விழுப்புரம், மார்ச்.10- விழுப்புரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முஸ்தாக்தீன் தலைமை தாங்கினார். பொருளாளர் பஜல்முகமது, துணை தலைவர் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து மாநில நிர்வாகிகளால் நியமிக்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சியின் கீழ்காணும் நிர்வாகிகள் அறிமுகப்படுத் தப்பட்டனர்.
அதன்படி மனித நேய மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளராக அமீர் அப்பாஸ், துணை செயலாள ராக முகம்மது அலி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
வேட்பாளர் செலவு செய்து அதிகாரத்திற்கு வரும் நிலையை மாற்றி சாமானிய மக்களும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வழிவகுக்கும் விதமாக மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு கட்சியே செலவு செய்யும், அனைத்து சமுதாய மக்களும் சிறுபான்மையினர். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வளம்வாய்ந்த அரசியல் கட்சியாக உருவாக்குவது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைமை அமைக்கும் கூட்டணிகட்சியின் வேட்பாளருக்கு பாடுபடுவது, ஏற்கனவே உள்ள த.மு.மு.க.வில் உள்ள உறுப் பினர்கள், மனித நேய மக்கள் கட்சியில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பார்கள். மேலும் அனைத்து சமுதாய மக்களும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்ட இஸ்லாமிய கட்சிகள் கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் மனித நேய மக்கள் கட்சி, தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தனித்துவத்தை நிலைநாட்டும்.
தேர்தல் ஆணையம் வருகிற 13-ந் தேதி வரை விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க காலக்கெடு விதித்துள்ளது ஆகையால் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தங்களின் பெயர்களை விடுபடாமல் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கழக பேச்சாளர் அப்துல்காதர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜஹாங்கிர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நன்றி : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக