அல்லாஹுடைய மஸ்ஜிதை நிர்வகிக்கக்கூடிய தகுதியை பற்றி அல்லாஹுதால தன் திருமறையில் கூறிய வசனங்கள்
இன்ஷா அல்லாஹ் இப்போது தான் நமது ஊருக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இதை நாம் சரியாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
நல்ல ஒரு தலைமை நமதூருக்கு வரவேண்டும் என்று பலருக்கு விருப்பம் இருப்பினும் அதற்க்கான முயற்சியை சிலர் நல்ல முறையில் செய்தார்கள், கண்டிப்பாக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றோம்.
இன்னும் இந்த நிர்வாக குழுவில் பாதி பெரியவர்களும் பாதி இளைஞர்களும் இருந்தால் கண்டிபாக அது அடுத்த தலைமுறைகளை உருவாக்க உதவியாக இருக்கும்.
அனுபவமுள்ள பெரியவர்கள் தங்கள் கீழ் உள்ள இளைஞர்களுக்கு தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு நல்ல முறையில் ஜமாஅத்-ஐ எந்த பிரச்னையும் இன்றி வழி நடத்த இறைவன் நமக்கு உதவி செய்வான்.
கூத்தாநல்லூர் மக்களே! தயவு செய்து அரசியல்வாதிகளையும், பெருமைகுரியவரையும், பதவி ஆசை கொண்டவரையும் ஜமாஅத் நிர்வாகத்தில் நீங்களே அமர்த்தி விடாதீர்.....
உங்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் என்று, அவர்களுக்கு நீங்கள் நல்ல முறையில் வாக்களித்து நல்ல ஒரு தலைமையை நமதூருக்கு உருவாக்கி தருவதில் உங்களுக்கு பெரும்பான்மையான பங்கு உண்டு.
நாளை மறுமையில் நாம் அல்லாஹ்-விடம் நல்ல ஒரு தலைமையை உருவாக்கி கொடுத்தவர்களாக நாம் இருக்க வேண்டும்.
இந்த தேர்தலில் நல்ல ஒரு முடிவை கொடுக்கும் அதிகாரம் மக்களுக்கே!
நாம் அல்லாஹ்-வின் வசனத்தை ஏற்று கொண்டு நடக்கவில்லை என்றால் நமக்கும் ஈமான் இல்லாதவருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
இது அல்லாஹுடைய பள்ளிவாசல் இதை நிர்வகிக்க அரசியல் தெரிந்தவர்கள் தேவை இல்லை, மார்க்க அறிவும், பொது அறிவும், ஈமானும், பொறுமையும் வேண்டும்...
உமர் (ரலி) அவர்கள் கூறுகையில், எவர் ஒருவர் மார்க்கத்தை மட்டும் விளங்கி கொண்டு, உலக விஷயம் தெரியவில்லையோ அவர் நம் வரலாற்றை அழித்து விடுவார் என்று நான் அஞ்சிகிறேன்.
கூத்தாநல்லூர் மக்களே! நமதூர் பள்ளியில் பயான் நடக்க வேண்டும், மாறாக கட்சி கூட்டம் நடந்து விட கூடாது.
நாம் கேள்வி பட்டிருக்கின்றோம் "ஜெயலலிதா பிறந்த நாள் பள்ளிவாசலில் கொண்டாட்டம்"
இது போல் நமதூரில் இனி நடந்து விடக்கூடாது, தவறுகளை தடுப்பது முஸ்லிம்களின் கடமை...
நாம் ஒரு பொருள் வாங்குவதென்றலும் அதன் தரம், திடம், கம்பெனி பெயர், ஆயுள் காலம் போன்றவற்றை பார்த்து நாம் வாங்குகிறோம்.... நம்மை வழி நடத்த கூடிய ஒரு அழகான தலைமையை உருவாக்க நாம் இது போன்றவற்றை கவனிக்க மறந்து விட கூடாது....
இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் நல்ல ஒரு தலைமை உருவாக அல்லாஹ்-விடத்தில் தொழுது துஆ செய்வோம்....
அல்லாஹ் நமக்கு நல்ல தலைமையை கொடுத்து நல்ல வழி காட்டுவானாக!
எங்களுக்கு தெரிந்த சில தகுதிகள் இறைவன் கூறிய தகுதிகளுடன்
சிறியவர் முதல் பெரியவர் வரை ல் நல்ல ஆலோசனைகளை பொறுமையாக கேட்டு செயல்படுபவராகவும்
ஏழை, பணக்காரன், நண்பன், உறவினர், குடும்பம் என் பாரபட்சம் பார்க்காமல் நியாயமான தீர்ப்பு வழங்குபவராகவும்
மக்களின் சுக, துக்க நிகழ்ச்சிகளில் உறுதுனையாக இருந்தவரையும், இருப்பவரையும்
அவசர, ஆபத்து காலங்களில் உறுதுனையாக இருந்தவராகவும், இருப்பவராகவும்
ஊர் மக்களின் சகல விதமான பிரச்சனைகளிலும் உறுதுனையாக இருந்து பாதுகாப்பு அளிக்க கூடியவராகவும்
சொத்து பிரிவினை, விவாகரத்து (தலாக்) நிர்வாகம் முதலியவற்றில் மார்க்க அறிவும் பொது அறிவும் உடையவராகவும்
மார்க்க விரோத காரியங்கள் செய்யதவராகவும், மோசடி செய்யதவராகவும்
ஊரிலயே தங்கி செயல்படுபவராகவும்
மக்களின் நம்பிகைக்குரியவரகவும், ஊரில் அவப் பெயர் பெறாதவரகவும், கட்ட பஞ்சாயத்தில் ஈடு படாதவராகவும், மிக மிக முக்கியமாக பொது வாழ்வில் ஆர்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும்
அரசியல் வாதிகளை தேர்ந்தெடுத்து ஜமாத்தை அரசியல் ஆக்கி விடாதிர்கள், வாக்களிக்கும் விஷயத்தில் நண்பர்கள், உறவினர்கள், இயக்ககாரர்கள் கூறுவதை விட்டு அல்லாஹ் கூறிய படி ஊர் நலனுக்காக நன்கு யோசித்து நல்லவர்களை தேர்வு செய்து வாக்களியுங்கள்.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
தலைமை எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு இஸ்லாமிய அறிஞர் கூறுகையில்....
தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகள் / இருக்க கூடாத பண்புகள்
மேலும் படிக்க இதை கிளிக் செய்யவும்.....
http://koothanallurmuslims.blogspot.com/2009/02/blog-post.html
நன்றி
கூணன் முஹம்மது பாரூக்
சேவுராய் நூர் முஹம்மது ( ஆரிப் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக