புதன், 25 மார்ச், 2009

ஒரு தொகுதியை ஏற்க மாட்டோம்...! மனிதநேய மக்கள் கட்சி உறுதி!

தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் வலுவான வாக்கு பின்னணியைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.


இதனிடையே பரபரப்பை மட்டுமே கொண்டு இயங்கும் சில மீடியாக்கள், மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடும் என்பதுபோல செய்திகளை வெளியிட்டு வருகின்றன. திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்பது போலும் செய்திகளை வெளியிடுகின்றன.


இதில் எதுவும் உண்மையில்லை. எந்தக் கூட்டணியாக இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில்தான் போட்டி என ம.ம.க. உறுதியாக இருக்கிறது. ஈரோட்டில் மார்ச் 22 அன்று கடைசியாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ம.ம.க. தலைமை நிர்வாகிகள் அதை உறுதி செய்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


அரசியல் வட்டாரத்திலிருந்து ஒரு செய்தி கசிந்தது. பா.ம.க. அ.தி.மு.க. அணிக்கு செல்வது உறுதியாகிவிட்டதாகவும், தே.மு.தி.க. தனித்து நிற்பது உறுதியாகிவிட்டதாகவும் தகவல் பரவியது. அப்படியென்றால் கடந்த தேர்தலில் பா.ம.க. போட்டியிட்ட 6 இடங்கள், ம.தி.மு.க. போட்டியிட்ட 4 இடங்கள், இரண்டு கம்யூனிஸ்ட்களும் போட்டியிட்ட 4 இடங்கள் ஆக மொத்தம் 14 இடங்கள் தி.மு.க. கூட்டணியில் காலியாக இருக்கிறது.


எனவே ம.ம.க.வின் கோரிக்கையை ஏற்று கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் ஆயிரம் மடங்கு நியாயம் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: