ஞாயிறு, 29 மார்ச், 2009

அதிக தொண்டர் பலம் உள்ள கட்சி - ம.ம.க

சென்னை மார்ச். 29- மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதியும் & ஒரு மேல் சபை சீட்டும் கேட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி மட்டுமே தருவதாக கூறியது. இதை ஏற்க மனித நேய மக்கள் கட்சி மறுத்து விட்டது.

இதனால் தி.மு.க. கூட்டணியில் மனித நேயமக்கள் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படவில்லை. அதே நேரத்தில் அந்த கட்சியுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மனித நேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நாளை மாலை நடக்கிறது. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி.அப்துல்சமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது்-

மாறிவரும் தமிழக அர சியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மனித நேயமக்கள் கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட விருக்கிறது. எந்த நிலையிலும் தன்மான அரசியலை மனித நேய மக்கள் கட்சி விட்டுக் கொடுக்காது என்பதை தொண்டர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அ.தி. மு.க.வுடன் கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே மனித நேயமக்கள் கட்சியை .தி.மு.. தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.



முஸ்லிம் அமைப்புகளில் அதிக தொண்டர் பலம் உள்ள கட்சி மனிதநேய மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி : மாலைமலர்

கருத்துகள் இல்லை: