வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், 2009 ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்த வங்கியின் ஏடிஎம்மில் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
இதன்மூலம், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் இப்போது பிடிக்கப்படும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. எனவே, அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் எதனுடைய ஏடிஎம்மிலும் கார்டை நுழைத்து கட்டணம் இன்றி பணத்தை எண்ணியபடி வெளியேறலாம்.
தவிர, பண இருப்பை அறிவது, சுருக்கமான கணக்கு ஸ்டேட்மென்ட்டின் பிரின்ட் பெறுவது என அனைத்து சேவைகளும் ஏற்கனவே உள்ளதுபோல இலவசமாக நீடிக்கும்.
எனினும் இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. பெரிய வங்கிகளுக்கு லாபம்: ஏடிஎம் சேவைக்காக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ஆண்டுதோறும் வங்கிகள் ரூ.99 வரை பிடிக்கின்றன.
அதில் மற்ற எந்த வங்கிகளின் ஏடிஎம்மை தனது வாடிக்கையாளர் பயன்படுத்தினாலும் அவ்வங்கிகளுக்கு கட்டணம் செலுத்துகின்றன. அதன்படி எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற பெரிய வங்கிகள் அதிக ஏடிஎம்களை கொண்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தும் பிற வங்கி வாடிக்கையாளர்கள் மூலம் லாபத்தை அதிகரித்துக் கொள்ள வழியேற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக