்வுகளை குறிப்பிடத் தவறுவ தில்லை
அனைவருக்கும் வாசலை திறந்து வைத்திருக்கிறோம் என ம.ம.க. தலைமையகம் அறிவிததால் பல தரப்பலிருந்தும் போட்டா போட்டி நலன் விசாரிப்புகள் தொடர்கிறது.
முன்பெல்லாம் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கே ஒரு தொகுதி தந்தால் போதும் என பயந்து பயந்து பேரம் நடத்திய முஸ்லிம் கட்சிகள் ம.ம.க ஆறு நாடாளு மன்ற தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்ததும் நிமிர்ந்து பார்க்கிறார்கள் இப்போது அவர்களும் எங்களுக்கு இரண்டு அல்லது முன்று தொகுதிகள் வேண்டும் என பேரம் பேச தைரியம் பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் உங்களுக்கு மூன்று தொகுதிகளாமே...?இரண்டு தொகுதி களும் ஒரு ராஜ்யசபாவு மாமே? இரண்டு தொகுதிகளும் ஒரு அமைச சர் பதவியுமாமே...? என்றெல்லாம் செய்திகள் ம.ம.க.வை சற்றி நிற்கின்றதுன.
இந்நிலையில் ம.ம.க அவசரப்படா மல் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது. மேலப்பாளைத்தில் நடந்த முதல் தேர்தல் நிலை பொதுக்கூட்டத் தில் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அ­யும், சென்னை தம்புச் செட்டி தெரு பொதுக் கூட்டத்தில் பேசிய ம.ம.க துணைப் பொதுச் செயலாளர்

எம். தமிமுன் அன்சாரியும் தங்கள் உரையில் ஒரு தொகுதியை ஏற்க மாட்டோம் என தெளிவாக அறிவித்திருக்கிறார்கள்.

செவ்வாய், 17 மார்ச், 2009

முஸ்லீம்கள் தலையை வெட்டுவேன்: வருண் காந்தி பேச்சு

பிலிபித் (உ.பி.): மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும் என்று அவர் பேசியதால் தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. வருண் காந்தி பேச்சால் பாஜகவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது.

மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். தனது மகனுக்காக தான் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் பிலிபித்தை விட்டுக் கொடுத்துள்ளார் மேனகா காந்தி.

இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில், இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும், ஜெயம் ஸ்ரீராம் என்று பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்.

ஒரு இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவரது கையை இந்த வருண் காந்தி வெட்டுவான்.

வருண் காந்தி ஒரு புயலைப் போல. அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி என்றார் வருண் காந்தி.

வருண் காந்தி புயலோ என்னவோ அவரது பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது.

முஸ்லீம்கள் குறித்து அவர் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் பேசியிருப்பது உண்மையாக இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிபித் தொகுதியில் மேனகா காந்தி ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரித்து விட்டனர்-வருண் காந்தி:

இதற்கிடையே தான் பேசியது வேறு, அதைத் திரித்து செய்திகள் வெளியாகி விட்டன என்று வருண் காந்தி கூறியுள்ளார். வருண் காந்தி விவகாரம் குறித்து பாஜக கருத்து ஏதும் கூறவில்லை.

காங்கிஸ் பாய்ச்சல்:

வருண் காந்தியின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது மோசமான பேச்சு மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் கூட. ஆனால் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. அந்தக் கட்சியின் கொள்கையே இதுதான். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் வருண் காந்தி. அவரது பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது, கடும் கண்டனத்துக்குரியது இது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

எம்.பிகளுக்கு கிடைக்கும் சலுகைகள்!

எம்.பி., பதவிக்கு போட்டிப்போட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் அவர்களுக்கு கிடைக்கின்ற சலுகைகள்தான்.

நாடு முழுவதும் 543 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இந்த பதவிக்காக ஆர்வம் காட்டுவோர் பல ஆயிரக்கணக்கானோர்.

எம்.பி பதவி என்றால் சாதாரணம் அல்ல. புதிய எம்.பி.களுக்காக லட்சக்கணக்கில் சலுகைகள் காத்திருக்கின்றன.

மாநிலங்களவை உட்பட மொத்தம் உள்ள 790 எம்.பி.களுக்காக ஆண்டு தோறும் ரூ.64 கோடி மத்திய அரசு செலவிடுகிறது.

அனைத்து சலுகைகள் உட்பட ஒரு எம்.பி.க்கு ஆண்டு தோறும் கிடைப்பது ரூ.8.22 லட்சம் ஆகும். இதில் மாத சம்பளம் ரூ.16 ஆயிரம். 1998 வரை மாத சம்பளமாக ரூ.4 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2006 முதல் இது ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எம்.பி.க்கு தினப்படி பார்லி. கூட்டம் உள்ள நாட்களில் ரூ.1000, தொகுதிக்கான படி மாதம் ரூ.20 ஆயிரம். அலுவலக படி ரூ.20 ஆயிரம் (ரூ.4000 ஸ்டேஷனரி பொருட்கள் வாங்கவும், ரூ.2 ஆயிரம் தபால் செலவுக்கும், ரூ.14 ஆயிரம் செயலாளர்களுக்கும்). அந்த வகையில் மாதம் ரூ.70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகை கிடைக்கும்.

மேலும் பயணப்படியாக கூட்டதொடருக்கு செல்லும்போது விமானம் என்றால் ஒருவரது விமான கட்டணம், அதில் 4ல் ஒரு பங்கு கட்டணமும் உண்டு. ரயில் பயணம் என்றால், ஒரு முதல் வகுப்பு டிக்கெட்டும், ஒரு 2ம் வகுப்பு டிக்கெட்டும், சாலை வழி என்றால் கி.மீ.க்கு ரூ.13 என்ற அடிப்படையில் படி உண்டு. திரும்ப வரும்போதும் இதே கட்டணம் கிடைக்கும்.

விமான பயணத்தில் கூட்டத்தொடர் காலம் அல்லது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செல்ல ஒரு வருடம் 34 டிக்கெட் கிடைக்கும்.

இந்த பயணத்தில் எம்.பி.யின் மனைவி, கணவர், உதவியாளர் உடன் செல்லலாம். ரயிலில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், எந்த ரயிலிலும், எந்த நேரத்திலும் முதல் வகுப்பு ஏ.சி.யில் வாழ்க்கை துணையுடன் பயணம் செல்ல இலவச பாஸ் உண்டு. ரயில் பயணத்தில் ஒரு உதவியாளரை உடன் அழைத்து செல்ல 2ம் வகுப்பு ஏ.சி இலவச பாஸ் உண்டு.

குடும்பத்துடன் டெல்லியில் தங்கிட வசதி, ஆண்டு தோறும் 4 ஆயிரம் கி.லிட்டர் தண்ணீர், 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசமாக பயன்படுத்தலாம்.

டெல்லியில் அலுவலகத்திலும், தொகுதியில் உள்ள வீட்டிலும் தலா ஒரு தரைவழி இணைப்பு போன் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் இலவச லோக்கல் கால்கள். 2 மொபைல் போன்கள் வைத்துக்கொள்ளலாம். மேலும் மருத்துவ உதவிகளும் ஏராளம் உண்டு.

ஒரு சபையின் காலமான 5 வருடம் எம்.பி.யாக இருந்தால் அந்த காலம் முடிந்த பின்னர் மாதம் தோறும் ரூ.8 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும். இது தவிர 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்த ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ.800 வீதம் கூடுதல் பென்ஷன் கிடைக்கும். 10 வருடம் எம்.பி.யாக இருந்தவருக்கு ரூ.12 ஆயிரம் பென்ஷனாக கிடைக்கும்.

இது தவிர எம்.பி. மரணமடைந்தால் அவரது குடும்பத்தினருக்கு பென்ஷனில் 50 சதவிகிதம் கிடைக்கும். முன்னாள் எம்.பி.களுக்கு இந்தியாவில் எங்கு வேண்டுமானலும், எந்த ரயிலிலும், எந்த நேரத்திலும் முதல் வகுப்பு ஏ.சி பெட்டியில் பயணம் செய்யலாம். உதவியாளர் உண்டு என்றால் இருவருக்கும் இலவச பயணம் செய்ய அனுமதியுண்டு.

தேங்க்ஸ் தஒ : nakkheeran

மேலப்பாளையத்தில் மமகவின் முதல் தேர்தல் நிலை விளக்கப் பொதுக் கூட்டம்


திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 15.03.09 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் நிலை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கே.ஏ. பழ்லுல் இலாஹி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ரசூல் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.



தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மமகவின் பொதுச் செயலாளர் அப்துஸ் சமது, தமுமுக மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான், மமக மாவட்டச் செயலாளர் பாளை எஸ். ரபீக், தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் பாரூக், தமுமுக மாவட்டப் பொருளாளர் மிஸ்பாஹுல் ஹுதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தப் பொதுக் கூட்டத்தில் ஆயிரத்தி ஐநுôறுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

திங்கள், 16 மார்ச், 2009

பா.ஜ.க.வுக்கு தேர்தல் நிதி எங்கிருந்து வருகிறது?

குஜராத்தின் சில்வசாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிரஸ்டு ஒன்றும், பிரச்சனைகளில் சிக்கிய குஜராத்தைச் சார்ந்த வணிக நிறுவனமும் பா...வின் தேர்தல் நித பங்களிப்பில் முக்கியப் பங்கு வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை மட்டுமின்றி மேலும் சில மறைமுக உதவியுடன் 2003 முதல் 2007 வரை பா... தேர்தல் நிதியாக 52.41 கோடி நிதி திரட்டியதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணங்கள்படி பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் நிதியில் சில்வசா பொது மற்றும் அரசியல் விழிப்புணர்வு டிரஸ்டு வழங்கும் நிதியே பெரும்பான்மை பங்கு வகிக்கிறது. இந்த டிரஸ்டு பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே நிதி வழங்கியுள்ளதாகவும், வழங்கிய நிதி 9.5 கோடி ரூபாய் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த டிரஸ்டு ஸ்டெரிலைட் குழுமத்துடன் இணைந்த ஒரு டிரஸ்டாகும்.

கடந்த 2000ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியின் போது இந்தி அரசின் பொதுத்துறை நிறுவனமான பால்கோ நிறுவனம் அனில் அகர்வாலின் ஸ்டெரிலைட் குழுமத்திற்கு விற்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

குஜராத்தின் அத்வாணி குழும நிறுவனங்களும் பாரதீய ஜனதா கட்சிக்குப் பெருமளவில் நிதி அளித்துள்ளது. 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் 4 கோடி ரூபாய் இந்த குழுமம் நிதி அளித்துள்ளது. வீடியேகான் குழுமம் 3.5 கோடியும், டாடா மற்றும் பிர்லா குழுமங்கள் சுமார் 5.63 கோடியும் நிதி அளித்துள்ளன. இவையன்றி சிறிய அளவிலான உதவிகள் செய்ததாக அகீக் கல்வி நிலையம், பால்தேவ் பார்க், ஷாஹ்தரா போன்ற நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1.5 கோடி ரூபாய் நிதி அளித்ததாகக் கூறப்படும் அகீக் கல்வி நிலையத்தின் முகவரியில் கல்வி நிலையம் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.

பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் விமான நிலைய விரிவாக்க ஒப்பந்தங்கள் பெற்ற விஜய் மல்லையாவின் ஷாவாலஸ் குழுமம், GMR குழுமம் மற்றும் பஜாஜ் குழுமம் போன்றவை தலா ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளன.

நிதி வழங்கியவர்கள் என்று பாரதீய ஜனதா கட்சி சமர்ப்பித்த ஆவனங்களில் பெரும்பாலும் நிதி வழங்கியவர்களின் முகவரிகள் குறிப்பிடப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

திமுகவுடன் மனித நேய கட்சி இன்று பேச்சு.

சென்னை: திமுகவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்வோம். நாங்கள் திமுகவுடன் இருக்கத் தான் விரும்புகிறோம். ஆனால், எங்களுக்கு நியாயமான இடப் பங்கீடு தேவை. ஒரு சீட் தந்து ஏமாற்றும் திட்டத்துக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்று மனித நேய மக்கள் கட்சி கூறியுள்ளது.

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் தேர்தல் நிலை விளக்கப் பொதுக்கூட்டம் மண்ணடியில் நடந்தது.

இதில் பேசிய கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி,

முஸ்லிம்களை இனி யாரும் ஏமாற்ற முடியாது. ஒரு சீட் கலாசாரம் எல்லாம் முடிந்துவிட்டது. தமிழகத்தில் 75 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல் பங்கு இதுவரை தரப்படவில்லை. வரும் லோக்சபாத் தேர்தலில் அது சரி செய்யப்பட வேண்டும்.

முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக ஆகியவை எங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்பட எந்தக் கட்சியும் இனி எங்களைத் தவிர்த்துவிட்டு, அரசியல் செய்ய முடியாது.

திமுகவுடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை நிர்வாகக் குழு கூடி, கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்யப்படும். நாங்கள் திமுகவுடன் இருக்கத் தான் விரும்புகிறோம். ஆனால், எங்களுக்கு நியாயமான பங்கீடு தேவை.

ஒரு சீட் தந்து ஏமாற்றும் வேலைக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம். எங்களின் அரசியல் வியூகம் பின்னர் வேறு மாதிரியாக இருக்கும் என்றார்.

இதற்கியையே லோக்சபா தேர்தல், அதி்ல் முஸ்லிம்களின் பங்கு, அமைக்க வேண்டிய கூட்டணி ஆகியவை குறித்து சென்னையில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் இஸ்லாமிய கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளின் கூட்டம் நடந்தது.

அதில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் ஹாருண் ரஷீத், முஸ்லிம் லீக் சார்பில் அப்துல்லா, ஜமாத் உலாமாக்கள் தலைவர் தர்வீஸ் ரஷாதி, மக்கள் ஜனநாயக கட்சி, சமூக நீதி அறக்கட்டளை, இந்திய தேசிய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் உள்பட பல அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பல பிரிவாகப் பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து இணைந்து செயல்படுவது, தேர்தலில் முஸ்லிம்களுக்கு அதிக சீட்டுகள் ஒதுக்கும் அணியுடன் கூட்டணி அமைப்பது என்று அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.