[ நாட்டின் தேர்தலையே தள்ளி வைக்குச்சொல்லும் அளவுக்கு துணிந்த பகல்கொள்ளைக்காரர்களின் இந்த முட்டாள்களின் விளையாட்டை - உண்மையாக தேசத்தை நேசிப்பவர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.
மக்கள் காசு கொடுத்து இந்த சோம்பேறிகளின் விளையாட்டை பார்ப்பதால்தானே இந்த துறையை சேர்ந்த அனைவருக்கும் கொழுப்பு அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.
விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தாமல் பணம் பெருக்குவதையே நோக்கமாகக்கொண்ட இந்த அமைப்பு இருந்தால் என்ன? மறைந்தால் என்ன? ]
இந்த கிரிக்கெட் போட்டிகள் இந்திய ரசிகர்களுக்காக அல்ல என்றால், தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் பணத்துக்காக மட்டும்தான் என்றால், அதை வெளிநாட்டில் நடத்தினால் என்ன, எந்த வனாந்திரத்தில் நடத்தினால்தான் என்ன?
ஐ.பி.எல்-க்கு இந்திய தேசம் பெரிதல்ல. இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் பெரிதல்ல. லாபம் மட்டுமே பெரிது எனும்போது, இப்படி ஒரு போட்டியே தேவைதானா?
இந்தப் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பையே தடை செய்தால்தான் என்ன?
அப்படி எதுவும் நடக்காது. புரள இருப்பது பல கோடிகள். விளையாட்டைப் பின்னால் இருந்து இயக்குவது சூதாட்டம். இதற்கு மறைமுகமாக ஆதரவளிப்பது நமது அரசியல் தலைவர்களும், கட்சிகளும். அவர்கள் தேசமா, லாபமா என்று பூவா தலையா போட்டா பார்க்கப் போகிறார்கள்...
நாட்டின் தேர்தலையே தள்ளி வைக்குச்சொல்லும் அளவுக்கு துணிந்த பகல்கொள்ளைக்காரர்களின் இந்த முட்டாள்களின் விளையாட்டை - உண்மையாக தேசத்தை நேசிப்பவர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் - மக்கள் காசு கொடுத்து இந்த சோம்பேறிகளின் விளையாட்டை பார்ப்பதால்தானே இந்த துறையை சேர்ந்த அனைவருக்கும் கொழுப்பு அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இப்படி ஒரு விளையாட்டு இந்தியாவில் இருந்தது என்று நினைக்காத அளவுக்கு இந்த முட்டாள்களின் மட்டைப்பந்து ஒழிந்து போக வேண்டும் - இது மக்கள் கையில்களில்தான் உள்ளது.
ஐ.பி.எல்.லின் தலைவர் லலித் மோடி இது குறித்து பேசியபோது, இதனால் ஏற்படப்போகும் எல்லா நஷ்டங்களையும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என்றார். இந்த மாற்றங்களால் ரூ.200 கேடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என அறித்துள்ளார்.
இந்நிலையில், ஐபிஎல் முடிவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர் போட்டிகளை ஸ்பான்ஸர் செய்யும் விளம்பர நிறுவனங்கள்.
வெளிநாடுகளில் போட்டி நடைபெறுவது உறுதி என்றால் நாங்கள் விலகிக்கொள்கிறோம், வேறு போட்டிகளை ஸ்பான்ஸர் செய்கிறோம் என அறிவித்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட ரூ.600 கோடி இழப்பு ஏற்படும் என அஞ்சுகிறது ஐபிஎல்.
விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தாமல் பணம் பெருக்குவதையே நோக்கமாகக்கொண்ட இந்த அமைப்பு இருந்தால் என்ன? மறைந்தால் என்ன?
மொத்தத்தில் கிரிக்கெட் போட்டிகளால் யாருக்கு நன்மை என்பதை கேட்டுப் பார்ப்பது நல்லது. பல மணி நேரங்களை தானும் விரையமாக்கி, மற்றவாகளது நேரத்தையும் வீணடிப்பது தான் பொழுது போக்கா?
இத்தகைய பொழுது போக்கை வெளிநாட்டவர்கள் வரவேற்கிறார்கள் என்றால், அவர்களுக்கு பணத்தை செலவு செய்திட வழி வேண்டும் செலவு செய்கிறார்கள்.
இங்கு நம்மவர்களின் நிலையோ பரிதாபம். வேலைக்குப் போனால் தான் தன் வயிற்றையும், தன் குடும்பத்தின் வயிற்றையும் கழுவ வேண்டியுள்ளது. இதில் பொழுதை கழிக்க எங்கு நேரம்?
பொழுது போதவில்லையே என்பது பலரது ஆதங்கம். இதில் விளையாட்டு வீரர்களுக்கு பிழைப்பு. அரசியல்வாதிகளுக்கு ஆதாயம். விளம்பரதாரர்களுக்கு வியாபாரம். வெட்டித்தனமாக ஊரைச் சுற்றுவோருக்கு நல்ல விளையாட்டு.
இதில் அவர்கள் நாட்டைப் பற்றி கவலை கொள்ளவில்லையே என ஆதங்கப்பட்டால், அது யாருடைய அறியாமையை காட்டுகிறது. இவர்களை கண்டு கொள்ளாமல், இவர்களைப் பற்றி பேசாமல் இருப்பது தான் நாட்டுக்கு செய்யும் நல்ல காரியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக