இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
செவ்வாய், 28 ஏப்ரல், 2009
சட்டத்தின் பிடியில் இரு சண்டாளர்கள்!
மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து மோடி மற்றும் அவரது சகாக்கள் சட்டத்தின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். இறைவன் நாடினால் சிறையின் வளையத்திற்குள்ளும் செல்லும் நாள்வரும்!
அடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்னாள் பத்திரிக்கையை விரித்தால் ஏதாவது ஒரு படப்பூஜையில் நடிகைக்கு பக்கத்தில் நின்றுகொண்டு குத்துவிளக்கு ஏற்றி போஸ் கொடுத்த முன்னாள் இந்தியன் வங்கி தலைவர் திருவாளர்.கோபாலகிருஷ்ணன் நினைவிருக்கிறதா? அவர்,முஸ்லிம்களுக்கு தமிழக அரசு இடஒதுக்கீடு வழங்கியபோது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததோடு மட்டுமன்றி, சங்பரிவார கும்பலுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியவர். இந்த சங்பரிவாரின் ஊதுகுழல், இந்தியன்வங்கி தலைவராக பதவியில் இருந்தபோது, மும்பை நிறுவனம் ஒன்றிற்கு விதிமுறைகளை மீறி கடன் வழங்கிய வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 28 .ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ 70 .லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த இரு தீர்ப்புகளும் எதை உணர்த்துகிறது எனில், அல்லாஹ்வை மட்டும் நம்பிய காரணத்தால் ஒரு முஸ்லீம் அநீதிக்கு உள்ளானால் காலம் கடந்தாலும் அந்த முஸ்லிமுக்கு அநீதி இழைத்தவர்களை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஒருவேளை இத்தகையவைகள் தங்களுடைய செல்வாக்கால் தண்டனையிலிருந்து தப்பித்தாலும், நாளை மறுமையில் இறைவனின் தண்டனையிலிருந்து ஒருக்காலும் தப்பமுடியாது என்பது திண்ணம்.
புதன், 18 மார்ச், 2009
வெற்றிக்கு மட்டுமல்ல; தோற்கடிக்கவும் ஒரு கூட்டணி
மகாராஷ்டிராவில், காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது பவாரின் தேசியவாத காங்கிரஸ்; அதுபோல, பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியோ, பல ஆண்டுகளாக பா.ஜ., கூட்டணியில் உள்ளது. இதில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு, தங்கள் தோழமைக் கட்சிகளுக்கு "நம்பிக்கை துரோகம்' செய்கின்றன. இப்படி நம்பிக்கை துரோகம் செய்கிறது தன் தோழமைக் கட்சி என்று தெரிந்தும், அதை கூட்டணியில் இருந்து நீக்கவும் முடியவில்லை. காரணம், தேசியவாத காங்கிரஸ் தயவில் தான் காங்கிரஸ் உள்ளது; அதுபோல, சிவசேனா தயவில் தான் பா.ஜ., உள்ளது. சமீப காலமாகவே, பொதுக்கூட்டங்களில் சிவசேனாவைத் தாக்கி, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பேசுவதில்லை.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மாஜி துணை முதல்வருமான ஆர்.ஆர்.பாட்டீல், சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, "சில காரணங்களுக்காக சிவசேனாவை நான் விமர்சிக்க தயாரில்லை' என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டது, அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ் தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சிவசேனாவுடன் பகைத்துக்கொள்ள முடியாவிட்டாலும், ரகசியமாக அதற்கு பாடம் புகட்ட பா.ஜ., திட்டமிட்டுள்ளது. அதனால், சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற பால் தாக்கரேயின் சகோதரி மகன் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவ நிர்மாண் கட்சியுடன் ரகசிய பேரம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, சிவசேனா நிற்கும் தொகுதிகளில் ராஜ் தாக்கரே வேட்பாளர்களுக்கு பா.ஜ.,வினர் ஓட்டு போடுவர். இதன் மூலம், சிவசேனா வெற்றி பெறுவதை பா.ஜ.,வே தடுக்க முயற்சிக்க உள்ளது. எனினும், இந்த ரகசிய உடன்பாட்டுக்கு உள்ளூர் தலைவர்கள் தான் முயற்சி செய்து வருகின்றனர். மேலிடத்துக்கு எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை.