புகாரியின் புதல்வன்
காலை 11 மணியளவில் சிறப்பு துஆ மற்றும் பாத்தியா. பின்னர் நார்ஸாவாக அல்வா மற்றும் இனிப்பு பண்டங்கள் வேறு. இதெல்லாம் ஏதோ தர்ஹாவிலோ, அல்லது கத்தம் பாத்தியாவிலோ வழங்கப்பட்டது அல்ல. புரட்சித் தலைவி (!) அம்மா (!) அன்னாரின் பிறந்த நாளை முன்னிட்டுதான் இத்தகைய கொண்டாட்டங்களும். இவையெல்லாம் ஏதோ ஒரு அதிமுக முஸ்லிம் தொண்டரால் நடத்தி வைக்கப்பட்டவை என்று நினைத்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். பின் எங்கே நடந்தது இந்த அனாச்சாரம்?
கடந்த 24.02.09 அன்று திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகராட்சி 19வது வார்டு இராமமூர்த்தி நகரில் அமைந்துள்ள ஜன்னத்துல் பகீ பள்ளிவாசலின் (எஸ்.ஏ.பி பள்ளி) தகவல் பலகையில் "புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு துஆ மற்றும் பாத்தியா ஓதப்படும்'' என எழுதப் பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி யுற்ற தமுமுகவினர், பள்ளியின் நிர்வாகிகளை சந்தித்து கேட்டபோது "நாங்கள் எங்களின் விருப்பப்படிதான் நடப்போம்'' என்று ஆணவத்துடன் கூறியுள்ளனர். பிறகு அவர்கள் அறிவித்தது போலவே நாம் மேலே கூறியுள்ள அனாச் சாரங்கள் அனைத்தும் அரங்கேறின. இதே நிலை நீடித்தால் அந்தப் பள்ளிவாசல் அதிமுக வின் கட்சி அலுவலகமாகவே மாறி விடுமோ என்ற அச்சத்திற்குள்ளாகியுள்ள னர் முஹல்லாவாசிகள்.
நபி (ஸல்) அவர்களுக்கே நாம் பிறந்த நாள் கொண்டாடுவது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் சொந்த அம்மாவாக இருந்தாலும் பிறந்தநாள் கொண்டாடு வதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தின் வழிமுறையில் அமைந்த ஓர் செயலே அல்ல. மாறாக யூத, கிறிஸ்தவ கலாச்சாரத் தாக்கத்தால் முஸ்லிம்களுக்கு அறிமுகமானவையே பிறந்த தினக் கொண்டாட்டம்.
நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் பிறந்த தினம் கொண்டாடியது மில்லை. அவ்வாறு கொண்டாடுமாறு ஏவியதுமில்லை. இந்த நடைமுறை மார்க்கத்தில் புதிதாக புகுந்த பித்அத் ஆகும். இது நரகத்திற்கு இட்டுச் செல்லும்.
மார்க்கத்தில் புதிதாக புகுந்தவை அனைத்தும் பித்அத் (நூதன செயல்) ஆகும். பித்அத்கள் எல்லாம் வழிகேடுகளாகும். வழிகேடுகள் எல்லாம் நரகத்திற்கு இட்டுச் செல்லும்.
அறிவிப்பவர்:
ஜாபிர் பின் அப்துல்லாஹ்
ஆதார நூல்கள் : முஸ்லிம், நஸயீ
thanks to : tmmk.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக