புதன், 25 மார்ச், 2009

சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு இஸ்லாமிய வங்கி முறையே தீர்வு! வாடிகன் கூறுகிறது!!

மேற்குலக வங்கிகள் இஸ்லாமிய நிதி அமைப்புகளின் விதிகளை அமுல்படுத்தி இன்றைய பொருளாதார சிக்கல்களில் திணறும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் என உலக கத்தோலிக்க தலைமைப் பீடமான வாடிகன் கருத்துத் தெரிவித்துள்ளது.


இஸ்லாமிய நிதி அமைப்புகளின் ஆதாரமாகத் திகழும் உயரிய சமய கோட்பாடுகள் வங்கிகளை அதனுடைய வாடிக்கையாளர்களுடன் நெருக்கி வைப்பதுடன் உண்மை யான நன்னம்பிக்கையை ஒவ்வொரு பொருளாதார சேவையிலும் வெளிப் படுத்தும் என வாடிகனின் அதிகாரப்பூர்வ இதழான 'அஸர்வேட்டோர் ரொமானோ' வெளியிட்ட கட்டுரை ஒன்றில் குறிப் பிட்டுள்ளது.


மேற்குலக வங்கிகள் 'சுகூக்' என்றழைக்கப் படும் இஸ்லாமிய பத்திரங் கள் போன்றவற்றை பரஸ்பர உறவைப் பேண உபயோகிக்க வேண்டும் எனவும் அக்கட்டுரை வாதிடுகிறது. வாகன உற்பத்தி மற்றும் லண்டனில் நடைபெற உள்ள அடுத்த ஒலிம்பிக் போட்டிகளின் போது சுகூக் அடிப்படையில் நிதி வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அக்கட்டுரை மேலும் தெரிவிக்கிறது.
சுகூக் மூலம் பெறப்படும் இலாப பங்கீட்டு முறை வட்டிக்கு மாற்றாக பங்குதாரர்களை வளப்படுத்தும். எனவே வாகன உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு இம்முதலீடு பயனுள்ளதாக அமையும்.


இஸ்லாமிய சுகூக் திட்டத்தின்படி முதலீட்டாளர்களின் பணம் உறுதியான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் பெறப்படும் இலாபம் வாடிக்கையாளர்களுக்கு பங்கீடு செய்யப்படும்.


அஸர்வேட்டோர் பத்திரிக்கையின் ஆசிரியர் 'கியாவானி மாரியா வியன்' பொருளாதாரத்தில் மனிதாபிமான மாண்புகளை சிறந்த மார்க்கம் கவனத்தில் கொண்டுள்ளது என கூறியதாக அப்பத்திரிக்கையின் நிருபர் கோரிரே டெல்லா சீரா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: